Wednesday, December 13, 2017

மனித படைப்பின் நோக்கம் என்ன?




கேள்வி 1

மனித படைப்பின் நோக்கம் என்ன?


பதில்: 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
புகழனைத்தும் அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது. எங்கள் நபி முஹம்மத் (ஸல்); அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார்மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் ஸலாத்தும், ஸலாமும உண்டாவதாக.

மேற்படி கேள்விக்கு விடையளிக்க முன் அல்லாஹ்வின் படைப்பு குறித்தும் அவனின் மார்க்க நியதியைக் குறித்ததுமான  ஒரு பொது விதி குறித்து தெளிவு படுத்த விரும்புகின்றேன். அப் பொதுவிதியானது பின்வரும் وهو العليم الحكيم “அவன் மிக அறிந்தோனும் ஞான மிக்கோனுமாவான்" .

إنَّ اللّهَ كَانَ عَلِيما حَكِيماً الأحزاب : 01 நிச்சயமாக அல்லாஹ் (பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து) மிக அறிந்தவனாகவும், ஞானமிக்கவனுமாகவும் உள்ளான்”என்ற வசனங்களிலிருந்தும்  மற்றும் இக்கருத்தை பிரதிபலிக்கும் இது போன்ற குர்ஆனின் ஏனைய வசனங்களிலிருந்தும் பெறப்பட்டதாகும்.
இவ்வசனங்கள் யாவும் அல்லாஹ் படைத்த வற்றினதும்அடியார்களுக்கான மார்க்க வழிமுறை குறித்தும் மிகை ஞானம் அவனுக்கே  உரியது என்பதை உறுதிப்படுத்துகிறன. அத்துடன் அதன் நோக்கத்தையும், காரணத்தையும் அவன் மிக அறிந்தவன் என்பதையும் காட்டுகிறது.

 இவை அவனின் பிரபஞ்ச ரிதியிலான மற்றும் அடியார்களுக்கான மார்க்க நியதிகளிலும் இருக்க முடியும். அவன் இந்த உலகத்தில் படைத்தவற்றில் ஒரு நோக்கம் அல்லது காரணம் இல்லாமல் இல்லை.

அல்லாஹ் எதனை ஆக்கினாலும் அழித்தாலும் அதன் காரணத்தை மனிதனால்  மிகச்சரியாக அறிய முடியாது. அதே போல் அடியார்களுக்கான அவனது மார்க்க ரிதியான சட்ட ஒழுங்குகளில் கட்டாயப்படுத்தியது, தடைசெய்யப்பட்டது, அனுமதித்தது போன்றவற்றிலும் முழுமையான ஞானம் அவனுக்கே உரியது.

என்றாலும் இவைகள் உள்ளடக்கியுள்ள இந்நோக்கங்கள் அவனின் பிரபஞ்ச மற்றும் மார்க்;க வழிமுறைசார்ந்த நியதிகளை  உள்ளடக்கியுள்ளது  அவைகள்  சிலபோது எமது அறிவிற்குற்பட்ட தாகவும் அறிவுற்குற்படாததாகவும்  இருக்கலாம். அல்லது சிலருக்கு தெரியவும் மற்றும் பலருக்கு தொயாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இவைகள் அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் அறிவையும் விளக்கத்தையும் பொருத்தது ஆகும்.

இவ்விடயத்தை  நாம் புரிந்து கொண்டால் உண்மையில் அல்லாஹ் மனித ஜின் இனங்களை அவனை வணங்கி வழிபடும் உயர் இலட்சியத்திற் காகவும், உண்ணத நோக்கத்திற்காகவும் இவ்வுலகத்தில் படைத்துள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இக்கருத்தை பின்வரும் அல் குர்ஆனிய வசனங்கள் தௌவுபடுத்துகின்றன.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالأِنْسَ إِلاَّ لِيَعْبُدُونِ  ( الذاريات :56

என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.(51:56)
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ ‏(المؤ منون: 115

நாம் உங்களை வீணுக்காகப் படைத்தோம் எனவும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீட்டப்படமாட்டீர்;கள் எனவும் எண்ணிக்கொண்டிருந்தீர்களா? (23:115)

أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَك سُدًى  (القيامة :36

மனிதன்  (விசாரணையின்றி) வெறுமனே விட்டு விடப்படுவான் என அவன் எண்ணிக் கொண்டிருக் கின்றானா? (75:36)

இக்கருத்தை பிரதிபலிக்கும் இதுபோன்ற அதிகமான வசனங்கள் அல் குர்ஆனில் இடம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம். அவைகள் யாவும் மனித ஜின் இனத்தை படைத்ததின் உயரிய நோக்கம் அவனை வணங்கி வழிபடுவதாகும் என்பதே.

அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் எமக்களித்த ஷரிஆ சட்டதிட்டங்களுக்கேட்ப அவனின் கட்டளைகளை ஏற்று நடப்பதன் மூலமும் அவன் தடுத்தவற்றிலிருந்து முற்றாக விலகி நடப்பதன் மூலமும் அவனை மகத்துவப் படுத்தி  அன்பு கொள்வதனையே இபாதத் என்பது குறிக்கும்.
அல்லாஹ் இக்கருத்தை தனது திருமறையில் நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறு தவிர ஏவப்படவில்லை எனப் பிரஸ்தாபிக்கின்றான்.  

ஆகவே இதுதான் மனித, ஜின் இனத்தினரை படைத்ததின் நோக்கமாகும். இந்நோக்கத்தை விட்டு விலகி எவறேனும் ஒரு மனிதன் தனது இரட்சகனுக்கு கட்டுபடாது, அவன் விதித்த கடமைகளை புறக்கனித்து  மனமுரண்டாக நடந்து கொள்வானாயின் அவன் அல்லாஹ் படைத்த நோக்கத்தை பொருட்டாக கொள்ளாதவனாக மாறிவிடுகிறான்.


இவ்வாறான அவனது செயற்பாடானது இறை படைப்பின் நோக்கத்தை ஒரு பொருட்டாகவே கருதாததற்கு சான்றாக அமைந்து விடும் ஆபத்தான நிலையாகும் இதனை அவன் வெளிப்படையாக குறிப்பிடவில்லையாயினும்  மேற்குறிப்பிட்ட பொறுப்பற்ற தன்மையையே காட்டும். இதுவே அல்லாஹ்வுக்கு கட்டுப்படாது மனமுரண்டாக நடத்தல் என்பதற்கான கருத்தாகும்.

No comments:

Post a Comment