Saturday, December 23, 2017

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல் ஹதீஸ் 58 முதல் 82 வரை

كتاب الطهارة

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்


(31) باب فَرْضِ الْوُضُوءِ
பாடம்: 31 ஒலுவின் அவசியம் பற்றியது.

58-حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»

[حكم الألباني] : صحيح
58.அபூ அல் மலீஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'மோசடி பொருள்களினால் (செய்யப்படும்) தர்மததையும், ஒலூ இல்லாத தொழுகையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

59-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ، حَتَّى يَتَوَضَّأَ»

[حكم الألباني] : صحيح
59.அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் ஒலூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

60-حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

[حكم الألباني] : حسن صحيح

60.அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'தொழுகையின் திறவு கோல் ஒலுவாகும், அதன் ஆரம்பம் தக்பீர் ஆகும், அதன் இறுதி சலாம் கொடுப்பதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

(32) باب الرَّجُلِ يُجَدِّدُ الْوُضُوءَ مِنْ غَيْرِ حَدَثٍ
பாடம்: 32 ஒலுவைப் புதுப்பித்தல்.

61-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَ أَبُو دَاوُدَ: وَأَنَا لِحَدِيثِ ابْنِ يَحْيَى أَتْقَنُ عَنْ غُطَيْفٍ، وَقَالَ مُحَمَّدٌ: عَنْ أَبِي غُطَيْفٍ الْهُذَلِيِّ، قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَلَمَّا نُودِيَ بِالظُّهْرِ تَوَضَّأَ فَصَلَّى، فَلَمَّا نُودِيَ بِالْعَصْرِ تَوَضَّأَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ عَشْرَ حَسَنَاتٍ»، قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا حَدِيثُ مُسَدَّدٍ وَهُوَ أَتَمُّ

[حكم الألباني] : ضعيف

61.அபூ குதைப் அல் ஹுத்லீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் இப்னு உமர் அவர்களுடன் இருந்தேன். லுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட போது அவர்கள் ஒலூச் செய்து தொழுதார்கள். அஸர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட போது மீண்டும் ஒலூச் செய்தார்கள். (முன்னர் செய்த ஒலூ நீங்காமல் இருக்கும் போது) மீண்டும் ஒலூச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தூய்மையாக இருக்கும் போது ஒலூச் செய்தவருக்காக பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதில் சொன்னார்கள்.

அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்: முஸத்தத் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் மிகச் சரியானதாகும்.

தரம் : ளயீப்

[குறிப்பு : இதில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் யார் என்று அறியப்படாதவர் ]

(33) باب مَا يُنَجِّسُ الْمَاءَ
பாடம்: 33 தண்ணீரை அசுத்தப்படுத்துபவை.

62-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُهُمْ، قَالُوا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»، قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا لَفْظُ ابْنُ الْعَلَاءِ، وَقَالَ عُثْمَانُ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ: عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ الصَّوَابُ،

[حكم الألباني] : صحيح
62.இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'கால் நடைகளும் வன விலங்குகளும் வந்து போகக் கூடிய திறந்த வெளியில் இருக்கும் தண்ணீர் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, தண்ணீர் இரண்டு 'குல்லத்'களை அடைந்து விட்டால் அசுத்தங்களால் பாதிக்கப்படாது' என பதிலளித்தார்கள்.

தரம் : ஸஹீஹ்

64-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ أَبُو كَامِلٍ: ابْنُ الزُّبَيْرِ: عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ يَكُونُ فِي الْفَلَاةِ فَذَكَرَ مَعْنَاهُ

[حكم الألباني] : حسن صحيح

64.இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'பாலை வனத்தில் தண்ணீர் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

65-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ الْمُنْذِرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَإِنَّهُ لَا يَنْجُسُ»، قَالَ أَبُو دَاوُدَ: حَمَّادُ بْنُ زَيْدٍ وَقَفَهُ، عَنْ عَاصِمٍ

[حكم الألباني] : صحيح

65.இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தண்ணீர் இரண்டு 'குல்லத்' க்களை அடைந்து விட்டால், அது அசுத்தமாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

(34) باب مَا جَاءَ فِي بِئْرِ بُضَاعَةَ
பாடம்: 34 'புழாஆ' என்ற கிணறு.

66-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، قَالُوا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»، قَالَ 
أَبُو دَاوُدَ: وَقَالَ بَعْضُهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ رَافِعٍ

[حكم الألباني] : صحيح

66.மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டமும் நாற்றமான பொருட்களும் போடப்பட்ட புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உலூச் செய்யலாமா? என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, 'தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது' எனறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ராபிஃ என்ற பெயருக்கு பதிலாக அப்துர் ரஹ்மான் பின் ராபிஃ என சிலர் அறிவிப்பதாக இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

67-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيَّانِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَلِيطِ بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ الْأَنْصَارِيِّ ثُمَّ الْعَدَوِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُقَالُ لَهُ: إِنَّهُ يُسْتَقَى لَكَ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا لُحُومُ الْكِلَابِ، وَالْمَحَايِضُ وَعَذِرُ النَّاسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»، قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ، قَالَ: سَأَلْتُ قَيِّمَ بِئْرِ بُضَاعَةَ عَنْ عُمْقِهَا؟ قَالَ: أَكْثَرُ مَا يَكُونُ فِيهَا الْمَاءُ إِلَى الْعَانَةِ، قُلْتُ: فَإِذَا نَقَصَ، قَالَ: دُونَ الْعَوْرَةِ، قَالَ أَبُو دَاوُدَ: " وَقَدَّرْتُ أَنَا بِئْرَ بُضَاعَةَ بِرِدَائِي مَدَدْتُهُ عَلَيْهَا، ثُمَّ ذَرَعْتُهُ فَإِذَا عَرْضُهَا سِتَّةُ أَذْرُعٍ، وَسَأَلْتُ الَّذِي فَتَحَ لِي بَابَ الْبُسْتَانِ فَأَدْخَلَنِي إِلَيْهِ، هَلْ غُيِّرَ بِنَاؤُهَا عَمَّا كَانَتْ عَلَيْهِ؟ قَالَ: لَا، وَرَأَيْتُ فِيهَا مَاءً مُتَغَيِّرَ اللَّوْنِ "

[حكم الألباني] : صحيح

67.நாய்களின் மாமிசத் துண்டுகளும், மாதவிடாய்த் துணிகளும் மக்களின் கழிவுப் பொருட்களும் கொட்டப்படும் புழாஆ என்ற கிணற்றிலிருந்து உங்களுக்கு நீர் கொண்டு வரப்படுகிறதே? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது 'நிச்சயமாக தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்றேன் என அபூஸயீதுல் குத்ரி (ரளி) அறிவிக்கிறார்கள்.

'புழாஆ' கிணற்றை பராமரிப்பவர்களிடம் அதன் ஆழத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், 'அதிகபட்ச தண்ணீர் அளவு அடிவயிறு வரை இருக்கும் என்றார். நான் அதன் குறைந்த பட்ச தண்ணீரின் அளவு பற்றி கேட்டதற்கு முட்டுக்காலுக்குக் கீழ் இருக்கும் என்று அவர் கூறியதாக குதைபா பின் ஸயீது அவர்கள் கூற நான் செவியுற்றேன் என இமாம் அபூதாவூது குறிப்பிடுகின்றார்கள்.

நான் 'புழாஆ' கிணற்றின் மேல் என் மேலாடையை விரித்து அளவெடுத்தேன். பிறகு நான் அதை அளந்த போது அதன் அகலம் ஆறு முழம் இருந்தது. எனக்காக தோட்டக் கதவைத திறந்து என்னை அங்கு அனுமதித்த வாயிற் காப்பாளரிடம், ஏற்கனவே இருந்த அமைப்பை விட்டும் இக்கிணற்றின் அமைப்பு மாறியுள்ளதா? எனக் கேட்ட போது அவா இல்லை என்று சொன்னார் என இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிட்டு விட்டு, அப்போது அக்கிணற்றின் தண்ணீருடடைய நிறம் மாறிப் போய் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிடுகிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(35) باب الْمَاءِ لاَ يَجْنُبُ
பாடம்: 35 தண்ணீர் தீட்டாகாது.

68-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ مِنْهَا أَوْ يَغْتَسِلَ، فَقَالَتْ: لَهُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ»

[حكم الألباني] : صحيح

68.நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் வாய்அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்வதற்காகவோ, அல்லது குளிப்பதற்காகவோ வந்த போது 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்புக் கடமை ஆனவளாக இருந்தேன் என்று அவர்கள் கூற 'தண்ணீர் தீட்டாகி விடாது' என்ற நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

(36) باب الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ
பாடம்: 36 தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல்.

69-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، فِي حَدِيثِ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»

[حكم الألباني] : صحيح


69.உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அதிலேயே குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

70-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنَ الْجَنَابَةِ»

[حكم الألباني] : حسن صحيح

70.உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் மேலும் அதிலேயே கடமையான குளிப்பை நிறைவேற்றவும் வேண்டாம் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரளி).

தரம் : ஹஸன் ஸஹீஹ்
(37) باب الْوُضُوءِ بِسُؤْرِ الْكَلْبِ
பாடம்: 37 நாய் வாய் வைத்த நீரில் உலூச் செய்தல்.

71-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، فِي حَدِيثِ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طُهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ، أَنْ يُغْسَلَ سَبْعَ مِرَارٍ، أُولَاهُنَّ بِتُرَابٍ»، قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ قَالَ أَيُّوبُ، وَحَبِيبُ بْنُ الشَّهِيدِ: عَنْ مُحَمَّدٍ،

[حكم الألباني] : صحيح

71.உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதை சுத்தம் செய்யும் முறை என்னவெனில், அது ஏழு தடவை கழுவப்பட வேண்டும். அதில் முதன் முதலாக மண்ணைப் பயன் படுத்திக் கழுவ வேண்டும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இவ்வாறே முஹம்மத் அவர்கள் மூலம் அய்யூப், ஹபீப் பின் ஷஹீத் ஆகிய இருவரும் அறிவிப்பதாக இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

72-ح حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، جَمِيعًا عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِمَعْنَاهُ، وَلَمْ يَرْفَعَاهُ وَزَادَ: «وَإِذَا وَلَغَ الْهِرُّ غُسِلَ مَرَّة»

[حكم الألباني] : صحيح موقوف

72.மேலுள்ள ஹதீஸின் கருத்தையே அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார். ஆனாலும் இதன் தொடரில் வரும் (ஹம்மாத், முஃதமர்) இருவரும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூற வில்லை. அதில் (அறிவிப்பாளர் அய்யூப் அவர்கள்) 'பூனை வாய் வைத்து விட்டால் ஒரு தடவை கழுவ வேண்டும்' என்பதை அதிகமாக அறிவித்துள்ளார்.

தரம் : ஸஹீஹ்

73-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، حَدَّثَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، السَّابِعَةُ بِالتُّرَابِ»، قَالَ أَبُو دَاوُدَ: وَأَمَّا أَبُو صَالِحٍ، وَأَبُو رَزِينٍ، وَالْأَعْرَجُ، وَثَابِتٌ الْأَحْنَفُ، وَهَمَّامُ بْنُ مُنَبِّهٍ، وَأَبُو السُّدِّيِّ عَبْدُ الرَّحْمَنِ رَوَوْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَلَمْ يَذْكُرُوا التُّرَابَ

[حكم الألباني] : صحيح لكن قوله السابعة شاذ والأرجح الأولى بالتراب

73.பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். ஏழாவது தடவை மண்ணைப் பயன்படுத்திக் கழுவுங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரளி) அவர்களிடமிருந்து அபூஸாலிஹ், அபூரஸீன், அல் அஃரஜ், சாபித் அல் அஹ்னப், ஹம்மாம் பின் முனப்பஹ், அபூஸ்ஸீத்தீ அப்துர்ரஹ்மான் ஆகியோர் இதை அறிவிக்கும் போது மண்ணைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பிட வில்லை என இமாம் அபூதாவூது கூறுகின்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

74-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ مُطَرِّفٍ، عَنِ ابْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، ثُمَّ قَالَ: «مَا لَهُمْ وَلَهَا»، فَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ، وَفِي كَلْبِ الْغَنَمِ وَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مِرَارٍ، وَالثَّامِنَةُ عَفِّرُوهُ بِالتُّرَابِ»، قَالَ أَبُو دَاوُدَ: وَهَكَذَا قَالَ ابْنُ مُغَفَّلٍ

[حكم الألباني] : صحيح
74.நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்ல வேண்டுமென உத்திரவிட்டார்கள். பின்னர் நாய்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன வேண்டிக்கிடக்கிறது? என்று கூறிவிட்டு வேட்டையாடும் நாய்களையும் ஆட்டுமந்தையைக் காக்கும் நாய்களையும் (கொல்லாமல்) வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள். மேலும் சொன்னார்கள், 'பாத்திரத்தில் நாய் வாயை வைத்து விட்டால் அதை ஏழு தடவை கழுவுங்கள். எட்டாவது தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள்'. இதை இப்னு முகப்பல் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(38) باب سُؤْرِ الْهِرَّةِ
பாடம்: 38 பூனை குடித்த தண்ணீர்

75-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ - وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ - أَنَّ أَبَا قَتَادَةَ، دَخَلَ فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي [ص: 20] أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»

[حكم الألباني] : حسن صحيح

75.என் கணவர் கதாதாவின் தந்தை எங்களிடம் வந்திருந்தார், அவர் ஒலூச் செய்வதற்காக தண்ணீர் ஊற்றினேன். ஒரு பூனை வந்து அதிலிருந்து குடித்தது. அது குடித்து முடிக்கும் வரை குடிப்பதற்கு ஏதுவாக பாத்திரத்தை சாய்த்தார். நான் அவரையே கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது 'என் சகோதரர் மகளே! நீ வியப்படைகிறாயா? என்று கேட்டார். நான் 'ஆம்' என்றேன். அதற்கு பூனைகள் அசுத்தமானவை அல்ல. அவை உங்களை சுற்றி (வந்து அண்டி வாழ்ந்து) வரக் கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரளி) அவர்கள் சொன்னதாக கஃபு பின் மாலிக் (ரளி) அவர்களின் புதல்வியும் அபூகதாதா (ரளி) அவர்கள் மகனின் மனைவியுமான கப்ஷா (ரளி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

76-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ، عَنْ أُمِّهِ، أَنَّ مَوْلَاتَهَا أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَوَجَدَتْهَا تُصَلِّي، فَأَشَارَتْ إِلَيَّ أَنْ ضَعِيهَا، فَجَاءَتْ هِرَّةٌ، فَأَكَلَتْ مِنْهَا، فَلَمَّا انْصَرَفَتْ أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ، فَقَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ»، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِفَضْلِهَا

[حكم الألباني] : صحيح

76.ஹரீஸா (என்ற ஒருவகை மாவுப்பண்டத்தை) அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் கொடுத்து விடுமாறு எனது தாயாரை அவர்களது எஜமானி அனுப்பி வைத்தார். அங்கே அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் எனது தாயாரை நோக்கி 'நீ அதை அங்கு வைத்து விடு' எனச் சாடை காட்டினார்கள். அப்போது ஒரு பூனை வந்து அதை தின்றது. ஆயிஷா (ரளி) அவர்கள் தொழுது முடித்த பின்னர் பூனை வாய் வைத்து தின்ற அதே இடத்திலிருந்து சாப்பிட்டார்கள். 'பூனைகள் அசுத்தமானவை அல்ல. அவை உங்களையே சுற்றித் திரிந்து உங்களை அண்டி வாழ்பவை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறி விட்டு பூனையின் எச்சில் நீரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்ய நான் கண்டிருக்கிறேன் எனவும் சொன்னார்கள். இதை தாவூது பின் ஸாலிஹ் பின் தீனார் அத்தம்மார் தமது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப்

குறிப்பு: இந்த தாவூத் பின் ஸாலிஹ் அவர்களின் தாயார் ஹதீஸ் கலையில் யாரெனத் தெரியாதவர்.)

(39) باب الْوُضُوءِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ

பாடம்: 39 பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் உலூச் செய்தல்.

77-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَنَحْنُ جُنُبَانِ»

[حكم الألباني] : صحيح

77.நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

78-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ خَرَّبُوذَ، عَنْ أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ، قَالَتْ: «اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»

[حكم الألباني] : حسن صحيح

78.ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்' என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஹஸன் ஸஹீஹ்

79-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ مُسَدَّدٌ: «مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا»

[حكم الألباني] : صحيح دون قوله من الإناء الواحد

79.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள் என இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் 'ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள்' எனக் கூறியுள்ளார்.

தரம் : ஸஹீஹ்

80-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: «كُنَّا نَتَوَضَّأُ نَحْنُ وَالنِّسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نُدْلِي فِيهِ أَيْدِيَنَا»

[حكم الألباني] : صحيح

80.அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்' என இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

(40) باب النَّهْىِ عَنْ ذَلِكَ

பாடம்: 40 ஆண்களும் பெண்களும் சேர்ந்து உலூச் செய்யத் தடை.

81-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ، قَالَ: لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ سِنِينَ، كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ، أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ»، زَادَ مُسَدَّدٌ: «وَلْيَغْتَرِفَا جَمِيعًا»

[حكم الألباني] : صحيح

81.அபூஹுரைரா (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது போல் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட ஒருவரை நான் சந்தித்தேன். அவர், 'ஆண் குளித்துவிட்டு மிஞ்சிய தண்ணீரில் பெண் குளிப்பதையும் அல்லது பெண் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் ஆண் குளிப்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்' என்று அறிவித்தார் என ஹுமைத் அல்ஹிம்யரி தெரிவிக்கிறார்கள்.

முஸத்தத் அவர்கள் தமது அறிவிப்பில் 'ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நீர் அள்ளட்டும்' என்ற வாசகத்தை அதிகமாக அறிவித்துள்ளார்.

தரம் : ஸஹீஹ்

82-حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ يَعْنِي الطَّيَالِسِيَّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو وَهُوَ الْأَقْرَعُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ»

[حكم الألباني] : صحيح


82.பெண் உலூச் செய்து எஞ்சிய தண்ணீரில் ஆண் உலூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என ஹகம் பின் அமர் (ரளி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

No comments:

Post a Comment