Saturday, December 16, 2017

பாடம் : 4 நபி ஸல் அவர்கள் தலைவாரும் முறை







باب ما جاء في ترجل رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 4 தலைவாருதல்

32-حدثنا إسحاق بن موسى الأنصاري، حدثنا مَعْن بن عيسى، حدثنا مالك بن أنس، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ‏:‏ 
كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ‏.‏


32. ஆயிஷா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபிகளாருக்கு தலைவாரிவிடுவேன்.

குறிப்பு : இச்செய்தி புஹாரி ( 295 ) முஸ்லிம் ( 500 ) ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது

33-حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ هُوَ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ وَتَسْرِيحَ لِحْيَتِهِ، وَيُكْثِرُ الْقِنَاعَ حَتَّى كَأَنَّ ثَوْبَهُ، ثَوْبُ زَيَّاتٍ‏.‏


33. அனஸ் பின் மாலிக் ( ரழி ) கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் அதிகம் எண்ணெய் தேய்ப்பவர்களாகவும் தாடியைச் சீப்பிடுபவர்களாகவும் இருந்தார்கள். தலையில் அதிகம் துணியை போட்டிருப்பவர்களாக இருந்தார்கள் . அதனால் அந்த ஆடை எண்ணெயில் நனைந்து ஆடைப் போன்றிருக்கும்.

குறிப்பு : இச்செய்தியில் இரண்டாவது அறிவிப்பாளர் “ யஸீத் பின் அர்ரிகாஷி “ என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.இவரை பற்றி இமாம் அஹ்மத்,தஹபீ, நஸயீ,தாரகுத்தீனி ஆகியோர் பலவீனமானவர் என்று சொல்லி உள்ளார்கள்.

34-حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ‏:‏ إِنْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ، وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ، وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ‏.‏

34. ஆயிஷா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் ( உளூ மற்றும் குளியல் மூலம் ) தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் போதும் , தலைவாரிக்கொள்ளும் போதும் அவர்கள் காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

குறிப்பு : இச்செய்தி புஹாரி ( 5380 ) முஸ்லிம் ( 446) திர்மிதீ ( 553 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.

35-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ‏:‏ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عنِ التَّرَجُّلِ، إِلا غِبًّا‏.‏

35. அப்துல்லாஹ் பின் முகஃப்ஃபல் ( ரழி ) கூறியதாவது :

எப்போதாவதே ( சில நேரங்களில் ) தவிர தலைவாருவதை நபி ஸல் அவர்கள் தடைசெய்தார்கள்.

குறிப்பு : இச்செய்தி அபூதாவூத் ( 3628 ) நஸயீ ( 4970 )  திர்மிதீ ( 1678 ) அஹ்மத் ( 16191 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.

36-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ السَّلامِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي الْعَلاءِ الأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، كَانَ يَتَرَجَّلُ غِبًّا‏.‏

36. ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் எப்போதாவது தலைவாருபவர்களாக இருந்தார்கள் என்று நபித்தோழரில் ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்பு : இச்செய்தியில் வரும் அறிவிப்பாளரில் ஒருவரான “ யஜீத் பின் அபீ காலித் “ என்பவர் ஹதீஸ்களில் அதிகம் தவறு இழைக்க கூடியவர் ஆவார்[صدوق يخطئ كثيرا ] ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தி ஆகும்.

No comments:

Post a Comment