Wednesday, December 13, 2017

பாடம் : 2 நபித்துவ முத்திரை








باب ما جاء في خاتم النبوة
பாடம் : 2

நபித்துவ முத்திரை

16-حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ الْجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ‏:‏ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ‏:‏ ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَتْ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، وَتَوَضَّأَ، فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، وَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى الْخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ، فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الْحَجَلَةِ‏.‏


16.சாயீத் பின் யஸீத் ரழி அவர்கள் கூறியதாவது :

என் சிறிய தயார்என்னை நபி ஸல் அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே ! என் சகோதரி மகன் நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள்அப்போது நபி ஸல் அவர்கள் ( பரிவுடன் ) எனது தலையை வருடிகொடுத்து எனது சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள்பின்னர் நபி ஸல் அவர்கள் உளூ செய்தார்கள் அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன் பிறகு நபி ஸல் அவர்களுடை இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன்அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

குறிப்பு : இந்த செய்தி புஹாரி ( 190 ) முஸ்லிம் ( 4683 ) பதிவாகி உள்ளது.

17-حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، قَالَ‏:‏ حدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ‏:‏ رَأَيْتُ الْخَاتَمَ بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، غُدَّةً حَمْرَاءَ، مِثْلَ بَيْضَةِ الْحَمَامَةِ‏.‏

17. ஜாபிர் பின் சமுரா ரழி அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களது முதுகில் முத்திரை இருந்ததை நான் பார்த்தேன் அது புறா முட்டை போன்று இருந்தது.

குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 4682 ) திர்மிதீ ( 3577 ) அஹ்மத் ( 20074 ) ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

18-حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَديَنِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ أَبِيهِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ جَدَّتِهِ رُمَيْثَةَ، قَالَتْ‏:‏ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، وَلَوْ أَشَاءُ أَنْ أُقَبِّلَ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْهِ مِنْ قُرْبِهِ لَفَعَلْتُ، يَقُولُ لِسَعْدِ بْنِ مُعَاذٍ يَوْمَ مَاتَ‏:‏ اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ‏.‏

18. ருமைஸா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

ஸஅத் பின் முஆத் ரழி அவர்கள் இறந்த போது நபி ஸல் அவர்கள் , ரஹ்மானின் அர்ஷ் , ஸஅத் பின் முஅத்திற்காக நடுங்கியது என்று கூறினார்கள் . அப்போது நான் நபிகளாருக்கு நெருக்கமாக இருந்தேன் . நான் நாடியிருந்தால் அவர்களின் இரு தோள்களுக்கிடையே இருந்த முத்திரை முத்தமிட்டிருப்பேன்.

குறிப்பு : இந்த செய்தி அஹ்மத் ( 26182 ) தப்ரானீ ( 6082 ) பதிவாகி உள்ளதுமேலும் இந்த செய்தியில் கவணிக்க வேண்டிய ஒர் விஷயமும் உள்ளது., அதாவது ; அல்லாஹ் அமர்ந்திருக்கும் இடம் அர்ஷ் அது நடுங்கினால் அல்லாஹ்வும் நடுங்கினான் என்ற கருத்து ஏற்படும் அல்லாஹ் யாருக்காவும் பயப்படப்பமாட்டான் அந்த நிலை அவனிக்கில்லை இதில் யாரவது ஒரு அறிவிப்பாளர் தவறாக வாசகத்தை பயன்படுத்தியிருக்க கூடும் ( அல்லாஹ் மிக அறிந்தவன் )

19-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا‏:‏ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللهِ مَوْلَى غُفْرَةَ، قَالَ‏:‏ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ‏:‏ كَانَ عَلِيٌّ، إِذَا وَصَفَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ، وَقَالَ‏:‏ بَيْنَ كَتِفَيْهِ خَاتَمُ النُّبُوَّةِ، وَهُوَ خَاتَمُ النَّبِيِّينَ‏

 .
19. இப்ராஹீம் பின் முஹம்மத் கூறியதாவது :

அலீ ரழி அவர்கள் நபிகளாரை வர்ணித்த போது…. அவர்களின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரை இருந்தது அதுதான் இறைத்தூதர்களின் முத்திரை என்று கூறினார்கள்.

குறிப்பு : இந்த செய்தி திர்மிதீயில் ( 3571 ) இடம்பெற்றுள்ளதுஇதில் வரும் இரண்டாவது அறிவிப்பாளரான “ இப்ராஹீம் பின் முஹம்மத் “ அவர்கள் அவரது பாட்டனார் அலீ ரழி அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் கேட்ட்தில்லை எனவே இந்த செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி ஆகும்.

20-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ‏:‏ حَدَّثَنِي عِلْبَاءُ بْنُ أَحْمَرَ الْيَشْكُرِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو زَيْدٍ عَمْرُو بْنُ أَخْطَبَ الأَنْصَارِيُّ، 
قَالَ‏:‏ قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ يَا أَبَا زَيْدٍ، ادْنُ مِنِّي فَامْسَحْ ظَهْرِي، فَمَسَحْتُ ظَهْرَهُ، فَوَقَعَتْ أَصَابِعِي عَلَى الْخَاتَمِ قُلْتُ‏:‏ وَمَا الْخَاتَمُ‏؟‏ قَالَ‏:‏ شَعَرَاتٌ مُجْتَمِعَاتٌ‏.‏


20. அபூ ஸைத் அம்ர் பின் அக்தப் ரழி அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் என்னிடம் , ஜைதின் தந்தையே ! என்னிடம் நெருங்கி வந்து என் முதுகை தடவிவிடும் என்றார்கள். ( நான் தடவிய போது ) எனது விரல் முத்திரையின் மீது பட்ட்து என்று அம்ர் பின் அக்தப் ரழி கூறினார்கள் அப்போது நான் முத்திரை என்றால் என்ன ? என்று வினவினேன் அதற்கு அம்ர் பின் அக்தப் ரழி அவர்கள் அடர்ந்த முடிகள் என்று பதிலளித்தார்கள்.

குறிப்பு : இந்த செய்தி அஹ்மத் ( 22293 ) இப்னு ஹிப்பான் ( 6435 ) ஹாகிம் ( 4135 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.

21-حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْخُزَاعِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ‏:‏ سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ‏:‏ جَاءَ سَلْمَانُ الْفَارِسِيُّ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، حِينَ قَدِمَ الْمَدِينَةَ بِمَائِدَةٍ عَلَيْهَا رُطَبٌ، فَوَضَعَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ يَا سَلْمَانُ مَا هَذَا‏؟‏ فَقَالَ‏:‏ صَدَقَةٌ عَلَيْكَ، وَعَلَى أَصْحَابِكَ، فَقَالَ‏:‏ ارْفَعْهَا، فَإِنَّا لا نَأْكُلُ الصَّدَقَةَ، قَالَ‏:‏ فَرَفَعَهَا، فَجَاءَ الْغَدَ بِمِثْلِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ مَا هَذَا يَا سَلْمَانُ‏؟‏ فَقَالَ‏:‏ هَدِيَّةٌ لَكَ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ‏:‏ ابْسُطُوا ثُمَّ نَظَرَ إِلَى الْخَاتَمِ عَلَى ظَهْرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَآمَنَ بِهِ، وَكَانَ لِلْيَهُودِ فَاشْتَرَاهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، بِكَذَا وَكَذَا دِرْهَمًا عَلَى أَنْ يَغْرِسَ لَهُمْ نَخْلا، فَيَعْمَلَ سَلْمَانُ فِيهِ، حَتَّى تُطْعِمَ، فَغَرَسَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، النَّخلَ إِلا نَخْلَةً وَاحِدَةً، غَرَسَهَا عُمَرُ فَحَمَلَتِ النَّخْلُ مِنْ عَامِهَا، وَلَمْ تَحْمِلْ نَخْلَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَا شَأْنُ هَذِهِ النَّخْلَةِ‏؟‏ فَقَالَ عُمَرُ‏:‏ يَا رَسُولَ اللهِ، أَنَا غَرَسْتُهَا، فَنَزَعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، فَغَرَسَهَا فَحَمَلَتْ مِنْ عَامِهَا‏.‏


21. அபூ புரைதா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த போது கனிந்த பேரீத்தம் பழங்கள் வைக்கப்படிருந்த ஒர் தட்டை ஸல்மான் பாரிஸி ரழி வைத்தார்கள். அப்போது ஸல்மானே ! இதுவென்ன ? என்று நபி ஸல் அவர்கள் வினவினார்கள். உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் தர்மமாக வழங்கப்பட்டவை என்று பதிலளித்தார்கள். இதை எடுத்து கொள்ளுங்கள் நாங்கள் தர்மப் பொருளைச் சாப்பிடமாட்டோம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஸல்மான் ரழி அவர்கள் அதை எடுத்துவிட்டார்கள். மறு நாள் அதைப் போன்றதை நபி ஸல் அவர்கள் முன்னால் வைத்தார்கள் . ஸல்மானே ! இதுவென்ன ? என்று நபிகளார்கள் கேட்டார்கள். உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்று ஸல்மான் ரழி அவர்கள் பதிலளித்தார்கள்.

நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் ( கைகளை ) நீட்டுங்கள் ( சாப்பிடுங்கள் ) என்றார்கள். பின்னர் ஸல்மான் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அப்போது ஸல்மான் ரழி ஒரு யூதனிடம் அடிமையாக இருந்தார்கள் நபி ஸல் அவர்கள் தோட்டத்தில்  நடப்படும் இப்பேரீச்சம் மரங்கள் கனிதருமவரை வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சில வெள்ளி நாணயங்களைக் கொடுத்து ஸல்மான் ரழி அவர்களை விடுதலை செய்தார்கள்.

அத்தோட்டத்தில்  ஒரே ஒர் பேரீச்சம் மரத்தைத் தவிர மற்ற அனைத்தையும் நபி ஸல் அவர்களே நட்டினார்கள் ஒன்றை உமர் ரழி அவர்கள் நட்டினார்கள் அதே ஆண்டில் எல்லா பேரீச்சம் மரங்களும் கனிகொடுக்க ஆரம்பித்தன ஒன்றைத் தவிர அப்போது நபி ஸல் அவர்கள் இந்த பேரீச்சம் மரத்திற்கு என்ன நேர்ந்தது ? என்று வினவினார்கள் அப்போது உமர் ரழி அல்லாஹ்வின் தூதரே ! அதை நான் நட்டினேன் என்றார்கள் நபி ஸல் அவர்கள் அதை அகற்றிவிட்டு மீண்டும் நட்டினார்கள் அந்த ஆண்டே அதுவும் கனிதரத் துவங்கியது

குறிப்பு : இதில் வரக்கூடிய நான்காவது அறிவிப்பாளர் அலீ பின் ஹுஸைன் என்பவர் யார் என்று அறியப்படாதவர் ஆகவே இந்த செய்தி பலவீனமானது.

22-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْوَضَّاحِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَقِيلٍ الدَّوْرَقِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ الْعَوَقِيِّ، قَالَ‏:‏ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، عَنْ خَاتَمِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَعْنِي خَاتَمَ النُّبُوَّةِ، فَقَالَ‏:‏ كَانَ فِي ظَهْرِهِ بَضْعَةٌ نَاشِزَةٌ‏.‏
22. அபூ நழ்ரா கூறியதாவது :

நபித்தவ முத்திரையைப் பற்றி அபூ ஸயீத் அல் குத்ரீ ரழி அவர்களிடம் கேட்டேன் அதற்வர்கள் அது நபி ஸல் அவர்களின் முதுகில் துருத்திக் கொண்டீருந்த சதைத் துண்டு என்று பதிலளித்தார்கள்.

குறிப்பு : இதில் வரக்கூடிய நான்காவது அறிவிப்பாளர் பஸீர் பின் வத்தா என்பவர் யார் என்று அறியப்படாதவர் ஆவார் ஆகவே இந்த செய்தி பலவீனமானது

23-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ أَبُو الأَشْعَثِ الْعِجْلِيُّ الْبَصْرِيُّ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ سَرْجِسَ، قَالَ‏:‏ أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، فَدُرْتُ هَكَذَا مِنْ خَلْفِهِ، فَعَرَفَ الَّذِي أُرِيدُ، فَأَلْقَى الرِّدَاءَ عَنْ ظَهْرِهِ، فَرَأَيْتُ مَوْضِعَ الْخَاتَمِ عَلَى كَتِفَيْهِ، مِثْلَ الْجُمْعِ حَوْلَهَا خِيلانٌ، كَأَنَّهَا ثَآلِيلُ، فَرَجَعْتُ حَتَّى اسْتَقْبَلْتُهُ، فَقُلْتُ‏:‏ غَفَرَ اللَّهُ لَكَ يَا رَسُولَ اللهِ، فَقَالَ‏:‏ وَلَكَ فَقَالَ الْقَوْمُ‏:‏ أَسْتَغْفَرَ لَكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏؟‏ فَقَالَ‏:‏ نَعَمْ، وَلَكُمْ، ثُمَّ تَلا هَذِهِ الآيَةَ ?وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ?‏.‏‏.‏
23 . அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் ரழி அவர்கள் கூறியதாவது :

நபிகளார் தம் தோழர்கள் சிலருடன் இருந்த போது நபிகளாரிடம் சென்றேன் அவர்கள் பின்னால் இவ்வாறு சுற்றி வந்தேன் என்னுடைய நோக்கத்தை நபிகளார் புரிந்து கொண்டார்கள் தன் முதுகிலிருந்து மேல் துண்டை அகற்றினார்கள் அப்போது நான் அவர்களின் இரு தோள் புஜங்களுக்கிடையே கை முஷ்டியைப் போன்று கொப்புளங்களைப் போனு தழும்பாகவும் உள்ள முத்திரையைக் கண்டேன் பின்னர் நபி ஸல் அவர்களை முன்னோக்கி அல்லாஹ்வின் தூதரே ! உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக ! என்று சொன்னேன்.

நபி ஸல் அவர்களும் உமக்கும் அல்லாஹ் மன்னிப்பானாக ! என்று கூறினார்கள் அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதர் உமக்கு பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள் ! என்றனர் ஆம் உங்களுக்கும் தான் என்று பதிலளித்தார்கள் பின்னர்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக ! உமது பாவத்திற்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் நீர் மன்னிப்பு கேட்பீராக ! நீங்கள் இயங்குவதையும் , தங்குவதையும் அல்லாஹ் அறிவான் ( 47:19 ) எனும் இந்த வசனத்தை ஓதிக்காடினார்கள்.

குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம் ( 4684 ) அஹ்மத் ( 19842 ) பதிவாகி உள்ளது


No comments:

Post a Comment