كتاب
الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(1) باب التَّخَلِّي عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ
பாடம்: 1 மலம் ஜலம் கழிக்க
மறைவாக இடத்திற்கு செல்வது
1-حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ
الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ
أَبِي سَلَمَةَ، عَنِ
الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»
[حكم الألباني] : حسن صحيح
1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க செல்லும் போது தூரமாக சென்று விடுவார்கள் என்று முகீரா பின் ஷுஃபா
(ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன் ஸஹீஹ்
2-حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ،
حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ،
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، «أَنَّ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ،
حَتَّى لَا يَرَاهُ أَحَدٌ»
[حكم الألباني] : صحيح
2.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு தொலைவிற்கு சென்றிடுவார்கள்
என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(2) باب الرَّجُلِ يَتَبَوَّأُ لِبَوْلِهِ
பாடம்: 2 சிறுநீர் கழிக்க
ஏற்றவாறு இடத்தை அமைத்தல்.
3-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ،
حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: حَدَّثَنِي شَيْخٌ،
قَالَ لَمَّا قَدِمَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ الْبَصْرَةَ، فَكَانَ يُحَدِّثُ
عَنْ أَبِي مُوسَى [ص: 2] ، فَكَتَبَ عَبْدُ اللَّهِ إِلَى أَبِي مُوسَى
يَسْأَلُهُ عَنْ أَشْيَاءَ، فَكَتَبَ إِلَيْهِ أَبُو مُوسَى: إِنِّي كُنْتُ مَعَ
رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَأَرَادَ أَنْ
يَبُولَ، فَأَتَى دَمِثًا فِي أَصْلِ جِدَارٍ فَبَالَ، ثُمَّ قَالَ: صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَبُولَ فَلْيَرْتَدْ
لِبَوْلِهِ مَوْضِعًا»
[حكم الألباني] : ضعيف
3.அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் பஸரா நகருக்கு வந்த போது
அவர்களிடம், அபூமூஸா அவர்(கள் அறிவிக்கின்ற ஹதீஸ்)களைப்
பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள், அபூமூஸா (ரளி) அவர்களிடம் சில விசயங்களைக் கேட்டு கடிதம் எழுதினார். அவர்களுக்கு
அபூமூஸா (ரளி) அவர்கள் (பின்வருமாறு பதில்) எழுதினார்கள்:
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடனிருந்தேன். அப்போது அவர்கள்
சிறுநீர் கழிக்க எண்ணி, ஒரு சுவருக்கு அடியில்
உள்ள மிருதுவான தரைக்கு சென்று சிறுநீர் கழித்தார்கள். பின்பு உங்களில் ஒருவர் சிறுநீர்
கழிக்க விரும்பினால், சிறுநீர் கழிப்பதற்காக
தக்க இடத்தை தேடி (தெளிவு செய்து) கொள்வாராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்று தமக்கு ஒரு பெரியவர் அறிவித்ததாக அபத்தய்யாஹ் என்பார் அறிவிக்கின்றார்.
(குறிப்பு: இதில் அறியப்படாத ஒருவர்
இடம் பெற்றுள்ளார்.)
தரம் : ளயீப்
(3) باب مَا
يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ الْخَلاَءَ
பாடம்: 3 கழிவறையில் நுழையும்
போது சொல்ல வேண்டியவை
4-حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ،
حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، وَعَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ
بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: عَنْ حَمَّادٍ قَالَ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ» وَقَالَ: عَنْ عَبْدِ الْوَارِثِ قَالَ:
«أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ شُعْبَةُ،
عَنْ عَبْدِ الْعَزِيزِ: " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ "، وَقَالَ
مَرَّةً: " أَعُوذُ بِاللَّهِ "، وَقَالَ وُهَيْبٌ: "
فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ
".
[حكم الألباني] : صحيح
4.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு செல்லும்
போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிகமினல் குபுஸி வல் கபாயிஸி என்று சொல்பவர்களாக
இருந்தனர்.
மற்றொரு அறிவிப்பில் 'அவூதுபில்லாஹி மினல்குபுஸிவல்
கபாயிஸி' என்று அல்லாஹ்வின் திருத்தூதர்
(ஸல்) அவர்கள் கூறுவதாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் மூன்றாவது அறிவிப்பாளராக (ஹம்மாதுக்கு பதிலாக) அப்துல் வாரிஸ்
என்பார் இடம் பெறுகின்றார்.
தரம் : ஸஹீஹ்
5-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو يَعْنِي
السَّدُوسِيَّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ هُوَ
ابْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ بِهَذَا الْحَدِيثِ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ» وَقَالَ شُعْبَةُ: وَقَالَ مَرَّةً: «أَعُوذُ بِاللَّهِ»
[حكم الألباني] : شاذ
5.மேற்கண்ட இரண்டு விதமான சொற்களும் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம்
பெற்றுள்ளது.
தரம் : ஷாத்( அரிதானது என்பது இதன் பொருள் )
6-حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ،
أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضِرِ بْنِ أَنَسٍ، عَنْ زَيْدِ
بْنِ أَرْقَمَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
" إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلَاءَ
فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ "
[حكم الألباني] : صحيح
6.(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும்
பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர், 'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தரம் : ஸஹீஹ்
(4) باب
كَرَاهِيَةِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ
பாடம்: 4 மலம் ஜலம் கழிக்கும்
போது கிப்லாவை முன்னோக்குதல் கூடாது.
7-حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ،
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ: قِيلَ لَهُ لَقَدْ عَلَّمَكُمْ
نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ، قَالَ: أَجَلْ لَقَدْ «نَهَانَا
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ
بَوْلٍ، وَأَنْ لَا نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، وَأَنْ لَا يَسْتَنْجِيَ أَحَدُنَا
بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ»
[حكم الألباني] : صحيح
7.உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் ஒழுக்கமுறை உட்பட (ஒழுக்க பண்புகள்) அனைத்தையும் உங்களுடைய நபி
அவர்கள் கற்றுத் தந்தார்களா? என்று (ஸல்மான்) அவர்களிடம் வினவப்பட்ட போது, அவர் (பின்வருமாறு) பதில் அளித்தார்: ஆம்! நாங்கள் மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்
போது, கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் துப்புரவு செய்வதையும், எங்களில் யாரும் மூன்று கற்களுக்கு
குறைவாக (எடுத்துச் சென்று துடைத்து) சுத்தம் செய்வதையும், விட்டை அல்லது எலும்புத் துண்டைக் கொண்டு சுத்தம் செய்வதையும் எங்களுக்கு நபி
(ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.
தரம் : ஸஹீஹ்
8-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ
النُّفَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ،
عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَنَا
لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ، أُعَلِّمُكُمْ فَإِذَا أَتَى أَحَدُكُمُ
الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا وَلَا
يَسْتَطِبْ بِيَمِينِهِ، وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ
الرَّوْثِ وَالرِّمَّةِ»
[حكم الألباني] : حسن
8.உங்களிடத்தில் (மார்க்க நெறிகளை) உங்களுக்கு கற்றுத் தருகின்ற தந்தையின்
தரத்தில் உள்ளவன் தான் நான்! எனவே உங்களில் ஒருவர் மலம் (ஜலம்) கழிக்க சென்றால் அவர்
கிப்லாவை முன்னோக்கவோ அல்லது பின்னோக்கவோ, மேலும் (அப்போது) தன் வலது கரத்தினால் துப்புரவு செய்யவோ வேண்டாம்' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு (துடைத்து சுத்தம் செய்யும் போது)
மூன்று கற்களை (பயன்படுத்துவதை) ஏவி, விட்டை எலும்பு (ஆகியவற்றை பயன்படுத்துவதை) தடை செய்தனர். எனவே நாங்கள் கிப்லாவை
விட்டும் வேறு திசையில் திரும்பி (அந்த கட்டிடத்தில் நுழைய நேர்ந்ததற்காக) அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு தேடிக் கொள்வோம் என்று அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றனர்.
தரம் : ஹஸன்
9-حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ،
حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ
اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، رِوَايَةً قَالَ: «إِذَا أَتَيْتُمُ
الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَكِنْ
شَرِّقُوا أَوْ غَرِّبُوا» فَقَدِمْنَا الشَّامَ، فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ
بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَكُنَّا نَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ
[حكم الألباني] : صحيح
9.நீங்கள் மலம் (அல்லது சிறுநீர்) கழிக்கச் சென்றால் மலம், ஜலம் கழிக்கும் போது நீங்கள் கிப்லாவை
முன்னோக்க வேண்டாம். எனினும் நீங்கள் கிழக்கோ மேற்கோ நோக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் சிரியாவிற்கு வந்த போது அங்குள்ள கழிப்பு
அறைகள் கிப்லாவை நோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கிப்லாவை விட்டும் (வேறு திசையில்)
திரும்பிக் கொண்டோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடிக் கொண்டோம். இதை அபூஅய்யூப்
அல்அன்ஸாரி (ரளி) அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
10-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ،
حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ
مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ الْأَسَدِيِّ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِبَوْلٍ أَوْ غَائِطٍ»،
قَالَ أَبُو دَاوُدَ: وَأَبُوزَيْدٍ هُوَ مَوْلَى بَنِي ثَعْلَبَةَ
[حكم الألباني] : منكر
10.சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது நாங்கள் பைத்துல் மக்தஸ், கஃபா என்ற இரு கிப்லாக்களை முன்னோக்குவதை
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.
தரம் : முன்கர் ( (நிராகரிக்கப்பட்டது)
11-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ
فَارِسٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، عَنْ
مَرْوَانَ الْأَصْفَرِ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ أَنَاخَ رَاحِلَتَهُ
مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، ثُمَّ جَلَسَ يَبُولُ إِلَيْهَا، فَقُلْتُ: يَا أَبَا
عَبْدِ الرَّحْمَنِ، أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا؟ [ص: 4] قَالَ: بَلَى
إِنَّمَا «نُهِيَ عَنْ ذَلِكَ فِي الْفَضَاءِ، فَإِذَا كَانَ بَيْنَكَ وَبَيْنَ
الْقِبْلَةِ شَيْءٌ يَسْتُرُكَ فَلَا بَأْسَ»
[حكم الألباني] : حسن
11.இப்னு உமர் (ரளி) அவர்கள் தனது ஒட்டகத்தை கிப்லாவை நோக்கிப் படுக்க
வைத்து, பிறகு அதை நோக்கி சிறுநீர்
கழிக்க அமரக் கண்ட நான் அவர்களிடம் அபூஅப்துர்ரஹ்மானே! இது தடை செய்யப்பட்டதல்லவா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'இது வெட்ட வெளிப்பகுதியில் தான் தடை
செய்யப்பட்டுள்ளது. உன்னை மறைக்கும் பொருள் உனக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருந்தால்
(அது) தவறல்ல' என்று பதில் அளித்தார்கள்.
தரம் : ஹஸன்
(5) باب الرُّخْصَةِ
فِي ذَلِكَ
பாடம்: 5 கிப்லாவை முன்னோக்க
அனுமதி.
12-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ
مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ
يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ، قَالَ: لَقَدْ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ، «فَرَأَيْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ
بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ»
[حكم الألباني] : صحيح
12.நான் வீட்டின் முகட்டில் ஏறி நின்றேன். அப்போது தான் அல்லாஹ்வின்
திருத்தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்தஸை முன்னோக்கியவர்களாக தனது தேவையை நிறைவு
செய்வதற்காக இரு செங்கற்கள் மீது அமர்ந்திருக்கக் கண்டேன்' என்று இப்னு உமர் (ரளி)
அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
13-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ،
حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ
بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ
جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ، فَرَأَيْتُهُ قَبْلَ
أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا»
[حكم الألباني] : حسن
13.ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவை
முன்னோக்கி சிறுநீர் கழிப்பதற்கு தடை விதித்திருந்தனர். ஆனால் அவர்கள் உயிர் கைப்பற்றப்படுவதற்கு
ஓராண்டுக்கு முன்பு கிப்லாவை முன்னோக்(கி சிறுநீர் கழிக்)கக் கண்டிருக்கின்றார்கள்.
தரம் : ஹஸன்
(6) باب كَيْفَ التَّكَشُّفُ عِنْدَ الْحَاجَةِ
பாடம்: 6 மலம், ஜலம் கழிக்கும் போது ஆடையை
நீக்கலாமா?
14-حَدَّثَنَا
زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ رَجُلٍ، عَنِ
ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا
أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ». قَالَ
أَبُو دَاوُدَ: رَوَاهُ عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ - وَهُوَ ضَعِيفٌ - قَالَ أَبُوعِيسَى الرَّمْلِيُّ:
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ،
أَخْبَرَنَا عَبْدُ السَّلَامِ بِهِ
[حكم
الألباني] : صحيح
14.நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்ற
விரும்பினால் தரையை (அண்மித்து) அமர்கின்ற வரை தனது ஆடையை உயர்த்த மாட்டார்கள்' என்று இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள், மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள்
அனஸ் பின் மாலிக் மூலம் அஃமஷ் வழியாக அறிவிக்கின்றார். (இது பலவீனமானதாகும்)
(குறிப்பு: இமாம் ஸுயூத்தி அவர்கள் தெரிவிக்கின்றார்கள், இது (அப்துஸ்ஸலாம்) பலவீனமானது என்று இமாம் அபூதாவூத் அவர்கள்
குறிப்பிட்டிருப்பது அப்துஸ்ஸலாம் அவர்களை பலவீனமானவர் என்பதை தெரிவிப்பதற்காக அல்ல.
எனெனில் இவர் சஹீஹைன் (புகாரி, முஸ்லிம் ஆகியவைகளின்) அறிவிப்பாளர்களின்
வரிசையில் இடம்பெறும் நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் ஆவார். எனினும் அனஸ் (ரளி) அவர்களிடமிருந்து
அறிவிக்கும் அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று தெரிவிப்பதே இமாம் அவர்களின் நோக்கமாகும்.
ஏனெனில் அஃமஷ் அவர்கள் அனஸ் (ரளி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை. இதனால்
இவர் (இதை) முர்ஸலாக அறிவிக்கிறார். இப்னு உமர் வழியாக அறிவிக்கும் அந்த 'ஒருவர்' யாரென தெரியாததால் இதுவும் பலவீனமான
ஹதீஸாகும்.)
(7) باب كَرَاهِيَةِ الْكَلاَمِ عِنْدَ الْحَاجَةِ
பாடம்: 7 கழிப்பிடத்தில் உரையாடலாகாது.
15-حَدَّثَنَا
عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ،
حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ
هِلَالِ بْنِ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْرُجُ الرَّجُلَانِ
يَضْرِبَانِ [ص: 5] الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ،
فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ»، قَالَ أَبُو دَاوُدَ:
هَذَا لَمْ يُسْنِدْهُ إِلَّا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ
[حكم
الألباني] : ضعيف
15.(மலஜலம் கழிக்கும்
போது) தங்கள் மர்மஸ்தானங்களை வெளிப்படுத்தி, உரையாடிக் கொண்டு
மலம் (ஜலம்) கழிக்க இருவர் (இணைந்து) செல்லக்கூடாது, காரணம் இதனை
அல்லாஹ் வெறுக்கிறான் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன்
என்று அபூஸயீத் (ரளி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இதை இக்ரிமாவை தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை.
தரம் : ளயீப்
(குறிப்பு: இந்த இக்ரிமா பின் அம்மார் என்பவர்
யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை புகாரி, அஹ்மது,
நஸயீ ஆகியோர் குறை கூறியுள்ளார்கள். இந்த ஹதீஹில் யஹ்யா பின் அபீகஸீம்
வாயிலாகவே இக்ரிமா அறிவிப்பதால் இது பலவீனமானதாகும்.)
(8) باب أَيَرُدُّ السَّلاَمَ وَهُوَ يَبُولُ
பாடம்: 8 சிறுநீர் கழிக்கும் போது சலாமுக்கு பதில் உரைத்தல்.
16-حَدَّثَنَا
عُثْمَانُ، وَأَبُو بَكْرِ ابْنَا أَبِي شَيْبَةَ قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ
سَعْدٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ
ابْنِ عُمَرَ، قَالَ: «مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ» قَالَ
أَبُو دَاوُدَ: وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، وَغَيْرِهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلَامَ»
[حكم
الألباني] : حسن
16.நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் அவர்களுக்கு சலாம் கூறினார். அவருக்கு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) கூறவில்லை என்று இப்னுஉமர் (ரளி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தயம்மும் செய்து பிறகு அம்மனிதருக்கு பதில் சலாம் கூறினார்கள் என்று
இப்னு உமர் (ரளி) அவர்கள் வழியாகவும் மற்றவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.
தரம் : ஹஸன்
17-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ،
عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ أَبِي سَاسَانَ،
عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى
تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ " إِنِّي كَرِهْتُ أَنْ
أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ أَوْ قَالَ: عَلَى طَهَارَةٍ "
[حكم
الألباني] : صحيح
17.முஹாஜிர் பின் குன்புத் (ரளி) அவர்கள்
நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது வந்து அவர்களுக்கு சலாம்
உரைத்தார். அவருக்கு அவர்கள் உலூச் செய்கின்ற வரை பதில் கூறவில்லை. பின்பு அவரிடம்
அவர்கள் சுத்தமில்லாமல் அல்லாஹ்வை கூறுவதை வெறுக்கின்றேன் என்று காரணம் சொன்னார்கள்
என்று முஹாஜிர் பின் குன்ஃபுத் (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(9) باب
فِي الرَّجُلِ يَذْكُرُ اللَّهَ تَعَالَى عَلَى غَيْرِ طُهْرٍ
பாடம்: 9 தூய்மையின்றி அல்லாஹ்வை கூறுதல்.
18-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ
خَالِدِ بْنِ سَلَمَةَ يَعْنِي الْفَأْفَاءَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ
عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ»
[حكم
الألباني] : صحيح
18.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தனது எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள் என்று ஆயிஷா
(ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(10) باب
الْخَاتَمِ يَكُونُ فِيهِ ذِكْرُ اللَّهِ يَدْخُلُ بِهِ الْخَلاَءَ
பாடம்: 10 இறைப்பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தோடு கழிப்பறைக்கு
செல்லுதல்.
19-حَدَّثَنَا
نَصْرُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي عَلِيٍّ الْحَنَفِيِّ، عَنْ هَمَّامٍ، عَنِ ابْنِ
جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ»، قَالَ أَبُو
دَاوُدَ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ وَإِنَّمَا يُعْرَفُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ
زِيَادِ بْنِ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ، ثُمَّ أَلْقَاهُ»
وَالْوَهْمُ فِيهِ مِنْ هَمَّامٍ، وَلَمْ يَرْوِهِ إِلَّا هَمَّامٌ "
[حكم
الألباني] : منكر
19.நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்கு
செல்லும் போது தனது மோதிரத்தை (கழற்றி) வைத்துவிடுவார்கள்' என்று அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இது முன்கரான (நிராகரிக்கப்பட்ட) ஹதீஸ் ஆகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம்
ஒன்றை அணிந்திருந்தார்கள். பின்பு அதை (கழற்றி) எறிந்து விட்டார்கள் என்ற ஹதீஸ் தான்
அனஸ் (ரளி) ஜுஹ்ரீ, சியாத் பின் சஃது வழியாக இப்னு ஜுரைஜ்
அவர்களிடமிருந்து அறியப்படுகிறது. இதில் சந்தேகத்திற்குரியவர் ஹம்மாம் ஆவார். இந்த
ஹதீஸை ஹம்மாமைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை..
தரம் : முன்கர் (நிராகரிக்கப்பட்டது)
No comments:
Post a Comment