Sunday, December 17, 2017

15. சிறு நீர் கழிக்கும் போது பேணவேண்டியவை




                                          

                       15.   சிறு நீர் கழிக்கும் போது பேணவேண்டியவை

 நின்று கொண்டு சிறு நீர் கழிக்கத் தடை


عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبُولُ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ قَاعِدًا

” நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்.அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறு நீர் கழித்ததில்லை.

அறிவிப்பவர் ; ஆயிஷா ( ரழி ) நூல் : திர்மிதீ ( 12)
தரம் : ஹஸன்

 நிர்பந்தமான இடங்களில் நின்று கொண்டு சிறு நீர் கழிப்பதற்கு அனுமதி


عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ‏

'நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள்.

நூல் : புஹாரி ( 224 )

ஆண்பெண் குழந்தைகளின் சிறு நீர் ஆடையில் பட்டால்…

حَدَّثَنِي أَبُو السَّمْحِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلاَمِ ‏"‏ ‏.‏

 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “ பெண் குழந்தையின் சிறு நீர் ( ஆடையில் பட்டால் அது ) கழுவப்பட வேண்டும் ஆண் குழந்தையின் சிறு நீர் பட்டால் நீர் தெளிக்கப்படும் “

அறிவிப்பவர் : அபூ  ஸம்ஹ் ( ரழி ) நூல் : நஸயீ ( 302 )
தரம் : ஸஹீஹ்

தேங்கிய நீரில் சிறு நீர் கழிக்கத் தடை

وَبِإِسْنَادِهِ قَالَ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ‏"‏‏.‏

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) நூல் : புஹாரி ( 239)

பொந்துக்களில் சிறு நீர் கழிக்கத் தடை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي جُحْرٍ ‏"

உங்களில் எவரும் பொந்துகளுக்குள் சிறு நீர் கழிக்க வேண்டாம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் ( ரழி ) நூல் : நஸயீ ( 34 )
தரம் : ளயீப் ( பலவீனமான செய்தி )

வலது கரத்தால் மறை உறுப்பை பிடிக்கக் கூடாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
 நூல் : புஹாரி ( 154 )

தண்ணீர் கிடைக்காவிட்டால் கற்களால் சுத்தம் செய்ய வேண்டும்


قَالَ قِيلَ لِسَلْمَانَ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ فَقَالَ سَلْمَانُ أَجَلْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ ‏


” மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்குவதையும் வலக்கரத்தால் தூய்மை செய்வதையும் மூன்று கற்களுக்கு குறைந்த அளவைக் கொண்டு நாங்கள் தூய்மை செய்வதையும் விட்டை எலும்பு ஆகியவற்றால் சுத்தம் செய்வதையும் நபி ஸல் அவர்கள் எங்களுக்குத் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத் ( ரழி ) நூல் : திர்மிதீ ( 16 )

தரம் : ஸஹீஹ்

No comments:

Post a Comment