ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 04
2 - الترهيب من الرياء وما يقوله من خاف شيئا منه
2 பிறர் மெச்ச செய்வது பற்றிய
அச்சுறுத்துதல்
20 - (صحيح)
عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه
وسلم يقول:
إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد
فأتي به فعرفه نعمته فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت
قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل
ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأالقرآن فأتي
به فعرفه نعمه فعرفها
قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت
فيك
القرآن
قال كذبت ولكنك تعلمت ليقال عالم وقرأت القرآن
ليقال هو قارىء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه
وأعطاه من أصناف المال فأتي به فعرفه نعمه فعرفها
قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن
ينفق فيها إلا أنفقت فيها لك
قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم
أمر به فسحب على وجهه حتى ألقي في النار
رواه مسلم والنسائي
ورواه الترمذي وحسنه وابن حبان في صحيحه كلاهما
بلفظ واحد عن الوليد بن أبي الوليد أبي عثمان المديني أن عقبة بن مسلم حدثه أن شفيا
الأصبحي حدثه:
أنه دخل المدينة فإذا هو برجل قد اجتمع عليه
الناس فقال من هذا قالوا أبو هريرة قال فدنوت منه حتى قعدت بين يديه وهو يحدث الناس
فلما سكت وخلا قلت له أسألك بحق وبحق لما حدثتني حديثا سمعته من رسول الله صلى الله
عليه وسلم وعقلته وعلمته فقال أبو هريرة أفعل لأحدثنك حديثا حدثنيه رسول الله صلى الله
عليه وسلم علقته وعلمته ثم نشغ أبو هريرة نشغة فمكثنا قليلا ثم أفاق فقال لأحدثنك حديثا
حدثنيه رسول الله صلى الله عليه وسلم أنا وهو في هذا البيت ما معنا أحد غيري وغيره
ثم نشغ أبو هريرة نشغة أخرى ثم أفاق ومسح عن وجهه فقال أفعل لأحدثنك حديثا حدثنيه رسول
الله صلى الله عليه وسلم أنا وهو في هذا البيت ما معنا أحد غيري وغيره ثم نشغ أبو هريرة
نشغة شديدة ثم مال خارا على وجهه فأسندته طويلا ثم أفاق فقال حدثني رسول الله صلى الله
عليه وسلم أن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم وكل
أمة جاثية فأول من يدعى به رجل جمع القرآن ورجل قتل في سبيل الله ورجل كثير المال فيقول
الله عز وجل للقارىء ألم أعلمك ما أنزلت على رسولي قال بلى يا رب قال فما علمت فيما
علمت قال كنت أقوم به آناء الليل وآناء النهار فيقول الله عز وجل له كذبت وتقول له
الملائكة كذبت ويقول الله تبارك وتعالى بل أردت أن يقال فلان قارىء وقد قيل ذلك ويؤتى
بصاحب المال فيقول الله عز وجل ألم أوسع عليك حتى لم أدعك تحتاج إلى أحد قال بلى يا
رب قال فماذا عملت فيما آتيتك قال كنت أصل الرحم وأتصدق فيقول الله له كذبت وتقول الملائكة
كذبت ويقول الله تبارك وتعالى بل أردت أن يقال فلان جواد وقد قيل
ذلك ويؤتى بالذي قتل في سبيل الله فيقول الله
له في ماذا قتلت فيقول أي رب أمرت بالجهاد في سبيلك فقاتلت حتى قتلت فيقول الله له
كذبت وتقول الملائكة كذبت ويقول الله بل أردت أن يقال فلان جريء فقد قيل ذلك ثم ضرب
رسول الله صلى الله عليه وسلم على ركبتي فقال يا أبا هريرة أولئك الثلاثة أول خلق الله
تسعر بهم النار يوم القيامة قال الوليد أبو عثمان المديني وأخبرني عقبة أن شفيا هو
الذي دخل على معاوية فأخبره بهذا قال أبو عثمان وحدثني العلاء بن أبي حكيم أنه كان
سيافا لمعاوية قال فدخل عليه رجل فأخبره بهذا عن أبي هريرة فقال معاوية قد فعل بهؤلاء
هذا فكيف بمن بقي من الناس ثم بكى معاوية بكاء شديدا حتى ظننا أنه هالك وقلنا قد جاء
هذا الرجل بشر ثم أفاق معاوية ومسح عن وجهه وقال صدق الله ورسوله ا صلى الله عليه وسلم
من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك
الذي ليس لهم في الأخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون ورواه
ابن خزيمة في صحيحه نحو هذا لم يختلف إلا في حرف أو حرفين
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதன் முதலில் இறைவழியில் உயிர் துறந்த ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும்.
அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த
அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக
ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?’ என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், ‘நான் உனக்காக (வீர) மரணம்
அடையும் வரையில் போராடினேன்.’ என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய் சொல்கிறாய்,
வீரன் என்று கூறப்படுவதற்குகாகவே போரிட்டாய். அவ்வாறே மக்களாலும் பேசப்பட்டு விட்டது.’ என்று கூறுவான். பின்னர்
நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்து, குர்ஆனை ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படுவார்.
அல்லாஹ் அவருக்கு தான் அளித்த அருட்கொடைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள்
தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், ‘நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக
என்ன செய்தாய்?’ என்று கேட்பான். அதற்கு
அந்த மனிதர், ‘நான் உனக்காக(இஸ்லாமிய)
அறிவைக் கற்று, அதனை(மற்றவர்களுக்கும்)கற்றுக்கொடுத்து, குர்ஆனையும் உனக்காக ஓதிவந்தேன்.’ என்று பதில் கூறுவார்.
அதற்கு அல்லாஹ் ‘நீ பொய்சொல்கிறாய். அறிவாளி
என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய அறிவை கற்றாய். குர்ஆனை
(நன்றாக) ஓதக்கூடியவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை
ஓதினாய். அவ்வாறே (மக்களர்லம்) பேசப்பட்டு விட்டது.’ என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச்
செல்லும்படி கட்டளையிடப்படும்.
அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன்
அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவரிடம்
அல்லாஹ் தான் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு
கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக
என்ன செய்தாய்?’. என்று கேட்பான். அதற்கு
அந்த மனிதர் ‘நீ எந்த வழிகளில் எல்லாம்
செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் உனக்காக செலவு செய்யாமல்
நான் விட்டதில்லை.’ என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய் சொல்கிறாய். (வள்ளல் தனத்துடன்) வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்)
பாராட்டப்பட வேண்டும். என்பதற்குhகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது.’ எனக் கூறுவான். பின்னர்
நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுங்கள் என்று கட்டளையிடப்படும்.
நூல்: முஸ்லிம்(1905) நஸயீ ( 3137)
நான் மதீனாவிற்கு வந்தபோது
ஒரு மனிதரிடம் மக்கள் குழுமியிருந்தனர் . இவர் யார் ? என்று கேட்டேன் .” அபூஹுரைரா “ என்று கூறினார்கள். அவரை
நெருங்கி அவரருகில் போய் அமர்ந்தேன் அவர் மக்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்
அவர் அதை முடித்து தனித்திருந்தபோது அவரிடம் நான் “ நபி ஸல் அவர்களிடம் நீங்கள் கேட்டறிந்து விளங்கிக் கொண்ட்தை எனக்கு அறிவிக்குமாறு
உறுதியாக உங்களிடம் கேட்கிறேன் என்றேன் ( அவ்வாறே ) செய்கிறேன் .
நபி ஸல் அவர்களிடம் நான் கேட்டறிந்து விளங்கிக் கொண்ட்தை உம்மிடம் அப்படியே கூறுகிறேன்
என்று கூறினார்கள் பின்பு அபூஹுரைரா மயங்கி விட்டார்கள். நாங்கள் சிறிது பொறுத்திருந்தோம்
அவரும் தெளிவு பெற்றார். “
இந்த வீட்டில் நானும் நபி ஸல் அவர்களும் மட்டும் இருந்தபோது அவர்கள் என்னிடம் கூறியதை
உம்மிடம் கூறுகிறேன்.
என்னையும் அவர்களையும் தவிர வேறு எவரும் எங்களுடன் இல்லை என்று கூறிவிட்டு அபூஹுரைரா
ரழி அவர்கள் மீண்டும் மயங்கி விட்டார்கள் பின்பு தெளிவடைந்து தன் முகத்தை துடைத்தார்கள்.
மீண்டு ( முன்பு கூறியபடியே ) கூறிவிட்டு முகம் குப்புற வீழ்ந்து நீண்ட நேரம் மயங்கி
கிடந்தார்கள்.
நான் அவர்களை நீண்ட நேரம் தாங்கிப் பிடித்திருந்தேன் பின்பு தெளிவு பெற்றதும் “ தன்னிடம் ( பின்வரும் செய்தியை
) நபி ஸல் கூறியதாக கூறினார்கள் :
நிச்சயமாக மறுமையில் அல்லாஹ் தன் அடியார்களிட்த்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பு
செய்வதற்காக இறங்குவான் அனைத்து சமுதாயத்தவரும் மண்டியிட்டு அமர்ந்திருப்பார்கள் .
குர் ஆனை பரப்பியவர், இறைவழியில் கொல்லப்பட்டவர், செல்வந்தர் ஆகியோரே அவனால்
அழைக்கப்( பட்டு விசாரிக்கப் ) படுவோரில முதன்மையானவர்கள். அல்லாஹ் குர் ஆனை ஓதியவனிடம்
“ என் தூதர் மீது நான் இறக்கிய
வேதத்தை உனக்கு நான் கற்றுத் தரவில்லையா ? என்று கேட்பான். “ ஆம் இறைவா ! என்று கூறுவார்
. நீ அறிந்தவற்றில் என்ன செய்தாய் ? என்று அல்லாஹ் கேட்டதற்கு ,
“ நான் இரவிலும் பகலிலும்
அதன் மூலம் உன்னை வணங்கினேன் “ என்று கூறுவார் . நீ பொய் சொல்கிறாய் என்று கூறுவான் நீ பொய் சொல்கிறாய் என அவனிடம்
மலக்குகளும் கூறுவர்.” (
நீ ஒதியதன் மூலம் ) நன்றாக ஒதுபவன் என்று கூறப்படுவதையே விரும்பினாய் அப்படியே
கூறவும் பட்டது “ என்று அல்லாஹ் கூறுவான்.
செல்வந்தர் அழைத்து வரப்படுவார் .” எவரின் பக்கமும் தேவையாகும் அளவுக்கு உன்னை விட்டுவிடாது உனக்கு செல்வத்தை வழங்கவில்லையா
? என்று அல்லாஹ் கேட்பான்
ஆம் இறைவா ! என்று அவர் கூறுவார் உனக்கு அளித்தவற்றிலிருந்து என்ன செய்தீர் ? என்று அல்லாஹ் கேட்பான்.
“ நான் உறவினர்களை இணைத்து
வாழ்ந்தேன் தர்மம் செய்தேன் “ என்று கூறுவார் நீ பொய் சொல்கிறாய் என அவனிடம் அல்லாஹ் கூறுவான் நீ பொய் சொல்கிறாய்
என மலக்குகளும் கூறுவர் நீ பெரும் கொடையாளி என்று கூறப்படுவதையே நீ விரும்பினாய் அவ்வாறே
கூறவும் பட்டது என்று அல்லாஹ் கூறுவான்.
இறைவழியில் கொலை செய்யப்பட்டவர் ( அடுத்து ) கொண்டு வரப்படுவார் என்ன காரணத்திற்கு
கொல்லப்பட்டீர் ? என்று அவரிடம் அல்லாஹ்
கேட்பான் நீ உன் வழியில் ஜிஹாத் செய்ய கட்டளையிட்டாய். போரிட்டேன் கொல்லவும் பட்டேன்
என அவர் கூறுவார்.
நீ பொய் செல்கிறாய் என்று அல்லாஹ் கூறுவான் நீ பொய் சொல்கிறாய் என்று மலக்குகளும்
கூறுவர் . நீ தியாகம் செய்த மனிதர் என்று புகழ்ப்படுவதை விரும்பினாய் அவ்வாறே கூறவும்
பட்டது என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு என் தொடையில் அடித்துவிட்டு
அபூஹுரைராவே ! மறுமை நாளில் இருவருக்காகவே நரக நெருப்பு முதலில் மூட்டப்படும் என்று
கூறினார்கள் . இவ்வாறு அபூஹுரைரா ரழி அவர்கள் கூறியதாக சுபைய்யா அல் அஸ்பஹிய்யா என்பவர் கூறுகிறார்கள்.
அலா இப்னு அபீ ஹகீம் என்பவர் கூறுகிறார்:
( இச்செய்தியை அறிவிக்கும்
) சுபைய்யா , மு ஆவியா ரழி அவர்களிடம்
தண்டனை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளார் . மு ஆவியாவிடம் வந்து அவர் அபூஹுரைரா ரழி
அவர்கள் கூறிய செய்தியை கூறினார்.
“ இந்த மூவரின் நிலையே இதுவென்றால்
மற்ற மனிதர்களின் நிலை என்ன ? என்று கேட்டுக் கொண்டே மு ஆவியா ரழி இவர் இறந்து விடுவாரோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு
கடுமையா அழுதார்.
இந்த மனிதர் தீய செய்தியை கூறி விட்டாதே என்று நாங்கள் பேசிக்கொண்டோம் பின்பு மு
ஆவியா ரழி தெளிவடைந்து தன் முகத்தை துடைத்து விட்டு “ யார் இவ்வுலக வாழ்வையும் அதன் கவர்ச்சியையும் விரும்புகிறாரோ அவர்கள் அதில் செயல்
படுத்தியவைகளை நிறைவேற்றுவோம் அவர்கள் அதில் எவ்வித குறையும் செய்யப்பட மாட்டார்கள்.
இவர்களுக்கு மறுமையில் நரகத்தை தவிர எதுவும் கிடையாது இவ்வுலகில் அவர்கள் செய்தவை
அழிந்து விடும் அவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணே “ என்ற வசனத்தை ஓதிவிட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையே கூறினார்கள் என்று மு
ஆவியா ரழி கூறினார்கள்.
இந்த வாசகம் திர்மிதீ(2382) இப்னு குஸைமாவில் உள்ளது
21 - (صحيح)
وعن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه
وسلم:
بشر هذه الأمة بالسناء والرفعة والدين والتمكين
في الأرض فمن عمل منهم عمل الآخرة للدنيا لم يكن له في الآخرة من نصيب
رواه أحمد وابن حبان في صحيحه والحاكم والبيهق
21.இந்த சமுதாயத்துக்கு உயர்வும், மதிப்பும் இப்பூமியில்
வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக ! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய
அமலை இவ்வுலகுக்காகச் செய்தால் எந்தப்பயமுமில்லை என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைபின் கஃபு ( ரழி ) நூல் : அஹ்மத்(20714), இப்னுஹிப்பான் , ஹாகிம், பைஹகீ
22 - (صحيح)
وعن أبي هند الداري أنه سمع النبي صلى الله عليه
وسلم يقول من قام مقام رياء وسمعة راءى الله به يوم القيامة وسمع
رواه أحمد بإسناد جيد والبيهقي والطبراني ولفظه
أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من رايا بالله لغير الله فقد برىء من الله
22.பிறர் புகழ்வும் பிறரின்
முகஸ்துதிக்கும் ஒருவன் வணங்கினால் அல்லாஹ் மறுமையில் பிறர் புகழ்ச்சிக்காக முகஸ்துதிக்காக
செய்தவனாக்குவான் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹிந்த் தாரிய்யி ( ரழி ) நூல் : அஹ்மத்(2748) , நஸயீ
23 - (صحيح)
وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول من سمع الناس بعمله سمع الله به مسامع خلقه وصغره
وحقره
رواه الطبراني في الكبير بأسانيد أحدها صحيح
والبيهقي
23.மக்களை கேட்கச் செய்யும்
வகையில் ( புகழுக்காக ) ஒருவன் செய்தால் அல்லாஹ் அவனைப்பற்றி தன் படைப்பின்ங்களிடத்தில்
கேட்கச் செய்வதோடு அவனை சிறுமைபடுத்தி இழிவுபடுத்துவான் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ( ரழி ) நூல் : தப்ரானீ கபீர்(4984) , பைஹகீ
24 - (صحيح)
وعن جندب بن عبد الله رضي الله عنهـ قال قال
النبي صلى الله عليه وسلم:
من سمع سمع الله به ومن يراء يراء الله به
رواه البخاري ومسلم
24.பிற்ரின் முகஸ்துதிக்காக
செய்பவனை அல்லாஹ் காட்டிக்கொடுப்பான் .பிறர் புகழ்வதற்காக செய்பவனை அல்லாஹ் காட்டிவிடுவான்
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் ( ரழி )
நூல் : புஹாரி , முஸ்லிம் (2986)
25 - (صحيح لغيره)
وعن عوف بن مالك الأشجعي رضي الله عنهـ قال سمعت
رسول الله صلى الله عليه وسلم يقول:
من قام مقام رياء راءى الله به ومن قام مقام
سمعة سمع الله به
رواه الطبراني بإسناد حسن
25.மேற்கண்ட செய்தியே அவ்பு
இப்னு மாலிக் அல் அஷ் ஜயீ ரழி அவர்கள் அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது இது தப்ரானீயில் பதிவாகியுள்ளது
No comments:
Post a Comment