அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(81)باب صَلاَةِ اللَّيْلِ
பாடம்
: 81
இரவுத்
தொழுகை.
٧٣٠حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ
حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ
عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله
عليه وسلم كَانَ لَهُ حَصِيرٌ يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ
بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ.
730 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம்
பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக்கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக்கொள்வார்கள்.
(அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து)
அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.
٧٣١حَدَّثَنَا
عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا
مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ،
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ
حُجْرَةً ـ قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى
فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ
بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ " قَدْ عَرَفْتُ
الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا
النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي
بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَةَ ". قَالَ عَفَّانُ حَدَّثَنَا
وُهَيْبٌ، حَدَّثَنَا مُوسَى، سَمِعْتُ أَبَا النَّضْرِ، عَنْ بُسْرٍ، عَنْ
زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
731 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள்- சில இரவுகள்
(அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில்
சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது)
பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்த போது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமந்துகொள்ள
ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன்.
மக்களே! (உபரியானத் தொழுகை களை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள் ளுங்கள். ஒரு மனிதர்
தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத்
தவிர! என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(82)باب إِيجَابِ التَّكْبِيرِ وَافْتِتَاحِ الصَّلاَةِ
பாடம்
: 82
தொழுகையைத்
துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம்.
٧٣٢حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ الأَنْصَارِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم رَكِبَ فَرَسًا، فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، قَالَ أَنَسٌ ـ رضى الله
عنه ـ فَصَلَّى لَنَا يَوْمَئِذٍ صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهْوَ قَاعِدٌ،
فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، ثُمَّ قَالَ لَمَّا سَلَّمَ " إِنَّمَا جُعِلَ
الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا
رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا
وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ
الْحَمْدُ ".
732 அனஸ் பின் மாலிக் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்த
போது (கீழே விழுந்து) அவர்களது வலப் பாகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அன்றைய
தினம் அவர்கள் (கடமையான) ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழுவித்தார்கள். நாங்களும்
அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் சலாம் கொடுத்(து முடித்)த
போது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று
தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும்
(தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு
லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்)
என்று சொல்லுங்கள்.
٧٣٣حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ خَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
عَنْ فَرَسٍ فَجُحِشَ فَصَلَّى لَنَا قَاعِدًا فَصَلَّيْنَا مَعَهُ قُعُودًا،
ثُمَّ انْصَرَفَ فَقَالَ " إِنَّمَا الإِمَامُ ـ أَوْ إِنَّمَا جُعِلَ
الإِمَامُ ـ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ
فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ
حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ. وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا
".
733 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களுக்கு (உடலின் வலப் பாகத்தில்) சிராய்ப்பு
ஏற்பட்டு விட்டது. (அன்றைய தினம்) அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்தபடியே தொழுகை நடத்தினார்கள்.
நாங்களும் உட்கார்ந்தபடியே (அவர்களுக்குப் பின்னால்) தொழுதோம். தொழுது முடித்ததும்
அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
பின்பற்றப்படுவதற்காகவே
இமாம் நியமிக்கப்பட்டுள்ளார் அல்லது (பின்பற்றப்படுவதற் காகவே) இமாம் இருக்கிறார் அவர்
தக்பீர் (அல்லாஹ் அக்பர்என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ் அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து
ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவிலிருந்து நிமிரும் போது)
சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால், நீங்களும் ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று
கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.
٧٣٤حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنِي أَبُو
الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى
الله عليه وسلم " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا
كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ
لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. وَإِذَا سَجَدَ
فَاسْجُدُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ ".
734 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பின்பற்றப்படுவதற்காகவே
இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர்
சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் சமிஅல்லாஹு
லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து எனச் சொல்லுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும்
சஜ்தா செய்யுங்கள்; அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(83)باب رَفْعِ الْيَدَيْنِ فِي التَّكْبِيرَةِ الأُولَى
مَعَ الاِفْتِتَاحِ سَوَاءً
பாடம்
: 83
சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும்
உயர்த்துவது.
٧٣٥حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ
بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا
كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا
كَذَلِكَ أَيْضًا وَقَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ
الْحَمْدُ ". وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.
735 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள்.
ருகூஉவிற்காக தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும்
அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து
நிமிரும் போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து என்று கூறுவார்கள்.
சஜ்தாவில் (குனியும் போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள்
(கைகளை உயர்த்த மாட்டார்கள்).
(84)باب رَفْعِ الْيَدَيْنِ إِذَا كَبَّرَ وَإِذَا رَكَعَ
وَإِذَا رَفَعَ
பாடம்
: 84
ஆரம்பத்
தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும்
போதும், (ருகூவிலிருந்து) உயரும்
போதும் இருகைகளையும் உயர்த்துவது.
٧٣٦حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا
يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم إِذَا قَامَ فِي الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا
حَذْوَ مَنْكِبَيْهِ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ،
وَيَفْعَلُ ذَلِكَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَيَقُولُ "
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ". وَلاَ يَفْعَلُ ذَلِكَ فِي
السُّجُودِ.
736 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தொழுவதற்காக நின்றால் தம் தோள்களுக்கு நேராக இருக்கும்படி தம்மிரு கைகளையும்
உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். ருகூஉவிற் காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு
அவர்கள் செய்வார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள்.
ருகூவிலிருந்து (நிமிரும் போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்றும் கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும், சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு
செய்ய மாட்டார்கள்.
٧٣٧حَدَّثَنَا
إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ
خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ إِذَا
صَلَّى كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ
يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ، وَحَدَّثَ
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَنَعَ هَكَذَا.
737 அபூகிலாபா அப்துல்லாஹ்
பின் ஸைத் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் அல்ஹுவைரிஸ்
(ரலி) அவர்கள் தொழும் போது (முதலில்) தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் ருகூஉவிற்குச் செல்ல நாடிய போது தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து
தலையை உயர்த்தும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இவ்வாறே செய்தார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.
(85)باب إِلَى أَيْنَ يَرْفَعُ يَدَيْهِ
பாடம்
: 85
கைகளை எந்த
அளவு உயர்த்த வேண்டும்?
وَقَالَ أَبُو حُمَيْدٍ فِي أَصْحَابِهِ رَفَعَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَذْوَ مَنْكِبَيْهِ
அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான்
பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்த போது நபி (ஸல்) அவர்கள்
(தொழும் போது)தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தினார்கள் என்று கூறினார்கள்.
٧٣٨حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى
الله عنهما ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَتَحَ
التَّكْبِيرَ فِي الصَّلاَةِ، فَرَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ حَتَّى
يَجْعَلَهُمَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ فَعَلَ مِثْلَهُ،
وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَعَلَ مِثْلَهُ وَقَالَ
" رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ". وَلاَ يَفْعَلُ ذَلِكَ حِينَ
يَسْجُدُ وَلاَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ.
738 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தக்பீர்
கூறி தொழுகையைத் துவக்கினார்கள். தக்பீர் கூறும்போதே தம் கைகளை உயர்த்தி தோள்களுக்கு
நேராக ஆக்கினார்கள். ருகூஉவிற்காக அவர்கள் தக்பீர் கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள்.
சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள். ரப்பனா வல(க்)கல்
ஹம்து என்றும் கூறினார்கள். சஜ்தா (சிரவணக்கம்) செய்யும் போது அவ்வாறு செய்ய மாட்டார்கள்; சஜ்தாவிலிருந்து தம் தலையை
உயர்த்தும் போதும் (அவ்வாறு) செய்ய மாட்டார்கள்.
(86)باب رَفْعِ الْيَدَيْنِ إِذَا قَامَ مِنَ
الرَّكْعَتَيْنِ
பாடம்
: 86
இரண்டாவது
ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது.
٧٣٩حَدَّثَنَا
عَيَّاشٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ،
عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ
وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ
لِمَنْ حَمِدَهُ. رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ
يَدَيْهِ. وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه
وسلم. رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ
عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ
أَيُّوبَ وَمُوسَى بْنِ عُقْبَةَ مُخْتَصَرًا.
739 இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை யான
நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள்
தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள்.
ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் எனக்
கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும்
போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்தள்ளது.
மூசா பின் உக்பா (ரஹ்)
அவர்களின் அறிவிப்பில் சுருக்கமாக இது இடம்பெற்றுள்ளது..
(87)باب وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى
பாடம்
: 87
வலக் கையை
இடக் கையின் மீது வைப்பது.
٧٤٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ
بْنِ سَعْدٍ، قَالَ كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ
الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلاَةِ. قَالَ أَبُو حَازِمٍ لاَ
أَعْلَمُهُ إِلاَّ يَنْمِي ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ
إِسْمَاعِيلُ يُنْمَى ذَلِكَ. وَلَمْ يَقُلْ يَنْمِي.
740 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழும் போது ஒருவர் தம்
வலக் கையை தம் (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன் கையின் மீது
வைக்கவேண்டுமென கட்டளையிடப்பட்டனர்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இது நபி (ஸல்) அவர்கள்
வரை அறிவிப்பாளர்தொடர் சென்று முடியும் ஹதீஸ் (மர்ஃபூஉ) என்றே நான் அறிகிறேன்.
(88)باب الْخُشُوعِ فِي الصَّلاَةِ
பாடம்
: 88
தொழுகையில்
உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும்.
٧٤١حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "
هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا وَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ رُكُوعُكُمْ
وَلاَ خُشُوعُكُمْ، وَإِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي ".
741 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த (கிப்லா) திசையில்
முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை)
என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய குனிவும்
(ருகூவும்) உங்களுடைய பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும்
உங்களை நான் காண்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
٧٤٢حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ،
قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم قَالَ " أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَاللَّهِ إِنِّي
لأَرَاكُمْ مِنْ بَعْدِي ـ وَرُبَّمَا قَالَ مِنْ بَعْدِ ظَهْرِي ـ إِذَا
رَكَعْتُمْ وَسَجَدْتُمْ ".
742 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ருகூஉவையும் சஜ்தாவையும்
நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு பின்புறமாக அல்லது என்
முதுகுக்குப் பின்புற மாக நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா)
செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக்(ரலி)
அறிவிக்கி றார்கள்.
(89)باب مَا يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ
பாடம்
: 89
முதல் தக்பீர்
கூறிய பின் ஓத வேண்டியவை.
٧٤٣حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ
كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ ـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ
الْعَالَمِينَ}
743 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர்
(ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி
ரப்பில் ஆலமீன் என ஓதியே தொழுகையை ஆரம்பிப் பார்கள்.
٧٤٤حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ،
قَالَ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ،
قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً ـ قَالَ
أَحْسِبُهُ قَالَ هُنَيَّةً ـ فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ،
إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ "
أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ
الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى
الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ
وَالثَّلْجِ وَالْبَرَدِ ".
744 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸர்ஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறிது
நேரம் என்பதைக் குறிக்க) அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹுனையத்தன் எனும் சொல்லைக் கையாண்டதாகவே
நான் கருதுகிறேன்.-
(தொடர்ந்து) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்)
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும்
கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ
வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம
நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம
ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த் என்று கூறுகிறேன் என்றார்கள்.
(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ
தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது
போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும்
ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)
(90)باب
பாடம்
: 90
٧٤٥حَدَّثَنَا
ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي
ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ
صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْكُسُوفِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ،
ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ
رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ
رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ
ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ
رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ فَسَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ
رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ ثُمَّ انْصَرَفَ فَقَالَ " قَدْ
دَنَتْ مِنِّي الْجَنَّةُ حَتَّى لَوِ اجْتَرَأْتُ عَلَيْهَا لَجِئْتُكُمْ
بِقِطَافٍ مِنْ قِطَافِهَا، وَدَنَتْ مِنِّي النَّارُ حَتَّى قُلْتُ أَىْ رَبِّ
وَأَنَا مَعَهُمْ فَإِذَا امْرَأَةٌ ـ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ تَخْدِشُهَا
هِرَّةٌ قُلْتُ مَا شَأْنُ هَذِهِ قَالُوا حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، لاَ
أَطْعَمَتْهَا، وَلاَ أَرْسَلَتْهَا تَأْكُلُ ". قَالَ نَافِعٌ حَسِبْتُ
أَنَّهُ قَالَ " مِنْ خَشِيشِ أَوْ خُشَاشِ الأَرْضِ ".
745 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரிய
கிரகணத் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள்.
பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து)
நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட
நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து விட்டுப் பிறகு (சஜ்தாவிற்குச்
சென்று) நீண்ட நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பின்பு (முதல் சஜ்தாவிலிருந்து
தலையை) உயர்ந்து விட்டுப் பிறகு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட
நேரம் செய்தார்கள்.
பிறகு (இரண்டாம் ரக்அத்திற்காக)
எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள்.
பின்னர் (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு
குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி சஜ்தா
செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் (தலையை) உயர்த்திவிட்டு
(மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் தொழுகையை
முடித்துவிட்டு அவர்கள் கூறினார்கள்:
(நான் தொழுது கொண்டிருந்த போது) என்னை சொர்க்கம் நெருங்கி வந்தது; எனக்கு சக்தியிருந்திருக்கு மானால்
அதன் பழக்குலைகளில் ஒன்றை நான் (பறித்து) உங்களிடம் தந்திருப்பேன். என்னை நரகமும் நெருங்கி
வந்தது. எந்த அளவிற்கென்றால், இறைவா! நானும் இ(ந்த நரகத்திலிருப்ப)வர்களுடன் இருக்கப் போகிறேனா? என்று நான்(மருண்டு போய்க்)கேட்டேன்.
அ(ந்த நரகத்)தில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூணை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது.
இவளுக்கு என்ன நேர்ந்தது (ஏன் இவள் இவ்வாறு வேதனை செய்யப்படுகிறாள்)? என்று நான் கேட்டேன். அதற்கு அ(ங்கிருந்த
வான)வர்கள், இந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை இந்தப் பெண் அடைத்துவைத்திருந்தாள்.
அதற்கு தானும் உணவளிக்க வில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை அவள்
அவிழ்த்துவிடவுமில்லை என்று பதிலளித்தனர்.
No comments:
Post a Comment