كتاب الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(21) باب الاِسْتِنْجَاءِ
بِالْحِجَارَةِ
பாடம்: 21 கற்களினால் சுத்தம் செய்தல்.
40-حَدَّثَنَا
سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ
بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ مُسْلِمِ بْنِ قُرْطٍ، عَنْ
عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ [ص: 11] رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ، فَلْيَذْهَبْ مَعَهُ
بِثَلَاثَةِ أَحْجَارٍ يَسْتَطِيبُ بِهِنَّ، فَإِنَّهَا تُجْزِئُ عَنْهُ»
[حكم
الألباني] : حسن
40.உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால்
தன்னுடன் சுத்தப் படுத்தக்கூடிய மூன்று கற்களை எடுத்துச் செல்லட்டும். அவை சுத்தம்
செய்வதற்கு போதுமானவையாகும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக
அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன்
41-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ،
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَمْرِو بْنِ خُزَيْمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ
خُزَيْمَةَ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِاسْتِطَابَةِ، فَقَالَ: «بِثَلَاثَةِ أَحْجَارٍ
لَيْسَ فِيهَا رَجِيعٌ»، قَالَ أَبُو دَاوُدَ: كَذَا رَوَاهُ أَبُو أُسَامَةَ،
وَابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ يَعْنِي ابْنَ عُرْوَةَ
[حكم
الألباني] : صحيح
41.சுத்தம் செய்வது எத்தனை கற்களால்
என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, 'விட்டையல்லாத மூன்று கற்களினால் சுத்தம்
செய்ய வேண்டும்' என்று பதிலளித்ததாக குஸைமா பின் சாபித் (ரளி) அறிவிக்கிறார்கள். இவ்வாறே இதை ஹிஷாம்
இப்னு உர்வாவிடமிருந்து அபூஉஸாமா இப்னுநுமைர் ஆகியோரும் அறிவிக்கின்றனர் என இமாம் அபூதாவூது
குறிப்பிடுகின்றார்.
தரம் : ஸஹீஹ்
(22) باب فِي
الاِسْتِبْرَاءِ
பாடம்: 22 சிறுநீர் கழித்த பின் நன்கு சுத்தம் செய்தல்.
42-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ، قَالَا: حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى التَّوْأَمُ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ،
قَالَ: أَخْبَرَنَا أَبُو يَعْقُوبَ التَّوْأَمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي
مُلَيْكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عُمَرُ خَلْفَهُ بِكُوزٍ مِنْ مَاءٍ، فَقَالَ:
«مَا هَذَا يَا عُمَرُ»، فَقَالَ: هَذَا مَاءٌ تَتَوَضَّأُ بِهِ، قَالَ: «مَا
أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ، وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً»
[حكم
الألباني] : ضعيف
42.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
சிறுநீர் கழித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் தண்ணீர் கூஜாவுடன் உமர் (ரளி)
அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 'உமரே! இது என்ன?' என்று அவர்கள் வினவியதும், தாங்கள் உலுச் செய்வதற்கான தண்ணீர் என்று உமர் (ரளி) கூறினார்கள். அதற்கு அண்ணலார்
அவர்கள், 'நான் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உலூச் செய்யும் படி கட்டளையிடப்படவில்லை, அவ்வாறு நான் செய்தால் அது சுன்னத்தாக
(வழிமுறையாக) ஆகிவிடும்' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரளி) அவர்கள்.
தரம் : ளயீப்
(23) باب فِي
الاِسْتِنْجَاءِ بِالْمَاءِ
பாடம்: 23 தண்ணீரால் சுத்தம் செய்தல்.
43-حَدَّثَنَا
وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ يَعْنِي الْوَاسِطِيَّ، عَنْ خَالِدٍ يَعْنِي
الْحَذَّاءَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا،
وَمَعَهُ غُلَامٌ مَعَهُ مِيضَأَةٌ، وَهُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ
السِّدْرَةِ، فَقَضَى حَاجَتَهُ، فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ اسْتَنْجَى بِالْمَاءِ»
[حكم
الألباني] : صحيح
43.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு தோட்டத்திற்கு சென்றார்கள். அப்போது அவர்களுடன் ஒரு சிறுவர் தண்ணீர் பாத்திரத்துடன்
சென்றார். அவர் எங்களில் மிகவும் சிறியவர். அதை அவர் இலந்த மரத்தடியில் வைத்தார். நபி
(ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்த பின் எங்களிடம்
வந்தார்கள் என அனஸ் பின் மாலிக் (ரளி) அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
44-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ يُونُسَ
بْنِ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي صَالِحٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
" نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي أَهْلِ قُبَاءٍ: {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ
أَنْ يَتَطَهَّرُوا} [التوبة: 108] "، قَالَ: «كَانُوا يَسْتَنْجُونَ
بِالْمَاءِ، فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الْآيَةُ»
[حكم
الألباني] : صحيح
44.அங்கே தூய்மையை விரும்பக்கூடிய மக்கள்
உள்ளனர். (9:108) என்ற இந்த இறைவசனம் குபா (என்ற பள்ளி) வாசிகள் தொடர்பாக இறங்கியது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மல ஜலம் கழித்தால்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு
சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள். ஆதலால் இந்த வசனம் அவர்கள் தொடர்பாக இறங்கியது
என்று அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள்.
தரம் : ஸஹீஹ்
(24) باب الرَّجُلِ يُدَلِّكُ يَدَهُ بِالأَرْضِ
إِذَا اسْتَنْجَى
பாடம்: 24 சுத்தம் செய்த பின் கையை தரையில் தேய்த்துக்
கழுவுதல்.
45-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شَرِيكٌ
- وَهَذَا لَفْظُهُ - ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ يَعْنِي
الْمُخَرَّمِيَّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ
جَرِيرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، أَتَيْتُهُ بِمَاءٍ فِي
تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجَى»، قَالَ أَبُو دَاوُدَ: فِي حَدِيثِ وَكِيعٍ:
«ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى الْأَرْضِ، ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ آخَرَ
فَتَوَضَّأَ»، قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ الْأَسْوَدِ بْنِ عَامِرٍ أَتَمُّ
[حكم
الألباني] : حسن
45.நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் சென்றால்
நான் அவர்களுக்கு சிறு பாத்திரத்தில் அல்லது தோல்பையில் தண்ணீர் கொண்டு செல்வேன். அவர்கள்
துப்பரவு செய்து கொள்வார்கள். இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: பின்னர்
அவர்கள் தமது கையைத் தரையில் தேய்ப்பார்கள். பிறகு அவர்களுக்கு (தண்ணீருள்ள) வேறொரு
பாத்திரத்தைக் கொண்டு வருவேன். அவர்கள் உலூச் செய்வார்கள் என்று 'வகீஃ' அவர்களுடைய அறிவிப்பில் காணப்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி)
இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
(வகீஃ அவர்களின் ஹதீஸை விட) அஸ்வத் பின் ஆமிர் அவர்களுடைய ஹதீஸில் கூடுதல் விபரங்கள்
இருக்கின்றன.
தரம் : ஹஸன்
(25) باب السِّوَاكِ
பாடம்: 25 பல் துலக்குதல்.
46-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ
الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ، قَالَ: «لَوْلَا أَنْ أَشُقَّ
عَلَى الْمُؤْمِنِينَ، لَأَمَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاءِ، وَبِالسِّوَاكِ
عِنْدَ كُلِّ صَلَاةٍ»
[حكم
الألباني] : صحيح دون جملة العشاء
46.நான் மூஃமின்களுக்கு கஷ்டம் கொடுத்தவன்
ஆவேன் என்றில்லையானால் நான் அவர்களுக்கு இஷாவை பிற்படுத்தி தொழ வேண்டும் என்றும், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க
வேண்டும் என்றும் கட்டளை இட்டிருப்பேன்' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
47-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي
سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَوْلَا أَنْ
أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»،
قَالَ أَبُو سَلَمَةَ: فَرَأَيْتُ زَيْدًا يَجْلِسُ فِي الْمَسْجِدِ، وَإِنَّ
السِّوَاكَ مِنْ أُذُنِهِ مَوْضِعَ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ، فَكُلَّمَا
قَامَ إِلَى الصَّلَاةِ اسْتَاكَ
[حكم
الألباني] : صحيح
47.என் சமுதாயத்தவர்களுக்கு நான் கஷ்டம்
கொடுத்தவன் ஆவேன் என்றில்லாவிடில் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்று
நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூற
நான் செவிமடுத்தேன் என்று ஸைது காலித் அல்ஜுஹனீ (ரளி) அறிவிக்கிறார்கள். இதன் காரணமாக
எழுத்தாளனுடைய காதில் பேனா இடம் பெறுவது போல் ஸைது பின் காலித் (ரளி) அவர்களது காதில்
பற்குச்சி இடம் வகிக்கும் நிலையில் அவர்களைப் பள்ளியில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்கள்
தொழத் தயாராகும் போதெல்லாம் பல் துலக்குவார்கள் என (ஜைது பின் காலித் (ரளி) அவர்களிடமிருந்து
அறிவிக்கும்) அறிவிப்பாளர் அபூஸலமா தெரிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
48-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قُلْتُ: أَرَأَيْتَ
تَوَضُّؤَ ابْنِ عُمَرَ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا، وَغَيْرَ طَاهِرٍ، عَمَّ ذَاكَ؟
فَقَالَ: حَدَّثَتْنِيهِ أَسْمَاءُ بِنْتُ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّ عَبْدَ
اللَّهِ بْنَ حَنْظَلَةَ بْنِ أَبِي عَامِرٍ، حَدَّثَهَا «أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرَ بِالْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ، طَاهِرًا
وَغَيْرَ طَاهِرٍ، فَلَمَّا شَقَّ ذَلِكَ عَلَيْهِ، أُمِرَ [ص: 13] بِالسِّوَاكِ
لِكُلِّ صَلَاةٍ»، فَكَانَ ابْنُ عُمَرَ يَرَى أَنَّ بِهِ قُوَّةً، فَكَانَ لَا
يَدَعُ الْوُضُوءَ لِكُلِّ صَلَاةٍ قَالَ أَبُو دَاوُدَ: إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ
رَوَاهُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ
اللَّهِ
[حكم
الألباني] : حسن
48.உலூவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஒவ்வொரு தொழுகைக்கும் இப்னு உமர் (ரளி) அவர்கள் உலூ செய்த காரணம் என்ன? என்று அவர்களது மகன் அப்துல்லாஹ்விடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உலூவுடன் இருந்தாலும் உலூவுடன் இல்லாவிட்டாலும்
ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்யுமாறு ஏவப்பட்டிருந்தார்கள். இது அவர்களுக்குச் சிரமமான
போது ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு கட்டளையிடப்பட்டார்கள். இப்னு உமர் (ரளி)
அவர்கள் தனக்கு சக்தியிருப்பதாக கருதியதால் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூ செய்பவர்களாக
இருந்தனர் என்று அவர்களது மகனார் விடையளித்தார்கள்.
இந்தத் தகவலை அப்துல்லாஹ்பின் ஹன்லலா
அவர்களிடம் கேட்டு அஸ்மா பின்த் ஸைது என்பவர் தமக்கு கூறியதாகவும் குறிப்பிட்டார்.
முஹம்மது பின் யஹ்யா பின் ஹப்பான்
(ரளி) அறிவிக்கிறார்கள்.
முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து
இதை இப்ராஹீம் பின் சஃது அவர்கள் அறிவிக்கின்ற போது (அறிவிப்பாளர் பெயரை அப்துல்லாஹ்
என்பதற்கு பதிலாக) உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் என கூறுவதாக இமாம் அபூதாவூது அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.
தரம் : ஹஸன்
(26) باب كَيْفَ
يَسْتَاكُ
பாடம்: 26 பல் துலக்கும் முறை.
49-حَدَّثَنَا
مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ
بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ
قَالَ: مُسَدَّدٌ قَالَ: «أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ» قَالَ أَبُو
دَاوُدَ: وَقَالَ سُلَيْمَانُ: قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَاكُ، وَقَدْ وَضَعَ السِّوَاكَ عَلَى طَرَفِ
لِسَانِهِ، وَهُوَ يَقُولُ: «إِهْ إِهْ» يَعْنِي يَتَهَوَّعُ. قَالَ أَبُو
دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: فَكَانَ حَدِيثًا طَوِيلًا وَلَكِنِّي اخْتَصَرْتُهُ
[حكم
الألباني] : صحيح
49.நாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்
(ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டு வந்த போது அவர்கள்
தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ்
(ரளி) அறிவிப்பதாக முஸத்தத் குறிப்பிடுகிறார்கள். 'நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தமது நாவின் ஓரத்தில் பற்குச்சியை
வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு பல்துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன்' என்று அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரளி) கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகிறார்
என இமாம் அபூதாவூது அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபுர்தா (ரளி) அவர்கள்
தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரளி) மூலம் அறிவிக்கிறார்கள். இது ஒரு நீண்ட
ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி விட்டேன் என முஸத்தத் கூறுவதாக இமாம் அபூதாவூது
குறிப்பிடுகிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(27) باب فِي الرَّجُلِ يَسْتَاكُ بِسِوَاكِ
غَيْرِهِ
பாடம்: 27 மற்றவர்களின் பல்குச்சியினால் பல் துலக்குதல்.
50-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ
هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ،
أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ
السِّوَاكِ، أَنْ كَبِّرْ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا»، قَالَ أَحْمَدُ هُوَ
ابْنُ حَزْمٍ: قَالَ لَنَا أَبُو سَعِيدٍ هُوَ ابْنُ الْأَعْرَابِيِّ: «هَذَا
مِمَّا تَفَرَّدَ بِهِ أَهْلُ الْمَدِينَةِ»
[حكم
الألباني] : صحيح
50.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில்
ஒருவர் மற்றொருவரை விட மூத்தவர். அப்போது பல் துலக்குவதைச் சிறப்பிக்கும் விதத்தில்
அவ்விருவரில் மூத்தவருக்கு பற்குச்சியை வழங்கி கண்ணியப்படுத்தும் படி நபி (ஸல்) அவர்களுக்கு
(வஹீ) இறை அறிவிப்புச் செய்யப்பட்டது என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
51-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ
مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: لِعَائِشَةَ
بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»
[حكم
الألباني] : صحيح
51.தமது இல்லத்தில் நுழைந்ததும் அல்லாஹ்வின்
திருத்தூதர் (ஸல்) அவர்கள் முதலில் எதை (செய்யத்) துவங்குவார்கள்? என்று நான் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம்
வினவிய போது 'பல் துலக்குவார்கள்' என்று அவர்கள் பதிலளித்தார்கள் என மிக்தாம் பின் ஷுரைஹ் தமது தந்தை வழியாக அறிவிக்கிறார்.
தரம் : ஸஹீஹ்
(28) باب غَسْلِ
السِّوَاكِ
பாடம்: 28 பற்குச்சியைக் கழுவுதல்.
52-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ
الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ الْكُوفِيُّ الْحَاسِبُ،
حَدَّثَنِي كَثِيرٌ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ نَبِيُّ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَيُعْطِينِي السِّوَاكَ
لِأَغْسِلَهُ، فَأَبْدَأُ بِهِ فَأَسْتَاكُ، ثُمَّ أَغْسِلُهُ وَأَدْفَعُهُ
إِلَيْهِ»
[حكم
الألباني] : حسن
52.நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி விட்டு
பற்குச்சியைக் கழுவுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். நானும் அதைக் கொண்டு பல்துலக்கி
விட்டு கழுவி அதை (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்திடுவேன் என அன்னை ஆயிஷா
(ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஹஸன்
(29) باب السِّوَاكِ مِنَ الْفِطْرَةِ
பாடம்: 29 பல் துலக்குவது இப்ராஹீம் நபி (அலை) அவர்களின்
வழிமுறையாகும்.
53-حَدَّثَنَا
يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ،
عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنِ ابْنِ الزُّبَيْرِ،
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "
عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ،
وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ
الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ -
يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ - "، قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ:
وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ «الْمَضْمَضَةَ»
[حكم
الألباني] : صحيح
53.மீசையைக் கத்தரித்தல், தாடியை (வளர) விடுதல், பல் துலக்குதல், நாசிக்கு தண்ணீர் செலுத்துதல், நகங்களை வெட்டுதல், விரல் கணுக்களை நன்கு கழுவுதல், அக்குள் முடி களைதல், மர்மஸ்தான முடி எடுத்தல், (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகிய இந்தப் பத்து காரியங்களும்
இப்ராஹீம் நபியின் வழி முறைகளிலிருந்து அரபியர்களிடம் எஞ்சி நிற்பவை ஆகும் என நபி
(ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில்
வரும் முஸ்அப் என்பவர், 'நான் பத்தாவது காரியத்தை மறந்து விட்டேன், அது வாய் கொப்பளிப்பதாகத் தான் இருக்க
வேண்டும்' என்று கூறியதாக ஜகரிய்யா பின் அபூஸாயிதா என்ற அறிவிப்பாளர் தெரிவிக்கிறார்.
தரம் : ஸஹீஹ்
54-حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ،
عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ
يَاسِرٍ، قَالَ: مُوسَى، عَنْ أَبِيهِ، وَقَالَ دَاوُدُ: عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنَ
الْفِطْرَةِ الْمَضْمَضَةَ، وَالِاسْتِنْشَاقَ»، فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ
يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ، وَزَادَ «وَالْخِتَانَ»، قَالَ:
«وَالِانْتِضَاحَ» وَلَمْ يَذْكُرِ انْتِقَاصَ الْمَاءِ - يَعْنِي الِاسْتِنْجَاءَ -
[حكم
الألباني] : حسن
قَالَ أَبُو
دَاوُدَ: وَرُوِيَ نَحْوُهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَقَالَ: «خَمْسٌ كُلُّهَا فِي
الرَّأْسِ»، وَذَكَرَ [ص: 15] فِيهَا «الْفَرْقَ»، وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ
اللِّحْيَةِ
[حكم
الألباني] : صحيح موقوف
قَالَ أَبُو
دَاوُدَ: وَرُوِيَ نَحْوُ حَدِيثِ حَمَّادٍ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ،
وَمُجَاهِدٍ، وَعَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، قَوْلُهُمْ وَلَمْ
يَذْكُرُوا إِعْفَاءَ اللِّحْيَةِ
[حكم
الألباني] : صحيح عن طلق موقوف
وَفِي حَدِيثِ
مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ:
«وَإِعْفَاءُ اللِّحْيَةِ»
[حكم
الألباني] : صحيح
54.மேற்கண்ட ஹதீஸே அம்மார் பின் யாஸிர்
(ரளி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுதல் என்பதற்கு பதிலாக கத்னா
செய்தல் என்ற வாசகமும் தண்ணீரால் சுத்தம் செய்தல் என்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்தல்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் போன்று இப்னு அப்பாஸ்
(ரளி) மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து செயல்கள் குறிப்பிட்டு அவை அனைத்தும்
தலையைச் சார்ந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தாடியை (வளர) விடுதல் என்பதைக்
குறிப்பிடாமல் தலை முடியை வகிடு எடுத்துச் சீவுதல் குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம்
அபூதாவூது கூறுகின்றார்கள்.
மேலும் இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள்
பின்வருமாறு குறிப்பிடுள்ளனர். அதாவது தல்க் பின் ஹபீப் முஜாஹித் ஆகியோரிடமிருந்தும்
பக்ர் பின் அப்துல்லாஹ் அல் முஸ்னீ ஆகியோரிடமிருந்தும் ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ் போலவே
வேறு சிலராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுவது பற்றிக் கூறப்பட
வில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரளி) அபூ ஸலமா வாயிலாக அறிவிக்கும்
முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அபூமர்யம் அறிவிக்கும் ஹதீஸில் தாடியை விட்டுவிடுதல்
என்றுள்ளது. இப்ராஹீம் அன்னகயீ என்பாரிடமிருந்து இதே போன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தாடியை விட்டுவிடுதல் கத்னா செய்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன.
தரம் : ஸஹீஹ்
(30) باب السِّوَاكِ لِمَنْ قَامَ مِنَ اللَّيْلِ
பாடம்: 30 இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.
55-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ
أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»
[حكم
الألباني] : صحيح
55.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள்
இரவில் (தூங்கி) எழுந்தால் தமது வாயை பற்குச்சியினால் துலக்குவார்கள் என ஹுதைபா (ரளி)
அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
56-حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ،
عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوضَعُ لَهُ وَضُوءُهُ
وَسِوَاكُهُ، فَإِذَا قَامَ مِنَ اللَّيْلِ تَخَلَّى ثُمَّ اسْتَاكَ»
[حكم
الألباني] : صحيح
56.நபி (ஸல்) அவர்களுக்கு உலூச் செய்யும்
தண்ணீரும் பற்குச்சியும் (இரவிலேயே தயாராக) வைக்கப்படும். அவர்கள் இரவில் எழுந்ததும்
மலஜலம் கழித்துவிட்டுப் பின்னர் பல் துலக்குவார்கள் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
57-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ
أُمِّ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ لَا يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ، فَيَسْتَيْقِظُ إِلَّا
تَسَوَّكَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ»
[حكم
الألباني] : حسن دون قوله ولا نهار
57.நபி (ஸல்) அவர்கள் இரவிலும் பகலிலும்
தூங்கி விழித்தார்களெனில் உலூச் செய்யும் முன் பல்துலக்காது இருக்க மாட்டார்கள் என
ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவதாக இடம் பெறும் அலீ பின் ஜைது பின்
ஜத்ஆன் என்பவர் பலவீனமானவர். தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 3 பக்கம் 162 )
58-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ حَبِيبِ
بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ
عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ:
" بِتُّ لَيْلَةً عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَلَمَّا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ، أَتَى طَهُورَهُ فَأَخَذَ سِوَاكَهُ
فَاسْتَاكَ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَاتِ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ،
وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ} حَتَّى
قَارَبَ أَنْ يَخْتِمَ السُّورَةَ - أَوْ خَتَمَهَا - ثُمَّ تَوَضَّأَ فَأَتَى
مُصَلَّاهُ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ مَا
شَاءَ اللَّهُ، ثُمَّ اسْتَيْقَظَ [ص: 16] فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ
إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ
إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْل ذَلِكَ كُلُّ ذَلِكَ،
يَسْتَاكُ وَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ "، قَالَ أَبُو دَاوُدَ:
رَوَاهُ ابْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، قَالَ: فَتَسَوَّكَ وَتَوَضَّأَ، وَهُوَ
يَقُولُ: «{إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ}» حَتَّى خَتَمَ السُّورَةَ
[حكم
الألباني] : صحيح
57.இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களோடு ஒரு இரவில்
தங்கினேன். அப்போது அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்து, ஒலூச் செய்வதற்காக (வைக்கப்பட்டிருந்த) தண்ணீருக்கு (அருகே) வந்தார்கள். அவர்களது
பற்குச்சியை எடுத்தார்கள். பிறகு உபயோகித்தார்கள் (பல் துலக்கினார்கள்). பிறகு 'நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறி
வருவதிலும் அறிவுடையோருக்கு உறுதியாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன' (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். அவர்கள் ஏறத்தாழ அந்த அத்தியாயத்தின் இறுதி வரை
ஓதினார்கள் அல்லது அந்த அத்தியாயத்தின் இறுதி வரை ஒதி விட்டார்கள். பிறகு ஒலூச் செய்து
விட்டு தொழும் இடத்திற்கு வந்தார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அல்லாஹ்
விரும்பிய வரை படுத்து உறங்கினார்கள். பிறகு எழுந்து முன்பு போலவே செய்தார்கள். பிறகு
படுத்து உறங்கினார்கள். மறுபடி எழுந்து முன்பு போலவே செய்தார்கள். ஒவ்வொரு தடவையும்
பற்குச்சியினால் பல் துலக்கினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ரு தொழுதார்கள்.
ஹுசைன் மூலமாக ஃபுலைல் அவர்கள் கீழ்காணும்
வார்த்தையை கூறுவதாக அபூதாவூது கூறுகிறார்கள்.
'நபி (ஸல்) அவர்கள், இன்ன பீ ஹல்கிஸ்....(3:190) அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக் கொண்டே பல் துலக்கினார்கள், ஒலுவும் செய்தார்கள்'.
தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment