Friday, December 15, 2017

பாடம் : 01 தண்ணீர் பற்றிய பாடம்

كِتَابُ اَلطَّهَارَةِ
தூய்மை பற்றிய நூல்

بَابُ اَلْمِيَاهِ
தண்ணீர் பற்றிய பாடம்

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - فِي اَلْبَحْرِ: - هُوَ اَلطُّهُورُ مَاؤُهُ, اَلْحِلُّ مَيْتَتُهُ - أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَابْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لَهُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَاَلتِّرْمِذِيُّ
صحيح. رواه أبو داود (83) ، والنسائي (1 /50 و 176 و 707) ، والترمذي (69) ، وابن ماجه (386) وابن أبي شيبة (131) ، وابن خزيمة (111)


1 கடலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, ''அதன் தண்ணீர் சுத்தமானது அதில் (வசிப்பவை) இறந்தவை(யாக இருப்பினும்) அனுமதிக்கப்பட்டது'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத்( 83), நஸாயீ(176), திர்மிதீ(69), இப்னு மாஜா(386 ), மற்றும் இப்னு அபீ ஷைபா(131 ), இப்னு குஸைமா, மாலிக் ஷாஃபி மற்றும் அஹ்மத். இங்கு இப்னு அபீ ஷைபாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் திர்மிதீயில் இது ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும் இது ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - إِنَّ اَلْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ - أَخْرَجَهُ اَلثَّلَاثَةُ (2) وَصَحَّحَهُ
(2) - صحيح: رواه أبو داود (66) ، والنسائي (174) ، والترمذي (66)


2 ''நிச்சயமாக தண்ணீர் சுத்தம் செய்யக் கூடியதாகும் அதனை எதுவும் அசுத்தமாக்கி விடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ஸல்) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ. அஹமதில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ أَبِي أُمَامَةَ اَلْبَاهِلِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ - صلى الله عليه وسلم - إِنَّ اَلْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ, إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ, وَلَوْنِهِ - أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ (2) وَضَعَّفَهُ أَبُو حَاتِمٍ
ضعيف. رواه ابن ماجه (521)


3 நிச்சயமாக தண்ணீரை அதனுடைய வாடை, சுவை, நிறம் இவற்றை மிகைக்கக் கூடியவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் அசுத்தமாக்காது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல்பாஹிலி(ரலி) அறிவிக்கிறார்.

இப்னு மாஜா. அபூஹாதிமில் இதை ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَلِلْبَيْهَقِيِّ: - اَلْمَاءُ طَاهِرٌ إِلَّا إِنْ تَغَيَّرَ رِيحُهُ, أَوْ طَعْمُهُ, أَوْ لَوْنُهُ; بِنَجَاسَةٍ تَحْدُثُ فِيهِ
ضعيف. رواه البيهقي في "الكبرى" (159-260)


4 அசுத்தம் (நீரில்) கலந்து, அதனுடைய வாடை, சுவை, நிறம் மாறாவிட்டால் அந்நீர் சுத்தமானது'' என்று பைஹகீயில் பலவீனமான செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ: - إِذَا كَانَ اَلْمَاءَ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلْ اَلْخَبَثَ - وَفِي لَفْظٍ: - لَمْ يَنْجُسْ - أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ. وَابْنُ حِبَّانَ
صحيح. رواه أبو داود (63 و 64 و 65) ، والنسائي (1 /46 و175) ، والترمذي (67) ، وابن ماجه (517) ، وهو حديث صحيح، وقد أعل بما لا يقدح. وصححه ابن خزيمة (92) ، والحاكم (132) ، وابن حبان (1249)


5 தண்ணீர் 'குல்லத்தைன்' அளவுக்கு இருந்தால் அது அசுத்தமாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா, திர்மிதீ, இப்னு குஸைமா, ஹாம்கி மற்றும் இப்னு ஹிப்பான். இதை இப்னுகுஸைமா, ஹாம்கி மற்றும் இப்னு ஹிப்பான். இது பிந்திய மூன்று நூல்களிலும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - لَا يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي اَلْمَاءِ اَلدَّائِمِ وَهُوَ جُنُبٌ - أَخْرَجَهُ مُسْلِمٌ

صحيح. رواه مسلم (283)

6 உங்களில் குளிப்புக் கடமையான எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

وَلِلْبُخَارِيِّ: - لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي اَلْمَاءِ اَلدَّائِمِ اَلَّذِي لَا يَجْرِي, ثُمَّ يَغْتَسِلُ فِيهِ
البخاري رقم (239)


7 உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புகாரியில் இடம் பெற்றுள்ளது.

وَلِمُسْلِمٍ: "مِنْهُ" وَلِأَبِي دَاوُدَ: - وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنْ اَلْجَنَابَةِ
مسلم رقم (282) سنن أبي داود (70)



8 உங்களில் ஒருவருக்கு குளிப்புக் கடமையான நேரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம். முஸ்லிம், அபூ தாவூத்

وَعَنْ رَجُلٍ صَحِبَ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: - نَهَى رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - "أَنْ تَغْتَسِلَ اَلْمَرْأَةُ بِفَضْلِ اَلرَّجُلِ, أَوْ اَلرَّجُلُ بِفَضْلِ اَلْمَرْأَةِ, وَلْيَغْتَرِفَا جَمِيعًا - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ, وَإِسْنَادُهُ صَحِيحٌ
صحيح. رواه أبو داود (81) ، والنسائي (1/ 130)


9 கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ''தேவை ஏற்பட்டால் இருவரும் சேர்ந்து குளித்துக் கொள்ளலாம்'' என நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; - أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَغْتَسِلُ بِفَضْلِ مَيْمُونَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا - أَخْرَجَهُ مُسْلِمٌ
صحيح. رواه مسلم (323)


10 ''உம்முல் முஃமினீன் மைமூனர்(ரலி) அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி(ஸல்) அவர்கள் குளித்தார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். முஸ்லிம்

وَلِأَصْحَابِ "اَلسُّنَنِ": - اِغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم - فِي جَفْنَةٍ, فَجَاءَ لِيَغْتَسِلَ مِنْهَا, فَقَالَتْ لَهُ: إِنِّي كُنْتُ جُنُبًا, فَقَالَ: "إِنَّ اَلْمَاءَ لَا يُجْنِبُ" - وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ, وَابْنُ خُزَيْمَةَ
صحيح. رواه أبو داود (68) ، والترمذي (65) ، وابن ماجه (370)


11 நபி(ஸல்) அவர்களது மனைவியாரில் ஒருவர், ஒரு பொரிய பாத்திரத்தில் குளித்தார் அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அதில் குளிக்க விரும்பிய போது, ''நிச்சயமாக நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன்'' என்று (உம்முல் மூஃமினீன்) கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''(இதன் காரணமாக) தண்ணீர் ஒரு போதும் அசுத்தமானதாக ஆகாது'' என்று கூறினார்கள்

திர்மிதீ, இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذْ وَلَغَ فِيهِ اَلْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ, أُولَاهُنَّ بِالتُّرَابِ - أَخْرَجَهُ مُسْلِمٌ  . وَفِي لَفْظٍ لَهُ: - فَلْيُرِقْهُ وَلِلتِّرْمِذِيِّ: - أُخْرَاهُنَّ, أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ
صحيح. رواه مسلم (279) (91) .
مسلم (279) (89) .
سنن الترمذي (91)




12 ''உங்களுடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால், அதை சுத்தப்படுத்துவதற்காக ஏழுமுறை கழுவுங்கள். அதில் முதல்முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

முஸ்லிம். முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ''அதிலுள்ளதை கொட்டி விடுங்கள்'' என்று உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ''முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்'' என்ற உள்ளது.

وَعَنْ أَبِي قَتَادَةَ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ -فِي اَلْهِرَّةِ-: - إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ, إِنَّمَا هِيَ مِنْ اَلطَّوَّافِينَ عَلَيْكُمْ - أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ. وَابْنُ خُزَيْمَةَ
صحيح. رواه أبو داود (75) ، والنسائي (1 /55 و 178) ، والترمذي (92) ، وابن ماجه (367) وابن خزيمة (104)



13 நபி(ஸல்) அவர்கள் பூனையைப் பற்றிக் கூறும் போது, ''அது அசுத்தமானதல்ல் உங்களிடையே சுற்றி வரக் கூடியது தான்'' என்று கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத் நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா. திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: - جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ اَلْمَسْجِدِ, فَزَجَرَهُ اَلنَّاسُ, فَنَهَاهُمْ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - بِذَنُوبٍ مِنْ مَاءٍ; فَأُهْرِيقَ عَلَيْهِ. - مُتَّفَقٌ عَلَيْهِ
صحيح. رواه البخاري (219) ، ومسلم (284)


14 ஒரு நாட்டுப் புறத்தார் பள்ளிக்கு வந்து ஒரு மூலையில் சிறுநீர் கழித்து விட்டார். அவரை மக்கள் அதட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள், தடுத்து, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அது அதன் மீது ஊற்றப்பட்டது என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

وَعَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ, فَأَمَّا الْمَيْتَتَانِ: فَالْجَرَادُ وَالْحُوتُ, وَأَمَّا الدَّمَانُ: فَالطِّحَالُ وَالْكَبِدُ - أَخْرَجَهُ أَحْمَدُ, وَابْنُ مَاجَهْ, وَفِيهِ ضَعْفٌ
رواه أحمد (2/97) ، وابن ماجه (3314) ، وسنده ضعيف كما أشار إلى ذلك الحافظ


15 நமக்கு செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் (ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளது. அவைகளில் செத்தவை வெட்டுக்கிளி மற்றும் மீனாகும். அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், இப்னு மாஜா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا وَقَعَ اَلذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ, ثُمَّ لِيَنْزِعْهُ, فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً, وَفِي اَلْآخَرِ شِفَاءً - أَخْرَجَهُ اَلْبُخَارِيُّ  . وَأَبُو دَاوُدَ, وَزَادَ: - وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ اَلَّذِي فِيهِ اَلدَّاءُ
صحيح. رواه البخاري (3320) ، (5782) سنن أبي داود (3844) وإسنادها حسن



16 ''உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்து விட்டுப் பின்னர் வெளியில் எடுத்து விடவும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, அபூதாவூத்.யில் ஹஸன் தரத்தில் பதிவாகி உள்ளது

''நிச்சயமாக இது நோயிருக்கும் தன்னுடைய இறக்கையின் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது'' என்றும் அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.

وَعَنْ أَبِي وَاقِدٍ اَللَّيْثِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - مَا قُطِعَ مِنْ اَلْبَهِيمَةِ -وَهِيَ حَيَّةٌ- فَهُوَ مَيِّتٌ - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَاَلتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَاللَّفْظُ لَهُ

حسن. رواه أبو داود (2858) ، الترمذي (1480)

17 ''உயிருள்ள கால் நடைகளில் (உறுப்புகள்) வெட்டப்பட்டதும் செத்ததே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூவாஹித் அல்லைஸி(ரலி) அறிவிக்கிறார்.

திர்மிதீ, அபூ தாவூத். இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment