بَابُ إِزَالَةِ اَلنَّجَاسَةِ وَبَيَانِهَا
அசுத்தங்களை அகற்றுதல்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: - سُئِلَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ اَلْخَمْرِ تُتَّخَذُ خَلًّا? قَالَ:
"لَا". - أَخْرَجَهُ مُسْلِم
صحيح. رواه مسلم (1983)
27 ''நபி(ஸல்) அவர்களிடம் சாராயத்திலிருந்து 'சிர்கா' செய்வது பற்றி வினவப்பட்டதற்கு அவர்கள் 'கூடாது' என்றார்கள் (தடை விதித்தார்கள்)'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்.
முஸ்லிம்யில், 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْهُ قَالَ: - لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ, أَمَرَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - أَبَا طَلْحَةَ, فَنَادَى: "إِنَّ اَللَّهَ
وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ اَلْحُمُرِ] اَلْأَهْلِيَّةِ] ,
فَإِنَّهَا رِجْسٌ" - مُتَّفَقٌ عَلَيْه
صحيح. رواه البخاري (2991) ، ومسلم (1940)
28. நபி ஸல் அவர்கள் கைபர் யுத்ததன்று அபூ தல்ஹா ( ரழி
) அவர்களுக்குக் கட்டளையிட ( உடனே ) அவர்கள் ,” அல்லாஹ்வும் அவனது தூதரும் நாட்டுக்
கழுதையின் மாமிசத்தை ( உண்ணத்) தடை செய்து விட்டார்கள். ஏனெனில் அது அசுத்தமானது என்று
அறிவிப்புச் செய்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் ரழி அறிவிக்கிறார்கள்
புஹாரி மற்றும் முஸ்லிம்
وَعَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ - رضي الله عنه - قَالَ: - خَطَبَنَا
رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - بِمِنًى, وَهُوَ عَلَى رَاحِلَتِهِ,
وَلُعَابُهَا يَسِيلُ عَلَى كَتِفَيَّ. - أَخْرَجَهُ أَحْمَدُ, وَاَلتِّرْمِذِيُّ
وَصَحَّحَه
صحيح. رواه أحمد (487) ،
والترمذي (2121) وقال الترمذي: "حديث حسن صحيح".
29 நபி(ஸல்) அவர்கள் மினாவில் தங்களது வாகனத்தில் அமர்ந்தவாறே எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அதன் (அக்கால் நடையின்) உமிழ் நீர் என்னுடைய தோளில் (விழுந்து) வழிந்தோடிக் கொண்டிருந்தது என அம்ர் இப்னு காரிஜா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், திர்மிதீ. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا, قَالَتْ: - كَانَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - يَغْسِلُ اَلْمَنِيَّ, ثُمَّ يَخْرُجُ إِلَى
اَلصَّلَاةِ فِي ذَلِكَ اَلثَّوْبِ, وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ اَلْغُسْلِ
فِيهِ - مُتَّفَقٌ عَلَيْه
صحيح. رواه البخاري (229) ، ومسلم (289)
30 ''நபி(ஸல்) அவர்கள் (தங்களது ஆடையில் பட்ட) இந்திரியத்தைக் கழுவி விட்டு, அதே ஆடையுடன் தொழுகைக்குச் செல்வார்கள். அப்போது அந்த ஆடையில் கழுவப்பட்ட அடையாளத்தை நான் காண்பேன்'' என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَلِمُسْلِمٍ: - لَقَدْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبٍ رَسُولِ
اَللَّهِ - صلى الله عليه وسلم - فَرْكًا, فَيُصَلِّي فِيهِ
صحيح. رواه مسلم (288)
31 ''நான் நபி(ஸல்) அவர்களது ஆடையிலிருந்த (இந்திரியத்)தை சுரண்டி விடுவேன். அவர்கள் அதே ஆடையுடன் தொழுவார்கள்'' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் பதிவாகியள்ளது.
وَفِي لَفْظٍ لَهُ: - لَقَدْ كُنْتُ أَحُكُّهُ يَابِسًا بِظُفُرِي
مِنْ ثَوْبِهِ
مسلم (290)
32 ''ஆடையில் அது காய்ந்த பின் என்னுடைய நகத்தால் அதை சுரண்டி விடுவேன்'' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
وَعَنْ أَبِي اَلسَّمْحِ - رضي الله عنه - قَالَ: قَالَ اَلنَّبِيُّ
- صلى الله عليه وسلم - يُغْسَلُ مِنْ بَوْلِ اَلْجَارِيَةِ, وَيُرَشُّ مِنْ
بَوْلِ اَلْغُلَامِ - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ
اَلْحَاكِم ُ
صحيح. رواه أبو داود (376) ، والنسائي (158) ، والحاكم (166) بسند
حسن
33 ''பெண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தல் போதுமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸம்ஹி(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ, ஹாம்கி. இது ஸஹீஹ் எனும் தரத்தில் ஹாம்மில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا;
أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ -فِي دَمِ اَلْحَيْضِ يُصِيبُ
اَلثَّوْبَ-: - "تَحُتُّهُ, ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ, ثُمَّ تَنْضَحُهُ,
ثُمَّ تُصَلِّي
فِيهِ" - مُتَّفَقٌ عَلَيْه
صحيح. رواه البخاري (227) ، (307) ، مسلم (291)
34 ''மாதவிடாய் இரத்தம் பட்ட துணியை சுரண்டி, பின்னர் அதைத் தண்ணீரால் கழுவி, பின்பு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதில் தொழுது கொள்ளலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَتْ خَوْلَةُ:
- يَا رَسُولَ اَللَّهِ, فَإِنْ لَمْ يَذْهَبْ اَلدَّمُ? قَالَ: "يَكْفِيكِ
اَلْمَاءُ, وَلَا يَضُرُّكِ أَثَرُهُ" - أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ,
وَسَنَدُهُ ضَعِيف
35 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாதவிடாய் இரத்தத்தின் கறை (துணியிலிருந்து) போகாவிட்டால்?'' என்று கவ்லா(ரலி) வினவினார். அதற்கு ''அதன் மீது தண்ணீர் விட்டால் போதுமானது அதன் கறையால் உனக்குத் தீங்கில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment