ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 03
16 - (صحيح)
وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال:
يقول الله عز وجل: إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها فإن عملها فاكتبوها بمثلها وإن تركها من أجلي فاكتبوها له حسنة وإن أراد أن يعمل حسنة فلم يعملها اكتبوها له حسنة فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى سبعمائة
رواه البخاري واللفظ له ومسلم
وفي رواية لمسلم قال رسول الله صلى الله عليه وسلم:
من هم بحسنة فلم يعملها كتبت له حسنة ومن هم بحسنة فعملها كتبت له عشر حسنات إلى سبعمائة ضعف ومن هم بسيئة فلم يعملها لم تكتب عليه وإن عملها كتبت
وفي أخرى له قال:
عن محمد رسول الله صلى الله عليه وسلم قال:
قال الله عز وجل إذا تحدث عبدي بأن يعمل حسنة فأنا أكتبها له حسنة ما لم يعملها فإذا عملها فأنا أكتبها له بعشر أمثالها وإذا تحدث بأن يعمل سيئة فأنا أغفرها له ما لم يعملها فإذا عملها فأنا أكتبها له بمثلها وإن تركها فاكتبوها له حسنة إنما تركها من جراي
16 என் அடியான் ஒரு தீமையை செய்ய நாடினால் அதை அவன் செய்யும்வரை எதையும் எழுதிவிடாதீர்கள் அதை அவன் செய்தால் அதைப்போன்றே அதை எழுதுங்கள். என்னை அஞ்சி அதை செய்யாது விட்டுவிட்டால் அவனுக்கு அதை ஒரு நன்மையாக எழுதுங்கள். ஒரு நன்மையை செய்ய விரும்பி அதை செய்யாது விட்டால் அவனுக்கு அதை ஒரு நன்மையாக எழுதுங்கள் அதை செய்தால் அவனுக்கு அதுபோன்று 10 மடங்கு முதல் 700 மடங்கு வரை நன்மையாக அதை எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) நூல் : புஹாரி(7501)
இந்த ஹதீஸ் வேறு வேறு வாசங்களுடன் முஸ்லிமிலும் உள்ளது . இந்த வாசங்களையும் இமாம் முன்திரி இங்கே குறிப்பிடுகிறார்கள்.
17 - (صحيح)
وعن معن بن يزيد رضي الله عنهما قال كان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن
رواه البخاري
17 என் தந்தை யஸீத் ரழி அவர்கள் சில தீனார்களை தர்மம் செய்வதற்காக எடுத்து வந்தார். அதை பள்ளிவாசலில் ஒரு மனிதரின் அருகில் வைத்தார். நான் வந்து அதை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தேன். அப்போது அவா ( யஸீத் ) “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! உம்மை நான் நாடவில்லை “ என்று கூறினார். நான் இது பற்றி நபி ஸல் அவர்களிடம் முறையிட்டேன் “ யஸீதே ! நீ எண்ணியது உனக்கு உண்டு ! மகனே ! நீ எடுத்துகொண்ட்து உனக்கு உண்டு “ என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃன் இப்னு யஸீத் ( ரழி ) நூல் : புஹாரி(1422)
18 - (صحيح)
وعن أبي هريرة رضي الله عنهـ أن رسول الله صلى الله عليه وسلم قال:
قال رجل لأتصدقن الليلة بصدقة فخرج بصدقته فوضعها في يد سارق فأصبحوا يتحدثون تصدق الليلة على سارق فقال اللهم لك الحمد على سارق لأتصدقن بصدقة فخرج بصدقته فوضعها في يد زانية فأصبحوا يتحدثون تصدق الليلة على زانية فقال اللهم لك الحمد على زانية لأتصدقن بصدقة فخرج بصدقته فوضعها في يد غني فأصبحوا يتحدثون تصدق الليلة على غني فقال اللهم لك الحمد على سارق وزانية وغني فأتي فقيل له أما صدقتك على سارق فلعله أن يستعف عن سرقته
وأما الزانية فلعلها أن تستعف عن زناها وأما الغني فلعله أن يعتبر فينفق مما أعطاه الله
رواه البخاري واللفظ له ومسلم والنسائي قالا فيه
فقيل له أما صدقتك فقد تقبلت
ثم ذكر الحديث
18 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்' எனக் கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் :புஹாரி(1421) , முஸ்லிம்(1022) மற்றும் நஸயீ(2523)
உம்மை தர்மம் செய்யச் செய்தேன் அது ஒப்புக் கொள்ளப்பட்ட்து என்று கூறப்படும் வாசகம் மட்டும் அதிகமாக முஸ்லிமிலும் நஸயீலும் உள்ளது.
19 - (حسن صحيح)
وعن أبي الدرداء يبلغ به النبي صلى الله عليه وسلم قال من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه
رواه النسائي وابن ماجه بإسناد جيد ورواه ابن حبان في صحيحه من حديث أبي ذر أو أبي الدرداء على الشك
19 இரவில் நின்று தொழ வேண்டும் என்று எண்ணிப்படுக்கைக்கு ஒருவர் வந்து காலை சுப்ஹு வரை அவன் கண் மிகைத்து தூங்கி விட்டால் அவனுக்கு அவன் எண்ணிய கூலியுண்டு அவனது தூக்கம் அவனுக்கு தன் இறைவன் மூலம் கிடைத்த தர்ம மாக ஆகிவிட்ட்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா ( ரழி )
நூல் : நஸயீ(1787) , இப்னுமாஜா(1344) மற்றும் இப்னு ஹிப்பான்
அறிவிப்பாளர் அபூதர் அல்லது அபூதர்தா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இப்னுஹிப்பானில் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment