Friday, December 22, 2017

அல் லுவுலுவு வல் மர்ஜான் - முன்னுரை





بسم الله الرحمن الرحيم
முன்னுரை :

இருபெரும் இமாம்களான முஹம்மத் பின் இஸ்மாயீல் அல் புஹாரீ மற்றும் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் ஆகியோர் செல்வனே தொகுத்தளித்த ஸஹீஹுல் புஹாரி , ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பெயர் பெற்றவையாகும்.

இவ்விரண்டு நூல்களுள் தொகுக்கப்பெற்றுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் யாவும் முற்றிலும் சரியானவை என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது அத்தகைய சிறப்பையும் நம்பக்கத்தன்மையும் ஒருக்கே பெற்ற இவ்விரண்டு தொகுப்பினுள் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் இணைந்து ஒருசேரத் தொகுத்தள்ள ஒரே கருத்துடைய பொன்மொழிகளை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தொகுத்த முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ அவர்கள் ஆவார்கள். இவருடைய இச்சீரிய முயற்சிக்குரிய நற்கூலியை இறைவன் நிறைவாக வழங்கங்குவானாக.
அதைபோல் ஹதீஸ் கலை அறிஞர்கள் நம்பத்தகுந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்குப் பல அந்தஸ்துக்களை வழங்குகின்றனர்.

முதல் அந்தஸ்து , புஹாரியிலும் முஸ்லிமும் சேர்ந்து இடம்பெறும் ஹதீகளாகும்

இரண்டாவது அந்தஸ்து , புஹாரியில் மட்டும் இடம்பெறும் ஹதீஸ்களாகும்

மூன்றாவது அந்தஸ்து , முஸ்லிமில் மட்டும் இடம்பெறும் ஹதீஸ்களாகும்
இங்கு நான் பார்க்க இருப்பது முதல் அந்தஸ்தில் இருக்கும் ஹதீஸ்களை பற்றியே
மேலும் இங்கு பதியப்படும் அரபு மூலத்தில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் வரிசையை குறிப்பிடவில்லை நபிகள் நாயகத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிபிட்டுள்ளோம்.


{تغليظ الكذب على رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ}
நபியின் மீது பொய் உரைப்பது

1 - حديث عليّ قال: قال النبيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا تكذِبوا عليّ، فإنه من كَذَبَ عليّ فَلْيَلِجِ النارَ
__________
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.
( புஹாரி 106 , முஸ்லிம் 01 முன்னுரை )

2 - حديث أَنَسٍ قال: إِنه لَيَمْنَعُنِى أَنْ أحدّثكم حديثًا كثيرًا أَنَّ النبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: مَنْ تعمَّدَ عليّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ من النار
__________
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 108 முஸ்லிம் முன்னுரை )

3 - حديث أبي هُرَيْرَةَ عن النبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: ومَن كَذَب عليّ مُتعمِّدًا فليتبوَّأْ مَقْعَدَهُ من النار
__________
أخرجه البخاري في: 3 كتاب العلم: 38 باب إثم من كذب على النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 110 , முஸ்லிம் முன்னுரை )

4 - حديث الْمُغِيرَةِ قال سمعتُ النبيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: إِنَّ كذِبًا عليّ ليس ككذِبٍ على أحدٍ، مَن كَذَبَ عليَّ مُتعمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ منَ النار
__________
أخرجه البخاري في: 23 كتاب الجنائز: 34 باب ما يكره من النياحة على الميت

என் மீது கூறும் பொய் ( உங்களில் ) ஒருவர் மீது கூறும் பொய்யைபோன்றதன்று . யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். என நபி ஸல் கூறியதாக முஃகீரா ( ரலி ) அறிவித்தார் ( புஹாரி 1291 முஸ்லிம் முன்னுரை )  

No comments:

Post a Comment