16.விளையாட்டு
உடல் உறுப்புக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன
فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ
الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ لِي رَسُولُ اللَّهِ
உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு
இப்னு ஆஸ் ( ரழி ) நூல் : புஹாரி ( 1975 )
பெரு நாள் தினத்தில் விளையாடுவது ஆர்வ மூட்டப்பட்டுள்ளது
عَنْ أَنَسٍ
قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلِأَهْلِ الْمَدِينَةِ يَوْمَانِ
يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ قَدِمْتُ عَلَيْكُمْ وَلَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ
فِيهِمَا فَإِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ يَوْمَيْنِ خَيْرًا مِنْهُمَا يَوْمَ
الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ
நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில்
மதீனா வாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்திலிருந்து
இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
அதற்கு நபி ஸல் அவர்கள் இதற்கு பதிலாக
நோன்பு பெரு நாள் ஹஜ் பெரு நாள் என்ற இரண்டு நட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரழி
) நூல் : அபூதாவூத் ( 1134)
தரம் : ஸஹீஹ்
அந்நிய ஆண்களின் வீர விளையாட்டை ஆடை ஒழுங்குகளுடன் பார்க்கலாம்
عَنْ عَائِشَةَ ـ
رضى الله عنها ـ قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي
بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ،
حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ
الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல்
துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த
அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும்
வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப்
பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
நூல் : புஹாரி ( 5236 )
வீர விளையாட்டுகளை விளையாட ஆர்வமூட்டுதல்
قَالَ سَمِعْتُ
سَلَمَةَ بْنَ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه
وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه
وسلم " ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا
ارْمُوا وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ ". قَالَ فَأَمْسَكَ أَحَدُ
الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" مَا لَكُمْ لاَ تَرْمُونَ ". قَالُوا كَيْفَ نَرْمِي وَأَنْتَ
مَعَهُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ارْمُوا فَأَنَا
مَعَكُمْ كُلِّكُمْ
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும்
போட்டியில் ஈடுபட்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது
நபி(ஸல்) அவர்கள், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள்.
ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்)
அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்)
நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை
நிறுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க,
நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள்
அம்பெய்யுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புஹாரி ( 2899 )
வீர விளையாடினால் கூட எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்கக்
கூடாது
عَنْ ابْنِ
عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உயிருள்ள
பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி
) நூல் : முஸ்லிம் ( 1957)
தற்காப்புக் கலையை படித்துவிட்டு மறந்துவிடுவது கூடாது
قَالَ عُقْبَةُ
لَوْلاَ كَلاَمٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ
أُعَانِهِ . قَالَ الْحَارِثُ فَقُلْتُ لاِبْنِ شُمَاسَةَ وَمَا ذَاكَ قَالَ
إِنَّهُ قَالَ " مَنْ عَلِمَ الرَّمْىَ ثُمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا
أَوْ قَدْ عَصَى " .
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : யார் அம்பெறிவதை கற்றுக்
கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை அவர் மாறு செய்துவிட்டார்.
அறிவிப்பவர் : உக்பா ( ரழி ) நூல்
: முஸ்லிம் ( 1919 )
ஒட்டக போட்டி
عَنْ أَنَسٍ ـ رضى
الله عنه ـ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ. قَالَ وَحَدَّثَنِي
مُحَمَّدٌ أَخْبَرَنَا الْفَزَارِيُّ وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حُمَيْدٍ
الطَّوِيلِ عَنْ أَنَسٍ قَالَ كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم تُسَمَّى الْعَضْبَاءَ، وَكَانَتْ لاَ تُسْبَقُ، فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى
قَعُودٍ لَهُ فَسَبَقَهَا، فَاشْتَدَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ وَقَالُوا
سُبِقَتِ الْعَضْبَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْفَعَ شَيْئًا مِنَ الدُّنْيَا إِلاَّ
وَضَعَهُ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது.
அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது.
(ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின்
மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த
மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு
நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள்.
நூல் : புஹாரி ( 6501 )
குதிரை போட்டி
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ
الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ،
وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى
مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ
سَابَقَ بِهَا.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே
போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் 'ஹஃப்யா' என்ற இடத்திலிருந்து 'ஸனிய்யதுல் வதா' என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் 'ஸனியதுல் வதா' என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும்
இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.
நூல் : புஹாரி ( 420 )
சில விளையாட்டு போட்டிகளுக்கு குறிப்பிட்டு அனுமதியும்
உண்டு
عَنْ أَبِي
هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ سَبَقَ
إِلاَّ فِي نَصْلٍ أَوْ حَافِرٍ أَوْ خُفٍّ
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : வெற்றி பரிசு
என்பது ஒட்டகப் பந்தயம், குதிரை பந்தயம் , அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரழி )
நூல் : திர்மிதீ ( 3585 )
தரம் : ஹஸன்
குழந்தைகளின் விளையாட்டுக்கள்
عَنْ عَائِشَةَ ـ
رضى الله عنها ـ قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا
بِنْتُ سِتِّ سِنِينَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ
بْنِ خَزْرَجٍ، فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي فَوَفَى جُمَيْمَةً، فَأَتَتْنِي
أُمِّي أُمُّ رُومَانَ وَإِنِّي لَفِي أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبُ لِي،
فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا لاَ أَدْرِي مَا تُرِيدُ بِي فَأَخَذَتْ بِيَدِي
حَتَّى أَوْقَفَتْنِي عَلَى باب الدَّارِ، وَإِنِّي لأَنْهَجُ، حَتَّى سَكَنَ
بَعْضُ نَفَسِي، ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ وَجْهِي
وَرَأْسِي ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي
الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ.
فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي، فَلَمْ يَرُعْنِي إِلاَّ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى، فَأَسْلَمَتْنِي إِلَيْهِ، وَأَنَا
يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்)
அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு
விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது.
நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி)
என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள்
என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப்
பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக
வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப்
பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள்
இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக!
(அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்' என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள்
என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.
நூல் : புஹாரி ( 3894 )
பொம்மைகளை வைத்து விளையாடுதல்
عَنْ عَائِشَةَ،
أَنَّهَا كَانَتْ تَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَتْ وَكَانَتْ تَأْتِينِي صَوَاحِبِي فَكُنَّ يَنْقَمِعْنَ مِنْ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
يُسَرِّبُهُنَّ إِلَىَّ
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்கு அருகில்
பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் ( விளையாட ) வருவார்கள். அல்லாஹ்வின்
தூதர் ஸல் அவர்களைக் கண்டதும் என் தோழியர் ( பயந்து போய் ) ஒளிந்துகொள்ளுவார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) நூல்
: முஸ்லிம் ( 4827 )
விருபத்திற்குரியவரிடத்தில் மனது புண்படாதபடி விளையாடலாம்
قَالَ سَمِعْتُ
أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله
عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ " يَا أَبَا
عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்)
பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?'
என்று கூடக் கேட்பார்கள்.
நூல் : புஹாரி ( 6129 )
No comments:
Post a Comment