باب ما
جاء في كُحل رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 07 அஞ்சனம் – சுர்மா
50-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، قَالَ: حَدَّثَنَا
أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ
ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: اكْتَحِلُوا بِالإِثْمِدِ،
فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى
الله عليه وسلم، كَانَتْ لَهُ مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا كُلَّ
لَيْلَةٍ، ثَلاثَةً
فِي هَذِهِ، وَثَلاثَةً فِي هَذِهِ.
50. நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :
“இஸ்மித் என்ற கற்களால் சுர்மா இடுங்கள் அது பார்வை கூர்மையாக்கும்
; இமைகளின் முடியை வளரச் செய்யும் “இதை இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல் அவர்களிடம் சுர்மாக் கூடு ஒன்று இருந்தது ஒவ்வொரு
இரவிலும் இதில் ( வலது கண்ணில் ) மூன்று முறையும் இதில் ( இட்து கண்ணில் ) மூன்று முறையும்
சுர்மா இட்டுக் கொள்வார்கள் என்று இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் கூறிகிறார்கள் .
குறிப்பு : இந்தசெய்தி திர்மிதீ ( 1679 ) நஸயீ ( 5024 ) அபூதாவூத்
( 3380 ) இப்னுமாஜா ( 3488) அஹ்மத் ( 1943 ) பதிவாகி உள்ளது .,மேலும் இதில் இடம்பெற்று
உள்ள முஹம்மத் என்பவர் பலவீனமானவர் ஆவார் இவர் அல்லாத வேறு அறிவிப்பாளர்
தொடர்யை கொண்டு ஸஹீஹான அறிவிப்பிலும் இந்த செய்தி இடம்பெற்று உள்ளது.
51-حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ الْبَصْرِيُّ،
قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ،
عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ (ح) وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ:
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ
عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
يَكْتَحِلُ قَبْلَ أَنْ يَنَامَ بِالإِثْمِدِ، ثَلاثًا فِي كُلِّ عَيْنٍ، وَقَالَ يَزِيدُ
بْنُ هَارُونَ، فِي حَدِيثِهِ: إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، كَانَتْ لَهُ
مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا عِنْدَ النَّوْمِ، ثَلاثًا فِي كُلِّ عَيْنٍ.
51.இப்னுஅப்பாஸ்( ரலி ) அவர்கள் கூறியதாவது :
“ நபி ( ஸல் ) அவர்கள் உறங்கும் முன் இஸ்மிதி ( என்ற சுர்மா)
மூலம் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று முறை சுர்மா இட்டுக் கொள்வார்கள் “.
யஸீத் பின் ஹாரூன் என்பவரின் அறிவிப்பில் , “ நபி ஸல் அவர்களிடம்
ஒரு சுர்மாகூடு இருந்த்து அதிலிருந்து ஒவ்வொரு இரவும் மூன்று முறை ஒவ்வொரு கண்ணிலும்
சுர்மா இட்டுகொள்வார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
குறிப்பு : இதில் இடம்பெற கூடிய அப்பாத் பின் மன்சூர் என்பவர்
பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
52-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ،
عَنْ جَابِرٍ هُوَ ابْنُ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه
وسلم: عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ، فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ
الشَّعْرَ.
52.ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது :
“தூங்கும் நேரத்தில் இஸ்மித் என்ற சுர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் அது பார்வையைக் கூர்மையாக்கும் ; இமைகளின் முடியை வளரச் செய்யும் “என்று நபி
ஸல் கூறினார்கள்.
53-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ
اللهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الإِثْمِدُ،
يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ.
53.இப்னுஅப்பாஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
“ நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “ இஸ்மித்”ஆகும்
அது பார்வையைக் கூர்மையாக்கும் ;இமைகளின் முடியைவளரச் செய்யும் “ என்று நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
குறிப்பு : இந்தசெய்தி திர்மிதீ ( 1971 ) நஸயீ ( 5024 ) அபூதாவூத்
( 3380 ) பதிவாகி உள்ளது ,
54-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ الْبَصْرِيُّ، قَالَ:
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ سَالِمٍ، عَنِ
ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: عَلَيْكُمْ بِالإِثْمِدِ،
فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ.
54. இப்னு உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
“ இஸ்மித் என்ற சுர்மாவை எடுத்துக்கொள்ளுங்கள் ! ஏனெனில்
அது பார்வையைக் கூர்மையாக்கும் ! ( இமையை ) முடியை வளரச் செய்யும் “ என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : இதில் இடம்பெறும் உஸ்மான் பின் அப்துல் மாலிக் என்பவர் மீது ஹதீஸ்கலை அறிஞர்கள் இருவேறு
கருத்தைகளை சொல்லி உள்ளார்கள் சிலர் ஏற்க வேண்டும் என்றும் சிலர் ஏற்க கூடாது என்று
கூறுகிறார்கள் இவர் அல்லாத வேறு அறிவிப்பிலும் மேல் உள்ள செய்தி ஸஹீஹான தரத்தில் வந்து
உள்ளது
No comments:
Post a Comment