باب الصبر
பாடம் : 3 – பொறுமை
قَالَ الله تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا}
[آل عمران: 200] وقال تعالى:
{وَلَنَبْلُوَنَّكُمْ
بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ
وَبَشِّرِ الصَّابِرِينَ} [البقرة: 155] وَقالَ تَعَالَى: {إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ
أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ} [الزمر: 10] وَقالَ تَعَالَى: {وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ
إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ} [الشورى: 43] وَقالَ تَعَالَى: {اسْتَعِينُوا
بِالصَّبْرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ} [البقرة: 153] وَقالَ تَعَالَى:
{وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ}
[محمد: 31] وَالآياتُ في الأمر بالصَّبْر وَبَيانِ فَضْلهِ كَثيرةٌ مَعْرُوفةٌ.
அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிக்கை கொண்டோரே ! சகித்துக் கொள்ளுங்கள் ! சகிப்புத் தன்மையில் ( மற்றவர்களை ) மிகைத்து விடுங்கள்.( 3
: 200 )
ஒரளவு அச்சத்தாலும் , பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம் . பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக ( 2 : 155 )
பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்..( 39:10)
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும் (
42:43)
நம்பிக்கை கொண்டோரே ! பொறுமை மூலமும் தொழுகை மூலமும் உதவி தேடுங்கள் ! அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கின்றான் ( 2 :153 )
உங்களில் தியாகம் செய்தோரையும் , பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம் உங்கள் செய்திகளையும் சோதிப்போம். (47:31 )
பொறுமையை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் உள்ள வசன்ங்கள் அறிமுகமானவைகளாகவும் அதிகமாகவும் உள்ளன.
25-وعن أبي مَالِكٍ الْحَارِثِ بْنِ عَاصِم الأشْعريِّ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "الطُّهُورُ
شَطْرُ الإِيمَان، وَالْحَمْدُ للَّه تَمْلأَ الْميزانَ وسُبْحَانَ الله والحَمْدُ
للَّه تَمْلآنِ أَوْ تَمْلأ مَا بَيْنَ السَّموَات وَالأَرْضِ وَالصَّلاَةِ نورٌ، والصَّدَقَةُ
بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، والْقُرْآنُ حُجَّةُ لَكَ أَوْ عَلَيْكَ. كُلُّ النَّاس
يَغْدُو، فَبِائِعٌ نَفْسَهُ فمُعْتِقُها، أَوْ مُوبِقُهَا" رواه مسلم
.
25. ஹாரிஸ் இப்னு ஆஸிம் அல் அஷ் அரீ ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
சுத்தம் ஈமானில் பாதியாகும் .” அல்ஹம்துலில்லாஹ் “ என்பது ( மீஜான் ) தராசை நிரப்பிவிடும் “ சுப்ஹானல்லாஹ் , அல்ஹம்துலில்லாஹ் “ என்பது வானங்கள் , பூமிக்கிடையே உள்ளவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும் தர்மம் ஆதாரமாகும் . பொறுமை ஒளியாகும். குர் ஆன் உனக்குச் சாதகமான அல்லது உனக்குப் பாதகமான ஆதாரமாகும் ஒவ்வொரு மனிதரும் முயற்சிக்கின்றனர்.தன்னை ஈடுபடுத்திக் கொண்டனர் .அதில் சிலர் ( அழிவிலிருந்து) விடுவித்துக் கொள்கின்றனர். சிலர் அதில் அழிந்து விடுகின்றர் என்று நபி ( ஸல் ) கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் 223 )
26-وَعَنْ أبي سَعيدٍ بْن مَالِك بْن سِنَانٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا أَنَّ نَاساً مِنَ الأنصَارِ سَأَلُوا رَسُولَ الله صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم فأَعْطاهُم، ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ، حَتَّى نَفِد مَا عِنْدَهُ، فَقَالَ
لَهُمْ حِينَ أَنَفَقَ كُلَّ شَيْءٍ بِيَدِهِ: "مَا يَكُنْ مِنْ خَيْرٍ فَلَنْ
أدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يسْتعْفِفْ يُعِفَّهُ اللهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ
اللَّهُ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ. وَمَا أُعْطِىَ أَحَدٌ عَطَاءً خَيْراً
وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ" مُتَّفَقٌ عَلَيْهِ.
26.அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள் அப்போதும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின்
'என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே
மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு
வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத்
தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ்
பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை' என்றார்கள்.( நூல் : புஹாரி 1469 , முஸ்லிம் 1053 )
27-وَعَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ: قَالَ رَسُولُ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "عَجَباً لأمْرِ الْمُؤْمِنِ
إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذَلِكَ لأِحَدٍ إِلاَّ للْمُؤْمِن: إِنْ
أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ
فَكَانَ خيْراً لَهُ".رواه مسلم
.
27.ஸுஹைப் இப்னு ஸினான் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
ஒரு முஃமினின் காரியம் ஆச்சரியமானதே ! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான் அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால் . பொறுமையாக இருக்கிறான் அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது என்று நபி ஸல் கூறினார்கள்.( நூல் : முஸ்லிம்
2999)
28-وعنْ أَنسٍ رضِيَ الله عنْهُ قَالَ: لمَّا ثقُلَ النَّبِيُّ صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم جَعَلَ يتغشَّاهُ الكرْبُ فقَالتْ فاطِمَةُ رَضِيَ الله عنْهَا: واكَرْبَ أبَتَاهُ، فَقَالَ:
"ليْسَ عَلَى أَبيكِ كرْبٌ بعْدَ اليَوْمِ "فلمَّا مَاتَ قالَتْ: يَا أبتَاهُ
أَجَابَ رَبّاً دعَاهُ، يَا أبتَاهُ جنَّةُ الفِرْدَوْسِ مأوَاهُ، يَا أَبَتَاهُ إِلَى
جبْريلَ نْنعَاهُ، فلَمَّا دُفنَ قالتْ فاطِمَةُ رَضِيَ الله عَنهَا: أطَابتْ أنفسُكُمْ
أَنْ تَحْثُوا عَلَى رسُول الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم التُّرابَ؟ روَاهُ البُخاريُّ.
28.அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் நோய் கடுமையானபோது, அவர்களுக்கு மயக்கமேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா(ரலி), 'அந்தோ! என் தந்தைக்கு ஏற்பட்ட மரண வேதனையே!' என்று கூறினார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினத்திற்குப் பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தியவுடன், ஃபாத்திமா(ரலி), 'அழைத்த அதிபதியின் அழைப்பை ஏற்ற என் தந்தையே! ஃபிர்தெளஸ்
எனும் சொர்க்கத்தை தம் உறைவிடமாக்கிக் கொண்ட என் தந்தையே! இந்த இறப்புச் செய்தியை நாங்கள்
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கிறோம், என் தந்தையே!' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது
ஃபாத்திமா(ரலி) (என்னை நோக்கி), 'அனஸே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது மண்ணைப் போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது?' என்று கேட்டார்கள்.( நூல் : புஹாரி 4462 )
29-وعنْ أبي زيْد أُسامَة بن زيد حَارثَةَ موْلَى رسُول الله صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم وحبَّهِ وابْنِ حبِّهِ رضيَ اللهُ عنهُمَا، قالَ: أَرْسلَتْ
بنْتُ النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: إنَّ ابْنِي قَدِ احتُضِرَ فاشْهدْنَا،
فأَرسَلَ يقْرِئُ السَّلامَ ويَقُول: "إنَّ للَّه مَا أَخَذَ، ولهُ مَا أعْطَى،
وكُلُّ شَيْءٍ عِنْدَهُ بأجَلٍ مُسمَّى، فلتصْبِر ولتحْتسبْ" فأرسَلَتْ إِليْهِ
تُقْسمُ عَلَيْهِ ليأْتينَّها. فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبادَةَ، وَمُعَاذُ بْنُ
جَبَلٍ، وَأُبَيُّ بْنَ كَعْبٍ، وَزَيْدُ بْنِ ثاَبِتٍ، وَرِجَالٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ،
فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم الصبيُّ، فأقعَدَهُ في
حِجْرِهِ ونَفْسُهُ تَقعْقعُ، فَفَاضتْ عَيْناهُ، فقالَ سعْدٌ: يَا رسُولَ الله مَا
هَذَا؟ فقالَ: "هَذِهِ رَحْمةٌ جعلَهَا اللَّهُ تعَالَى في قُلُوبِ عِبَادِهِ"
وفي روِايةٍ:" فِي قُلُوبِ منْ شَاءَ مِنْ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ
منْ عِبَادِهِ الرُّحَمَاءَ" مُتَّفَقٌ عَلَيْهِ.
وَمَعْنَى"تَقَعْقَعُ":
تَتحَرَّكُ وتَضْطَربُ.
29. உஸாமா இப்னு ஸைத் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
நபி ஸல் அவர்களின் மகளார் ( ஜைனப் ரலி ) “ என் மகன் உயிர் ஊசலாடுகிறது. எங்களிடம் நீங்கள் வர வேண்டும் என நபி ஸல் அவர்களிடம் ஆள் அனுப்பினார்கள். ஸலாம் கூறியவராக அவர் வந்தார். அவரிடம் ,” நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவன் எடுத்துக் கொண்ட்து உண்டு மேலும் அவனுக்கே அவன் கொடுத்ததும் உண்டு. அவனிடத்தில் ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட தவணையில் தான் உண்டு எனவே ( என் மகள் ) பொறுமையாக இருக்கட்டும் நல்லதை எதிர்பார்த்திருக்கட்டும் !” என்று கூறி அனுப்பினார்கள்.
தன்னிடம் கண்டிப்பாக அவர்கள் வரவேண்டும் என சத்தியமிட்டுக் கூற்ரி மகளார் மீண்டும் ஒருவரை அனுப்பினார்கள். உடனே நபி ஸல் அவர்கள் எழுந்தார்கள் அவர்களுடன் ஸ அது இப்னு உபாதா , முஆத் இப்னு ஜபல், உபை இப்னு க அபு , ஸைத் இப்னு ஸாபித் ஆகியோரும் மற்றும் சில நபித்தோழர்களும் சென்றனர். அப்போது நபி ஸல் அவர்களிடம் சிறுவர் ( பேரன் ) தரப்பட்டார்.அவரை தன் மடியில் நபி ஸல் வைத்தார்கள்.அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன உடனே ஸஅது ( ரலி ) அவர்கள், “ இறைதூதர் அவர்களே ! என்ன ? நீங்களுமா அழுகிறீர்கள் ? என்று கேட்டார் “ இது தான் இரக்கமாகும் தன் அடியார்களின் இதயங்களில் இதை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான் “ என்று நபி ஸல் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் ,” தன் அடியாளர்களில் நாடிய்வர்களின் உள்ளத்திலே ( அதை ஆக்கி உள்ளான் ) தன் அடியார்களில் இரக்கமுடையோரிடம் தான் அல்லாஹ்வும் இரக்கம் கொள்கிறான்” என்று உள்ளது ( நூல் : புஹாரி 1284 , முஸ்லிம் 923
)
30-وَعَنْ صُهَيْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ: "كَانَ مَلِكٌ فيِمَنْ كَانَ قبْلَكُمْ، وَكَانَ
لَهُ سَاحِرٌ، فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِك: إِنِّي قَدْ كَبِرْتُ فَابعَثْ إِلَيَّ
غُلاَماً أُعَلِّمْهُ السِّحْرَ، فَبَعَثَ إِلَيْهِ غُلاَماً يعَلِّمُهُ، وَكَانَ في
طَريقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ، فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلاَمهُ فأَعْجَبهُ، وَكَانَ
إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بالرَّاهِب وَقَعَدَ إِلَيْه، فَإِذَا أَتَى السَّاحِرَ
ضَرَبَهُ، فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ: إِذَا خَشِيتَ السَّاحِر فَقُلْ:
حبَسَنِي أَهْلي، وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ: حَبَسَنِي السَّاحرُ.
فَبيْنَمَا
هُو عَلَى ذَلِكَ إذْ أتَى عَلَى دابَّةٍ عظِيمَة قدْ حَبَسَت النَّاس فَقَالَ: اليوْمَ
أعْلَمُ السَّاحِرُ أفْضَل أم الرَّاهبُ أفْضلَ؟ فأخَذَ حجَراً فقالَ: اللهُمَّ إنْ
كَانَ أمْرُ الرَّاهب أحَبَّ إلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فاقتُلْ هَذِهِ الدَّابَّة
حتَّى يمْضِيَ النَّاسُ، فرَماها فقتَلَها ومَضى النَّاسُ، فأتَى الرَّاهب فأخبَرهُ.
فَقَالَ لهُ الرَّاهبُ: أىْ بُنيَّ أَنْتَ اليوْمَ أفْضلُ منِّي، قدْ بلَغَ مِنْ أمْركَ
مَا أَرَى، وإِنَّكَ ستُبْتَلَى، فإنِ ابْتُليتَ فَلاَ تدُلَّ عليَّ، وكانَ الغُلامُ
يبْرئُ
الأكْمةَ
والأبرصَ، ويدَاوي النَّاس مِنْ سائِرِ الأدوَاءِ. فَسَمعَ جلِيسٌ للملِكِ كانَ قدْ
عمِىَ، فأتَاهُ بهداياَ كثيرَةٍ فقال: ما هاهُنَا لَكَ أجْمَعُ إنْ أنْتَ شفَيْتني،
فَقَالَ إنِّي لا أشفِي أحَداً، إِنَّمَا يشْفِي اللهُ تعَالى، فإنْ آمنْتَ بِاللَّهِ
تعَالَى دعوْتُ اللهَ فشَفاكَ، فآمَنَ باللَّه تعَالى فشفَاهُ اللَّهُ تَعَالَى، فأتَى
المَلِكَ فجَلَس إليْهِ كَما كانَ يجْلِسُ فقالَ لَهُ المَلكُ: منْ ردَّ علَيْك بصَرك؟
قَالَ: ربِّي. قَالَ: ولكَ ربٌّ غيْرِي؟، قَالَ: رَبِّي وربُّكَ اللهُ، فأَخَذَهُ فلَمْ
يزلْ يُعذِّبُهُ حتَّى دلَّ عَلَى الغُلاَمِ فجئَ بِالغُلاَمِ، فَقَالَ لهُ المَلكُ:
أىْ بُنَيَّ قدْ بَلَغَ منْ سِحْرِك مَا تبْرئُ الأكمَهَ والأبرَصَ وتَفْعلُ وَتفْعَلُ
فقالَ: إِنَّي لا أشْفي أَحَداً، إنَّما يشْفي الله تَعَالَى، فأخَذَهُ فَلَمْ يزَلْ
يعذِّبُهُ حتَّى دلَّ عَلَى الرَّاهبِ، فجِئ بالرَّاهِبِ فَقيلَ لَهُ: ارجَعْ عنْ دِينكَ،
فأبَى، فدَعا بالمنْشَار فوُضِع المنْشَارُ في مفْرقِ رأْسِهِ، فشقَّهُ حتَّى وقَعَ
شقَّاهُ، ثُمَّ جِئ بجَلِيسِ المَلكِ فقِيلَ لَهُ: ارجِعْ عنْ دينِكَ فأبَى، فوُضِعَ
المنْشَارُ في مفْرِقِ رَأسِهِ، فشقَّهُ به حتَّى وقَع شقَّاهُ، ثُمَّ جئ بالغُلامِ
فقِيل لَهُ: ارجِعْ عنْ دينِكَ، فأبَى، فدَفعَهُ إِلَى نَفَرٍ منْ أصْحابِهِ فَقَالَ:
اذهبُوا بِهِ إِلَى جبَلِ كَذَا وكذَا فاصعدُوا بِهِ الجبلَ، فإذَا بلغتُمْ ذروتهُ
فإنْ رجعَ عنْ دينِهِ وإِلاَّ فاطرَحوهُ فذهبُوا بِهِ فصعدُوا بهِ الجَبَل فَقَالَ:
اللَّهُمَّ اكفنِيهمْ بمَا شئْت، فرجَف بِهمُ الجَبَلُ فسَقطُوا، وجَاءَ يمْشي إِلَى
المَلِكِ، فقالَ لَهُ المَلكُ: مَا فَعَلَ أَصحَابكَ؟ فقالَ: كفانيهِمُ الله تعالَى،
فدفعَهُ إِلَى نَفَرَ منْ أصْحَابِهِ فَقَالَ: اذهبُوا بِهِ فاحملُوه في قُرقُور وَتَوسَّطُوا
بِهِ البحْرَ، فإنْ رَجَعَ عنْ دينِهِ وإلاَّ فَاقْذفُوهُ، فذَهبُوا بِهِ فَقَالَ:
اللَّهُمَّ اكفنِيهمْ بمَا شِئْت، فانكَفَأَتْ بِهِمُ السَّفينةُ فغرِقوا، وجَاءَ يمْشِي
إِلَى المَلِك. فقالَ لَهُ الملِكُ: مَا فَعَلَ أَصحَابكَ؟ فَقَالَ: كفانِيهمُ الله
تعالَى. فقالَ للمَلِكِ إنَّك لسْتَ بقَاتِلِي حتَّى تفْعلَ مَا آمُركَ بِهِ. قَالَ:
مَا هُوَ؟ قَالَ: تجْمَعُ النَّاس في صَعيدٍ واحدٍ، وتصلُبُني عَلَى جذْعٍ، ثُمَّ خُذ
سهْماً مِنْ كنَانتِي، ثُمَّ ضعِ السَّهْمِ في كَبدِ القَوْسِ ثُمَّ قُل: بسْمِ اللَّهِ
ربِّ الغُلاَمِ ثُمَّ ارمِنِي، فإنَّكَ إذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتنِي. فجَمَع النَّاس
في صَعيدٍ واحِدٍ، وصلَبَهُ عَلَى جذْعٍ، ثُمَّ أَخَذَ سهْماً منْ كنَانَتِهِ، ثُمَّ
وضَعَ السَّهمَ في كبِدِ القَوْسِ، ثُمَّ قَالَ: بِسْم اللَّهِ رَبِّ الغُلامِ، ثُمَّ
رمَاهُ فَوقَعَ السَّهمُ في صُدْغِهِ، فَوضَعَ يدَهُ في صُدْغِهِ فمَاتَ. فقَالَ النَّاسُ:
آمَنَّا بِرَبِّ الغُلاَمِ، فَأُتِىَ المَلكُ فَقِيلُ لَهُ: أَرَأَيْت مَا كُنْت تحْذَر
قَدْ وَاللَّه نَزَلَ بِك حَذرُكَ. قدْ آمنَ النَّاسُ. فأَمَرَ بِالأخدُودِ بأفْوَاهِ
السِّكك فخُدَّتَ وَأضْرِمَ فِيها النيرانُ وقالَ: مَنْ لَمْ يرْجَعْ عنْ دينِهِ فأقْحمُوهُ
فِيهَا أوْ قيلَ لَهُ: اقْتَحمْ، ففعَلُوا حتَّى جَاءتِ امرَأَةٌ ومعَهَا صَبِيٌّ لهَا،
فَتقَاعَسَت
أنْ
تَقعَ فِيهَا، فَقَالَ لَهَا الغُلاَمُ: يَا أمَّاهْ اصبِرِي فَإِنَّكَ عَلَي الحَقِّ"
روَاهُ مُسْلَمٌ.
“ذرْوةُ الجَبلِ":
أعْلاهُ، وَهي بكَسْر الذَّال المعْجمَة وَضَمِّهَا و"القُرْقورُ"بضَمِّ
القَافَيْن: نوْعٌ منْ السُّفُن وَ"الصَّعِيدُ"هُنا: الأرضُ البارزَةُ وَ"الأخْدُودُ":
الشُّقوقُ في الأرْضِ كالنَّهْرِ الصَّغيرِو"أُضرِمَ"أوقدَ"وانكفَأَت"أَي:
انقلبَتْ وَ"تقاعسَت"توقَّفتْ وجبُنتْ.
30. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னால் (ஒரு காலத்தில்) அரசன் ஒருவன் வாழ்ந்தான். அவனிடம் (குறி சொல்லும்)
சூனியக்காரன் ஒருவன் இருந்தான். அந்தச் சூனியக்காரன் முதுமையடைந்த போது அரசனிடம், "நான் முதுமையடைந்துவிட்டேன். (என்னோடு இந்தச் சூனியக் கலை அழிந்துவிடக் கூடாது.)
எனவே, சிறுவன் ஒருவனை அனுப்புங்கள். அவனுக்கு நான் சூனியக் கலையை
கற்றுத் தருகிறேன்" என்று சொன்னான். அவ்வாறே, அக்கல்வியை அவன் கற்றுத் தருவதற்காகச் சிறுவன் ஒருவனை அவனிடம் அரசன் அனுப்பினான்.
சிறுவன் சூனியக்காரனிடம் செல்லும் வழியில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று
அமர்ந்து அவருடைய அறிவுரைகளைச் சிறுவன் கேட்கலானான். அது அவனை ஈர்த்தது; அவன் சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்தத் துறவியிடம் சென்று அமர்ந்து கொள்வான்.
பிறகு சூனியக்காரனிடம் (தாமதமாகச்) செல்லும்போது அவனைச் சூனியக் காரன் அடிப்பான். இது
பற்றி அச்சிறுவன் துறவியிடம் முறையிட்டான்.
அப்போது அந்தத் துறவி சூனியக்காரனைப் பற்றி நீ அஞ்சினால் அவனிடம், "என் வீட்டார் என்னைத் தடுத்துவிட்டனர் (அதனால் தான் தாமதம்) என்று கூறிவிடு; நீ உன் வீட்டாரைப் பற்றி அஞ்சினால், சூனியக்காரன் என்னைத் தடுத்துவிட்டான்
(அதனால்தான் தாமதம்) என்று கூறிவிடு" என்று (யோசனை) கூறினார். அவ்வாறே அச்சிறுவன்
செய்துகொண்டிருந்தான்.
இந்நிலையில், (ஒருநாள் அச்சிறுவன் செல்லும்போது) மிகப்பெரிய மிருகம்
ஒன்றிடம் அவன் வந்தான்.அது மக்களை(ச்செல்லவிடாமல்) தடுத்துக்கொண்டிருந்தது. அப்போது
அச்சிறுவன், "இன்று நான் அந்தச் சூனியக்காரன் சிறந்தவனா? அல்லது அந்தத் துறவி சிறந்தவரா என்று அறியப்போகிறேன்" என்று கூறிவிட்டு, ஒரு கல்லை எடுத்து, "இறைவா! அந்தத் துறவியின் நிலை அந்தச்
சூனியக்காரனின் நிலையைவிட உனக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தால், இந்த மிருகத்தைக் கொன்று மக்களைச் செல்லவிடு" என்று கூறி, அந்த மிருகத்தை நோக்கி (கல்லை) எறிந்து, அதைக் கொன்றான். மக்களும் (அச்சமின்றி) நடந்துசென்றனர்.
பிறகு அந்தத் துறவியிடம் சென்று நடந்ததை அவரிடம் தெரிவித்தான். அப்போது அந்தத்
துறவி, "அருமை மகனே! நீ இன்று என்னைவிடச் சிறந்தவனாகிவிட்டாய்!
உன் தகுதியை நான் இப்போது (கண்கூடாகப்) பார்க்கும் நிலைக்கு நீ வந்துவிட்டாய். இனி
நீ சோதனைக் குள்ளாக்கப்படுவாய். அவ்வாறு நீ சோதனைக்குள்ளாக்கப்படும் போது என்னைப் பற்றித்
தெரிவிக்காதே" என்று கூறினார்.
அச்சிறுவன் பிறவிக் குருடருக்கும் தொழு நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்கினான். இதர
நோய்களிலிருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளித்தான். இதை அரசனின் அவையிலிருந்த ஒருவர்
கேள்விப்பட்டார். அவர் (கண்பார்வையற்ற) குருடராக இருந்தார். அவர் ஏராளமான அன்பளிப்புகளுடன்
அச்சிறுவனிடம் சென்று, "நீ எனது இந்த நோயைக் குணப்படுத்திவிட்டால், என்னிடமுள்ள இந்தப் பொருட்கள் அனைத்தும் உனக்கே உரியன" என்று கூறினார்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை; அல்லாஹ்வே நிவாரணமளிக்கின்றான். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நான்
(உங்களுக்காக) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். அவன் உங்களுக்கு நிவாரணமளிப்பான்"
என்று கூறினான்.
அவ்வாறே அக்குருடர் இறைநம்பிக்கை கொண்டபோது, அவருக்கு அல்லாஹ் நிவாரணமளித்தான். பிறகு அவர் வழக்கம் போல அரசனிடம் சென்று அமர்ந்தபோது
அவரிடம் அந்த அரசர், "உமது பார்வையை உமக்குத் திருப்பிக்கொடுத்தவர்
யார்?" என்று கேட்டான்.
அவர், "என் இறைவன்" என்று பதிலளித்தார்.
அதற்கு அரசன், "உனக்கு என் அல்லாத வேறு இறைவன் உண்டா?" என்று கேட்டான். அதற்கு அவர், "என் இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்தான்"
என்று சொன்னார்.
உடனே அவரைப் பிடித்து, அந்தச் சிறுவனைப் பற்றி அவர் சொல்லும்வரை
அவரை அரசன் வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தான். பிறகு அந்தச் சிறுவன் கொண்டுவரப்பட்டான்.
அப்போது அரசன், "குழந்தாய்! நீ சூனியக்கலையால் பிறவிக்குருடரையும்
தொழுநோயாளிகளையும் குணப்படுத்தி இன்னின்னவாறு செய்யுமளவுக்குச் சென்றுவிட்டாய்"
என்று கூறினான்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை.
அல்லாஹ்வே நிவாரணமளிக்கிறான்" என்று கூறினான். பிறகு அச்சிறுவன் அந்தத் துறவியைப்
பற்றித் தெரிவிக்கும்வரை அச்சிறுவனையும் அரசன் வேதனைப்படுத்தலானான்.
பிறகு அந்தத் துறவியும் கொண்டுவரப்பட்டார். அவரிடம், "உமது மார்க்கத்திலிருந்து நீர் திரும்பிவிடும்" என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆகவே, ரம்பம் ஒன்றைக் கொண்டுவரச்சொல்லி, அவரது உச்சந்தலையில் வைத்து, அவரது உடலை இரண்டாகப் பிளந்தான் அரசன்.
அவர் இரண்டு துண்டாகி விழுந்தார்.
பிறகு அரசனின் அவையில் இருந்த அந்த மனிதர் கொண்டுவரப்பட்டு, "நீ உனது மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு!" என்று கூறப்பட்டது. அவரும் மறுத்துவிட்டார்.
எனவே, அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து இரண்டாகப்
பிளந்தான் அரசன். அவரும் இரு துண்டுகளாகி விழுந்தார்.
பின்னர் அச்சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவனிடமும் "நீ உனது மார்க்கத்திலிருந்து
திரும்பிவிடு" என்று சொல்லப்பட்டது. அவன் மறுத்துவிட்டான். உடனே அவனைத் தம் ஆட்கள்
சிலரிடம் ஒப்படைத்து, "இவனை இன்ன இன்ன மலைக்குக் கொண்டுசெல்லுங்கள்.
மலை உச்சிக்கு இவனைக் கொண்டு சென்றதும் (அவனிடம் அவனது ஓரிறைக் கொள்கையைக் கைவிடுமாறு
கூறுங்கள்.) அவன் தனது மார்க்க்ததிலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், அவனை மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்" என்று அரசன் கூறினான்.
அவ்வாறே அவர்கள் அச்சிறுவனை மலை உச்சிக்குக் கொண்டுசென்றனர். அப்போது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான்.
அப்போது அந்த மலை குலுங்கியது. அவர்கள் அனைவரும் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டனர்.
பிறகு அச்சிறுவன் அரசனை நோக்கி நடந்துவந்தான். அவனிடம் அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?"என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னான்.
பிறகு அச்சிறுவனைத் தம் ஆட்களில் வேறு சிலரிடம் ஒப்படைத்து, "இவனை மரக்கலமொன்றில் ஏற்றி,நடுக்கடலுக்குக் கொண்டுசெல்லுங்கள்.
இவன் தனது (ஏகயிறை) மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், இவனைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்" என்று அரசன் உத்தரவிட்டான்.
அவ்வாறே அவர்கள் கொண்டுசென்றபோது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான்.
மரக்கலம் அதிலிருந்தவர்களுடன் சேர்ந்து கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர்.
பிறகு அச்சிறுவன் (மட்டும்) அரசனை நோக்கி நடந்துவந்தான்.
சிறுவனைக் கண்ட அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?" என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்"
என்று கூறிவிட்டு, அரசனைப் பார்த்து, "நான் சொல்கிறபடி நீ நடந்துகொள்ளாத வரை என்னை உம்மால் கொல்ல முடியாது" என்று
கூறினான்.
"அது என்ன?" என்று அரசன் கேட்டான். அதற்கு அச்சிறுவன், "நீ மக்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் ஒன்றுதிரட்டு. என்னைச் சிலுவையில் அறைந்துவிடு.
பிறகு என் அம்புக்கூட்டிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து, வில்லில் பொருத்தி பிறகு, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்"
என்று கூறி, (என்னை நோக்கி) அந்த அம்பைப் பாய்ச்சு. இவ்வாறு நீ செய்தால்
உன்னால் என்னைக் கொல்ல முடியும்" என்று கூறினான்.
அவ்வாறே மக்களைத் திறந்த வெளியொன்றில் அரசன் ஒன்றுதிரட்டினான். சிறுவனைச் சிலுவையில்
அறைந்தான். பிறகு அச்சிறுவனின் அம்புக்கூட்டிலிருந்து அம்பொன்றை எடுத்து வில்லில் பொருத்தி, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்" என்று கூறி, அந்தச் சிறுவனை நோக்கி அம்பை எய்தான்.
அந்த அம்பு சிறுவனின் நெற்றிப் பொட்டில் பாய்ந்தது. அச்சிறுவன் அம்பு பாய்ந்த நெற்றிப்
பொட்டில் கையை வைத்துக்கொண்டே இறந்துபோனான்.
அதைக் கண்ட மக்கள், "நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை
கொண்டோம்; நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம், நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினர்.
பிறகு அரசனிடம் வந்து, "(அரசரே!) நீர் எதை அஞ்சிக்கொண்டிருந்தீரோ
அதை நேரடியாகப் பார்த்துவிட்டீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் அஞ்சியது
நடந்தேவிட்டது. மக்கள் அனைவரும் (அச்சிறுவனின் இறைவன்மீது) நம்பிக்கை கொண்டுவிட்டனர்"
என்று கூறப்பட்டது.
உடனே அந்த அரசன் தெரு முனைகளில் அகழ் தோண்டுமாறு உத்தரவிட்டான். அவ்வாறே தோண்டப்பட்டதும்
அதில் நெருப்பு மூட்டினான்.
பிறகு "யார் (தாம் ஏற்றுக்கொண்ட அந்த ஓரிறை) மார்க்கத்திலிருந்து திரும்பி
வரவில்லையோ அவர்களை இதில் எரித்துவிடுங்கள்; அல்லது தூக்கிப்போட்டுவிடுங்கள்" என்று உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தனர்.
இறுதியில் ஒரு பெண் வந்தாள். அவளுடன் அவளுடைய குழந்தை ஒன்றும் இருந்தது. அ(ந்தத்
தீக்குண்டத்)தில் விழ அவள் தயங்கினாள். அப்போது அந்தக் குழந்தை, "அம்மா! (மனதைத் திடப்படுத்தி) பொறுமையுடன் இரு! ஏனெனில், நீ சத்தியத்தில் இருக்கிறாய்" என்று சொன்னது. இதை ஸுஹைப் ( ரலி ) அறிவிக்கிறார்கள் ( நூல் : முஸ்லிம் 3005 )
31-وَعَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَال: " اتَّقِي
الله وَاصْبِرِي"فَقَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنِّكَ لَمْ تُصَبْ بمُصِيبتى،
وَلَمْ تعْرفْهُ، فَقيلَ لَها: إِنَّه النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فَأَتتْ
بَابَ النَّبِّي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فلَمْ تَجِد عِنْدَهُ بَوَّابينَ، فَقالتْ:
لَمْ أَعْرِفْكَ، فقالَ:"إِنَّما الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأولَى"
متفقٌ عَلَيهِ.
وفي
رواية لمُسْلمٍ:"تَبْكِي عَلَى صَبيٍّ لَهَا".
31.அனஸ் ( ரழி) அறிவிக்கிறார்கள் :
மண்ணறை ( கப்ரு) அருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைத் தாண்டிச் சென்ற நபி ஸல் அவர்கள் ,” ( பெண்ணே !) அல்லாஹ்வைப் பயப்படு ! நீ பொறுமையாக இரு ! என்று கூறினார்கள் ,” என்னை விட்டும் நீர் செல்வீராக ! எனது சோதனை போல் நீ சோதிக்கப்படவில்லை.அதை நீர் அறியமாட்டீர் “ என்று அப்பெண் கூறினாள், இவர்கள் நபி ஸல் அவர்கள் என்று அப்பெண்ணிடம் கூறப்பட்டது. உடனே அப்பெண் நபி ஸல் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள் அந்த இட்த்தில் காவலாளி எவரும் இல்லை,” நான் உங்களை அறிந்தவளல்ல “ என்று கூறினாள்.” பொறுமை என்பது கஷ்டத்தின் ஆரம்பத்திலேயே இருக்கவேண்டும் என்று நபி ஸல் அவர்கள் ( அப்பெணிடம் ) கூறினார்கள்.
( நூல் : புஹாரி
1252 , முஸ்லிம் 926 )
32-وَعَنْ أَبي هَرَيرَةَ رَضي اللَّه عنه أَنَّ رَسُولَ اللَّه صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ: "يَقولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ
عِنْدِي جَزَاءٌ إِذَا قَبضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبهُ
إِلاَّ الجَنَّة" رواه البخاري.
32.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை
காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( நூல் : புஹாரி 6424 )
33-وعَنْ عائشَةَ رضيَ اللَّهُ عنها أنَهَا سَأَلَتْ رسولَ اللَّه صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم عَن الطَّاعونِ، فَأَخبَرَهَا "أَنَهُ كَانَ عَذَاباً
يَبْعَثُهُ اللَّه تَعَالَى عَلَى منْ يَشَاءُ، فَجَعَلَهُ اللَّهُ تعالَى رحْمةً للْمُؤْمنِينَ،
فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ في الطَّاعُون فَيَمْكُثُ في بلَدِهِ صَابِراً مُحْتَسِباً
يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ إِلاَّ كَانَ لَهُ
مِثْلُ أَجْرِ الشَّهِيدِ" رواه البخاري.
33.நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக
இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக
ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு
அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத்
தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக்
கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்.( நூல் : புஹாரி 5734 )
34-وعَنْ أَنسٍ رضي اللَّه عنه قالَ: سَمِعْتُ رَسُولَ اللَّه صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم يقولُ: "إنَّ اللَّه عَزَّ وجَلَّ قَالَ:"إِذَا ابْتَلَيْتُ
عَبدِي بحبيبتَيْهِ فَصبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجنَّةَ" يُريدُ عينيْه،
رواه البخاريُّ.
34.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப்
பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.
('அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்' என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.( நூல் : புஹாரி 5653 )
35-وعنْ عطاءِ بْن أَبي رَباحٍ قالَ: قالَ لِي ابْنُ عبَّاسٍ رضي اللَّهُ
عنهُمَا ألاَ أريكَ امْرَأَةً مِن أَهْلِ الجَنَّة؟ فَقُلت: بلَى، قَالَ: هذِهِ المْرأَةُ
السوْداءُ أَتَتِ النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقالَتْ: إِنِّي أُصْرَعُ،
وإِنِّي أَتكَشَّفُ، فَادْعُ اللَّه تَعَالَى لِي قَالَ: "إِن شئْتِ صَبَرْتِ
ولكِ الْجنَّةُ، وإِنْ شِئْتِ دعَوْتُ اللَّه تَعالَى أَنْ يُعافِيَكِ"فقَالتْ:
أَصْبرُ، فَقالت: إِنِّي أَتَكشَّفُ، فَادْعُ اللَّه أَنْ لا أَتكشَّفَ، فَدَعَا لَهَا.
متَّفقٌ عليْهِ.
35.அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக்
காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து
ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம்.
(இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி
அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல்
இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள்
இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.( நூல் : புஹாரி 5652 ,முஸ்லிம் 2576 )
36-وعنْ أَبي عبْدِ الرَّحْمنِ عبْدِ اللَّه بنِ مسْعُودٍ رضيَ اللَّه
عنه قَال: كَأَنِّي أَنْظُرُ إِلى رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يحْكيِ
نَبيّاً مِنَ الأَنْبِياءِ، صلواتُ اللَّهِ وسَلاَمُهُ عَليْهم، ضَرَبُهُ قَوْمُهُ
فَأَدْموْهُ وهُو يمْسحُ الدَّم عنْ وجْهِهِ، يقُولُ: "اللَّهمَّ اغْفِرْ لِقَوْمي
فإِنَّهُمْ لا يعْلمُونَ "متفقٌ عَلَيْه.
36.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள்
எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள்.
அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூல் : புஹாரி 3477 , முஸ்லிம் 1792 )
37-وَعنْ أَبي سَعيدٍ وأَبي هُرَيْرة رضيَ اللَّه عَنْهُمَا عن النَّبيِّ
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ: "مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ
وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَن وَلاَ أَذًى وَلاَ غمٍّ، حتَّى الشَّوْكَةُ يُشَاكُها
إِلاَّ كفَّر اللَّه بهَا مِنْ خطَايَاه" متفقٌ عَلَيهِ.
و"الْوَصَب":
الْمرضُ.
37.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து
சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.( நூல் : புஹாரி 5641 , முஸ்லிம் 2573 )
38-وعن ابْن مسْعُود رضي اللَّه عنه قَالَ: دَخلْتُ عَلى النَبيِّ صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم وَهُو يُوعَكُ فَقُلْتُ يَا رسُولَ اللَّه إِنَّكَ تُوعكُ وَعْكاً
شَدِيداً قَالَ: "أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلانِ مِنْكُم"قُلْتُ:
ذلِكَ أَنَّ لَكَ أَجْريْن؟ قَالَ:"أَجَلْ ذَلك كَذَلك مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ
أَذًى، شوْكَةٌ فَمَا فوْقَهَا إلاَّ كَفَّر اللَّه بهَا سَيِّئَاتِهِ، وَحطَّتْ عنْهُ
ذُنُوبُهُ كَمَا تَحُطُّ الشَّجرةُ وَرقَهَا" متفقٌ عَلَيهِ.
وَ"الْوَعْكُ":
مَغْثُ الحمَّى، وَقيلَ: الْحُمى.
38.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது
நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே
(இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு)
நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம்
நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று
அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்.( நூல் : புஹாரி 5647 , முஸ்லிம் 2571 )
وعنْ
أَبي هُرَيرة رضيَ اللَّهُ عنه قال: قال رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم:
"مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْراً يُصِبْ مِنْهُ": رواه البخاري.39-
وضَبطُوا"يُصِب":
بفَتْحِ الصَّادِ وكَسْرِهَا.
39.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( நூல் : புஹாரி 5645 )
40-وعَنْ أَنَسٍ رضي اللَّهُ عنه قَالَ: قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم: "لا يتَمنينَّ أَحدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ أَصَابَهُ، فَإِنْ
كَانَ لاَ بُدَّ فاعلاً فليقُل: اللَّهُمَّ أَحْيني مَا كَانَت الْحياةُ خَيراً لِي
وتوفَّني إِذَا كَانَتِ الْوفاَةُ خَيْراً لِي "متفق عليه.
40.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட
வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின்
எனக்கு இறப்பைத் தருவாயாக!' என்று கேட்கட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.( நூல் : புஹாரி 5671, முஸ்லிம் 2680 )
41-وعنْ أبي عبدِ اللَّهِ خَبَّابِ بْن الأَرتِّ رضيَ اللَّهُ عنه قَالَ:
شَكَوْنَا إِلَى رسولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَهُو مُتَوسِّدٌ بُردةً
لَهُ في ظلِّ الْكَعْبةِ، فَقُلْنَا: أَلا تَسْتَنْصرُ لَنَا أَلا تَدْعُو لَنَا؟ فَقَالَ:
قَد كَانَ مَنْ قَبْلكُمْ يؤْخَذُ
الرَّجُلُ
فيُحْفَرُ لَهُ في الأَرْضِ فيجْعلُ فِيهَا، ثمَّ يُؤْتِى بالْمِنْشارِ فَيُوضَعُ علَى
رَأْسِهِ فيُجعلُ نصْفَيْن، ويُمْشطُ بِأَمْشاطِ الْحديدِ مَا دُونَ لَحْمِهِ وَعظْمِهِ،
مَا يَصُدُّهُ ذلكَ عَنْ دِينِهِ، واللَّه ليتِمنَّ اللَّهُ هَذا الأَمْر حتَّى يسِير
الرَّاكِبُ مِنْ صنْعاءَ إِلَى حَضْرمْوتَ لاَ يخافُ إِلاَّ اللهَ والذِّئْبَ عَلَى
غنَمِهِ، ولكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ" رواه البخاري.
وفي
رواية:"وهُوَ مُتَوسِّدٌ بُرْدةً وقَدْ لقِينَا مِنَ الْمُشْركِين شِدَّةً".
41.கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத்
தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்
கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள்
உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே
(ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில்
குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும்.
ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து
பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து
விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து
பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும்.
எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார்.
ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்' என்று கூறினார்கள்.( புஹாரி 3612 )
மற்றொரு அறிவிப்பில் , நபி ( ஸல் ) அவர்கள் தன் மேலாடையைத் தலையணையாக வைத்திருந்தார்கள்.” இணைவைப்பவர்களிடமிருந்து கடும் சோதனையை
நாங்கள் சந்தித்து விட்டோம் என்று கூறினோம் “ என்று உள்ளது ( புஹாரி 3852 )
42-وعن ابن مَسعُودٍ رضي اللَّه عنه قال: لمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ
آثَرَ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم نَاساً في الْقِسْمَةِ: فأَعْطَى
الأَقْرعَ بْنَ حابِسٍ مائةً مِنَ الإِبِلِ وأَعْطَى عُييْنَةَ بْنَ حِصْنٍ مِثْلَ
ذلِكَ، وأَعطى نَاساً منْ أشرافِ الْعربِ وآثَرهُمْ يوْمئِذٍ في الْقِسْمَةِ. فَقَالَ
رجُلٌ: واللَّهِ إنَّ هَذِهِ قِسْمةٌ مَا عُدِلَ فِيها، وَمَا أُريد فِيهَا وَجهُ اللَّه،
فَقُلْتُ: واللَّه لأُخْبِرَنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فأتيتُهُ
فَأخبرته بِما قَالَ، فتغَيَّر وَجْهُهُ حتَّى كَانَ كَالصِّرْفِ. ثُمَّ قَالَ:
"فَمنْ يَعْدِلُ إِذَا لَمْ يعدِلِ اللَّهُ ورسُولُهُ؟ ثُمَّ قَالَ: يرحَمُ اللَّهُ
مُوسَى قَدْ أُوْذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصبرَ" فَقُلْتُ: لاَ جرمَ لاَ أَرْفعُ
إلَيه بعْدها حدِيثاً. متفقٌ عَلَيهِ.
وقَوْلُهُ"كَالصِرْفَ"هُو
بِكسْرِ الصادِ الْمُهْملةِ: وَهُوَ صِبْغٌ أَحْمَرُ.
42.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஹுனைன் போரின்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக்
கொடுத்தார்கள். அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள்.
உயைனா(ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்)
பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள்.
அப்போது ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத
ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்' என்று கூறினார். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி(ஸல்)
அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம்
சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன்
நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை
புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்)
சகித்தார்கள்' என்று கூறினார்கள்.( புஹாரி 3150 , முஸ்லிம் 1062 )
43-وعن أنس رضي اللَّه عنه قَالَ: قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم: "إِذَا أَرَادَ اللَّهُ بعبْدِهِ خَيْراً عجَّلَ لَهُ الْعُقُوبةَ في
الدُّنْيَا، وإِذَا أَرَادَ اللَّه بِعبدِهِ الشَّرَّ أمسَكَ عنْهُ بذَنْبِهِ حتَّى
يُوافِيَ بهِ يَومَ الْقِيامةِ".
وقَالَ
النبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "إِنَّ عِظَمَ الْجزاءِ مَعَ عِظَمِ الْبلاءِ،
وإِنَّ اللَّه تَعَالَى إِذَا أَحَبَّ قَوماً ابتلاهُمْ، فَمنْ رضِيَ فلَهُ الرضَا،
ومَنْ سَخِطَ فَلَهُ السُّخْطُ "رواه الترمذي وقَالَ: حديثٌ حسنٌ.
43.அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
“ அல்லாஹ் தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால் அவனுக்கு உலகத்திலேயே தண்டனையைத் தீவிரமாக்குவான் ,அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் ( சோதனையைத் ) தடுப்பான் , இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் “ என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
“ கூலியில் மகத்தானது கடும் சோதனையுடன் உள்ளதாகும், நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான் ஒருவன் அதில் திருப்தி அடைந்தால் அவனுக்கு ( அல்லாஹ்வின் ) திருப்தி உண்டு மேலும் ஒருவன் கோபம் அடைந்தால் அவனுக்கு ( அல்லாஹ்வின் கோபம் உண்டு “ என்று நபி ஸல் கூறினார்கள் ( திர்மிதீ 2396 தரம் : ஹஸன் )
44-وعنْ أَنَسٍ رضي اللَّه عنه قَالَ: كَانَ ابْنٌ لأبي طلْحةَ رضي
اللَّه عنه يَشْتَكي، فَخَرَجَ أبُو طَلْحة، فَقُبِضَ الصَّبِيُّ، فَلَمَّا رَجَعَ
أَبُو طَلْحةَ قَالَ: مَا فَعَلَ ابنِي؟ قَالَت أُمُّ سُلَيْم وَهِيَ أُمُّ الصَّبيِّ:
هُوَ أَسْكَنُ مَا كَانَ، فَقَرَّبَتْ إِلَيْهِ الْعَشَاءَ فَتَعَشَّى، ثُمَّ أَصَابَ
مِنْهَا، فَلَمَّا فرغَ قَالَتْ: وارُوا الصَّبيَّ، فَلَمَّا أَصْبحَ أَبُو طَلْحَة
أَتَى رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأَخْبرهُ، فَقَالَ: "أَعرَّسْتُمُ
اللَّيْلَةَ؟ قَالَ: نَعَمْ، قَالَ:"اللَّهمَّ باركْ لَهُما "فَولَدتْ غُلاماً
فقَالَ لِي أَبُو طَلْحَةَ: احْمِلْهُ حتَّى تَأَتِيَ بِهِ النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم، وبَعثَ مَعهُ بِتمْرَات، فَقَالَ:"أَمعهُ شْيءٌ؟ "قَالَ: نعمْ،
تَمراتٌ فَأَخَذَهَا النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَمضَغَهَا، ثُمَّ أَخذَهَا
مِنْ فِيهِ فَجَعَلَهَا في فِيِّ الصَّبيِّ ثُمَّ حَنَّكَه وسمَّاهُ عبدَ اللَّهِ متفقٌ
عَلَيهِ.
وفي
روايةٍ للْبُخَاريِّ: قَالَ ابْنُ عُيَيْنَة: فَقَالَ رجُلٌ منَ الأَنْصارِ: فَرَأَيْتُ
تَسعة أَوْلادٍ كلُّهُمْ قدْ قَرؤُوا الْقُرْآنَ، يعْنِي مِنْ أَوْلادِ عَبْدِ اللَّه
الْموْلُود.
وَفي
روايةٍ لمسلِم: ماتَ ابْنٌ لأبِي طَلْحَةَ مِنْ أُمِّ سُلَيْمٍ، فَقَالَتْ لأهْلِهَا:
لاَ تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بابنِهِ حتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ، فَجَاءَ
فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً فَأَكَلَ وشَرِبَ، ثُمَّ تَصنَّعتْ لهُ أَحْسنَ مَا كانتْ
تَصَنَّعُ قَبْلَ ذلكَ، فَوقَعَ بِهَا، فَلَمَّا أَنْ رأَتْ أَنَّهُ قَدْ شَبِعِ وأَصَابَ
مِنْها قَالتْ: يَا أَبَا طلْحةَ، أَرَايْتَ لَوْ أَنَّ قَوْماً أَعارُوا عارِيتهُمْ
أَهْل بيْتٍ فَطَلبوا عاريَتَهُم، ألَهُمْ أَنْ يمْنَعُوهَا؟ قَالَ: لا، فَقَالَتْ:
فاحتسِبْ ابْنَكَ. قَالَ: فغَضِبَ، ثُمَّ قَالَ: تركتنِي حتَّى إِذَا تَلطَّخْتُ ثُمَّ
أَخْبرتِني بِابْني، فَانْطَلَقَ حتَّى أَتَى رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم
فأخْبَرهُ بِمَا كَانَ، فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم:
"بَاركَ اللَّه لكُما في ليْلتِكُما".
قَالَ:
فحملَتْ، قَالَ: وكَانَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم في سفَرٍ وهِي مَعَهُ
وكَانَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إِذَا أَتَى الْمَدِينَةِ مِنْ سَفَرٍ
لاَ يَطْرُقُها طُرُوقاً فَدنَوْا مِنَ الْمَدِينَةِ، فَضَرَبَهَا الْمَخاضُ، فَاحْتَبَس
عَلَيْهَا أَبُو طلْحَةَ، وانْطلَقَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم. قَالَ:
يقُولُ أَبُو طَلْحةَ إِنَّكَ لتعلمُ يَا ربِّ أَنَّهُ يعْجبُنِي أَنْ أَخْرُجَ معَ
رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إِذَا خَرَجَ، وأَدْخُلَ مَعهُ إِذَا دَخَلَ،
وقَدِ احْتَبَسْتُ بِما تَرى. تقولُ أُمُّ سُلَيْمٍ: يَا أَبَا طلْحةَ مَا أَجِد الَّذي
كنْتُ أَجِدُ، انْطَلِقْ، فانْطَلقْنَا، وضَربهَا المَخاضُ حينَ قَدِمَا فَولَدتْ غُلاماً.
فقالَتْ لِي أُمِّي: يا أَنَسُ لا يُرْضِعُهُ أَحدٌ تَغْدُوَ بِهِ عَلَى رسُول اللَّه
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فلمَّا أَصْبحَ احتملْتُهُ فانطَلقْتُ بِهِ إِلَى رسولِ
اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم. وذَكَرَ تمامَ الْحَدِيثِ.
44.அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான)
அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ
தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி
வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார்.
அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு)
தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று
(நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள்.
என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக்
கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம்
கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று
பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள்.
குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.( புஹாரி 5470 முஸ்லிம் 2144 )
புஹாரியின் மற்றொரு அறிவிப்பில் ,” குழந்தையாக இருந்த இந்த அப்துல்லாஹ்விற்கு ஒன்பது குழந்தைகள்
இருந்ததைக் கண்டேன் அவர்கள் அனைவரும் குர் ஆனை ஒதுபவர்களாக இருந்தனர் “ என்று அன்ஸாரிகளில் ஒரு நபித்தோழர்
கூறியதாக இப்னு உயய்னா என்பவர் அறிவிக்கிறார் ( புஹாரி 1301 )
முஸ்லிமில் உள்ள மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது :
அபூதல்ஹாவிற்கு உம்மு சுலைம் அவர்கள் மூலமாக இருந்த ஒரு மகன் இறந்துவிட்டார். உம்மு சுலைம் தன் குடும்பத்தாரிடம் “ அபூதல்ஹாவிடம் அவரது மகன் பற்றிக் கூறாதீர்கள்
நானே அவரிடம் பேசிக் கொள்கிறேன் “ என்று கூறினார் அப்போது அபூ தல்ஹா வந்தார் அவரிடம் இரவு உணவை
முன் வைத்தார் அவர் சாப்பிட்டு தண்ணீர் குடித்தார் பின்பு அவரது மனைவி தன்னை இதற்கு
முன் செய்து கொண்ட்து போல் மிக அழகாக்கிக் கொண்டார் அவர் தன் மனைவியிடம் உடலுறவு கொண்டார். அவர் வயிறு நிரம்பி தன்னிடம் உறவு கொண்ட்தைக்
கண்ட அவரது மனைவி “ அபூ தல்ஹா அவர்களே ! ஒரு கூட்ட த்தினர் ஒரு குடும்பத்தாருக்கு தங்களின் பொருளை இரவலாக்க்
கொடுத்திருந்தார்கள் ( பிறகு வந்து ) தங்களின் இரவல் பொருளைக் கேட்கிறார்கள் அவர்களுக்கு அவர்கள் கொடுக்காமல் இருக்கலாமா ?” என்று கேட்டார் .” கூடாது “ என்று அபூ தல்ஹா கூறினார் “ உங்கள் மகன் விஷயமாக நல்லதை எதிர்பார்ப்பீராக ! என்று கூறினார் கோபம் அடைந்த அபூ தல்ஹா “ நான் உடலுறவில் ஈடுபடும் வரை என்னிடம்
கூறாமல் விட்டுவிட்டு என் மகன் பற்றி என்னிடம் இப்போது கூறுகிறாயே!” என்று கூறினார்
உடனே அபூதல்ஹா , நபி ஸல்
அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார். நபி ஸல் அவர்கள் “ உங்கள் இருவரின் இந்த இரவு
( உறவு ) மூலம் அல்லாஹ் பரக்கத் செய்வானாக !” என்று கூறினார்கள் அபூதல்ஹாவின் மனைவி
கர்ப்பிணியானார். நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள் அதில் அபூதல்ஹாவுடன்
அவரது மனைவியும் இருந்தார் நபி ஸல் அவர்கள் மதீனாவிற்க்கு பயணத்திலிருந்து வந்தால்
, இரவில் வரமாட்டார்கள் எனவே மதீனாவிற்கு அருகில் தங்கினார்கள் அபூதல்ஹாவின் மனைவிக்கு
பிரசவ வலி ஏற்பட்டது அவருக்குத் துணையாக அபூதல்ஹா இருந்தார் ( இதற்கிடையே ) நபி ஸல்
அவர்கள்ல் புறப்பட்டு விட்டார்கள்.
“ இறைவா ! நபி ஸல் அவர்கள்
பயணத்திற்குப் புறப்பட்டால் அவர்களுடன் நானும் புறப்படுவேன் அவர்கள் திரும்பி வந்தால்
அவர்களுடன் நானும் திரும்பிவருவேன் என்பதே எனக்கு விருப்பமானது என்பதை நீ அறிவாய் நீ
பார்க்கின்ற இந்த நிலை காரணமாக நான் ( போகாமல் ) பின் தங்கிவிட்டேன் “ என்று அபூ தல்ஹா
கூறினார் ,” அபூதல்ஹா அவர்களே ! முன்பு ( ஏற்பட்ட பிரசவ வலியை ) நான் உணர்ந்தது போல்
இப்போது இல்லை வாருங்கள் போகலாம் “ என்று உம்மு சுலைம் கூறினார். நாங்கள் கிளம்பினோம்
மதீனா வந்ததும் அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்னிடம்
என் தாயார் “ அனஸே ! குழந்தையை நீ நபி ஸல் அவர்களிடம் கொண்டு போகும் வரை எவரும் இதற்கு
பால் புகட்டிட வேண்டாம் “ என்று கூறினார் காலை நேரம் வந்ததும் குழந்தையை எடுத்துக்
கொண்டு நபி ஸல் அவர்களிடம் வந்தேன். ( நூல் : முஸ்லிம் 107 , 2144 )
தொடர்ந்து ( புஹாரியில்
உள்ளது போல் குழந்தைக்குப் பேரித்தம் பழத்தை மென்று ஊட்டியதை அனஸ் ( ரலி ) கூறுகிறார்கள்.
45-وعنْ أَبِي هُريرةَ رضي اللَّه عنه أَن رسولَ اللَّه صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم قَالَ: "لَيْسَ الشديدُ بالصُّرَعةِ إِنمَّا الشديدُ الَّذي
يمْلِكُ نَفسَهُ عِنْد الْغَضَبِ "متفقٌ عَلَيهِ
"والصُّرَعَةُ"بِضمِّ
الصَّادِ وفتْحِ الرَّاءِ، وأصْلُهُ عنْد الْعربِ منْ يصرَعُ النَّاسَ كثيراً..
45.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்
கொள்பவனே ஆவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 6114 , முஸ்லிம் 2609 )
46-وعنْ سُلَيْمانَ بْنِ صُرَدٍ رضي اللَّه عنهُ قَالَ: كُنْتُ جالِساً
مَعَ النَّبِي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، ورجُلان يستَبَّانِ وأَحدُهُمَا قَدِ
احْمَرَّ وَجْهُهُ. وانْتفَخَتْ أودَاجهُ. فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم: "إِنِّي لأعلَمُ كَلِمةً لَوْ
قَالَهَا لَذَهَبَ عنْهُ مَا يجِدُ، لوْ قَالَ: أَعْوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ
الرَّجِيمِ ذَهَبَ منْهُ مَا يجدُ "فقَالُوا لَهُ: إِنَّ النَّبِيَّ صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم قَالَ:"تعوَّذْ بِاللِّهِ مِن الشَّيَطان الرَّجِيمِ".
متفقٌ عَلَيهِ.
46. சுலைமான் இப்னு சுரத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர்
திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரின்
தொண்டை நரம்பு புடைத்தது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள
கோபம் போய் விடும், 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் போருகிறேன்' என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அந்த மனிதரிடம், 'நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு' என்று கூறினார்கள்' எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், 'எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டார்.( புஹாரி 3282 , முஸ்லிம் 2610 )
47-وعنْ مُعاذ بْنِ أَنَسٍ رضي اللَّه عنه أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم قَالَ: "مَنْ كظَمَ غَيظاً، وهُو قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ،
دَعَاهُ اللَّهُ سُبْحانَهُ وتَعالَى عَلَى رُؤُوسِ الْخلائقِ يَوْمَ الْقِيامَةِ حَتَّى
يُخَيِّرَهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ" رواه أَبُو داوُدَ، والتِّرْمِذيُّ
وَقالَ: حديثٌ حسنٌ.
47.முஆத் இப்னு
ஜபர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த
சக்தி இருந்தும் அவர் அதை அடக்கினால் மறுமை நாளில் படைப்புகளில் தலைமையானவர்களுடன்
அவரை அல்லாஹ் அழைப்பான் இறுதியாக அவர் விரும்பிய “ ஹூருல் அய்ன் “ பெண்களைத் தேர்ந்தெடுக்கச்
சலுகை தருவான் “ என்று நபி ஸல் கூறினார்கள் ( அபூதாவூத் 4777 , திர்மிதீ 2021 தரம்
ஹஸன் )
48-وعنْ أَبِي هُريْرَةَ رَضيَ اللَّهُ عنهُ أَنَّ رَجُلاً قَالَ للنَّبِيِّ
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: أوْصِني، قَالَ: "لا تَغضَبْ"فَردَّدَ مِراراً
قَالَ،"لا تَغْضَبْ" رواه البخاريُّ.
48.அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் ('அறிவுரை கூறுங்கள்' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்)
அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்.( புஹாரி 6116)
49-وَعَنْ أَبي هُرَيْرةَ رَضِيَ اللَّهُ عنه قَالَ: قَالَ رسولُ اللَّهِ
صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "مَا يَزَال الْبَلاءُ بِالْمُؤْمِنِ وَالْمؤمِنَةِ
في نَفْسِهِ وَولَدِهِ ومَالِهِ حَتَّى يَلْقَى اللَّه تَعَالَى وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ"
رواه التِّرْمِذيُّ وَقالَ: حديثٌ حسنٌ صحِيحٌ.
49.அபூஹுரைரா
( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ஒர் இறைவிசுவாசியான ஆண்
மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை அவரது சொத்து என அனைத்திலும்
சோதனை இருந்துகொண்டே இருக்கும் இறுதியாக அவர் குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்
என நபி ஸல் கூறினார்கள் ( திர்மிதீ 2399 தரம் : ஹஸன் ஸஹீஹ் )
50-وَعَنْ ابْن عَبَاسٍ رضي اللَّه عنهما قَالَ: قَدِمَ عُيَيْنَة بْنُ
حِصْنٍ فَنَزلَ عَلَى ابْنِ أَخيِهِ الْحُر بْنِ قَيْسٍ، وَكَانَ مِن النَّفَرِ الَّذِين
يُدْنِيهِمْ عُمرُ رضِيَ اللَّهُ عنهُ، وَكَانَ الْقُرَّاءُ أَصْحابَ مَجْلِسِ عُمَرَ
رضي اللَّهُ عنه وَمُشاوَرَتِهِ كُهولاً كَانُوا أَوْ شُبَّاناً، فَقَالَ عُييْنَةُ
لابْنِ أَخيِهِ: يَا ابْنَ أَخِى لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأمِيرِ فَاسْتَأْذِنْ
لِي عَلَيْهِ، فاستَأذنَ فَأَذِنَ لَهُ عُمرُ. فَلَمَّا دخَلَ قَالَ: هِيْ يَا ابْنَ
الْخَطَّاب، فَوَاللَّه مَا تُعْطِينَا الْجَزْلَ وَلا تَحْكُمُ فِينَا بالْعَدْل،
فَغَضِبَ عُمَرُ رضيَ اللَّه عنه حتَّى هَمَّ أَنْ يُوقِعَ بِهِ فَقَالَ لَهُ الْحُرُّ:
يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّه تعَالى قَال لِنبِيِّهِ صَلّى اللهُ عَلَيْهِ
وسَلَّم: {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} [سورة
الأعراف: 198] وإنَّ هَذَا مِنَ الجاهلينَ، وَاللَّه مَا جاوَزَها عُمَرُ حِينَ تَلاَهَا،
وكَانَ وَقَّافاً عِنْد كِتَابِ اللَّهِ تَعَالَى رواه البخاري.
50. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு
கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக
(அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ
இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும்
ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம்
செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத்
தா' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார்.
உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள்
உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக!
நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை' என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு
அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான
அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக!
மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு
விலகியிருப்பீராக!' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில்
ஒருவர்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள்
இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக)
உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.(புஹாரி 4642 )
51-وعَن ابْنِ مسْعُودٍ رضي اللَّه عنه أنَّ رسولَ اللَّه صَلّى اللهُ
عَلَيْهِ وسَلَّم قَالَ: "إِنَّهَا سَتكُونُ بَعْدِى أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرونَها، قَالُوا: يَا رسُولَ اللَّهِ
فَما تَأمرُنا؟ قالَ: تُؤَدُّونَ الْحقَّ الَّذي عَلَيْكُمْ وتَسْألونَ اللَّه الَّذِي
لكُمْ" متفقٌ عَلَيهِ.
"والأَثَرَةُ":
الانفرادُ بالشيْءِ عمَّنْ لَهُ فيهِ حقٌّ.
51.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம் 'எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விஷயங்களையும், பார்ப்பீர்கள்' என்றார்கள். மக்கள், 'அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், '(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்' என்றார்கள்.( புஹாரி 7052 , முஸ்லிம் 1843 )
52-وَعن أبي يحْيَى أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رضي اللَّهُ عنهُ أَنَّ
رَجُلاً مِنَ الأَنْصَارِ قَالَ: يَا رسولَ اللَّهِ أَلا تَسْتَعْمِلُني كَمَا اسْتْعْملتَ
فُلاناً وفلاناً فَقَالَ:"إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدي أَثَرَةً فاصْبِرُوا
حَتَّى تلقَوْنِي علَى الْحوْضِ" متفقٌ عَلَيهِ
"وأُسَيْدٌ"بِضَمِّ
الْهمْزةِ."وحُضَيْرٌ"بِحاءٍ مُهْمَلَةٍ مضمُومَةٍ وضادٍ مُعْجَمَةٍ مفْتُوحةٍ،
واللَّهُ أَعْلَمُ..
52.உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்.
(அன்சாரிகளில்) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தீர்கள்; என்னை நீங்கள் அதிகாரியாக நியமிக்கவில்லையே?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு
(ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை அளிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்' என்றார்கள்.( புஹாரி 7057 , முஸ்லிம் 1845 )
53-وَعنْ أبي إِبْراهيمَ عَبْدِ اللَّه بْنِ أبي أَوْفي رضي اللَّهُ
عنهمَا أَنَّ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم في بعْضِ أَيَّامِهِ التي
لَقِيَ فِيهَا الْعَدُوَّ، انْتَظرَ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهمْ فَقَالَ:
"يَا أَيُّهَا النَّاسُ لا تَتَمنَّوا لِقَاءَ الْعدُوِّ، وَاسْأَلُوا اللَّه
العَافِيَةَ، فَإِذَا لقيتُموهم فاصْبرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّة تَحْتَ ظِلاَلِ
السُّيُوفِ" ثُمَّ قَالَ النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "اللَّهُمَّ
مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنا
عَلَيْهِمْ". متفقٌ عليه وباللَّه التَّوْفيقُ.
53.அப்துல்லாஹ்
இப்னு அபி அவ்ஃபா ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
நபி ஸல் அவர்கள் எதிரிகளைச்
சந்தித்த போர்க்களங்களில் ஒரு போரின் போது சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை காத்திருந்து
விட்டு அதன் பின் “ மக்களே எதிரிகளை சந்திக்க விரும்பாதீர்கள் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தைக்
கேளுங்கள் எதிரிகளை நீங்கள் சந்தித்துவிட்டால் பொறுமையா இருங்கள் “ நிச்சயமாக சொர்க்கம்
வாள்களின் நிழல்களுக்குக் கீழ் உள்ளது “ என்பதை அறிந்துகொள்ளுங்கள் “ என்று கூறிவிட்டு
“ இறைவனே ! வேதத்தை இறக்கியவனே ! மேகத்தை ஓட்டிச் செல்பவனே ! ( எதிரிப்படைகளை ) தோற்கடிப்பவனே
! ( எதிர்களான ) அவர்களைத் தோற்கடிப்பாயாக ! அவர்களுக்கு உதவி செய்வாயாக “ என்று துஆச்
செய்தார்கள்.( புஹாரி 2817 ,முஸ்லிம் 1742 )
No comments:
Post a Comment