Thursday, December 28, 2017

தன்னடக்கம் - கட்டுரை



                                                      தன்னடக்கம்

இறைவன் நம்மை எல்லாம் இந்த உலகில் வாழ செய்து நன்மை எது ? தீமை எது ? என்பதை அறிவித்து கொடுக்க உள்ளத்தையும் நமக்கு வழங்கி உள்ளான் என்பதை பின்வரும் வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது

{وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10) } [الشمس: 7 - 11]

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.( 91 : 7 – 10 )

இங்கு ஒரு மனிதனை பற்றி அல்லாஹ் சொல்லி காட்டும் போது உள்ளத்தை பற்றி சொல்லி காட்டுகிறான்., இந்த உள்ளம் ஆனாது நன்மையை அறியகூடியது என்று தீமையையும் அறிய கூடியது என்று இந்த வசனம் மூலம் அறிந்துகொள்ளலாம் அது அல்லாது நபி ஸல் அவர்களுடைய போதனைகள் வாயிலாகவும் இதை அறிந்துகொள்ளலாம்

ஒருமனிதன் முழுமை பெற வேண்டும் என்றால் அது அவனுடைய உள்ளத்தில் தான் உள்ளது


صحيح البخاري (1 / 20):
أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ "

எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

( புஹாரி 52 ) தரம் : ஸஹீஹ்

ஆனால் நம்மீல் பலர் இப்போது அல்லாஹ்வின் கிருபையாள் ஏகத்துவ கொள்கையில் [ அவனுக்கு இணை ஏதும் கற்ப்பிக்காமல்  வாழ்கிறோம்] அல்ஹதுலில்லாஹ் ஆனால் இவைமட்டும் நம்மீடத்தில் இருந்தால் போதுமா ? என்றால் இல்லை.,

மாறாக இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் என்று சில விஷயங்கள் சொல்லி காட்டுகிறான் அதில் [ கலிமா , தொழுகை, ஜகாத், நோன்பு , ஹஜ் ] காரியங்களை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்

அது அல்லாது சக மனிதர்களுடைய உரிமைகளை பற்றி மற்ற மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் அதிகமதிகம் எச்சரிக்கிறது

மறுமையில் இறைவனுக்கு செய்யபட்ட வணக்கங்களுக்கு கேள்விகள் கேட்க பட்டு முடித்த பிறகு மனிதனுக்கு செய்ய அ நீதம் அங்கு விசாரிக்கப்படும் ஆகவே தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இந்த உள்ளத்தை பற்றி  நமக்கு ஒர் எச்சரிக்கையாகவே சொல்லி தந்து உள்ளார்கள்., இந்த உள்ளத்தை எப்படி தூய்மைபடுத்த வேண்டும் என்பதையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சொல்லியும் தந்து உள்ளார்கள்

அதில் முதல் நிபந்தனை அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையை அப்படியே செவிமடுக்க வேண்டும் என்பது தான்


صحيح البخاري (9 / 92):

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ [ص:93]، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى»


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புஹாரி ( 7280 ) தரம் : ஹஸன்

இங்கு நாம் ஒரு விஷயத்தை விளங்காமல் வாழ்க்கை பயனத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம் வேறுமன நபி ஸல் அவர்கள் இறைத்தூதர் என்று வாய் அளவில் சொல்ல கூடாது என்பது இந்த மொழிவழியாக நான் அறிந்துகொள்ளலாம் ., ஏனெனில் இங்கு நபி ஸல் தெளிவாக எச்சரிக்கை விடுகிறார்கள் [ எனக்கு கீழ்ப்படிந்தவர் சுவனம் செல்லுவார் என்றும் மாறு செய்தவர் நரகம் செல்லுவார் என்று கூறுகிறார்கள் ]

இதில் இருந்து நாம் நாம் விளங்கி கொள்ளுவது என்னவென்றால் நபி ஸல் நமக்கு எதை எல்லாம் கற்று தந்தார்களோ அவைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பது கட்டாய கடமைகளில் ஒன்று ஆகும்.,

இங்கு நான் எடுத்து கொண்டு உள்ளது உள்ளம் சார்ந்த விஷயங்களை பற்றி நாம் வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி பல மனிதர்களை காண முடிகிறது

அதைபோல் சமூக தளங்களில் கூட நாம் அறியாத பலரை நண்பர்களாக கூட ஆக்கி வைத்து இருக்கிறோம்

ஆனால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னது போல் தான் நம்முடைய ஒவ்வொரு செயல்களும் இருக்கிறதா என்றால் இல்லை ?


பின்வரும் ஒர் நபிமொழி நமக்கு அதை அழகாக விவரிக்கிறது

صحيح مسلم (1 / 203):

كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர்.சிலர் தம்மை ( இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை ) விடுவித்துக் கொள்கின்றனர்.வேறு சிலர் ( ஷைத்தானிடம் விற்று ) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

நூல் : முஸ்லிம் ( 226) தரம் : ஸஹீஹ்

ஒருவன் வீட்டில் இருந்து புறப்படும் போது 100க்கு பாதி சதவீதம் நபர்கள் நபி ஸல் கற்று தந்த துஆ வை ஓதுவது இல்லை

வீட்டை விட்டு வெளியேறும் போது இறைவனிடம் தவ்பா செய்தவனாக வெளியேற வேண்டும்


اسم المصدر: سنن النسائى الصغرى

(5419)- [5486] أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ K كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ، قَالَ: " بِسْمِ اللَّهِ رَبِّ، أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ "

அல்லாஹ்வின் பெயரால் ( வெளியேறுகிறேன் ) என் இறைவா ! நான் சருக்கிவிடாமலும் , வழி தவறிவிடாமலும் , அநீதி இழைக்காமலும் , அநீதி இழைக்கப்படாமலும் , மூடனாகாமலும்,( பிறை ) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் .

நூல் : நஸயீ ( 5486 ) தரம் : ஸஹீஹ்

இதை ஒருவர் ஓதினான் என்றால் அவன் இறைவனிடம் தவக்கல் வைத்து விட்டு செல்லுகிறான்., ஒருவனிடம் பேசுபோதும் கணிவாக பேசுவது, நடக்கும் போது பணிவாக நடப்பது,பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாமல் இருப்பது அடுத்தவரை பற்றி புறம் பேசாமல் இருப்பது இவைகளை விட்டு நாம் ஒதுங்கி விடலாம்

அடுத்தவர் உரிமைகளில்  நாம் கவணமாக இருக்க வேண்டும் என்பது அடுத்த நிபந்தனை

அதை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் நமக்கு சொல்லி தந்து உள்ளார்கள் அதை நாம் உள்ளம் சார்ந்து விளங்கி கொண்டால் இந்த தீமையில் இருந்து விலகி கொள்ளலாம்

" لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلا اللِّعَانِ، وَلا الْفَاحِشِ وَلا الْبَذِيءِ "

இறை நம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை; மானங்கெட்ட செயல்புரிய வனாகவும் ,தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பது இல்லை என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ( ரழி ) அறிவிக்கும் செய்தி பஸ்ஸார் ( 1914 ) யில் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது

{ لَا يَدْخُلُ اَلْجَنَّةَ قَتَّاتٌ } مُتَّفَقٌ عَلَيْهِ

புறம் பேசுபவன் சுவர்க்கம் புகமாட்டான் 

( நூல் : புஹாரி 6056 , முஸ்லிம் 105 , இரண்டு நூல்களிலும் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது )

الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِئِ مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ ‏"‏ ‏.‏

இருவர் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதன் பாவம் ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில் அநியாயம் செய்யப்பட்டவர் வரம்புமீறாதவரை என்று நபி ஸல் கூறினார்கள் 

( நூல் : முஸ்லிம் 2590 தரம் : ஸஹீஹ் லி ஃகைரிஹி ( புறக் காரணங்களால் ஆதாரபூர்வமானது )


أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ

கடுமையாகச் சண்டையிடுவோர் மனதில் பகைமையை வைத்திருப்போர் ஆகியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் வெற்றுப்புக் குரியோர் ஆவர் என்று நபி ஸல் கூறினார்கள் 

( நூல் : புஹாரி 7188 தரம் : ஸஹீஹ் )


இப்படி ஏராளமான நபிமொழிகளை நாம் காணலாம்.ஆகவே நாம் சக மனிதர்களை அன்பு முகம் கொண்டு அவர்கள் செய்யும் தவறை அழகிய முறையில் அவரிடம் எடுத்து சொல்லி நீதமாக நடக்க கூடிய மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்புரிவானாக..

No comments:

Post a Comment