Friday, December 15, 2017

பாடம் : 3 நபி ஸல் அவர்களுடைய தலைமுடி






باب ما جاء في شعر رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 3 

நபி ஸல் அவர்களுடைய தலைமுடி

24-حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ كَانَ شَعَرُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِلَى نِصْفِ أُذُنَي


24. அனஸ் பின் மாலிக் ( ரழி ) கூறியதாவது :

நபிகளாரின் தலைமுடி இருகாதுகளின் பாதிவரை ( நீண்டு ) இருந்தது

குறிப்பு : இச்செய்தி முஸ்லிம் ( 4668 ) நஸாயீ ( 5139 ) அபூதாவூத் ( 3653 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.

25-حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ‏:‏ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَكَانَ لَهُ شَعَرٌ فَوْقَ الْجُمَّةِ، وَدُونَ الْوَفْرَةِ‏.‏

25. அன்னை ஆயிஷா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

நானும் நபி ஸல் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம் அவர்களின் தலைமுடி, தோள்புஜத்திற்கு மேல் , காதுக்கீழும் இருக்கும்

குறிப்பு : இச்செய்தி திர்மிதீயில் ( 1677 ) யில் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது

26-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو قَطَنٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ الْمِنْكَبَيْنِ، وَكَانَتْ جُمَّتُهُ تَضْرِبُ شَحْمَةَ أُذُنَيْهِ‏.‏

26. பராஉ பின் ஆஸிப் ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் நடுத்தர உயர முடையவர்களாகவும் இரு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள் அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது.

குறிப்பு : இந்த செய்தி புஹாரி ( 3551 ) முஸ்லிம் ( 4663 ) ஆகிய நூல்களில் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது

27-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ‏:‏ قُلْتُ لأَنَسٍ‏:‏ كَيْفَ كَانَ شَعَرُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏؟‏ قَالَ‏:‏ لَمْ يَكُنْ بِالْجَعْدِ، وَلا بِالسَّبْطِ، كَانَ يَبْلُغُ شَعَرُهُ شَحْمَةَ أُذُنَيْهِ‏.‏

27 . கத்தாதா அவர்கள் கூறியதாவது

அனஸ் பின் மாலிக் ரழி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடைய முடி பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடைய முடி படிந்த முடியாகவும் இல்லை ; சுருள் முடியாகவும் இல்லை ; அவர்களின் தலைமுடி காது மடல்களுக்கும் அவர்களுடைய தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிந்தது என்று பதிலளித்தார்கள்.

குறிப்பு : இச்செய்தி புகாரி ( 5905 ) முஸ்லிம் ( 4666 ) ஆகிய நூல்களில் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது

28-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، قَالَتْ‏:‏ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَكَّةَ قَدْمَةً، وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ‏.‏

28. உம்மு ஹானீ ரழி அவர்கள் கூறியதாவது
நபி ஸல் அவர்கள் மக்காவிற்கு வந்த போது அவர்களுக்கு நான்கு சடைகள் இருந்தது.

29-حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ‏:‏ أَنَّ شَعَرَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، كَانَ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ‏
29. அனஸ் பின் மாலிக் ( ரழி ) கூறியதாவது :

நபிகளாரின் தலைமுடி இருகாதுகளின் பாதிவரை ( நீண்டு ) இருந்தது.

குறிப்பு இச்செய்தி முஸ்லிம் ( 4668 ) நஸயீ ( 5139 ) அபூதாவூத் ( 3653 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது

30-حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ نُ للّعَبْدِ اَهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ‏:‏ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُسْدِلُ شَعَرَهُ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْوَكَانَ الْمُشْرِكُونَ يَفْرِقُونَ رُؤُوسَهُمْ، وَكَانَ أَهْلُ الْكِتَابِ يُسْدِلُونَ رُؤُوسَهُمْ، وَكَانَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَأْسَهُ‏.‏

30. இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( ஆரம்பத்தில் ) வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். இணை வைப்பாளர்கள் வகிடு எடுத்து தலைவாரி வந்தார்கள். வேதக்காரர்கள் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு ( இறைக் ) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வகிடு எடுத்து தலைவாரினார்கள்.

குறிப்பு : இச்செய்தி புஹாரி ( 3558 ) முஸ்லிம் ( 4662 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.

31-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ الْمَكِّيِّ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ‏:‏ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَا ضَفَائِرَ أَرْبَعٍ‏.


31. உம்மு ஹானீ ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்களுக்கு நான்கு சடையிருந்ததை நான் பார்த்தேன்

குறிப்பு : இச்செய்தி திர்மிதீ ( 1703 ) அபூதாவூத் ( 3659 ) இப்னு மாஜா ( 3621 ) அஹ்மத் ( 25655)

No comments:

Post a Comment