20.ஸலாம் கூறுவதின் முறைகள்
சிறியவர் , பெரியவருக்கு ஸலாம் கூற வேண்டும்
عَنْ أَبِي
هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُسَلِّمُ
الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى
الْكَثِيرِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும்,
நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும்,
சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம்
(முகமன்) சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
( நூல் : புஹாரி
6231)
முழுமையான ஸலாமே நிறைவான நன்மையைத்
தரும்
عَنْ عِمْرَانَ بْنِ
حُصَيْنٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ
السَّلاَمُ عَلَيْكُمْ . فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ ثُمَّ جَلَسَ فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " عَشْرٌ " . ثُمَّ جَاءَ آخَرُ
فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ . فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ
فَقَالَ " عِشْرُونَ " . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ
عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ . فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ
فَقَالَ " ثَلاَثُونَ "
நபி ஸல் அவர்களிடம்
ஒரு மனிதர் வந்து “ அஸ்ஸலாமு அலைக்கும் “ என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு
பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி ஸல் அவர்கள் ‘[
இவருக்கு] பத்து நன்மைகள் என்று கூறீனார்கள். பிறகு மற்றோருவர் வந்தார் அவர் “
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் “ என்று கூறினார் . நபி ஸல அவர்கள் அவருக்கு
பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ‘[ இவருக்கு ] இருபது நன்மைகள் என்று
கூறினார்கள்.
பிறகு மற்றொருவர்
வந்தார் அவர் “ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு “ என்று கூறினார்
அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள் பிறகு அவர் உட்கார்ந்தார் நபி ஸல் அவர்கள்
[ இவருக்கு ] முப்பது நன்மைகள் என்று கூறினார்கள்.
என இம்ரான் பின்
ஹுசைன் ( ரலி) அறிவித்தார்
( நூல் : அபூதாவூத் 5195 தரம் : ஸஹீஹ் )
சிறியவர்களுக்கு
பெரியவர்கள் ஸலாம் சொல்லலாம்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّهُ مَرَّ
عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه
وسلم يَفْعَلُهُ.
(ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து
சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான்
செய்துவந்தார்கள்' என்று கூறினார்கள்.
( நூல் : புஹாரி 6247 )
பிறர் வீட்டில்
மூன்று முறை ஸலாம் கூறி அனுமதியுடனே நுழைய வேண்டும்
عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ
بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள்
நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை
பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்
(
நூல் : புஹாரி 6244)
யூத , கிறித்தவர்களைப் போன்று ஸலாம்
கூடாது
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ
وَالنَّصَارَى ، فَإِنَّ تَسْلِيمَهُمْ بِالْأَكُفِّ وَالرُّؤوسِ وَالْإِشَارَةِ
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : யூதர்கள் மற்றும்
கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள் அவர்களுடைய ஸலாம் (
வார்தைகள் இல்லாமல் ) முன்கைகள் மூலமும் தலை ( தாழ்த்துவதின் ) மூலமும்
சைக்கினையின் மூலமும் ஆகும். என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
.
( நூல் : அஸ் ஸுனனுல் குப்ரா – நஸயீ 8886 தரம் : ஹஸன் )
பெண்களுக்கு ஸலாம்
கூறலாம்
سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ، تُحَدِّثُ أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ فِي الْمَسْجِدِ يَوْمًا وَعُصْبَةٌ
مِنَ النِّسَاءِ قُعُودٌ فَأَلْوَى بِيَدِهِ بِالتَّسْلِيمِ
وَأَشَارَ عَبْدُ
الْحَمِيدِ بِيَدِهِ
பெண்களில்
சிறுகூட்டத்தினர் பள்ளிவாசல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி ஸல் அவர்கள் அவர்களைக்
கடந்து சென்றார்கள் அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
என அஸ்மா பின்த்
யஸீத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
( நூல் : திர்மிதீ 2621 தரம் : ஹஸன் )
மீண்டும் ஸலாம் சொல்லுதல்
وعن أبي هريرة - رضي الله عنه - عن النبي - صلى الله
عليه وسلم - قال : " إذا لقي أحدكم أخاه ، فليسلم عليه ، فإن حالت بينهما
شجرة ، أو جدار ، أو حجر ، ثم لقيه ، فليسلم عليه " . رواه أبو داود .
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களில்
ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும் அவர்கள் இருவருக்கும்
மத்தியில் ஒரு மரமோ அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும்
மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும் என அபூஹுரைரா ( ரழி ) அறிவிக்கிறார்கள்
( நூல்
: அபூதாவூத் 5200 தரம் : ஸஹீஹ் )
மூன்று நாட்களுக்கு மேல்
வெறுத்து இருக்கக் கூடாது
عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ
أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ
هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்'
ஒருவர் தம் சகோதரரிடம்
(மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு
செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி)
அறிவித்தார்.
( நூல் : புஹாரி 6077)
ஸலாம் சொல்வதின் மூலம்
உறங்கியவர்களை தொந்தரவு செய்யக் கூடாது
فَسَلَّمَ تَسْلِيمَةً أَسْمَعَ الْيَقْظَانَ ، وَلَمْ
يُوقِظِ النَّائِمَ
அல்லாஹ்வின் தூதர் ஸல்
அவர்கள் இரவில் ( எங்களிடம்) வந்து உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பாதவாறு விழித்திருப்பவருக்கு
கேட்கக்கூடிய வகையில் சலாம் சொல்வார்கள் என மிக்தாத் பின் அஸ்வத் ரழி அறிவிக்கிறார்
( நூல் : முஸ்னத் அபீ யஃலா 1507 தரம் : ஸஹீஹ் )
வ அலைக்கஸ் ஸலாம்
என்றும் பதில் சொல்லலாம்
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَجُلاً،
دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ فِي نَاحِيَةِ
الْمَسْجِدِ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ السَّلاَمُ ارْجِعْ فَصَلِّ
فَإِنَّكَ لَمْ تُصَلِّ ". فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ.
فَقَالَ " وَعَلَيْكَ السَّلاَمُ فَارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ
تُصَلِّ ". فَقَالَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الَّتِي بَعْدَهَا
عَلِّمْنِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ " إِذَا قُمْتَ إِلَى
الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ،
ثُمَّ اقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى
تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ
حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ
اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا،
ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ". وَقَالَ أَبُو أُسَامَةَ
فِي الأَخِيرِ " حَتَّى تَسْتَوِيَ قَائِمًا ".
ஒரு மனிதர் பள்ளிவாசல்
நுழைந்தார் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பள்ளிவாசலில் ஒர் ஒரத்தில் அமர்ந்திருந்தார்கள்
. ( பள்ளிக்குள் நுழைந்த அவர் ) தொழுதார். பிறகு அவர் (நபி ஸல் அவர்களிடம் வந்து )
அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம்
திரும்பச் சென்று தொழு . ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். ஆகவே அவர் திரும்பச்
சென்று தொழுதார் பிறகு வந்து நபி ஸல் அவர்களுக்கு ஸலாம் சொன்னர் அப்போதும் அவர்கள்
வ அலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள்.
இரண்டாம் தடவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே ! எனக்குத் ( தொழுகை
முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார். என அபூஹுரைரா அறிவிக்கிறார்
( நூல் : புஹாரி
6251)
மாற்று மதத்தைச் சார்ந்தவருக்கு சலாம்
கூறுவது தவறில்லை
قَالَ سَلٰمٌ
عَلَيْكَۚ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْؕ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக
என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்(
19:47 )
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه
وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ
السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ".
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்
'இஸ்லாத்தில் சிறந்தது எது'
எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும்
ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்'
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.( நூல்
: புஹாரி 12 )
أَنَّ أُسَامَةَ
بْنَ زَيْدٍ، أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى
حِمَارٍ عَلَى إِكَافٍ عَلَى قَطِيفَةٍ فَدَكِيَّةٍ، وَأَرْدَفَ أُسَامَةَ
وَرَاءَهُ يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ فَسَارَ حَتَّى
مَرَّ بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ وَذَلِكَ
قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ، وَفِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ
الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ، وَفِي
الْمَجْلِسِ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ
عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ،
قَالَ لاَ تُغَيِّرُوا عَلَيْنَا فَسَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم
وَوَقَفَ وَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ فَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ،
فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ يَا أَيُّهَا الْمَرْءُ إِنَّهُ لاَ
أَحْسَنَ مِمَّا تَقُولُ إِنْ كَانَ حَقًّا، فَلاَ تُؤْذِنَا بِهِ فِي مَجْلِسِنَا،
وَارْجِعْ إِلَى رَحْلِكَ فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ. قَالَ ابْنُ
رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللَّهِ فَاغْشَنَا بِهِ فِي مَجَالِسِنَا فَإِنَّا
نُحِبُّ ذَلِكَ فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى
كَادُوا يَتَثَاوَرُونَ فَلَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى
سَكَتُوا فَرَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَابَّتَهُ حَتَّى دَخَلَ عَلَى
سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ لَهُ " أَىْ سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا
قَالَ أَبُو حُبَابٍ ". يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ. قَالَ
سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ اعْفُ عَنْهُ وَاصْفَحْ فَلَقَدْ أَعْطَاكَ اللَّهُ
مَا أَعْطَاكَ وَلَقَدِ اجْتَمَعَ أَهْلُ هَذِهِ الْبَحْرَةِ أَنْ يُتَوِّجُوهُ
فَيُعَصِّبُوهُ فَلَمَّا رَدَّ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ شَرِقَ
بِذَلِكَ، فَذَلِكَ الَّذِي فَعَلَ بِهِ مَا رَأَيْتَ.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம்
விரித்து, அதன் மீது 'ஃபதக்' நகர் முரட்டுத் துணி விரித்து,
அதன் மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்
கொண்டு (நோய்வாய்ப்படடிருந்த) ஸஅத்பின் உபாதா(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில்
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் இருந்தார் - அவர் தம்மை
முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் முன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்லிம்கள்,
சிலை வணங்கிகளாக இணை வைப்பாளர்கள்,
யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில்
(கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள்.
(எங்கள்) வாகனப் பிராணியி(ன் காலடியி)லிருந்து
கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல்
துண்டால் தம் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, 'எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் சலாம் (முகமன்)
கூறினார்கள். (தம் வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும்,
அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட
அப்துல்லாஹ் இப்னு உபை (நபி(ஸல்) அவர்களை நோக்கி) 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின்,
அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,)
அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத்
தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை)
எடுத்துச் சொல்லுங்கள்' என்றார்.
(அங்கிருந்த) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி),
'ஆம். இறைத்தூதர் அவர்களே! அதை நம் அவைகளுக்கு வந்து எங்களுக்கு
எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்'
என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும்
யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டனர்.
அப்போது நபி(ஸல்) அவர்கள்,
மெளனமாகும் வரை மக்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு
உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, 'சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் இப்னு
உபை சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? (அவர் இன்னின்னவாறு கூறினார்)' என்றார்கள்.
ஸஅத் இப்னு உபாதா(ரலி),
'இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்துவிட்டுவிடுங்கள். தங்களுக்கு
அல்லாஹ் வழங்கிய (மார்க்கத்)தை வழங்கிவிட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகர
வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள்.
(இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து
மறுக்கப்பட்டபோது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி
அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்' என்று கூறினார்கள்.( புஹாரி 5663 )
சலாத்தை எத்திவைத்தல்
قَالَ أَبُو
سَلَمَةَ إِنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يَوْمًا " يَا عَائِشَ، هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ
السَّلاَمَ ". فَقُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ
وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى. تُرِيدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم.
ஆயிஷா(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள்,
'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்'
என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு'
அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும்,
அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்'
என்று பதில் முகமன் சொல்லிவிட்டு,
'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.( புஹாரி
3768)
ஒருவர் தனது ஸலாத்தை பிறரிடத்தில்
எடுத்துக்கூறச் சொல்லலாம்
عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صلى الله عليه وسلم
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ
إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا
السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ
قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்)
ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு..
அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும்
சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி
சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.( புஹாரி 3820 )
عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ، قَالَ تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ بِأَهْلِهِ
- قَالَ - وَصَنَعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ حَيْسًا - قَالَ - فَذَهَبْتُ بِهِ
إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّ أُمِّي تُقْرِئُكَ السَّلاَمَ
நபி ஸல் அவர்கள் திருமணம் முடித்து தனது மனைவியுடன்
உடலுறவு கொண்டுவிட்டார்கள்.( அப்போது ) எனது தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸை தயாரித்து
வைத்திருந்தார்கள் நான் அதை நபி ஸல அவர்களிடம் கொண்டு சென்று எனது தாய் உங்களுக்கு
சலாம் கூறினார்கள் எனக் கூறினேன்.இதை அனஸ் பின் மாலிக் அறிவிக்கிறார்கள்
( நூல் :
நஸயீ 3387 தரம் : ஸஹீஹ் )
No comments:
Post a Comment