கேள்வி : 2
இபாதத் என்பதற்கு
நாம் குறிப்பிட்டு சொல்லக் கூடிய கருத்து உள்ளதா? அல்லது அதற்கு பொதுக் கருத்து فهوم خاص வரையருக்கப்பட்ட குறிப்பான கருத்தொன்று உள்ளதா?
பதில் :
ஆம், நான் மேலே குறிப்பிட்டது
போன்று இபாதத் என்பது அல்லாஹ்வில் அன்பு கொண்டு அவனுக்கு கட்டுப்படுவதனைக் குறிக்கும்.
இதுவே இபாதத்திற்கான “மப்ஹூம் ஆம்” مفهوم عام பொதுவான கருத்தாகும்.
فهوم خاص குறிப்பான புரிதல்
என்பதின் விரிவான கருத்தை இமாம் இப்னு தைமியா
(ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “இபாதத் -வணக்கம் என்பது அல்லாஹ்வுக்குப் பிரியமான
திருப்தியான, வெளிப்படையான, மறைமுகமான அனைத்து வார்த்தைகளும், செயல்களுமாகும்.
அல்லாஹ்வைப் பயப்படுதல், அஞ்சுதல், அவன் மீது நம்பிக்கை
வைத்தல், தொழுதல், ஸகாத் கொடுத்தல், நோன்பு நோற்றல் மற்றும்
இவையல்லாத இஸ்லாமிய ஷரிஆ காட்டித்தரும் அம்சங்கள்
இதற்கான உதாரணங்களாகும்.”
அல்லது இபாபதத்திற்கான “மப்ஹூம் ஆம்” மப்ஹூம் காஸ்” என்ற இரு கருத்தியல்களின்
மூலம் நீங்கள் நாடுவது சில அறிஞர்கள் இபாதத்தை “இபாதா கவ்னிய்யா” இபாதா ஷரஇய்யா என்று வகைப்படுத்தியமையை கருதுவீர்களாயின்
அதாவது அதன் கருத்தாவது மனிதனைப் பொருத்தவரை ஒன்றில் “இபாதா கவ்னிய்யா”
பிரபஞ்ச நியதிகளுக்கு அமைவாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழுதல் அல்லது அவனால் வகுத்தளித்த
ஷரிஆவினூடாக கட்டுப்பட்டு வாழுதல் என்பதாகும் .
“இபாதா கவ்னிய்யா”
பிரபஞ்ச நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழுதல் என்பது பொதுவாக இறைவிசுவாசி – முஃமின், காபிர், நல்லவன், கெட்டவன் என்ற வித்தியாசமின்றி
இதற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இக்கருத்தை பின்வரும் இறைவசனம் சுட்டுகிறது. “வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அர்ரஹ்மானின்
அடிமையாகவே வருவர்.;”
எனவே பிரபஞ்சத்தில்
உள்ளவை அனைத்தும் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே உள்ளன என்பது
உண்மையாகும். அவை எந்தவொரு நிலையிலும் பிரபஞ்சவிதிகளை மீறி அல்லாஹ்வுக்கு எதிராக, அல்லது முரணாக எவ்வகையிலும் செயற்பட முடியாது.
அல் இபாதா அல்- காஸ்ஸா (العبادة
الخاصة) வைப் பொறுத்த மட்டில்
ஷரிஆ அடிப்படையில் செயற் படுவதாகும். இது அல்லாஹ்வை ஏற்று விசுவாசித்த முஃமின்களுக்கானதாகும்.
இவ் வகையை பொருத்தவரை நபிமார்களைப் போன்று
மிக உரிய நிலையில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணக்கம் செலுத்தியோர் எனவும் அதை விட குறைந்த தரத்தில் வணக்கம் செலுத்தியோர் எனவும் வித்தியாசப்படுத்தி
குறிப்பிட முடியும். இறைதூதார்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வணக்கம் செலுத்தியோர் என்ற வகையில் அவர்கள் உபூதிய்யத் எனும் உயர் நிலை பண்பை பெற்றிருந்தார்கள் என்பதை
பின்வரும் அல் - குர்ஆன் வசனங்கள் காட்டுகின்றன.
تَبٰـرَكَ الَّذِىْ
نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழிமுறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை
செய்வதற்காக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.(25:1)
وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا
نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا
شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ (23)
நமது அடியாருக்கு
(முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு
வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!(
2:23)
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ
وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!(38:45)
No comments:
Post a Comment