Wednesday, November 22, 2017

அத்தியாயம் : 10 பாங்கு ஹதீஸ் 717 முதல் 729 வரை



                                                                     அத்தியாயம் : 10

                                                                              كتاب الأذان
    
                                                                               பாங்கு




(71)باب تَسْوِيَةِ الصُّفُوفِ عِنْدَ الإِقَامَةِ وَبَعْدَهَا
பாடம் : 71

இகாமத் கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது.


٧١٧حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ‏"‏‏.‏

717 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


٧١٨حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَقِيمُوا الصُّفُوفَ فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي ‏"‏‏.
718 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(72)باب إِقْبَالِ الإِمَامِ عَلَى النَّاسِ عِنْدَ تَسْوِيَةِ الصُّفُوفِ
பாடம் : 72

வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.

٧١٩حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ فَقَالَ ‏ "‏ أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‏"‏‏.‏


719 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள்.

(73)باب الصَّفِّ الأَوَّلِ
பாடம் : 73

முதல் வரிசை(யின் சிறப்பு).

٧٢٠حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الشُّهَدَاءُ: الغَرِقُ، وَالمَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالهَدِمُ "


720 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தண்ணீரில்) மூழ்கி இறந்தவர், கொள்ளை நோயினால் இறந்தவர், வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதியால் இறந்தவர், (கட்டட) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் ஆகியோர் உயிர்த்தியாகிகள் ஆவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

٧٢١وَقَالَ: «وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الصَّفِّ المُقَدَّمِ لاَسْتَهَمُوا»


721 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் விரைந்து வருவார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள (மகத்துவத்)தை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(74)باب إِقَامَةِ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ
பாடம் : 74

வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம்.

٧٢٢حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ‏.‏ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ‏.‏ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ، وَأَقِيمُوا الصَّفَّ فِي الصَّلاَةِ، فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلاَةِ ‏"‏‏.‏

722 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் (தொழுகை நடத்துபவர்) ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு நீங்கள் முரண்படாதீர்கள்! அவர் குனி(ந்து ருகூஉ செய்)யும் போது நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்! அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள்! அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


٧٢٣حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ ‏"‏‏


723 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(75)باب إِثْمِ مَنْ لَمْ يُتِمَّ الصُّفُوفَ
பாடம் : 75

தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம்.

٧٢٤حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، قَالَ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَدِمَ الْمَدِينَةَ فَقِيلَ لَهُ مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا أَنْكَرْتُ شَيْئًا إِلاَّ أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ‏.‏ وَقَالَ عُقْبَةُ بْنُ عُبَيْدٍ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ قَدِمَ عَلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ الْمَدِينَةَ بِهَذَا‏.


724 புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பஸ்ராவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக வித்தியாசமாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நீங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்வதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தியாசமாகக் காணவில்லை என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(76)باب إِلْزَاقِ الْمَنْكِبِ بِالْمَنْكِبِ وَالْقَدَمِ بِالْقَدَمِ فِي الصَّفِّ
பாடம் : 76

தோள் புஜத்துடன் தோள் புஜத்தையும் பாதத்துடன் பாதத்தையும் சேர்த்துக் கொண்டு (தொழுகை) வரிசையில் நிற்பது.

وَقَالَ النُّعْمَانُ بْنُ بَشِيرٍ رَأَيْتُ الرَّجُلَ مِنَّا يُلْزِقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ.


(தொழுகையில் நிற்கும் போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தம் அருகிலிருப்பவரின் கணுக்காலுடன் சேர்த்துக்கொள்வதை நான் பார்த்துள்ளேன் என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:



٧٢٥حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَقِيمُوا صُفُوفَكُمْ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‏"‏‏.‏ وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ‏.‏


725 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.

(77)باب إِذَا قَامَ الرَّجُلُ عَنْ يَسَارِ الإِمَامِ، وَحَوَّلَهُ الإِمَامُ خَلْفَهُ إِلَى يَمِينِهِ، تَمَّتْ صَلاَتُهُ

பாடம் : 77

இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும்.

٧٢٦حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ‏.‏


726 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா ளரலின அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அப்போது என் பின் தலையைப் பிடித்து என்னை தம் வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதுவிட்டு, (படுத்து) உறங்கினார்கள். (ஃபஜ்ர் நேரமான போது) அவர்களிடம் தொழுகைஅறிவிப்பாளர் (அவர்களை தொழுகைக்காக அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள்

(78)باب الْمَرْأَةُ وَحْدَهَا تَكُونُ صَفًّا
பாடம் : 78

(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார்.

٧٢٧حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا‏.‏


727 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி) (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.

(79)باب مَيْمَنَةِ الْمَسْجِدِ وَالإِمَامِ
பாடம் : 79

பள்ளிவாசலின் வலப் புறத்தையும் இமாமின் வலப் புறத்தையும் தேர்ந்தெடுப்பது.

٧٢٨حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قُمْتُ لَيْلَةً أُصَلِّي عَنْ يَسَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذَ بِيَدِي أَوْ بِعَضُدِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَقَالَ بِيَدِهِ مِنْ وَرَائِي‏.


728 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார் மைமூனா ரலி அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் நபி (ஸல்) (அவர் களைப் பின்பற்றி) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது கையை அல்லது எனது புஜத்தைப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தம் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னை தமது கரத்தினால் பிடித்து தம் பின் பக்கமாகவே கொண்டு சென்றார்கள்.


(80)باب إِذَا كَانَ بَيْنَ الإِمَامِ وَبَيْنَ الْقَوْمِ حَائِطٌ أَوْ سُتْرَةٌ
பாடம் : 80

இமாமுக்கும் மக்களுக்குமிடையே ஏதேனும் சுவரோ அல்லது தடுப்போ இருந்தால் (கூட்டுத் தொழுகையைப் பாதிக்குமா?)

وَقَالَ الْحَسَنُ لاَ بَأْسَ أَنْ تُصَلِّيَ وَبَيْنَكَ وَبَيْنَهُ نَهْرٌ.

وَقَالَ أَبُو مِجْلَزٍ يَأْتَمُّ بِالإِمَامِ وَإِنْ كَانَ بَيْنَهُمَا طَرِيقٌ أَوْ جِدَارٌ إِذَا سَمِعَ تَكْبِيرَ الإِمَامِ.


ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

உனக்கும் உன் இமாமுக்குமிடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தாலும் (அவரைப் பின் பற்றி) நீ தொழுவதில் தவறில்லை.

அபூமிஜ்லஸ் லாஹிக் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இமாமுடைய தக்பீர் செவியில் விழுமானால் இருவருக்கிடையே சுவரோ நடைபாதையோ இருந்தால்கூட அந்த இமாமைப் பின்பற்றலாம்.

٧٢٩حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الْحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، فَأَصْبَحُوا فَتَحَدَّثُوا بِذَلِكَ، فَقَامَ لَيْلَةَ الثَّانِيَةِ، فَقَامَ مَعَهُ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، صَنَعُوا ذَلِكَ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثَةً، حَتَّى إِذَا كَانَ بَعْدَ ذَلِكَ جَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَخْرُجْ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ النَّاسُ فَقَالَ ‏ "‏ إِنِّي خَشِيتُ أَنْ تُكْتَبَ عَلَيْكُمْ صَلاَةُ اللَّيْلِ ‏"‏‏.‏



729 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்த போது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசிய போது, இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை) என்று கூறினார்கள்.



No comments:

Post a Comment