Saturday, December 9, 2017

அதிகாரத்தில் ஏகத்தும் பாகம் 04






 1توحيد الربوبية
அதிகாரத்தில் ஏகத்தும்

இதில் பின் வரும் விடயங்கள் உள்ளடங்கும்:

பகுதி ஒன்று: அதிகாரத்தில் ஏகத்துவம் என்றால் என்ன? அதன் இயற்கை யாது? அதனை முஷ்ரிகீன்களும் ஏற்றுக் கொள்ளுதல்.

பகுதி இரண்டு: அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள “றப்பு” எனும் சொல்லின் விளக்கம். “றுபூபிய்யத்” எனும் அதிகார விடயத்தில் வழிதவறிய சமூகங்களின் மனப்பாங்கும், அதற்குப் பதிலும்.

பகுதி மூன்று: அல்லாஹ’வின் கட்டளைக்கு பிரபஞ்சத்திலுள்ள யாவும் அடி பணிதல்.

பகுதி நான்கு; அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும்  நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை;

பகுதி ஐந்து: தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிகார விடயத்தில் ஏகத்துவத்தை  உறுதிப் படுத்துவது அவசியம். அது பற்றிய விளக்கம்..


பகுதி - 1

அல்லாஹ்வுக்குக்  கட்டுப்படுதலும், அவனுக்கு அடிபணிதலும்.
பகுதி நான்கு:  படைத்தல், உணவளித்தல் மற்றும் ஏனைய விவகாரங்களில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விடயத்தில் அல்குர்ஆனின் அணுகு முறை.

அதிகாரத்தில் ஏகத்துவம் என்றால் என்ன? அதனை முஷ்ரிகீன்களும் ஏற்றுக்கொள்ளுதல்

பொதுவாக சிருஷ்டிகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனே பரிபாலித்தும் அதன் மீது அதிகாரம் செலுத்தியும் வருகின்றான் என்றும் அல்லாஹ் ஒருவனையே வழிப்படல் வேண்டும் என்றும் நம்புவதே ஏகத்துவம், அத்துடன் அல்லாஹவுக்குரிய திரு நாமங்களையும் மற்றும் பண்புகளையும் அவனுக்கு உறுதி செய்தல் வேண்டும் என்ற விடயமும் ஏகத்துவத்தில் அடங்கும்.. எனவே தெளஹீத் என்பது மூன்று வகைப்படும்.. அவையாவன:

                பரிபாலன, அதிகார விடயத்தில் ஏகத்துவம், கடவுள் தன்மையில் ஏகத்துவம், அல்லாஹ்வின் திரு நாமங்கள், பண்புகள் விடயத்தில் ஏகத்துவம் என்பவைகளாகும். இந்த வகைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றித் துள்ளியமாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு இவை ஒவ்வொன்றின் கருத்துக்களைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.

                توحيد الربوبية பரிபாலனத்தில், அதிகாரத்தில் ஏகத்துவம்:

                அல்லாஹ் தன்னுடைய செயல் அனைத்திலும் ஏகன் என்று நம்புவதே பரிபாலனத்தில், அதிகாரத்தில் ஏகத்துவம் எனப்படும். இதில் ஒன்றுதான் எல்லா சிருஷ்டிகளையும் அல்லாஹ் ஒருவனே தனியாகப் படைத்தான் என்று நம்புவது. ஏனெனில் அதன் அதிகாரம் அவனிடமே இருக்கின்றது. இதனையே,
اللَّـهُ خَالِقُ كُلِّ شَيْءٍ ۖ (الزمر/62)

“அல்லாஹ்தான் எல்லா பொருள்களையும் படைத்தவன்.(39/62) என்ற அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகிறது..

    மேலும் எல்லா உயிரினங்களுக்கும், மனித குலத்துக்கும், ஏனைய மற்றெல்லா படைப்புக்களுக்கும் உணவளிக்கும் அதிகாரம் அந்த அல்லாஹ் ஒரிவனிடமே உண்டு.. இதனை,
وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّـهِ رِزْقُهَا  (هود/6)

“உணவளிக்க அல்லாஹ் பொருப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை.(11/6) எனும் அல்லாஹ்வின் வாக்கு  உருதி செய்கின்றது.

மேலும் சகல ஆட்சியினதும் அதிபதியும், உலகின் சகல விவகாரங்களையும் நிர்வகிப்பவனும் அவனே. எனவே அவன்  விரும்பியவர்களிடம் ஆட்சிப் பொருப்பை ஒப்படைப்பனாகவும். இன்னும் அவன் விரும்பியவரிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிக் கொள்கின்றவனாகவம் இருக்கிறான். அவ்வாறே அவன்  விரும்பியவர்ளை கண்ணியப் படுத்துகின்றவனாகவும், இழிவு படுத்துகின்றவனாகவும் இருக்கின்றான். மேலும் சர்வ பொருட்களின் மீதும் வல்லமையுள்ளவனும் அவனே. இரவையும் பகலையும் செயற் படுத்து கிறவனும் அவனே. மேலும் உயிர் கொடுப்பவனும், மரணிக்கச் செய்பனும் அவனே. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.:

قُلِ اللَّـهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢٦﴾ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ۖ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ آل عمران٢٧﴾

                “நீங்கள் கூறுங்கள். “எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிட மிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பிய வர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பிய வர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3/26)

                "நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றி வழங்கு கின்றாய்.(3/27)​

                மேலும் சிருஷ்டிக்கும் விடயத்திலும், உணவளிக்கும் விடயத்திலும் எவ்வாறு யாரும் தனக்கு இணையாகவும் துணையாகவும் இருக்க முடியாதோ, அது போன்று ஆட்சி அதிகாரத்திலும் யாரும் தனக்கு  இணையாகவோ, உதவியாகவோ இருப்பதையும் அல்லாஹ் மறுக்கின்றான்,

إِنَّ رَبَّكُمُ اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٥٤الأعراف﴾

                நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது வெகு தீவிரமாகவே அதனைப் பின்தொடர்கிறது. மேலும் அவனின் கட்டளைக்கு உட்பட்ட சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். படைப்பினங்களும் அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். (7/54)

                அனைத்தின் மீது அதிகாரமும், அதனை பரிபாலிக்கும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்ற உன்மையை​ ஏற்றுக் கொள்ளும் இயற்கை சுபாவம் கொண்டவையாகவே சகல சிருஷ்டிகளையும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். எனவே வழிபாட்டு விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணையை மேற்கொண்டு வரும் முஷ்ரிகீன்களும் கூட பரிபாலிக்கும் விடயத்தில் அல்லாஹ்தான் ஏகன் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே இவ்விடயத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ﴿٨٦﴾

                “ஏழு வானங்களின் இரட்’சகனும், மகத்தான அர்ஷுக்கு இரட்சனும் யார்? என்று கேட்பீராக.”

سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾

                “அ(தற்க)வர்கள் “யாவும் அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள்.” (அவ்வாறாயின்) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?” என்று நீல் கூறுவீராக.”
قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٨﴾

                “எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? அவனே பாதுகாக்கிறான். (அவனிடமிருந்து) யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள் அறிந்திருந்தால், அவன் யார் என்று கேட்பீராக.”

سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ فَأَنَّىٰ ْتُسحَرُونَ ﴿٨٩المؤمنون﴾
 (المؤمنون\(86,87,88,89

                “அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப் படுகிறீர்கள்?” என்று கேட்பீராக” (23 - 86,87,88,89)

                மனித வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க எந்தவொரு சாராரும் இந்த ஏகத்துவத்திற்கு எதிரானவர்களல்ல. மாறாக இயற்கையில் அனைவரின் உள்ளமும் இதனை ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர்கள் இது பற்றி முஷ்ரிகீன்களிடம் கேட்ட சந்தர்ப்பங்களில் கூட அவர்கள் அதனை மறுக்கவில்லை.  எனினும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த தூதின் மீதே அவிசுவாசம் கொண்டார்கள். அப்பொழுது அவர்களிடம் இறைத் தூதர்கள்,


قَالَتْ رُسُلُهُمْ أَفِي اللَّـهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ (إبراهيم\10)

                “வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்?” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்” (14/10)

            அப்பொழுது அவர்கள் அதனை மறுக்கவில்லை. மாறாக அந்தத் தூதர்கள் மனிதர்களாக இருப்பதையே அவர்கள் ஆட்சேபித்தனர், என்பதை அல்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

                பகிரங்கமாக அல்லாஹ்வைப் புறக்கனித்து வந்தோரில் பிரபல்யமான ஒருவன்தான் பிர்அவ்ன். எனினும் அவன் அந்தரங்கத்தில் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருந்தான். இது மூஸா (அலை), அவனிடம் கூறிய வாசகத்திலிருந்து துலாம்பரமாகிறது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. 

قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنزَلَ هَـٰؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا ﴿١٠٢﴾ الإسراء

“வானங்களையும் புமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். பிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்” என்று (மூஸா) கூறினார்.(17/102)

                மேலும் பிர்அவ்னைப் பற்றியும் அவனின் கூட்டத்தினர் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடும் போது,

 وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا ۚ (النمل 14)

“அவர்களுடைய உள்ளங்கள் அவைகளை உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவைகளை அவர்கள் மறுத்தார்கள்.(27/14)

அவ்வாறே இந்நாளில் அல்லாஹ்வை ஏற்க மறுத்து வருகின்ற கம்யூனிஸ வாதிகள் தங்களின் அகங்காரத்தின் காரணமாகவே அவனின் இருப்பதை  மறுத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களின் உள்ளங்களில் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளனர். ஏனெனில் எந்தவொரு பொருளும் அதனை உண்டு பண்ணிய ஒருவன் இல்லாமலும், எந்தவொரு சிருஷ்டியும் அதனை சிருஷ்டித்த ஒருவன் இல்லாமலும்,  எந்தவொரு அடையாளமும் அதனை அடையாளப் படுத்திய ஒருவன் இல்லாமலும் உருப்பெற முடியாது.  எனவே இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.,

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ﴿٣٥﴾ أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ ﴿٣٦ الطور﴾

                “அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத் தாமே படைத்துக் கொண்டனரா?” (52/35)

“அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? ஆனால் (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான், என்பதை) இவர்கள் நம்புவதில்லை.” (52/36) ​

நீங்கள் எல்லா உலகையும் பாருங்கள். அதன் மேலும் கீழும், மற்றும் அதன் எல்லா பகுதியையும் பற்றி சிந்தியுங்கள், அப்பொழுது அவற்றைப் படைத்த, உருவாக்கிய, அதன் உரிமையாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு இவை யாவும் சாட்சியாக இருப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். எனவே இவற்றை எல்லாம் உற்பத்தி செய்தவனை மறுப்பதானது விஞ்ஞானத்தை மறுப்பதற்குச் சமமாகும். எனினும் இன்று கம்யூனிஸவாதிகள் இறைவன் இல்லை என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் அவர்களின் அகங்காரத்தினதும், மற்றும் அவர்கள் பகுத்தறிவின் சரியான முடிவுகளையும் சிந்தனைகளையும் சுருட்டி மறைத்து வைத்துக் கொண்டதினதும் விளைவே. எனவே எவர் இந்த நிலையில் இருக்கின்றாரோ அவர் தன் புத்தியை​ப் பயன்படுத்தத் தவறியவர், என்பதுடன் அந்த வேடிக்கையின் பால் மக்களை அழைக்கின்றவரும் ஆவார். இதனை ஒரு கவிஞர் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றார்.

فَوَا عَجَباً كَيْفَ يُعْصَى الإلَ ه أمْ كَيْفَ يَجْحَدُهُ الجَاحِدَ
وَفِي  كُلِّ  شَئٍ    لَهُ    آيَةٌ     تَدُلُّ   عَلَى   انَّهُ   واحِدٌ
மாறு செய்திடலா​மோ​ இறைவனுக்கு?
மறுத்திடலாமோ​ அவன் இருப்பை?​
பொருள் யாவும் கூறுகிறதே

அவன் ஒருவன். என்று

No comments:

Post a Comment