الشمائل
المحمدية ( للإمام الترمدي )
நபிகள் நாயகம்
( நேர்முக வர்ணனை)
பாடம் : 1
باب ما جاء في خلق رسول الله صلى الله عليه
وسلم
உருவ அமைப்புகள்
1- حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ
أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
أَنَّهُ سَمِعَهُ، يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، لَيْسَ
بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلاَ بِالْقَصِيرِ، وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ،
وَلاَ بِالآدَمِ، وَلاَ بِالْجَعْدِ الْقَطَطِ، وَلاَ بِالسَّبْطِ، بَعَثَهُ
اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ
سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ تَعَالَى عَلَى
رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعَرَةً
بَيْضَاءَ
1. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் வெளிப்படையாகத்
தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம்
கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. நாற்பது வயதின் தொடக்கத்தில்
அல்லாஹ் அவர்களைத் தம் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில்
பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது
வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலும் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.
குறிப்பு : புஹாரி ( 3548,3547,5900) முஸ்லிம் ( 4685) திர்மிதீ ( 3556) அஹ்மத் ( 13031) முஅத்தா ( 1434) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. நபி ஸல் அவர்களின் நபித்துவ வாழ்க்கை மக்காவில் 13 ஆண்டுகளும் மதீனாவில் 10 ஆண்டுகளும் என்ற புகாரியின் ( 3902) கருத்தே பிரபலியமானதாகும்
2-حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا
عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَبْعَةً، لَيْسَ بِالطَّوِيلِ
وَلا بِالْقَصِيرِ، حَسَنَ الْجِسْمِ، وَكَانَ شَعَرُهُ لَيْسَ بِجَعْدٍ، وَلا سَبْطٍ
أَسْمَرَ اللَّوْنِ، إِذَا مَشَى يَتَكَفَّأُ.
2. அனஸ் பின் மாலிக் ( ரழி ) கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள் ; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை அழகிய உடலமைப்புடையவர்களாக இருந்தார்கள் , அவர்களுடைய முடி , சுருள் முடியுடையதாவும் இல்லை முழுக்கவே படிந்த முடியுடையதாகவும் இல்லை, மா நிறமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நடக்கும் போது சாய்ந்து நடப்பார்கள்.
குறிப்பு :
இந்த செய்தி திர்மிதீ ( 1676 ) இடம்பெற்றுள்ளது. சாய்ந்து நடப்பார்கள் என்பதற்கு பதிலாக கால்களை தேய்த்து நடக்கமாட்டார்கள் என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
3-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ
الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم،
رَجُلا مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، عَظِيمَ الْجُمَّةِ إِلَى
شَحْمَةِ أُذُنَيْهِ الْيُسْرَى، عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، مَا رَأَيْتُ
شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ.
3. பராஉ பின் ஆஸிப் ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள் ( அந்த ஆடையில் ) நபி ஸல் அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.
குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 4663 ) அபூதாவூத் ( 3550 ) நஸாயீ ( 4974 ) அஹ்மத் ( 17743 ) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது
4-حَدَّثَنَا
مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا
سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: مَا
رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ فِي حُلَّةٍ حَمْرَاءَ أَحْسَنَ مِنْ رَسُولِ اللهِ صلى
الله عليه وسلم، لَهُ شَعَرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ، بَعِيدُ مَا بَيْنَ
الْمَنْكِبَيْنِ، لَمْ يَكُنْ بِالْقَصِيرِ، وَلا بِالطَّوِيلِ.
4. பரா பின் ஆஸிப் ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவுடன் சிவப்பு நிற அங்கியுடன் அழகுற நபி ஸல் அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதேயில்லை. இரண்டு தோள் புஜங்களை தொட்டுக் கொண்டு அவர்களுக்கு தலைமுடிய இருந்தது. இரு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் உயரமானவர்களாகவோ குட்டையானவர்களாவோ இருக்கவில்லை.
குறிப்பு : இந்த செய்தி புஹாரி ( 3551 ) முஸ்லிம் ( 4663) திர்மிதீ ( 1646 ) அபூதாவூத் ( 3550 ) அஹ்மத் ( 17743 ) ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
5-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو
نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ
بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَلِيِّ بْنِ
أَبِي طَالِبٍ، قَالَ: لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالطَّوِيلِ،
وَلا بِالْقَصِيرِ، شَثْنُ الْكَفَّيْنِ وَالْقَدَمَيْنِ، ضَخْمُ الرَّأْسِ، ضَخْمُ
الْكَرَادِيسِ، طَوِيلُ الْمَسْرُبَةِ، إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا،
كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ، لَمْ أَرَ قَبْلَهُ، وَلا بَعْدَهُ مِثْلَهُ،
صلى الله عليه وسلم.
5. அலீ ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் உயரமானவர்களாகவோ குட்டையானவர்களாகவோ இருக்கவில்லை. பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். தலையும் மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து வயிறு ( தொப்புள் ) வரை ( முடிகள் ) நீண்டிருக்கும். பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு கால்களை எடுத்துவைப்பதைப்போன்று நடப்பார்கள்.( கால்களை தேய்த்து நடக்கமாட்டார்கள் ) இவர்களைப் போன்று ஒருவரை இதற்கு முன்பும் பார்க்கவில்லை பின்பும் பார்க்கவில்லை.
6-حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ
الْمَسْعُودِيِّ، بِهَذَا الإِسْنَادِ، نَحْوَهُ، بِمَعْنَاهُ
6. வேறு அறிவிப்பாளர் வழியாக மேற்ச் சொன்ன செய்தி போன்று இடம்பெற்றுள்ளது.
7-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ الْبَصْرِيُّ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، وَأَبُو
جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ وَهُوَ ابْنُ أَبِي حَلِيمَةَ، وَالْمَعْنَى
وَاحِدٌ، قَالُوا: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ
اللَّهِ مَوْلَى غُفْرَةَ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ
مُحَمَّدٍ مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي
طَالِبٍ قَالَ: كَانَ عَلِيٌّ إِذَا وَصَفَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: " لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ بِالطَّوِيلِ الْمُمَّغِطِ،
وَلَا بِالْقَصِيرِ الْمُتَرَدِّدِ، وَكَانَ رَبْعَةً مِنَ [ص:33] الْقَوْمِ، لَمْ
يَكُنْ بِالْجَعْدِ الْقَطَطِ، وَلَا بِالسَّبْطِ، كَانَ جَعْدًا رَجِلًا، وَلَمْ
يَكُنْ بِالْمُطَهَّمِ وَلَا بِالْمُكَلْثَمِ، وَكَانَ فِي وَجْهِهِ تَدْوِيرٌ
أَبْيَضُ مُشَرَبٌ، أَدْعَجُ الْعَيْنَيْنِ، أَهْدَبُ الْأَشْفَارِ، جَلِيلُ
الْمُشَاشِ وَالْكَتَدِ، أَجْرَدُ ذُو مَسْرُبَةٍ، شَثْنُ الْكَفَّيْنِ
وَالْقَدَمَيْنِ، إِذَا مَشَى تَقَلَّعَ كَأَنَّمَا يَنْحَطُّ فِي صَبَبٍ، وَإِذَا
الْتَفَتَ الْتَفَتَ مَعًا، بَيْنَ كَتِفَيْهِ خَاتَمُ النُّبُوَّةِ، وَهُوَ
خَاتَمُ النَّبِيِّينَ، أَجْوَدُ النَّاسِ صَدْرًا، وَأَصْدَقُ النَّاسِ لَهْجَةً،
وَأَلْيَنُهُمْ عَرِيكَةً، وَأَكْرَمُهُمْ عِشْرَةً، مَنْ رَآهُ بَدِيهَةً
هَابَهُ، وَمَنْ خَالَطَهُ مَعْرِفَةً أَحَبَّهُ، يَقُولُ نَاعِتُهُ: لَمْ أَرَ
قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ". قَالَ
أَبُو عِيسَى: سَمِعْتُ أَبَا جَعْفَرٍ مُحَمَّدَ بْنَ الْحُسَيْنِ يَقُولُ:
سَمِعْتُ الْأَصْمَعِيَّ يَقُولُ فِي تَفْسِيرِ صِفَةِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: " الْمُمَّغِطُ: الذَّاهِبُ طُولًا ". وَقَالَ:
" سَمِعْتُ أَعْرَابِيًّا يَقُولُ فِي كَلَامِهِ: تَمَغَّطَ فِي نَشَّابَتِهِ
أَيْ مَدَّهَا مَدًّا شَدِيدًا. وَالْمُتَرَدِّدُ: الدَّاخِلُ بَعْضُهُ فِي بَعْضٍ
قِصَرًا. وَأَمَّا الْقَطَطُ: فَالشَّدِيدُ الْجُعُودَةِ. وَالرَّجُلُ الَّذِي فِي
شَعْرِهِ حُجُونَةٌ: أَيْ تَثَنٍّ قَلِيلٌ. وَأَمَّا الْمُطَهَّمُ فَالْبَادِنُ
الْكَثِيرُ اللَّحْمِ. وَالْمُكَلْثَمُ: الْمُدَوَّرُ الْوَجْهِ. وَالْمُشَرَبُ:
الَّذِي فِي بَيَاضِهِ حُمْرَةٌ. وَالْأَدْعَجُ: الشَّدِيدُ سَوَادِ الْعَيْنِ.
وَالْأَهْدَبُ: الطَّوِيلُ الْأَشْفَارِ. وَالْكَتَدُ: مُجْتَمِعُ الْكَتِفَيْنِ
وَهُوَ الْكَاهِلُ. وَالْمَسْرُبَةُ: هُوَ الشَّعْرُ الدَّقِيقُ الَّذِي كَأَنَّهُ
قَضِيبٌ مِنَ الصَّدْرِ إِلَى السُّرَّةِ. وَالشَّثْنُ: الْغَلِيظُ الْأَصَابِعِ
مِنَ الْكَفَّيْنِ وَالْقَدَمَيْنِ. وَالتَّقَلُّعُ: أَنْ يَمْشِيَ بِقُوَّةٍ.
وَالصَّبَبُ الْحُدُورُ، نَقُولُ: انْحَدَرْنَا فِي صَبُوبٍ وَصَبَبٍ. وَقَوْلُهُ:
جَلِيلُ الْمُشَاشِ يُرِيدُ رُءُوسَ الْمَنَاكِبِ. وَالْعِشْرَةُ: الصُّحْبَةُ،
وَالْعَشِيرُ: الصَّاحِبُ. وَالْبَدِيهَةُ: الْمُفَاجَأَةُ، يُقَالُ: بَدَهْتُهُ
بِأَمْرٍ أَيْ فَجَأْتُهُ
7. அலீ ( ரழி ) அவர்கள் நபிகளாரை வணர்னித்து கூறும் போது :
நபி ஸல் அவர்கள் அதிக உயரமாகவோ , அதிக குட்டையாகவோ இருக்காமல் மனிதர்களில் நடுத்தர உயரமுள்ளவர்களாக இருந்தார்கள் இவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வித்த்தில் இருந்த்து உடல் பருத்தோ மெலிந்தோ இருக்கவில்லை அவர்களின் முகம் வட்டமாகவோ, நீளமாகவோ இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட விதத்தில் இருந்த்து. அவர்கள் சிவப்பு கலந்த வெண்ணி நிறமாய்த் திகழ்ந்தார்கள். இருக் கண்களின் ( கருவிழி ) கருமையாய் இருக்கும், இமைகள் நீண்டிருக்கும் மூட்டுக்களும் முதுகெலும்பும் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். உல்லில் முடிகள் இல்லாமலிருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை ( கோடுகள் போன்று ) முடிகளிலிருக்கும் . உள்ளங்கைகளும் பாதங்களும் சதை பிடிப்புள்ளவையாக ( உறுதி வாய்ந்தவையாக ) இருக்கும் . இவர்கள் நடக்கும் போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான இட்த்திற்கு இறங்குவது போல் அடி எடுத்து வைப்பார்கள். ( பின்னால் ஒருவர் அழைத்தால் ) முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் இரண்டு தோள் புஜங்களுக்கு மத்தியில் இறுதி நபியின் முத்திரை இருந்த்து அவர்கள் நபிமார்களின் முத்திரையாவார்கள். அவர்கள் வள்ளல் குணம் படைத்தவர்களாகவும் பேச்சில் வாய்மையுடையவர்களாகவும் நளின சுபாவம் உடையவர்களாகவும் உயர் குடும்பத்தினராகவும் திகழ்ந்தார்கள்.
நபிகளாரை ( முதல் தடவை ) திடீரென காண்போர் அச்சம் கொள்வர் அவர்களோடு பழகி அவரைத் தெரிந்து கொண்டவர் அவர்களை நேசிக்கத் தொடங்குவர். ( பின்னர் ) அவர்களைப் போல் இதற்கு முன்பும் பின்பும் ( எவரையும் ) பார்த்ததில்லை என்று வர்ணிக்கத் தொடங்கிவிடுவார்.
குறிப்பு : இந்த செய்தி திர்மிதீ ( 3571 ) இடம்பெற்றுள்ளது ., இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் “ இப்ராஹீம் பின் முஹம்மத் “ (إِبْرَاهِيمُ
بْنُ مُحَمَّدٍ) அவர்கள் அவரது பாட்டனார் அலீ ( ரழி ) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் கேட்டதில்லை எனவே இந்த செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.
8-حَدَّثَنَا
سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَرَ بْنِ
عَبْدِ الرَّحْمَنِ الْعِجْلِيُّ إِمْلَاءً عَلَيْنَا مِنْ كِتَابِهِ قَالَ
[ص:35]: أَخْبَرَنِي رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ مِنْ وَلَدِ أَبِي هَالَةَ زَوْجِ
خَدِيجَةَ، يُكَنَى أَبَا عَبْدِ اللَّهِ، عَنِ ابْنٍ لِأَبِي هَالَةَ، عَنِ
الْحَسَنِ بْنِ عَلِيٍّ قَالَ: سَأَلْتُ خَالِي هِنْدَ بْنَ أَبِي هَالَةَ،
وَكَانَ وَصَّافًا، عَنْ حِلْيَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَأَنَا أَشْتَهِي أَنْ يَصِفَ لِي مِنْهَا شَيْئًا أَتَعَلَّقُ بِهِ، فَقَالَ:
" كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخْمًا
مُفَخَّمًا، يَتَلَأْلَأُ وَجْهُهُ تَلَأْلُؤَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ،
أَطْوَلُ مِنَ الْمَرْبُوعِ، وَأَقْصَرُ مِنَ الْمُشَذَّبِ، عَظِيمُ الْهَامَةِ،
رَجِلُ الشَّعْرِ، إِنِ انْفَرَقَتْ [ص:36] عَقِيقَتُهُ فَرَّقَهَا، وَإِلَّا
فَلَا يُجَاوِزُ شَعْرُهُ شَحْمَةَ أُذُنَيْهِ إِذَا هُوَ وَفَّرَهُ، أَزْهَرُ
اللَّوْنِ، وَاسِعُ الْجَبِينِ، أَزَجُّ الْحَوَاجِبِ سَوَابِغَ فِي غَيْرِ
قَرَنٍ، بَيْنَهُمَا عِرْقٌ يُدِرُّهُ الْغَضَبُ، أَقْنَى الْعِرْنَيْنِ، لَهُ
نُورٌ يَعْلُوهُ، يَحْسَبُهُ مَنْ لَمْ يَتَأَمَّلْهُ أَشَمَّ، كَثُّ اللِّحْيَةِ،
سَهْلُ الْخدَّيْنِ، ضَلِيعُ الْفَمِ، مُفْلَجُ الْأَسْنَانِ، دَقِيقُ
الْمَسْرُبَةِ، كَأَنَّ عُنُقَهُ جِيدُ دُمْيَةٍ فِي صَفَاءِ الْفِضَّةِ،
مُعْتَدِلُ الْخَلْقِ، بَادِنٌ مُتَمَاسِكٌ، سَوَاءُ الْبَطْنِ وَالصَّدْرِ،
عَرِيضُ الصَّدْرِ، بَعِيدُ مَا بَيْنَ [ص:37] الْمَنْكِبَيْنِ، ضَخْمُ
الْكَرَادِيسِ، أَنْوَرُ الْمُتَجَرَّدِ، مَوْصُولُ مَا بَيْنَ اللَّبَّةِ
وَالسُّرَّةِ بِشَعْرٍ يَجْرِي كَالْخَطِّ، عَارِي الثَّدْيَيْنِ وَالْبَطْنِ
مِمَّا سِوَى ذَلِكَ، أَشْعَرُ الذِّرَاعَيْنِ وَالْمَنْكِبَيْنِ وَأَعَالِي
الصَّدْرِ، طَوِيلُ الزَّنْدَيْنِ، رَحْبُ الرَّاحَةِ، شَثْنُ الْكَفَّيْنِ
وَالْقَدَمَيْنِ، سَائِلُ الْأَطْرَافِ - أَوْ قَالَ: شَائِلُ الْأَطْرَافِ -
خَمْصَانُ الْأَخْمَصَيْنِ، مَسِيحُ الْقَدَمَيْنِ، يَنْبُو [ص:38] عَنْهُمَا
الْمَاءُ، إِذَا زَالَ زَالَ قَلِعًا، يَخْطُو تَكَفِّيًا، وَيَمْشِي هَوْنًا،
ذَرِيعُ الْمِشْيَةِ، إِذَا مَشَى كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ، وَإِذَا
الْتَفَتَ الْتَفَتَ جَمِيعًا، خَافِضُ الطَّرْفِ، نَظَرُهُ إِلَى الْأَرْضِ
أَطْوَلُ مِنْ نَظَرِهِ إِلَى السَّمَاءِ، جُلُّ نَظَرِهِ الْمُلَاحَظَةُ، يَسُوقُ
أَصْحَابَهُ وَيَبْدَأُ مَنْ لَقِيَ بِالسَّلَامِ
8. ஹஸன் பின் அலீ ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நான் என் மாமா ஹின்த் பின் அபீஹாலா அவர்களிடம் நபி ஸல் அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி கேட்டேன். அதற்கவர்கள் நபி ஸல் அவர்களைப் பற்றி வரணிக்க க்கூடியவர்களாக இருந்தார்கள் . எனவே அவர்களை பற்றி மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அவர்கள் கூறினார்கள் : நபி ஸல் அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுவர்களாகவும் இருந்தனர். நபி ஸல் அவர்களின் முகம் பவுர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும் , நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர். தலை நடுத்தரத்தைவிட சற்று பெரிதாக இருந்தது அவர்களின் முடி சுருண்டிருந்து . தலையில் தற்செயலாக வகிடு படிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள் . இல்லையெனில் ( வகிடு எடுப்பதை ) முக்கியத்துவப்படுத்துவதில்லை. முடியை வளர விட்டிருந்தால் அது காதின் சோனையை தாண்டிவிடுவதும் உண்டு. மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும் படர்ந்த நெற்றி அடர்ந்த புருவம் ஒரு புருவங்களும் சேர்ந்திருந்திருக்காது. ஒரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும் . கோபம் ஏற்படும் போது அது எம்பிக் கொள்ளும். அவர்களை முதன் முதல் காண்போர் மூக்கு நீண்ட்தாக காண்பர் ஆனல் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக் கொண்டிருக்கும். தாடி அடர்ந்திருக்கும் கன்னங்கள் மிருதுவாக இருக்கும் வாய் அகன்றிருக்கும் பற்கள் இடைவெளி விட்டவையாக இருக்கும் நெஞ்சிலிருந்து தொப்புள் இடைவெளி விட்டவையாக இருக்கும் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை ( கோடு போன்ற ) முடியிருக்கும் அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கபட்ட உருவத்தைப் போல் அழகாகயிருக்கும்.
அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதை பிடிப்புள்ளதாகவும் இருக்கும். வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும் .
நெஞ்சி விரிந்திருக்கும் இரண்டு தோள் புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும் . மூட்டுக்கள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும் . ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசிக்கும் நெஞ்சிக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற முடியிருக்கும் தோள் புஜங்கள் நெஞ்சின் மேற்பலுதி ஆகியவற்றில் முடியிருக்கும் ஒரு உள்ளங்கையின் மூட்டுக்கள் நீளமாக இருக்கும் உள்ளங்கை விரிந்திருக்கும். உள்ளங்கையும் பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும்.
கை , கால் விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும் பாதங்கால் சற்று குழிந்திருக்கும் ஒரு பாதங்களும் சம்மாய் இருக்கும் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள் பாதத்தை பலமாக எடுத்து மெதுவாக வைப்பார்கள்.
அகலமாக அடி எடுத்து வேகமாக நடப்பார்கள் நடக்கும் போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் இருக்கும் . யாராவது அழைத்தால் திரும்பும் போது முழுவையாகத் திரும்புவார்கள்.
நபி ஸல் அவர்களின் பார்வை வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பது அதிகமாக இருந்தது. ஒரு பொருளைச் சாதாரணமாக பார்ப்பார்கள். தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால் வருவார்கள் ( தன்னை ) சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.
குறிப்பு : இந்த செய்தி இப்னு ஸாதின் அல் – தபகத் ( 1/422/423) மற்றும் பைஹகீ (1/286 ) பதிவாகி உள்ளது அதில் இடம்பெற்று உள்ள ”அபி அப்துல்லாஹ் அல் தம்மீ “ என்பவர் யார் என்று அறியபடாதவர் மேலும் இந்த செய்தியில் வரும் “ ஜுமைவு பின் உமர் “ என்பவரும் பலவீனமானவர் ஆவார் ஆகவே இந்த செய்தி பலவீனமானது ஆகும்.
9-حَدَّثَنَا
أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ،
قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ: سَمِعْتُ جَابِرَ
بْنَ سَمُرَةَ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ضَلِيعَ الْفَمِ، أَشْكَلَ الْعَيْنِ، مَنْهُوسَ الْعَقِبِ» [ص:39]. قَالَ
شُعْبَةُ: قُلْتُ لِسِمَاكٍ: مَا ضَلِيعُ الْفَمِ؟ قَالَ: عَظِيمُ الْفَمِ،
قُلْتُ: مَا أَشْكَلُ الْعَيْنِ؟ قَالَ: طَوِيلُ شِقِّ الْعَيْنِ، قُلْتُ: مَا
مَنْهُوسُ الْعَقِبِ؟ قَالَ: قَلِيلُ لَحْمِ الْعَقِبِ
9. ஷு அபா அவர்கள் கூறியதாவது :
“ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள் “ என்று ஜாபிர் பின் சமுரா ரழி அவர்கள் கூறியதைத் தாம் கேட்ட்தாக சிமாக் பின் ஹர்ப் அவர்கள் தெரிவித்தார்கள்.
நான் சிமாக் அவர்களிடம் ,” விசாலமான வாய் ( ளலீஉல் ஃபம் ) என்றால் என்ன ? “ என்று கேட்டேன் அவர்கள் “ பெரிய வாய் “ என்றார்கள் . “ விரிந்த கண் ( அஷ்கலுல் ஜன் ) என்றால் என்ன ? என்று கேட்டதற்கு “ நீளமான கண் பிளவு “ என்றார்கள்.
“ மெலிந்த குதிகால்கள் ( மன்ஹூசுல் அகிப் ) என்றால் என்ன ?” என்று கேட்டதற்கு “ குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப் படுவது “ என்று பதிலளித்தார்கள்.
குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 4669 ) திர்மிதீ ( 3580 ) அஹ்மத் ( 20080 ) பதிவாகி உள்ளது.
10-حَدَّثَنَا
هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ
أَشْعَثَ، يَعْنِي ابْنَ سَوَّارٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَابِرِ بْنِ
سَمُرَةَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي
لَيْلَةٍ إِضْحِيَانٍ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَجَعَلْتُ أَنْظُرُ
إِلَيْهِ وَإِلَى الْقَمَرِ، فَلَهُوَ عِنْدِي أَحْسَنُ مِنَ الْقَمَرِ
»
10. ஜாபிர் பின் சமுரா ரழி அவர்கள் கூறியதாவது :
சந்திரன் பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருக்கும் போது நபி ஸல் அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்க கண்டேன், அப்போது நபிகளாரையும் பார்த்தேன். சந்திரனையும் பார்த்தேன். அவர்கள் தான் சந்திரனை விட எனக்கு அழகாக தோன்றினார்கள்.
குறிப்பு : இந்த செய்தி திர்மிதீ ( 2735 ) தாரமீ ( 57 ) ஆகிய நூல்களிலும் பதிவாகி உள்ளது
11-حَدَّثَنَا
سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ
الرُّؤَاسِيُّ، عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلَ رَجُلٌ
الْبَرَاءَ بْنَ عَازِبٍ: أَكَانَ وَجْهُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
مِثْلَ السَّيْفِ؟ قَالَ: لا، بَلْ مِثْلَ الْقَمَرِ.
11. அபூ இஸ்ஹாக் அவர்கள்
கூறியதாவது :
நபி ஸல் அவர்களுடைய முகம் வாளைப் போன்று ( மின்னிக்
கொண்டு ) இருந்த்தா ? என்று பரா பின் ஆஸிப்
ரழி அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் , இல்லை; ஆயினும் அவர்களின்
முகம் சந்திரனைப் போன்று ( பிரகாசமாக ) இருந்தது
என்று பதிலளித்தார்கள்.
குறிப்பு : இந்த செய்தி புஹாரி ( 3552 ) திர்மிதீ (
3569 ) மற்றும் தாரிமி ( 64 ) பதிவாகி உள்ளது
12-حَدَّثَنَا
أَبُو دَاوُدَ الْمَصَاحِفِيُّ سُلَيْمَانُ بْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا
النَّضْرُ بْنُ شُمَيْلٍ، عَنْ صَالِحِ بْنِ أَبِي
الأَخْضَرِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَبْيَضَ
كَأَنَّمَا صِيغَ مِنْ فِضَّةٍ، رَجِلَ الشَّعْرِ.
12. அபூஹுரைரா ( ரழி )
அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் வெள்ளியால் உருவாக்கப்பட்டவர்களைப்
போல் வெண்மையாக இருப்பார்கள்.அவர் படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக
இருப்பார்கள்.
குறிப்பு : இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளரான
“ ஸாலிஹ் பின் அபில் அக்லர் என்பவர் பலவீனமானவர் என்று முஹம்மத் பின் இஸ்மாயீல் புஹாரி , இமாம் நஸயீ,இமாம் யஹ்யா பின்
மாயீன், இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் கூறியுள்ளனர்.
13-حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ
سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ
اللهِ صلى الله عليه وسلم، قَالَ: عُرِضَ عَلَيَّ الأَنْبِيَاءُ، فَإِذَا مُوسَى
عَلَيْهِ السَّلامُ، ضَرْبٌ مِنَ الرِّجَالِ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ،
وَرَأَيْتُ عِيسَى بْنَ مَرْيَمَ عَلَيْهِ السَّلامُ، فَإِذَا أَقْرَبُ مَنْ
رَأَيْتُ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ، وَرَأَيْتُ إِبْرَاهِيمَ عَلَيْهِ
السَّلامُ، فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا صَاحِبُكُمْ، يَعْنِي
نَفْسَهُ، وَرَأَيْتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلامُ، فَإِذَا أَقْرَبُ مَنْ
رَأَيْتُ بِهِ شَبَهًا دِحْيَةُ.
13. ஜாபிர் பின் அப்துல்லாஹ்
அவர்கள் கூறியதாவது :
இறைத்தூதர்கள் எனக்குக் காட்டபட்டனர். மூஸா ( அலை )
அவர்கள் “ ஷனூ ஆ “ குலத்தைச் சேர்ந்த மனிதரை போன்று ( உயரமான மனிதராக )
இருந்தார்கள். மர்யமின் மகன் ஈஸா ( அலை ) அவர்களையும் நான் பார்த்தேன் அவர்கள் (
என் தோழர் ) உர்வா பின் மஸ்வூதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
இப்ராஹீம் ( அலை ) அவர்களையும் நான் பார்த்தேன் .அவர்கள் உங்கள் தோழருக்கு (
எனக்கு ) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள் . ( வானவர் ) ஜிப்ரீல் ( அலை )
அவர்கள் ( என் தோழர் ) திஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக
இருந்தார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 271 ) திர்மிதீ (
3582 ) பதிவாகி உள்ளது
14-حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، الْمَعْنَى
وَاحِدٌ، قَالا: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سَعِيدٍ
الْجُرَيْرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، يَقُولُ: رَأَيْتُ
النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَا بَقِيَ عَلَى وَجْهِ الأَرْضِ أَحَدٌ رَآهُ
غَيْرِي، قُلْتُ: صِفْهُ لِي، قَالَ: كَانَ أَبْيَضَ، مَلِيحًا، مُقَصَّدًا.
14. சயீத் அல் ஜுரைரீ அவர்கள் கூறியதாவது :
( நபித்தோழர்களில்
இறுதியாக உயிர் வாழ்ந்த ) அபுத்துஃபைல் ( ரழி ) அவர்கள் “ அல்லாஹ்வின் தூதர் ஸல்
அவர்களை நான் பார்த்திருக்கிறேன் ; இந்தப் பூமியின் மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (
இப்போது உயிருடன் ) இல்லை “ என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான் , அவர்களை வர்ணித்துச் சொல்லுங்கள் என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் வெண்ணிறம்
கொண்டவர்களாகவும் களையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும்
இருந்தார்கள் “ என்று பதிலளித்தார்கள்.
குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 4671 ) அபூதாவூத்
( 4222 ) அஹ்மத் ( 22681 ) ஆகிய நூல்களில் இடம்பெற்று உள்ளது.
15-حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ
الْعَزِيزِ بْنُ أَبِي ثَابِتٍ الزُّهْرِيُّ،
قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ابْنُ أَخِي مُوسَى بْنِ
عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَفْلَجَ الثَّنِيَّتَيْنِ،
إِذَا تَكَلَّمَ رُئِيَ كَالنُّورِ يَخْرُجُ مِنْ بَيْنِ ثَنَايَاهُ.
15. இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்களின் முன்பற்கள், இடைவெளிவிட்டதாகவும்
அவர்கள் பேசினால் அப்பற்களுக்கு இடையிலிருந்து ஒரு ஒளி வெளிப்படுவது
போன்றிருக்கும்.
குறிப்பு : இந்த செய்தியில் இடம்பெறும்
அறிவிப்பாளரில் ஒருவரான “அப்துல் அஸீஸ் பின் அபீ
ஸாபித் “ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் திர்மிதீ, அபூ ஹாதிம்
கூறியுள்ளார்கள். மேலும் இமாம் நஸயீ அவர்கள் இவருடைய செய்திகள் எழுதபடமாட்டாது
என்று விமர்சித்து உள்ளார்கள்.
No comments:
Post a Comment