كتاب الطهارة
அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்
(71) باب الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ
பாடம்: 71 ஒட்டகை இறைச்சி உண்ணுவதால் உலூ நீங்குமா?
184-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا
الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: "
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ
لُحُومِ الْإِبِلِ، فَقَالَ: «تَوَضَّئُوا مِنْهَا» وَسُئِلَ عَنْ لُحُومِ
الْغَنَمِ، فَقَالَ: «لَا تَوَضَّئُوا مِنْهَا»، وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي
مَبَارِكِ الْإِبِلِ، فَقَالَ: «لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإِبِلِ،
فَإِنَّهَا مِنَ الشَّيَاطِينِ»
وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَرَابِضِ
الْغَنَمِ، فَقَالَ: «صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ»
[حكم
الألباني] : صحيح
184.ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால்
உலூ செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வினவப்பட்டது. 'அதைச் சாப்பிட்டால் உலூச் செய்யுங்கள்' என்று பதிலளித்தனர். ஆட்டிறைச்சியைச் சாப்பிட்டால் உலூச் செய்ய
வேண்டுமா? என்று வினவப்பட்ட போது 'அதற்காக நீங்கள் உலூச் செய்ய வேண்டாம்' என்று பதிலளித்தனர்.
ஒட்டகை தொழுவங்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது 'ஒட்டகைத் தொழுவங்களில் தொழாதீர்கள். காரணம் அவை (ஒட்டகங்கள்) ஷைத்தான்களின் வகையாகும்
என்று பதிலளித்தனர். ஆட்டுக் கொட்டில்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது அவற்றில் 'நீங்கள் தொழுங்கள், அவை (ஆடுகள்) அபிவிருத்திக்குரியவை' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் அஸிப் (ரலி)
அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(72) باب
الْوُضُوءِ مِنْ مَسِّ اللَّحْمِ النِّيءِ وَغَسْلِهِ
பாடம்: 72 பச்சைக்கறியை தொடுவதினாலோ அல்லது கழுவுவதினாலோ
உலூ நீங்குமா?
185-حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَأَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، وَعَمْرُو
بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ الْمَعْنَى، قَالُوا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ
مُعَاوِيَةَ، أَخْبَرَنَا هِلَالُ بْنُ مَيْمُونٍ الْجُهَنِيُّ، عَنْ عَطَاءِ بْنِ
يَزِيدَ اللَّيْثِيِّ، قَالَ هِلَالٌ: لَا أَعْلَمُهُ إِلَّا، عَنْ أَبِي سَعِيدٍ،
وَقَالَ أَيُّوبُ، وَعَمْرٌو: أُرَاهُ عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِغُلَامٍ وَهُوَ يَسْلُخُ شَاةً، فَقَالَ
لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَنَحَّ حَتَّى أُرِيَكَ»
فَأَدْخَلَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، فَدَحَسَ بِهَا حَتَّى تَوَارَتْ
إِلَى الْإِبِطِ، ثُمَّ مَضَى فَصَلَّى لِلنَّاسِ وَلَمْ يَتَوَضَّأْ، قَالَ أَبُو
دَاوُدَ: زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ، يَعْنِي لَمْ يَمَسَّ مَاءً، وَقَالَ: عَنْ
هِلَالِ بْنِ مَيْمُونٍ الرَّمْلِيِّ، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ عَبْدُ
الْوَاحِدِ بْنُ زِيَادٍ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ هِلَالٍ، عَنْ عَطَاءٍ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا، لَمْ يَذْكُرْ أَبَا
سَعِيدٍ
[حكم
الألباني] : صحيح
185.ஆட்டை உரித்துக் கொண்டிருக்கும்
ஒரு சிறுவனுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்ற போது அவரை நோக்கி அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் நீ விலகுக! நான் உனக்கு (உரித்துக்) காட்டுகிறேன் என்று கூறி தனது
கையை தோலுக்கும் இறைச்சிக்கும் இடையே உட்படுத்தி அதை பலமாக உள்ளே கொண்டு சென்றார்கள்.
அவர்களது கை அக்குள் வரை மறைந்து விட்டது. பிறகு சென்று உலூச் செய்யாமல் தொழுதார்கள்.
அய்யூப், அமர் ஆகிய இதன் அறிவிப்பாளர்கள் அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
என்று கருதுகின்றோம் என்று தெரிவிக்கின்றார்கள்.
அமர் என்பவர் தனது ஹதீஸ் அறிவிப்பில்
அதாவது நபிகள் (ஸல்) அவர்கள் தண்ணீரை தொடாமல் என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்களை குறிப்பிடாமல் 'அதா' விடமிருந்து ஹிலால் வாயிலாக அப்துல்
வாஹித் பின் ஜியாத் அபூமுஆவியா ஆகியோர் முர்ஸலாக அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின்
வரிசையில் இடம் பெற்றுள்ள ஹிலால் என்பார் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) (நபித்தோழர்) அவர்களிடமிருந்து
(அதாபின் யஸீத் அவர்கள் நேரடியாக அறிவிக்காமல்) என்று தான் அறிகின்றேன் எனக் கூறுகிறார்கள்.
தரம் : ஸஹீஹ்
(73) باب
تَرْكِ الْوُضُوءِ مِنْ مَسِّ الْمَيْتَةِ
பாடம்: 73 இறந்தவற்றை தொட்டால் உலூ நீங்குமா?
186-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ،
عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ
كَنَفَتَيْهِ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ
بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ» وَسَاقَ
الْحَدِيثَ
[حكم
الألباني] : صحيح
186.தன் இரு பக்கங்களிலும் மக்களுடன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத்தெருவிற்குள்
நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும் இணைந்திருக்கும் ஒரு
ஆட்டுக்குட்டிக்கருகில் சென்ற போது அதை அதன் காதை பிடித்து தூக்கி பிறகு 'இதை உங்களில் யார் விரும்புவார்? என்று வினவினார்கள்' என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
(74) باب
فِي تَرْكِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ
பாடம்: 74 சமைத்த உணவை சாப்பிடுவதால் உலூ நீங்குமா?
187-حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ،
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
[حكم
الألباني] : صحيح
187.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு ஆட்டின் தொடை பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
188-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ
الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي صَخْرَةَ
جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُغِيرَةِ
بْنِ شُعْبَةَ، قَالَ: ضِفْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ
لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ، وَأَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي
بِهَا مِنْهُ، قَالَ: فَجَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ، قَالَ: فَأَلْقَى
الشَّفْرَةَ، وَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ» وَقَامَ يُصَلِّ، زَادَ
الْأَنْبَارِيُّ: «وَكَانَ شَارِبِي وَفَى فَقَصَّهُ لِي عَلَى سِوَاكٍ» أَوْ
قَالَ: «أَقُصُّهُ لَكَ عَلَى سِوَاكٍ؟»
[حكم
الألباني] : صحيح
188.ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர்களிடம்
விருந்தாளியாக தங்கினேன். அவர்கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்ய சொன்னார்கள். அவர்கள்
கத்தியை எடுத்து அதை எனக்கு வெட்டத் துவங்கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள்
வந்து, அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள்.
உடனே அவர்கள் கத்தியை போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கையில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
அவர்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி
அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருக்கிறது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக)
வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக)
வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதாக
கூடுதலாக அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
189-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَتِفًا، ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ، ثُمَّ قَامَ
فَصَلَّى»
[حكم
الألباني] : صحيح
189.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆட்டின் தொடைப் பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்து
விரிப்புத்துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
190-حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ
يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ انْتَهَشَ مِنْ كَتِفٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
[حكم
الألباني] : صحيح
190. நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்
பகுதியை கடுவாய் பற்களால் கடித்து சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
191-حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: ابْنُ
جُرَيْجٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ: سَمِعْتُ جَابِرَ
بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «قَرَّبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ خُبْزًا وَلَحْمًا فَأَكَلَ، ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ بِهِ،
ثُمَّ صَلَّى الظُّهْرَ، ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ، ثُمَّ قَامَ
إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»
[حكم
الألباني] : صحيح
191.நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும்
ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு
வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு தனது மிச்ச உணவை
கொண்டு வரும்படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழலானார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்
(ரலி)
தரம் : ஸஹீஹ்
192-حَدَّثَنَا
مُوسَى بْنُ سَهْلٍ أَبُو عِمْرَانَ الرَّمْلِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ
عَيَّاشٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ
الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ آخِرَ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ
النَّارُ»، قَالَ أَبُو دَاوُدَ: هَذَا اخْتِصَارٌ مِنَ الْحَدِيثِ الْأَوَّلِ
[حكم
الألباني] : صحيح
192.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
இரு செயல் முறைகளில் இறுதியானது (நெருப்பில்) சமைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதினால்
உலூ செய்யாமலிருப்பது தான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்
(ரலி) அவர்கள்.
இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தரம் : ஸஹீஹ்
193-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي
كَرِيمَةَ قَالَ ابْنُ السَّرْحِ: ابْنُ أَبِي كَرِيمَةَ مِنْ خِيَارِ
الْمُسْلِمِينَ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ بْنُ ثُمَامَةَ الْمُرَادِيُّ، قَالَ:
قَدِمَ عَلَيْنَا مِصْرَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ جَزْءٍ مِنْ
أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ
فِي مَسْجِدِ مِصْرَ، قَالَ: لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ أَوْ سَادِسَ
سِتَّةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارِ رَجُلٍ،
فَمَرَّ بِلَالٌ فَنَادَاهُ بِالصَّلَاةِ، فَخَرَجْنَا فَمَرَرْنَا بِرَجُلٍ
وَبُرْمَتُهُ عَلَى النَّارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «أَطَابَتْ بُرْمَتُكَ»، قَالَ: نَعَمْ، بِأَبِي أَنْتَ وَأُمِّي
فَتَنَاوَلَ مِنْهَا بَضْعَةً، فَلَمْ يَزَلْ يَعْلُكُهَا حَتَّى أَحْرَمَ
بِالصَّلَاةِ، وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ
[حكم
الألباني] : ضعيف
193.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில்
எங்களிடம் வருகையளித்தனர். எகிப்திய பள்ளிவாயிலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது
நான் செவியுற்றேன். அவர் கூறலானார்: ஒருவரது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
நாங்கள் ஆறேழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் வந்து
அவர்களை தொழுகைக்கு அழைத்தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில் (அடுப்பில்)
வைத்திருந்த ஒருவருக்கருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனது
சமையல் ஆகிவிட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம்! எனது
தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! என்று பதிலளித்தார். அதிலிருந்து அவர்கள்
ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மெண்று கொண்டிருந்தார்கள்.
நான் அவர்களையே உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: உபைத் பின் சுமாமா அல்முராதீ
அவர்கள்.
தரம் : ளயீப்
(75) باب التَّشْدِيدِ فِي ذَلِكَ
பாடம்: 75 சமைத்ததை சாப்பிட்டால் உலூச் செய்ய வேண்டும்
என்று வலியுறுத்துதல்
194-حَدَّثَنَا
مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ
حَفْصٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوُضُوءُ مِمَّا أَنْضَجَتِ النَّارُ»
[حكم
الألباني] : صحيح
194.நெருப்பில் சமைத்த(தை சாப்பிடுவ)தினால்
உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தரம் : ஸஹீஹ்
195-حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى يَعْنِي ابْنَ
أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ سَعِيدِ بْنِ
الْمُغِيرَةِ، حَدَّثَهُ أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَسَقَتْهُ قَدَحًا
مِنْ سَوِيقٍ، فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي أَلَا
تَوَضَّأُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا
مِمَّا غَيَّرَتِ النَّارُ» أَوْ قَالَ: «مِمَّا مَسَّتِ النَّارُ»، قَالَ أَبُو
دَاوُدَ: فِي حَدِيثِ الزُّهْرِيِّ يَا ابْنَ أَخِي
[حكم
الألباني] : صحيح
195.அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா
அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவரை உம்முஹபீபா (ரலி) அவர்கள்
(மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் (பருகியதும்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி
வாய்க் கொப்பளித்தார்கள். அப்போது உம்முஹபீபா (ரலி) அவர்கள் 'எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா?
நபி (ஸல்) அவர்கள், நெருப்பில் சமைத்த பொருள் உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று
சொன்னார்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலாமா (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(76) باب فِي الْوُضُوءِ مِنَ اللَّبَنِ
பாடம்: 76 பால் பருகியதும் உலூச் செய்தல்
196-حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ
الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ
فَتَمَضْمَضَ، ثُمَّ قَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»
[حكم
الألباني] : صحيح
196. நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள்.
பிறகு தண்ணீர் கொண்டு வரச்செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு இது கொழுப்பு அடங்கியது
என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
(77) باب الرُّخْصَةِ فِي ذَلِكَ
பாடம்: 77 பால் பருகியதும் உலூச் செய்யாமலிருக்க அனுமதி
197-حَدَّثَنَا
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ زَيْدِ بْنِ الْحُبَابِ، عَنْ مُطِيعِ بْنِ
رَاشِدٍ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ،
يَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا،
فَلَمْ يُمَضْمِضْ وَلَمْ يَتَوَضَّأْ وَصَلَّى»، قَالَ زَيْدٌ: دَلَّنِي شُعْبَةُ
عَلَى هَذَا الشَّيْخِ
[حكم
الألباني] : حسن
197.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பால் பருகினார்கள். ஆனால் வாய்க் கொப்பளிக்காமலும், உலூச் செய்யாமலும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள்.
இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான ஜைத்
அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீபின் ராஷித் என்பாரை பற்றி பின்வருமாறு
கூறுகிறார்: 'எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர்
ஷுஃபா ஆவார்.
தரம் : ஹஸன்
(78) باب الْوُضُوءِ مِنَ الدَّمِ
பாடம்: 78 இரத்தம் வெளிப்படுவதால் உலூ நீங்குமா?
198-حَدَّثَنَا
أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ
مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، عَنْ عَقِيلِ بْنِ
جَابِرٍ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ - يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ - فَأَصَابَ رَجُلٌ
امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ، فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى
أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ [ص: 51] مُحَمَّدٍ، فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَقَالَ: مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا؟ فَانْتَدَبَ
رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «كُونَا بِفَمِ
الشِّعْبِ»، قَالَ: فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ
الْمُهَاجِرِيُّ، وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ، وَأَتَى الرَّجُلُ فَلَمَّا
رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ، فَرَمَاهُ بِسَهْمٍ
فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ، حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ، ثُمَّ رَكَعَ
وَسَجَدَ، ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ، فَلَمَّا عَرَفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا
بِهِ هَرَبَ، وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدَّمِ،
قَالَ: سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى، قَالَ: كُنْتَ
فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا
[حكم
الألباني] : حسن
198.'தாத ரிகாஃ' என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்)
ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய
தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டான். எனவே
அவன் நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவற்றை தொடரலானான். நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கலானார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார்? என வினவினார்கள். முஹாஜிரீன்களில் ஒருவரும்
அன்சாரிகளில் ஒருவரும் பதிலளித்ததும் நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து
கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்கு
சென்றதும் முஹாஜிரித் தோழர் படுத்துக் கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார்.
(சபதம் செய்த அம்மனிதன் வந்து விட்டான் அவன் (தொழுகின்ற) அவரின் தோற்றத்தை கண்டதும்
அவர் அக்கூட்டத்தின் காவலாளர் என்று விளங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பெய்தான்.
அதை அவர் மேல் (குறி தவறாது) விழச் செய்தான். அதை அவர் கழற்றி விட்டார். இவ்வாறு அவன்
மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும் வரை (அவர் அவற்றை கழற்றி விட்டார்) பிறகு ருகூஃ
செய்து சஜ்தா செய்தார். பிறகு அவரது தோழர் தூங்கி எழுந்தார். அவர்கள் விழிப்படைந்து
விட்டார்கள் என்று (எதிரி) அவன் புரிந்து கொண்டதும் பயந்தோடி விட்டான். அன்சாரித் தொழரின்
இரத்தக் காட்சியை முஹாஜிர் தோழர் கண்ட போது 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூய்மையானவன்) அவன் அம்பெய்த
ஆரம்பத்திலேயே என்னை எழுப்பியிருக்கக் கூடாதா என்று வினவினார். அதற்கு அவர் நான் ஓதிக்
கொண்டிருந்த சூராவில் (அத்தியாயத்தில்) ஆழ்ந்து விட்டேன். அதை நான் துண்டிக்க விரும்பவில்லை
என்று அவர் பதில் சொன்னார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள்.
தரம் : ஹஸன்
(79) باب الْوُضُوءِ مِنَ النَّوْمِ
பாடம்: 79 உறங்குவதால் உலூ நீங்குமா?
199-حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ،
حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي نَافِعٌ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ
عُمَرَ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ
عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ
اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ
خَرَجَ عَلَيْنَا، فَقَالَ: «لَيْسَ أَحَدٌ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ»
[حكم
الألباني] : صحيح
199.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் இரவில்
(ஒரு முக்கிய பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர்கள் இஷாவை பிற்படுத்தி
விட்டார்கள். எந்த அளவுக்கெனில் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்று, 'உங்களைத் தவிர யாரும் தொழுகைக்காக காத்திருப்பவர்கள்
யாருமில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
200-حَدَّثَنَا
شَاذُّ بْنُ فَيَّاضٍ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ،
عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَنْتَظِرُونَ الْعِشَاءَ الْآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ،
ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»، قَالَ أَبُو دَاوُدَ: زَادَ فِيهِ
شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: كُنَّا نَخْفِقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ
قَتَادَةَ بِلَفْظٍ آخَرَ
[حكم
الألباني] : صحيح
200.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவிற்கு எதிர் பார்த்துக்
கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில்
நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக கதாதா அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்.
இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
இதை இப்னு அபீ அரூபா என்பவர் கதாதா
அவர்களிடமிருந்து வேறொரு உரைநடையில் அறிவிக்கின்றார்.
தரம் : ஸஹீஹ்
201-حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ
بْنُ سَلَمَةَ [ص: 52] ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ،
قَالَ: أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ
اللَّهِ إِنَّ لِي حَاجَةً، «فَقَامَ يُنَاجِيهِ حَتَّى نَعَسَ الْقَوْمُ، أَوْ
بَعْضُ الْقَوْمِ، ثُمَّ صَلَّى بِهِمْ وَلَمْ يَذْكُرْ وُضُوءًا»
[حكم
الألباني] : صحيح
201.இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது.
அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு
ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு
துயில் கொள்ளும் வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து
அறிவிப்பவர் சாபித் அல்புனானீ ஆவார். இவர் உலூவைப் பற்றி இதில் குறிப்பிடவில்லை.
தரம் : ஸஹீஹ்
202-حَدَّثَنَا
يَحْيَى بْنُ مَعِينٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، وَعُثْمَانُ بْنُ أَبِي
شَيْبَةَ، عَنْ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَهَذَا لَفْظُ حَدِيثِ يَحْيَى
عَنْ أَبِي خَالِدٍ الدَّالَانِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ يَسْجُدُ وَيَنَامُ وَيَنْفُخُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلَا
يَتَوَضَّأُ، قَالَ: فَقُلْتُ لَهُ: صَلَّيْتَ وَلَمْ تَتَوَضَّأْ وَقَدْ نِمْتَ،
فَقَالَ: «إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا»، زَادَ عُثْمَانُ،
وَهَنَّادٌ: فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ، قَالَ أَبُو
دَاوُدَ: قَوْلُهُ: «الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا» هُوَ حَدِيثٌ
مُنْكَرٌ لَمْ يَرْوِهِ إِلَّا يَزِيدُ أَبُو خَالِدٍ الدَّالَانِيُّ، عَنْ
قَتَادَةَ وَرَوَى أَوَّلَهُ جَمَاعَةٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَلَمْ يَذْكُرُوا
شَيْئًا مِنْ هَذَا، وَقَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَحْفُوظًا
وَقَالَتْ عَائِشَةُ
رَضِيَ اللَّهُ عَنْهَا: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَنَامُ عَيْنَايَ وَلَا يَنَامُ قَلْبِي»، وَقَالَ شُعْبَةُ: إِنَّمَا سَمِعَ
قَتَادَةُ، مِنْ أَبِي الْعَالِيَةِ أَرْبَعَةَ أَحَادِيثَ: حَدِيثَ يُونُسَ بْنِ
مَتَّى، وَحَدِيثَ ابْنِ عُمَرَ فِي الصَّلَاةِ، وَحَدِيثَ الْقُضَاةُ ثَلَاثَةٌ،
وَحَدِيثَ ابْنِ عَبَّاسٍ، حَدَّثَنِي رِجَالٌ مَرْضِيُّونَ مِنْهُمْ عُمَرُ،
وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، قَالَ أَبُو دَاوُدَ: وَذَكَرْتُ حَدِيثَ يَزِيدَ
الدَّالَانِيِّ لِأَحْمَدَ بْنِ حَنْبَلٍ، فَانْتَهَرَنِي اسْتِعْظَامًا لَهُ،
وَقَالَ: «مَا لِيَزِيدَ الدَّالَانِيِّ يُدْخِلُ عَلَى أَصْحَابِ قَتَادَةَ،
وَلَمْ يَعْبَأْ بِالْحَدِيثِ»
[حكم الألباني]
: ضعيف
202.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள்.
பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் 'உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே! என்று வினவினேன்.
'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய
வேண்டும்' என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் 'ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன
(அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
'படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய
வேண்டும்' என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட
ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்க
வில்லை.
இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர். அவர்கள் யசீத் கூறியதிலிருந்து
எதையுமே குறிப்பிடவில்லை.
' நபி (ஸல்) அவர்கள் (உள்ளமும் சேர்ந்து உறங்குவதை விட்டும்) பாதுகாக்கப்பட்டவர்களாவார்கள்'
என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'எனது கண்கள் உறங்கும்,
எனது உள்ளம் உறங்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷுஃபா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
கதாதா அவர்கள் அபுல் ஆலியாவிடமிருந்து
செவியுற்றவை நான்கு ஹதீஸ்களை மட்டும் தான். அவை யூனுஸ் பின் மத்தா அவர்கள் தொடர்பான
ஹதீஸ், தொழுகை தொடர்பான இப்னு உமர் (ரலி) ஹதீஸ்,
நீதிபதிகள் மூவர் என்ற ஹதீஸ், எனக்கு விருப்பமானவர்கள் என்னருகில் உள்ளனர். அவர்களில் உமர்
(ரலி) ஆவார் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கும் ஹதீஸ் ஆகியவையாகும்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
யசீத் அபூகாலித் தாலானியின் ஹதீஸை இமாம்
அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். இதை அவர்கள் மறுக்கும் விதமாக என்னை
கடிந்து கொண்டார்கள். அதோடு கதாதா அவர்களின் அறிவிப்பாளர்கள் கூறாததை அவர்கள் கூறியதாக
அவர்களின் மீது புகுத்திச் சொல்ல யசீத் அபூகாலித் தாலானிக்கு என்ன அவசியம் ஏற்பட்டு
விட்டது? என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள்
இதை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. (காரணம் இது பலவீனமாகும்)
தரம் : ளயீப்
203-حَدَّثَنَا
حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحِمْصِيُّ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا
بَقِيَّةُ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ، عَنْ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ عَائِذٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وِكَاءُ
السَّهِ الْعَيْنَانِ، فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ»
[حكم
الألباني] : حسن
203.'ஆசன வாயின்
கட்டுப்பாடு கண்களாகும். யார் உறங்கி விட்டாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக'
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தரம் : ஹஸன்
(80) باب فِي الرَّجُلِ
يَطَأُ الأَذَى بِرِجْلِهِ
பாடம்: 80 கழிவுப் பொருள்களை காலால் மிதித்தால்!
204-حَدَّثَنَا
هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ، عَنْ أَبِي
مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنِي شَرِيكٌ،
وَجَرِيرٌ، وَابْنُ إِدْرِيسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ: قَالَ عَبْدُ
اللَّهِ: «كُنَّا لَا نَتَوَضَّأُ مِنْ مَوْطِئٍ وَلَا نَكُفُّ شَعْرًا وَلَا
ثَوْبًا»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ: إِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ
فِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ،
قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: وَقَالَ هَنَّادٌ، عَنْ شَقِيقٍ، أَوْ حَدَّثَهُ
عَنْهُ
[حكم
الألباني] : صحيح
204.கழிவுப் பொருள் காலால் மிதி பட்டால்
நாங்கள் உலூச் செய்ய மாட்டோம். (தொழும் போது எங்களுடைய) தலைமுடி, ஆடை (தரையில் விழுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்
(ரலி) அவர்கள்.
தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment