அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(101)باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ بِالسَّجْدَةِ
பாடம்
: 101
இஷாத் தொழுகையில்
சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது.
٧٦٨حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنِي
التَّيْمِيُّ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ
الْعَتَمَةَ فَقَرَأَ {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ فَقُلْتُ مَا
هَذِهِ قَالَ سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم فَلاَ
أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ.
768 அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி)
அவர்களுடன் இஷாத் தொழுகையை தொழுதேன். அதில் அவர்கள், இதஸ் ஸமாஉன் ஷக்கத் (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஆகவே
நான் (அவர்களிடம்) என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத்திற்காக சஜ்தா செய்தீர்கள்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப்
பின்னால் (தொழுத போது) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய) தற்காக சஜ்தாச் செய்திருக்கிறேன்.
அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும் வரை) அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்து கொண்டுதானிருப்பேன்
என்று கூறினார்கள்.
(102)باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ
பாடம்
: 102
இஷாத் தொழுகையில்
(குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.
٧٦٩حَدَّثَنَا
خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا عَدِيُّ بْنُ
ثَابِتٍ، سَمِعَ الْبَرَاءَ، رضى الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله
عليه وسلم يَقْرَأُ {وَالتِّينِ وَالزَّيْتُونِ} فِي الْعِشَاءِ، وَمَا
سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً.
769 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத் தூனியை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட
அழகிய குரலில் அல்லது அழகிய ஓதல் முறையில் வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை
(103)باب يُطَوِّلُ فِي الأُولَيَيْنِ وَيَحْذِفُ فِي
الأُخْرَيَيْنِ
பாடம்
: 103
(இஷாத் தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில்
நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும்.
٧٧٠حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ
سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ قَالَ عُمَرُ لِسَعْدٍ لَقَدْ شَكَوْكَ فِي
كُلِّ شَىْءٍ حَتَّى الصَّلاَةِ. قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي
الأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ، وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ
مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ صَدَقْتَ، ذَاكَ
الظَّنُّ بِكَ، أَوْ ظَنِّي بِكَ.
770 ஜாபிர் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் சஅத்
(பின் அபீவக்காஸ் ரலி) அவர்களிடம், (கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது
உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து
தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட
நேரம் ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முனையைப் பின்பற்றுவதில் நான் (எந்தக்) குறையும்
செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் உன்மையே கூறினீர்கள். உங்களைப்
பற்றி (நமது) எண்ணமும் அல்லது உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே என்று சொன்னார்கள்.
(104)باب الْقِرَاءَةِ فِي الْفَجْرِ
பாடம்
: 104
ஃபஜ்ர்
தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.
وَقَالَتْ أُمُّ سَلَمَةَ قَرَأَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطُّورِ
(ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் அத்தூர் (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்
என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٧٧١حَدَّثَنَا
آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سَيَّارُ بْنُ سَلاَمَةَ،
قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ فَسَأَلْنَاهُ
عَنْ وَقْتِ الصَّلَوَاتِ، فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي
الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالْعَصْرَ وَيَرْجِعُ الرَّجُلُ إِلَى
أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ،
وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ وَلاَ يُحِبُّ
النَّوْمَ قَبْلَهَا، وَلاَ الْحَدِيثَ بَعْدَهَا، وَيُصَلِّي الصُّبْحَ
فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَعْرِفُ جَلِيسَهُ، وَكَانَ يَقْرَأُ فِي
الرَّكْعَتَيْنِ أَوْ إِحْدَاهُمَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ.
771 சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும்
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் பற்றிக்
கேட்டோம். அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர்
தொழுகையை சூரியன் (நடுவானிலிருந்து மேற்கு வாக்கில்)
சாயும் போது தொழுவார்கள்.
(பின்னர்) அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு)
மதீனாவின் கடைக் கோடி(யிலுள்ள தம் வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். சூரியன்
(வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும்.
-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.-
இஷாத் தொழுகையை இரவின்
மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு
முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப
மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத்
தொழுகையை தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தம் அருகில்
இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்)
அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) இரு ரக்அத்களில் அல்லது அவற்றில் ஒன்றில் அறுபது முதல்
நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்
٧٧٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا
ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ
رضى الله عنه ـ يَقُولُ فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا
عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ
فَهُوَ خَيْرٌ.
772 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எல்லாத் தொழுகைகளிலும்
(குர்ஆன் வசனங்கள்) ஓதப்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக
ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள்
எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்)
குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும்
(உன் தொழுகை) நிறைவேறிவிடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும்.
(105)باب الْجَهْرِ بِقِرَاءَةِ صَلاَةِ الْفَجْرِ
பாடம்
: 105
சுப்ஹுத்
தொழுகையில் சப்தமாக ஓதுவது.
وَقَالَتْ أُمُّ سَلَمَةَ طُفْتُ وَرَاءَ النَّاسِ
وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَيَقْرَأُ بِالطُّورِ
நபி (ஸல்) அவர்கள் அத்தூர் (எனும் 56ஆவது) அத்தியாத்தை ஓதித் தொழுவித்துக்
கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் (இறையில்லத்தை தவாஃப்) சுற்றிக்
கொண்டிருந்தேன் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٧٧٣حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ
بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقَ
النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى
سُوقِ عُكَاظٍ، وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ،
وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ، فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ.
فَقَالُوا مَا لَكُمْ فَقَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ،
وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ. قَالُوا مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ
خَبَرِ السَّمَاءِ إِلاَّ شَىْءٌ حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا،
فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ
فَانْصَرَفَ أُولَئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى النَّبِيِّ
صلى الله عليه وسلم وَهْوَ بِنَخْلَةَ، عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ وَهْوَ
يُصَلِّي بِأَصْحَابِهِ صَلاَةَ الْفَجْرِ، فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ
اسْتَمَعُوا لَهُ فَقَالُوا هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ
خَبَرِ السَّمَاءِ. فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ وَقَالُوا يَا
قَوْمَنَا {إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا * يَهْدِي إِلَى الرُّشْدِ
فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا} فَأَنْزَلَ اللَّهُ عَلَى
نَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ أُوحِيَ إِلَىَّ} وَإِنَّمَا أُوحِيَ
إِلَيْهِ قَوْلُ الْجِنِّ.
773 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம்
தோழர்கள் சிலருடன் உ(க்)காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்)
ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச் செய்திகளைக் கேட்கவிடாமல்
ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்
மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு
செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டனர். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே
திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி
ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக
அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை
என்னவென்று ஆராயுங்கள் என்றனர்.
அவ்வாறே அந்த ஷைத்தான்கள்
திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா)
பகுதியை நோக்கி வந்த போது, உகாழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர்
தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த
ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்)
அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது
தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள்
ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு
(இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி)
அல்லாஹ் தன் தூதருக்கு நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...
என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்)
கூறியதைப் பற்றி வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
٧٧٤حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ
عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم
فِيمَا أُمِرَ، وَسَكَتَ فِيمَا أُمِرَ {وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا}
{لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
774 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைவன்
உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்பவே
(சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) உம் இறைவன் மறப்பவன் அல்லன்
(19:64) என்றும் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு (33:21) என்றும்
அல்லாஹ் கூறுகின்றான்.
(106)باب الْجَمْعِ بَيْنَ السُّورَتَيْنِ فِي الرَّكْعَةِ
பாடம்
: 106
ஒரே ரக்அத்தில்
இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும், அத்தியாயத்தின் கடைசி
வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக
ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப
வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்லுமா?)
وَالْقِرَاءَةِ بِالْخَوَاتِيمِ، وَبِسُورَةٍ قَبْلَ
سُورَةٍ، وَبِأَوَّلِ سُورَةٍ. وَيُذْكَرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ
قَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُونَ فِي
الصُّبْحِ حَتَّى إِذَا جَاءَ ذِكْرُ مُوسَى وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى،
أَخَذَتْهُ سَعْلَةٌ فَرَكَعَ. وَقَرَأَ عُمَرُ فِي الرَّكْعَةِ الأُولَى
بِمِائَةٍ وَعِشْرِينَ آيَةً مِنَ الْبَقَرَةِ، وَفِي الثَّانِيَةِ بِسُورَةٍ مِنَ
الْمَثَانِي. وَقَرَأَ الأَحْنَفُ بِالْكَهْفِ فِي الأُولَى، وَفِي الثَّانِيَةِ
بِيُوسُفَ أَوْ يُونُسَ، وَذَكَرَ أَنَّهُ صَلَّى مَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ
عَنْهُ الصُّبْحَ بِهِمَا. وَقَرَأَ ابْنُ مَسْعُودٍ بِأَرْبَعِينَ آيَةً مِنَ
الأَنْفَالِ، وَفِي الثَّانِيَةِ بِسُورَةٍ مِنَ الْمُفَصَّلِ.
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத்
தொழுகையில் அல்முஃமினூன் (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதித் தொழுவித்தார்கள். மூசா (அலை), ஹாரூன் (அலை) பற்றிக்
குறிப்பிடும் வசனம் (23:45) அல்லது ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம்
(23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள்
என அப்துல்லாஹ் பின் சாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
உமர் (ரலி) அவர்கள் (தொழுகையின்)
முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்திலிருந்து நூற்றி இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில்
(நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) அல்மஸானீ அத்தியாயங்களில் ஒன்றை ஓதினார்கள்.
அஹ்னஃப் பின் கைஸ் (ரலி)
அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல் கஹ்ஃப் (எனும் 18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் யூசுஃப் (12ஆவது) அத்தியாயத்தை அல்லது
யூனுஸ் (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர்
(ரலி) அவர்கள் இவ்விரண்டு அத்தியாயங்களையும் ஓதித் தொழுத போது அவர்களுக்குப் பின்னே
தாமும் தொழுததாகவும் அஹ்னஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்
(தொழுகை யின் முதல் ரக்அத்தில்) அல்அன்ஃபால் (8ஆவது) அத்தியாயத்தில் நாற்பது வசனங்களையும்
இரண்டாம் ரக்அத்தில் நடுத்தர (அல்முஃபஸ்ஸல்) அத்தியாயங்களில் ஒன்றையும் ஓதினார்கள்.
وَقَالَ قَتَادَةُ فِيمَنْ يَقْرَأُ سُورَةً وَاحِدَةً
فِي رَكْعَتَيْنِ أَوْ يُرَدِّدُ سُورَةً وَاحِدَةً فِي رَكْعَتَيْنِ كُلٌّ
كِتَابُ اللَّهِ
இரண்டு ரக்அத்களிலும்
ஒரே அத்தியாயத்தை ஒருவர் ஓதுவது அல்லது ஓர் அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து) இரண்டு
ரக்அத்களிலும் ஓதுவது பற்றி கத்தாதா (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் எல்லாம் அல்லாஹ்வின்
வேதமே என்று கூறினார்கள்.
و٧٧٤-وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ ثَابِتٍ، عَنْ
أَنَسٍ ـ رضى الله عنه ـ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَؤُمُّهُمْ فِي مَسْجِدِ
قُبَاءٍ، وَكَانَ كُلَّمَا افْتَتَحَ سُورَةً يَقْرَأُ بِهَا لَهُمْ فِي
الصَّلاَةِ مِمَّا يَقْرَأُ بِهِ افْتَتَحَ بِ ـ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ}
حَتَّى يَفْرُغَ مِنْهَا، ثُمَّ يَقْرَأُ سُورَةً أُخْرَى مَعَهَا، وَكَانَ
يَصْنَعُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ، فَكَلَّمَهُ أَصْحَابُهُ فَقَالُوا إِنَّكَ
تَفْتَتِحُ بِهَذِهِ السُّورَةِ، ثُمَّ لاَ تَرَى أَنَّهَا تُجْزِئُكَ حَتَّى
تَقْرَأَ بِأُخْرَى، فَإِمَّا أَنْ تَقْرَأَ بِهَا وَإِمَّا أَنْ تَدَعَهَا
وَتَقْرَأَ بِأُخْرَى. فَقَالَ مَا أَنَا بِتَارِكِهَا، إِنْ أَحْبَبْتُمْ أَنْ
أَؤُمَّكُمْ بِذَلِكَ فَعَلْتُ، وَإِنْ كَرِهْتُمْ تَرَكْتُكُمْ. وَكَانُوا
يَرَوْنَ أَنَّهُ مِنْ أَفْضَلِهِمْ، وَكَرِهُوا أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ،
فَلَمَّا أَتَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَخْبَرُوهُ الْخَبَرَ فَقَالَ
" يَا فُلاَنُ مَا يَمْنَعُكَ أَنْ تَفْعَلَ مَا يَأْمُرُكَ بِهِ
أَصْحَابُكَ وَمَا يَحْمِلُكَ عَلَى لُزُومِ هَذِهِ السُّورَةِ فِي كُلِّ رَكْعَةٍ
". فَقَالَ إِنِّي أُحِبُّهَا. فَقَالَ " حُبُّكَ إِيَّاهَا
أَدْخَلَكَ الْجَنَّةَ ".
774-ஆ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் (குல்ஸும்
பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக
(இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை
ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு
முன் குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது குல்ஹுவல்லாஹு
அஹத் அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும்
அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் மக்கள், நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு
அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும்
ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு
மற்றோர் அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்) என்று கூறினார்கள்.
அதற்கு அவர், நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு
(ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான்
உங்களை(ப் பின்னிறுத்தித் தொழுவிப்பதை) விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)
என்றார்.
அம்மக்கள் அவரைத் தங்களில்
சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித்
தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில்
இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), இன்னாரே! உங்கள் தோழர்கள்
உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு
ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு
அவர், நான் இந்த அத்தியாயத்தை
நேசிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியா யத்)தை
நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும் என்று கூறினார்கள்.
٧٧٥حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو
بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ
مَسْعُودٍ فَقَالَ قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ. فَقَالَ
هَذًّا كَهَذِّ الشِّعْرِ لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ
صلى الله عليه وسلم يَقْرِنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ
الْمُفَصَّلِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ.
775 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம்
ஒரு மனிதர் வந்து, நான் நேற்றிரவு அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி
முடித்தேன் என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், பாட்டுப் பாடுவதைப் போன்று
அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக
ஓதிவந்த ஒத்த (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில்
இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.
(107)باب يَقْرَأُ فِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ
பாடம்
: 107
(நான்கு ரக்அத் தொழுகையின்)
பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும்.
٧٧٦حَدَّثَنَا مُوسَى بْنُ
إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ
يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ،
وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ،
وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ
الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ.
776 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர்
தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும்
ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் உம்முல் கிதாப் (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை
ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள்.
இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையிலும்
செய்வார்கள்; இவ்வாறே சுப்ஹுத் தொழுகையிலும் செய்வார்கள்.
(108)باب مَنْ خَافَتَ الْقِرَاءَةَ فِي الظُّهْرِ
وَالْعَصْرِ
பாடம்
: 108
லுஹ்ர்
தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது.
٧٧٧حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ
عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قُلْتُ لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ.
قُلْنَا مِنْ أَيْنَ عَلِمْتَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.
777 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கப்பாப் (ரலி) அவர்களிடம்
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்)
ஓதுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.
நாங்கள், (அதை) நீங்கள் எவ்வாறு
அறிந்து கொண்டீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை
வைத்துத்தான் என்று பதிலளித்தார்கள்.
(109)باب إِذَا أَسْمَعَ
الإِمَامُ الآيَةَ
பாடம்
: 109
(சப்தமின்றித் தொழும்
தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?)
٧٧٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ
أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ بِأُمِّ الْكِتَابِ وَسُورَةٍ
مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ
الْعَصْرِ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ
الأُولَى.
778 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர்
மற்றும் அஸ்ர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும்
அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக்
கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில்
நீண்ட நேரம் ஓதுவார்கள்.
(110)باب يُطَوِّلُ فِي
الرَّكْعَةِ الأُولَى
பாடம்
: 110
(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்)
முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல்.
٧٧٩حَدَّثَنَا أَبُو
نُعَيْمٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَيُقَصِّرُ
فِي الثَّانِيَةِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ.
779 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர்
தொழுகையின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில்
குறைவாக ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.
No comments:
Post a Comment