புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 05 )
21. அன்பளிப்புகளை ஏற்கவேண்டும்
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி
(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்.(
புஹாரி 2585)
22. தன் அன்பளிப்பையும் தருமத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வது
எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப
உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2621)
23. உயிர்த்தியாகி
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின்
அந்தஸ்து கிடைக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2830)
24. ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது
இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ "
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே
தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்(
புஹாரி 13)
25. இறைத்தூதர் (ஸல்) அவர்களை
நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அனஸ்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 15 )
No comments:
Post a Comment