21.அனுமதி கோருதல்
வீட்டுக்குள் நுழையும்
போது முதல் ஸலாம் கூற வேண்டும்
فَإِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ
أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً ۚ كَذَٰلِكَ
يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ(61 )
வீடுகளில் நுழையும்போது
அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்!
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.(
24:61 )
அந்நியரின் வீடுகளில் நுழைய அனுமதி தேவை
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا
غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا ۚ
ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ(27 )
நம்பிக்கை கொண்டோரே! உங்கள்
வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும்
நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.(24:27)
முதல் ஸலாம் பிறகே அனுமதி
حَدَّثَنَا رَجُلٌ، مِنْ بَنِي عَامِرٍ أَنَّهُ
اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ
أَلِجُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِخَادِمِهِ " اخْرُجْ
إِلَى هَذَا فَعَلِّمْهُ الاِسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلِ السَّلاَمُ عَلَيْكُمْ
أَأَدْخُلُ " . فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ
أَأَدْخُلُ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ .
பனூ ஆமிர் குலத்தைச்
சார்ந்த ஒரு மனிதர் நபி ஸல் அவர்கள் வீட்டில் இருக்கும் போது “ நான் நுழையலாமா ?” என்று அனுமதி கோரினார் நபியவர்கள்
தன்னுடைய பணியாளருக்கு “ நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையை
கற்றுக் கொடு.” அஸ்ஸலாமு அலைக்கும் ( என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா
?” என்று தான் ( அனுமதி பெறும்போது ) கூறவேண்டும். “ என்று அவருக்குச் சொல் “ என்று
கூறினாகள்.அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே “ அஸ்ஸலாமு அலைக்கும் “ என்று கூறி
“ நான் நுழையலாமா ?” என்று ( அனுமதி கோரினார் ) நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள் என்று அபூ
ஸயித் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
( நூல் : அபூதாவூத் 5177 தரம் : ஸஹீஹ் )
அந்நியர் வீடுகளில் அனுமதி
வழங்கப்படாவிட்டால் திரும்பி விட வேண்டும்
فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا
حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا ۖ هُوَ
أَزْكَىٰ لَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ( 28)
அங்கே எவரையும் நீங்கள்
காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி
விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே
உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.( 24:28)
وعن أنس - أو غيره - أن رسول الله - صلى الله عليه وسلم
- استأذن على سعد بن عبادة ، فقال : " السلام عليكم ورحمة الله " ، فقال
سعد : وعليكم السلام ورحمة الله ، ولم يسمع النبي - صلى الله عليه وسلم - حتى سلم
ثلاثا ، ورد عليه سعد ثلاثا ، ولم يسمعه ، فرجع النبي - صلى الله عليه وسلم -
فاتبعه سعد ، فقال : يا رسول الله ! بأبي أنت وأمي ، ما سلمت تسليمة إلا هي بأذني
، ولقد
رددت عليك ولم أسمعك ، أحببت أن أستكثر من سلامك ومن البركة
நபி ஸல் அவர்கள் சஃத்
பின் உபாதா அவர்களிடம் ( வீட்டின் உள்ளே வர ) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி ஸல் அவர்களுக்குக் கேட்காதவாறு ( வேண்டுமென்றே
) வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார்கள்.
நபி ஸல அவர்கள் மூன்று முறை சலாம்
சொல்ல சஃதும் மூன்று முறை பெருமானாருக்குக் கேட்காதவாறு பதில் சலாம் கூறினார்கள்.
நபி ஸல் அவர்கல் திரும்பிவிட்டார்கள்.சஃத்
நபியவர்களை பின் தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே ! என் தாயும் தந்தையும் தங்களுக்கு
அற்பணமாகட்டும் நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை உங்களுக்குக்
கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன் உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான்
அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்கள். இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
(
நூல் : அஹ்மத் 11998)
மூன்று தடவைக்கு மேல்
அனுமதி கேட்கத் தேவையில்லை திரும்பி விடலாம்
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ
لَهُ، فَلْيَرْجِعْ
உங்களில் ஒருவர் மூன்று
முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று நபி ஸல் கூறியதாக அபூ ஸயீத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
( நூல் : புஹாரி 6245 )
பருவ வயதை அடையாதவர்கள்
அனுமதி கேட்க வேண்டிய நேரங்கள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ
الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ
ثَلَاثَ مَرَّاتٍ ۚ مِّن قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم
مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ۚ ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ
ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ۚ طَوَّافُونَ
عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ
الْآيَاتِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (58 ) وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ
الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ
كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ
لَكُمْ آيَاتِهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ(59 )
நம்பிக்கை கொண்டோரே! உங்கள்
அடிமைகளும், உங்களில் பருவவயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள்
ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று
நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய
அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும்
இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள்.
இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ
வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும்
அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.( 24:58-59)
நாம் செல்லும் வீட்டாருக்கு
நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்
قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ
أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ
الْبَابَ فَقَالَ " مَنْ ذَا ". فَقُلْتُ أَنَا. فَقَالَ
" أَنَا أَنَا ". كَأَنَّهُ كَرِهَهَا.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
என் தந்தை (ஒரு யூதருக்குக்)
கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன்.
அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், 'நான்தான்' என்றேன். அப்போது நபி(ஸல்)
அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப்
போன்று கூறினார்கள்.
( நூல் : புஹாரி 6250)
பிறருடைய வீடுகளுக்குள்
எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ
صلى الله عليه وسلم " لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ
إِذْنٍ، فَخَذَفْتَهُ بِعَصَاةٍ، فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ
جُنَاحٌ ".
உன் அனுமதியின்றி ஒருவர்
உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால்
உன் மீது எந்தக் குற்றமுமில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(
நூல் : புஹாரி 6902)
عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ
السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَجُلاً اطَّلَعَ فِي جُحْرٍ فِي باب رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِدْرًى
يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" لَوْ أَعْلَمُ أَنْ تَنْتَظِرَنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنَيْكَ
". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا جُعِلَ
الإِذْنُ مِنْ قِبَلِ الْبَصَرِ ".
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி)
அறிவித்தார்.
ஒருவர் இறைத்தூதர்(ஸல்)
அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன்
(இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தம் தலையை அவர்கள்
கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது 'என்னை நீ பார்க்கிறாய்
என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.
(அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்ட
மாக்கப்பட்டது' என்று கூறினார்கள்.( நூல் : புஹாரி 6901)
அனுமதி பெறாமல் நுழைவதற்கு
அனுமதிக்கபட்ட இடம்
لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا بُيُوتًا
غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَّكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ
وَمَا تَكْتُمُونَ(29 )
யாரும் குடியிருக்காத
வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள்
வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.( 24:29)
No comments:
Post a Comment