17. தடைசெய்யப்பட்ட விளையாட்டுகள்
சூதாட்ட விளையாட்டு
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ
رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90)
நம்பிக்கை கொண்டோரே! மது,
சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள்,
ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்!
வெற்றி பெறுவீர்கள்! ( அல் குர் ஆன் 5 : 90 )
தாயம்
விளையாட்டு
2260-عَنْ
سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
قَالَ " مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي
لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் ( 2260 )
கல்
எறிந்து விளையாடுவதற்க்கு தடை
6220-عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله
عليه وسلم عَنِ الْخَذْفِ وَقَالَ " إِنَّهُ لاَ يَقْتُلُ الصَّيْدَ، وَلاَ
يَنْكَأُ الْعَدُوَّ، وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ، وَيَكْسِرُ السِّنَّ
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.
கல்சுண்டு விளையாட்டிற்கு ('கத்ஃப்') நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
மேலும் நபி(ஸல்) அவர்கள், 'அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும்' என்றார்கள்
நூல்
: ஸஹீஹ் புஹாரி ( 6220 )
கால் நடைகளைத் துன்புறுத்தும் விளையாடுக்குத் தடை
5514-عَنِ
ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَخَلَ عَلَى يَحْيَى بْنِ سَعِيدٍ
وَغُلاَمٌ مِنْ بَنِي يَحْيَى رَابِطٌ دَجَاجَةً يَرْمِيهَا، فَمَشَى إِلَيْهَا
ابْنُ عُمَرَ حَتَّى حَلَّهَا، ثُمَّ أَقْبَلَ بِهَا وَبِالْغُلاَمِ مَعَهُ
فَقَالَ ازْجُرُوا غُلاَمَكُمْ عَنْ أَنْ يَصْبِرَ هَذَا الطَّيْرَ لِلْقَتْلِ،
فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُصْبَرَ بَهِيمَةٌ
أَوْ غَيْرُهَا لِلْقَتْلِ.
ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) கூறினார்
இப்னு உமர்(ரலி) (என் தந்தையின் சகோதரர்)
யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவன்
கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தான். இப்னு உமர்(ரலி) அந்தக்
கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு அந்தக் கோழியையும் அந்தச்
சிறுவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு (யஹ்யா இப்னு ஸயீத் அவர்களிடம்) சென்று,
'இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று
உங்கள் சிறுவனைக் கண்டித்து வையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டி
வைக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்ததை கேட்டுள்ளேன்'
என்று கூறினார்கள்.
நூல் : ஸஹீஹ் புஹாரி ( 5514 )
No comments:
Post a Comment