Saturday, December 9, 2017

மனித வாழ்வில் வழிகேட்டின் ஆரம்பமும், அதிலிருந்து பாதுகாப்புப் பெரும் வழி முறைகளும் பாகம் 03




மனித வாழ்வில் வழிகேட்டின் ஆரம்பமும்,
அதிலிருந்து பாதுகாப்புப் பெரும் வழி முறைகளும்
               
பய​ன் தரும் செயல்களுக்கு வழிகோழு​வது சரியான அகீதாவே. எனவே அதனை விட்டும் விலகியிருப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும். ஆகையால் சரியான அகீதாவைப் பெறாதவன் சந்தேகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இரையாவது திண்ணம். சில வேளை அவை யாவும் அவனிடம் வந்து குவிந்துவிடும். அப்போது அவன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சிகர மானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான சரியான பார்வையையும் சிந்தனையையும் இழந்து விடுவான். ஈற்றில் அவனுக்குத் தன் வாழ்க்கையே நெருக்கடிகள் நிறைந்ததாக ஆகிவிடும். அதன் பின் அவன் சரியான அகீதா கிடைக்கப் பெறாத அதிகமான மக்களைப் போன்று தற்கொலை மூலமேனும் தன் பிரச்சினை களிலிருந்து விடுதலை பெற முயலுவான்.

 சரியான அகீதா கோட்பாட்டினைப் பெறாத ஒரு சமூகம் காட்டு மிராண்டி சமூகமாகும். எனவே, இறை நிராகரிப்பிலிருக்கும் “காபிரான” சமூகங்களிடம் இருப்பது போன்று, அந்த சமூகத்திடம் அழிவின் பால் இட்டுச் செல்லும் பொருளாதார வளங்கள் அதிகமாக இருந்த போதிலும், அதனிடம் சரியான அகீதா கோட்பாடு இல்லாததன் காரணமாக அது மகிழ்ச்சியான வாழ்கைக்குத் தேவையான வளங்களை இழந்து விடும். ஏனெனில் இந்தப் பொருளாதார வளங்களில் இருந்து சரியான பயனைப் பெறுவதற்கு சரியான வழிகாட்டலும் அறிவுருத்தலும் அவசியம். அப்படியான வழிகாட்டல் இஸ்லாத்தின் சரியான அகீதா கோட்பாட்டையன்றி வேறு எதுவும் இல்லை.​ இது பற்றிய அல்லாஹ்வின் சில வாக்குகளைக் கவணிப்போம்.

يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا (51 /المؤمنون)

“என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமான வைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள்.” (23/51) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ ﴿١٠﴾ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ ۖ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿١١﴾ وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ ﴿١٢﴾ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ ۚ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ ﴿١٣السبأ﴾

“மெய்யாகவே நாம் தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! “நீங்கள் அவருடன் துதி செய்யுங்கள்” மேலும் நீங்கள் வளையங்களை ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யுங்கள் என்று, அவருக்கு இரும்பையும் மெதுவாக்கித் தந்தோம். மேலும் நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள். ​நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாக இருக்கின்றேன்.”

“அன்றி ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம்.அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. அன்றி செம்பை ஊற்றுப் போல் நாம் அவருக்கு ஓடச் செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவர்களில் எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.”

“அவை அவர் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், .தண்ணீர் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், (கரும்புப் பாலை காய்ச்சும் பாத்திரங்களையும்) அசைக்க முடியாத பெரிய சமயல் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. தாவூதின் சந்ததிகளே! நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருங்கள். எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் சொற்பமாகவே இருக்கின்றார்கள்.” என்று அல்லாஹ் கூறுகின்றான். (34/10,11,12.13)

எனவே அகீதா கோட்பாட்டின் பலம், பொருளாதார பலத்தின் மூலம் சிதரிப் போகாமல் இருப்பது அவசியம். அவ்வாறன்றி தவறான கொள்கைகளின் பக்கம் சாய்ந்து அது சிதரி விடுமாயின், சரியான அகீதாவைக் கொண்டிராத, பொருளாதார பலம் பொருந்திய காபிரான நாடுகளில் காண்பது போன்று பொருளாதார பலமானது அழிவுக்கும், வீழ்ச்சிக்கும் உரிய காரணியாக மாறி விடும்.​

சரியான அகீதாவை விட்டும் விலகிச் செல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்திருப்பது அவசியம். அவையாவன:
·         சரியான கீதாவைக் கற்காமலும், கற்பிக்காமலும் அதனைப் புறக்கனித்தல், அல்லது அதன் மீது போதிய கவணம் செலுத்தாமை. இதன் காரணமாக அடுத்து வரும் பரம்பரையினர் அகீதா என்றால் என்னவென்று  அறியும் வாய்ப்பை இழந்து விடுவர்.. எனவே இவ்வாறான சூழலில் மக்கள் உண்மையை தவறாகவும், தவறை உண்மையாகவும் கருதுவார்கள். இது பற்றி உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் கூறும் போது  மெளடீகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்” என்றார்கள்.
·      பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல். மேலும் தங்களுக்கு எதிரானவர்களிடம் சரியான கருத்தொன்று இருந்த போதிலும் அதனைப் புறக்கனித்தல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّـهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ ﴿١٧٠البقرة﴾

“மேலும் அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “அவ்வாறன்று, எவற்றின் மீது எங்களின் மூதாதைகள் இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருரந்தாலுமா?” (2/170)

*எவ்வாறு ஸுன்னாவுக்கு எதிரான “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா” போன்ற பிரிவினர் தங்களின் முன்னைய வழி தவறிய இமாம்களைப் பின்பற்றி, சரியான அகீதா கொள்கையை விட்டுப் பிரிந்து வழிதவறிப் போனார்களோ அது போல அகீதா விடயத்தில் மக்கள் முன் வைக்கும் கருத்துக்களை​, சரியான  ஆதாரம் எதுவுமில்லாது, அவை சரியானவையா என்று சீர்தூக்கிப் பார்க்காமல் குருட்டுத் தனமாக அவற்றைப் பின்பற்றுதல்..

*நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தினரையும், மற்றும் அதிகமான நகர வாழ் கப்று வணங்கிகளையும் போன்று, அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறல், மேலும் அல்லாஹ்வையன்றி வே​று எவராலும் செய்ய இயலாத பயன் தரும் காரியம் எதனையும் செய்யவும், தீமையைத் தடுத்து நிறுத்தவும் கூடிய ஆற்றல் அவர்களிடமும் உண்டென்று நம்பி அவர்களை அவர்களின் தரத்திற்கும் மேலாக உயர்த்துதல், இன்னும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவும் என அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் அந்த சான்றோர்களை இடைத் தரகர்களாக ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்குப் பதிலாக அவர்களை வழிப்படுதல், அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று காணிக்கைகளைச் சமர்ப்பித்தல், பிராணிகளை அறுத்துப் பழியிடுதல், அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல், அவர்களிடம் பாதுகாப்பும்  உதவியும் தேடி மன்றாடுதல், போன்ற காரியங்கள்.

இத்தகைய செயல்களை நூஹ் (அலை) அவர்களின் சமூகம், கைவிட விரும்பவில்லை. எனவே

இக்காரியங்களை விட்டு விட வேண்டாம் என்று அவர்கள் தங்களின் சகாக்களை வேண்டிக் கொண்டனர். அவர்களின் இந்நிலைப்பாட்டை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது

وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا ﴿٢٣نوح﴾  
  
“அவர்கள் நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்’ ‘ஸுவாஉ’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ ஆகியவைகளையும் விட்டு விடாதீர்கள்” என்று கூறினர். (71/23) 

எனவே இது போன்றுதான் கப்று வணங்கிகளின் நிலையும் இருக்கின்து.
·         உலகிலிருக்கும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், அவனின் அல்குர்ஆன் வாக்குகளையும் பற்றி மக்கள் சிந்திக்க மறந்து போனமை, மேலும் பொருளாதார நாகரிக வளங்களை மேன்மைப் படுத்தி, இவையாவும் வெறும் மனித பலத்தின் சாதனை என்றும் அவர்கள் நினைத்தனர். இதன் காரணமாக அவர்கள் அல்லாஹ்வை மறந்து இவை யாவும் மனித முயற்சியால் மாத்திரம் ஏற்பட்ட சாதனைகள் என்று அந்த மனிதர்களைப் பாராட்டவும் அவர்களை கெளரவிக்கவும் முற்பட்டனர். இவ்வாறுதான் முன்னர் காரூனும் நினைத்தான். எனவே அவனுடையவும், அவனைப் போன்றோருடையவும்​ இந்த நிலைப்பட்டைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ عِندِي (القصص/78)

“இதை எல்லாம் என்னுடைய சொந்த அறிவினால்தான் நான் அடைந்தேன்” என்று (காரூன்) கூறினான்” (28/78)

மேலும் மனிதனின் துயரங்களை அல்லாஹ் நீக்கி அவனுக்கு அருட் கொடைகளை  வழங்குகின்றபோது அவன்,
هَـٰذَا لِي (فصلت/50)
“இது எனக்கு வரவேண்டி இருந்ததே” (41/50) என்றும்
إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ (الزمر/49)

​“நான் இதனை அடைந்ததெல்லாம் என்னுடைய அறிவினால்தான்”(39/49) என்றும் கூறுகின்றான், என அவர்களின் நிலையை பற்றி இத்திருவசனங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆனால் இச்சந்தர்ப்பதில் மனிதன் அல்லாஹ் இவ்வுலகில் ஏற்படுத்தி வைத்துள்ள அவனின் நிஃமத்துக்களையும் அதன் உயரிய சிறப்புக்களையும் பயன்பாடுகளையும்  பார்க்கவோ அது பற்றிச் சிந்திக்கவோ இல்லை. மேலும் அல்லாஹ்தான் மனிதனைப்​ படைத்து இவற்றை வெளிக் கொண்டு வரும் ஆற்றலை அவனுக்கு வழங்கினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

وَاللَّـهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ ﴿٩٦/الصافات﴾

“உங்களையும் நீங்கள் சித்தரித்தவைகளையும் அல்லாஹ்தான் படைத்தான்.” (37/96)

أَوَلَمْ يَنظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّـهُ مِن شَيْءٍ (الأعراف/185)

“வானங்களையும், பூமியினுடைய ஆட்சியையும், அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்ளையும் அவர்கள் பார்க்கவில்லையா? (7/185)

اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ ﴿٣٢﴾

“அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக கனி வர்க்கங்களையும் வெளிப்படுத்துகின்றான். தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.(14/,32)


 وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ ﴿٣٣﴾

“மேலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான். இன்னும் இரவையும் பகலையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான்” (14/33)

وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّـهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ (ابراهيم/32,33,34)


“இன்னும் நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே அல்லாஹ்வுடைய அருட் கொ​டைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகின்றவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான்.(14/34)
·         பிள்ளை செல்ல வேண்டி திசையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை. எனவேதான் “எல்லா குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே பிறக்கிறது. எனினும் அதன் பெற்றோர்களே அதனை யூதனாக அல்லது கிரிஸ்தவனாக, அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றுகின்றனர்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
·         பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலுள்ள கல்வி, தகவல் ஊடகங்கள் அவற்றின் உண்மையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப் பட்டுள்ளன. ஆகையால் அங்கு பாடத் திட்டங்களில் மார்க்க விடயங்களுக்குப் பெரிய அளவில் இடம் கொடுக்கப்படவில்லை. அல்லது அவ்விடயத்தில் முற்றாகக் கவணம் செலுத்தப்பட வில்லை, இதற்கு மாறாக தெலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை போன்ற விளம்பர ஊடகங்கள் அநேகமாக அழிவின் பக்கமும், மற்றும் சரியான வழிகளுக்குப் பதிலாக பிழையான வழிகளின் பக்கமும்  திசை திருப்பும் சாதனங்களாக மாறியுள்ளன. அல்லது நல்ல பண்பாடுகளையும், சரியான அகீதாவையும் விதைக்கும்படியான விடயங்களின் பக்கமும், தவறான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சக்திகளை எதிர்க்கக் கூடிய விடயங்களின் பக்கமும் கவணம் செலுத்தாது வெறும் பொருளாதார மற்றும் ஆடம்பர விடயங்களின் பக்கம் அவை நாட்டம் கொண்டுள்ளன., இதனால் நாஸ்திக சக்திகளை எதிர்க்க முடியாத பலமற்ற பரம்பரை தோன்றியுள்ளது. இது அந்த சக்திகளை எதிர்க்க முடியாமல் அவற்றின் முன்னால் நிர்க்கதியாக நிற்கிறது.
வழிகேடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறும் வழிகள்
·         சரியான அகீதா கொள்கைப் பற்றி  அறிந்து கொள்ளும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனின் தூதரின் வழியின் பாலும் திரும்புதல். ஏனெனில் முன்னைய சான்றோர் இவையிரண்டின் மூலமே தங்களின் அகீதாவை அடைந்து கொண்டனர். எனவே இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எதன் மூலம் சீர்திருத்த முடிந்ததோ அதன் மூலம்தான் இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரையும் சீர்திருத்த முடியும். அத்துடன் தீமையைப் பற்றி அறிந்து கொள்ளாதவன் அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு என்றபடியால் வழி தவறிய கொள்கை வாதிகளின் கொள்கையை மறுத்துரைக்கவும் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அவர்களின் தவறான கொள்கையையும், அவர்களின் ஆட்சேபணைகளை யும் பற்றி அறிந்து கொள்வது​ம் அவசியம்,
·         முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதா கொள்கையைக் கற்றுக் கொடுக்கும் விடயத்தில் விசேட கவணம் செலுத்துதல் வேண்டும். அவ்வமயம் அதனை பல கட்டங்களில் கற்றுக் கொடுப்பதும், அதற்காக பாட திட்டத்தில் அதிகப் படியான அதிக நேரம் ஒதுக்குவதும் அவசியம். மேலும் இதன் பரீட்சை விடயத்தில் அதிக கவணம் செலுத்துவதும் அவசியம்.
·         முன்னோர்களின் சரியான புத்தகங்களை போதித்தல் வேண்டும். அத்துடன் ஸூபிஸ, அநாச்சார, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇரிய்யா, மற்றும் மாதுரீதிய்யா போன்ற வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிட வேண்டும். எனினும் வேண்டுமானால் அவர்களின் நூல்களில் இருக்கும் தவறான கருத்துக்களுக்குப் பதிலளிக்கவும், அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் என்ற  நோக்கில் அதனைக் கற்றுக் கொடுக்கலாம்.

·         ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவைக் மக்களுக்குப் போதிக்கவும், வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மறுக்கவும் சீர்திருத்தவாதிகளான பிரச்சாரகர்களை ஏற்பாடு செய​தல் வேண்டும்..

No comments:

Post a Comment