المقدمة
முன்னுரை
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالْعَاقِبَةُ
لِلْمُتَّقِينَ، وَصَلَّى الله عَلَى مُحَمَّدٍ خَاتَمِ النَّبِيِّينَ، وَعَلَى جَمِيعِ
الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ «أَمَّا بَعْدُ، فَإِنَّكَ يَرْحَمُكَ اللهُ بِتَوْفِيقِ
خَالِقِكَ، ذَكَرْتَ أَنَّكَ هَمَمْتَ بِالْفَحْصِ عَنْ تَعَرُّفِ جُمْلَةِ الْأَخْبَارِ
الْمَأْثُورَةِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُنَنِ الدِّينِ
وَأَحْكَامِهِ، وَمَا كَانَ مِنْهَا فِي الثَّوَابِ وَالْعِقَابِ، وَالتَّرْغِيبِ وَالتَّرْهِيبِ،
وَغَيْرِ ذَلِكَ مِنْ صُنُوفِ الْأَشْيَاءِ بِالْأَسَانِيدِ الَّتِي بِهَا نُقِلَتْ،
وَتَدَاوَلَهَا أَهْلُ الْعِلْمِ فِيمَا بَيْنَهُمْ، فَأَرَدْتَ، أَرْشَدَكَ اللهُ
أَنْ تُوَقَّفَ عَلَى جُمْلَتِهَا مُؤَلَّفَةً مُحْصَاةً، وَسَأَلْتَنِي أَنْ أُلَخِّصَهَا
لَكَ فِي التَّأْلِيفِ بِلَا تَكْرَارٍ يَكْثُرُ، فَإِنَّ ذَلِكَ زَعَمْتَ مِمَّا يَشْغَلُكَ
عَمَّا لَهُ قَصَدْتَ مِنَ التَّفَهُّمِ فِيهَا، وَالِاسْتِنْبَاطِ مِنْهَا، وَلِلَّذِي
سَأَلْتَ أَكْرَمَكَ اللهُ حِينَ رَجَعْتُ إِلَى تَدَبُّرِهِ، وَمَا [ص:4] تَؤُولُ
بِهِ الْحَالُ إِنْ شَاءَ اللهُ عَاقِبَةٌ مَحْمُودَةٌ وَمَنْفَعَةٌ مَوْجُودَةٌ، وَظَنَنْتُ
حِينَ سَأَلْتَنِي تَجَشُّمَ ذَلِكَ أَنْ لَوْ عُزِمَ لِي عَلَيْهِ، وَقُضِيَ لِي تَمَامُهُ،
كَانَ أَوَّلُ مِنْ يُصِيبُهُ نَفْعُ ذَلِكَ إِيَّايَ خَاصَّةً قَبْلَ غَيْرِي مِنَ
النَّاسِ لِأَسْبَابٍ كَثِيرَةٍ يَطُولُ بِذِكْرِهَا الْوَصْفُ، إِلَّا أَنَّ جُمْلَةَ
ذَلِكَ أَنَّ ضَبْطَ الْقَلِيلِ مِنْ هَذَا الشَّأْنِ، وَإِتْقَانَهُ، أَيْسَرُ عَلَى
الْمَرْءِ مِنْ مُعَالَجَةِ الْكَثِيرِ مِنْهُ، وَلَا سِيَّمَا عِنْدَ مَنْ لَا تَمْيِيزَ
عِنْدَهُ مَنِ الْعَوَامِّ، إِلَّا بِأَنْ يُوَقِّفَهُ عَلَى التَّمْيِيزِ غَيْرُهُ،
فَإِذَا كَانَ الْأَمْرُ فِي هَذَا كَمَا وَصَفْنَا، فَالْقَصْدُ مِنْهُ إِلَى الصَّحِيحِ
الْقَلِيلِ أَوْلَى بِهِمْ مِنَ ازْدِيَادِ السَّقِيمِ، وَإِنَّمَا يُرْجَى بَعْضُ
الْمَنْفَعَةِ فِي الِاسْتِكْثَارِ مِنْ هَذَا الشَّأْنِ، وَجَمْعِ الْمُكَرَّرَاتِ
مِنْهُ لِخَاصَّةٍ مِنَ النَّاسِ مِمَّنْ رُزِقَ فِيهِ بَعْضُ التَّيَقُّظِ، وَالْمَعْرِفَةِ
بِأَسْبَابِهِ وَعِلَلِهِ، فَذَلِكَ إِنْ شَاءَ اللهُ يَهْجُمُ بِمَا أُوتِيَ مِنْ
ذَلِكَ عَلَى الْفَائِدَةِ فِي الِاسْتِكْثَارِ مِنْ جَمْعِهِ، فَأَمَّا عَوَامُّ النَّاسِ
الَّذِينَ هُمْ بِخِلَافِ مَعَانِي الْخَاصِّ مِنْ أَهْلِ التَّيَقُّظِ وَالْمَعْرِفَةِ،
فَلَا مَعْنَى لَهُمْ فِي طَلَبِ الْكَثِيرِ، وَقَدْ عَجَزُوا عَنْ مَعْرِفَةِ الْقَلِيلِ»
ثُمَّ إِنَّا إِنْ شَاءَ اللهُ مُبْتَدِئُونَ
فِي تَخْرِيجِ مَا سَأَلْتَ وَتَأْلِيفِهِ، عَلَى شَرِيطَةٍ سَوْفَ أَذْكُرُهَا لَكَ،
وَهُوَ إِنَّا نَعْمِدُ إِلَى جُمْلَةِ مَا أُسْنِدَ مِنَ الْأَخْبَارِ عَنْ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَقْسِمُهَا عَلَى ثَلَاثَةِ أَقْسَامٍ،
وَثَلَاثِ طَبَقَاتٍ مِنَ النَّاسِ عَلَى غَيْرِ تَكْرَارٍ، إِلَّا أَنْ يَأْتِيَ مَوْضِعٌ
لَا يُسْتَغْنَى فِيهِ عَنْ تَرْدَادِ حَدِيثٍ فِيهِ زِيَادَةُ مَعْنًى، أَوْ إِسْنَادٌ
يَقَعُ إِلَى جَنْبِ إِسْنَادٍ، لِعِلَّةٍ تَكُونُ هُنَاكَ، لِأَنَّ الْمَعْنَى الزَّائِدَ
فِي الْحَدِيثِ الْمُحْتَاجَ [ص:5] إِلَيْهِ يَقُومُ مَقَامَ حَدِيثٍ تَامٍّ، فَلَا
بُدَّ مِنْ إِعَادَةِ الْحَدِيثِ الَّذِي فِيهِ مَا وَصَفْنَا مِنَ الزِّيَادَةِ، أَوْ
أَنْ يُفَصَّلَ ذَلِكَ الْمَعْنَى مِنْ جُمْلَةِ الْحَدِيثِ عَلَى اخْتِصَارِهِ إِذَا
أَمْكَنَ، وَلَكِنْ تَفْصِيلُهُ رُبَّمَا عَسُرَ مِنْ جُمْلَتِهِ، فَإِعَادَتُهُ بِهَيْئَتِهِ
إِذَا ضَاقَ ذَلِكَ أَسْلَمُ، فَأَمَّا مَا وَجَدْنَا بُدًّا مِنْ إِعَادَتِهِ بِجُمْلَتِهِ
مِنْ غَيْرِ حَاجَةٍ مِنَّا إِلَيْهِ، فَلَا نَتَوَلَّى فِعْلَهُ إِنْ شَاءَ اللهُ
تَعَالَى " فَأَمَّا الْقِسْمُ الْأَوَّلُ، فَإِنَّا نَتَوَخَّى أَنْ نُقَدِّمَ
الْأَخْبَارَ الَّتِي هِيَ أَسْلَمُ مِنَ الْعُيُوبِ مِنْ غَيْرِهَا، وَأَنْقَى مِنْ
أَنْ يَكُونَ نَاقِلُوهَا أَهْلَ اسْتِقَامَةٍ فِي الْحَدِيثِ، وَإِتْقَانٍ لِمَا نَقَلُوا،
لَمْ يُوجَدْ فِي رِوَايَتِهِمْ اخْتِلَافٌ شَدِيدٌ، وَلَا تَخْلِيطٌ فَاحِشٌ، كَمَا
قَدْ عُثِرَ فِيهِ عَلَى كَثِيرٍ مِنَ الْمُحَدِّثِينَ، وَبَانَ ذَلِكَ فِي حَدِيثِهِمْ
எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியது.
இறையச்சமுடையவர்களுக்கே இறுதி முடிவு (சாதகமாய்) அமையும். இறுதி இறைத் தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களுக்கும் இதர (இறைத்தூதர்களான) நபிமார்கள், ரசூல்மார்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
இறை வாழ்த்துக்குப் பின்!
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வழிவழியாக எடுத்துரைக்கப்பட்டுவரும்
மார்க்க வழிமுறைகள், சட்ட திட்டங்கள், அவற்றிலுள்ள(படி செயல்படுவதால்
கிடைக்கப் பெறும்) நற்பலன்கள், (கைவிடுவதால் ஏற்படும்) தண்டனைகள், ஆர்வமூட்டுகின்றவை, எச்சரிக்கின்றவை ஆகிய பலதரப்பட்ட
நபிமொழிகளை, அந்தத் துறை அறிஞர்கள்
கையாண்டுவரும் அறிவிப்பாளர் தொடர்களுடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஆய்வு செய்ய வேண்டுமென
-இறை நாட்டப்படி- நீங்கள் விரும்பினீர்கள்.1
அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டுவானாக!
அவற்றில் எதுவும் விடுபடாமல் அனைத்தும் ஒரே தொகுப்பாய்த் திரட்டப்பட வேண்டும் என்றும்
நீங்கள் விரும்பினீர்கள். அத்தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிகளை, அதிகமாகத் திரும்பக் கூறாமல்
நான் விளக்கிட வேண்டும் எனவும் என்னிடம் கோரினீர்கள். அவ்வாறு, கூறியதைத் திரும்பக் கூறுவது, நபிமொழிகளிலிருந்து எதை
விளங்கிக் கொள்ளவும் கணிக்கவும் நீங்கள் எண்ணுகிறீர்களோ அதிலிருந்து உங்கள் கவனத்தைத்
திசை திருப்பிவிடும் என்றும் கூறினீர்கள்.
அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்துவானாக!
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இப்பணி குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் ஆழமாக யோசித்துப் பார்த்தேன்.
அல்லாஹ் நாடினால், இதன் மூலம் இம்மைப் பயனும்
மறுமைப் பரிசும் கிடைக்கும் (என்ற முடிவுக்கு வந்தேன்).
இந்தக் கடினமான பணியை ஏற்குமாறு என்னிடம் நீங்கள் கோரியபோது நான் எண்ணிப் பார்த்தேன்:
ஒருகால் இப்பணியை மேற் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து, அதை நான் நிறைவு செய்வேன்
என விதியில் எழுதப் பெற்றிருந்தால், மற்ற யாரையும்விட அதனால் பயனடையும் முதல் ஆள் நானாகவே இருப்பேன். இதற்குப் பல காரணங்கள்
உள்ளன. விரிவை அஞ்சிச் சுருக்கமாகக் கூறுகிறேன்:
அதிக எண்ணிக்கையிலான ஹதீஸ்களை எடுத்தாள்வதை விடக் குறைந்த ஹதீஸ்களை மனனமிடுவதும்
பாதுகாப்பதும்தான் மக்களுக்கு சுலபமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, பகுப்பாற்றல் இல்லாத, பிறர் உணர்த்தினால் தவிர
பாகுபடுத்திப் பார்க்க இயலாத பாமரர்களுக்கு இதுவே உகந்ததாகும். இதுதான் இந்தத் துறையின்
யதார்த்தம் என்றாகிவிட்ட பின், ஆதாரமற்றதை அதிகமாகக் கூறுவதை விடுத்துக் குறைவே ஆனாலும் சரியானதைக் கூறுவதே மக்களுக்கு
ஏற்றதாகும்.
இந்த வகை ஹதீஸ்களை அதிகமாக அறிவிப்பதாலும், கூறியதையே திரும்பக் கூறுவதாலும் மக்களில் சிலருக்கு வேண்டுமானால் ஒரு சில நன்மைகள்
பயக்கலாம். ஹதீஸ் கலையில் ஓரளவு ஞானமும் காரண காரியங்கள் பற்றிய அறிவும் உள்ள அவர்கள்
வேண்டுமானால் அதிகமான நபிமொழிகளைத் திரட்டுவதனால் கிடைக்கும் பலனை -அல்லாஹ் நாடினால்-
அடைந்து கொள்ளக்கூடும். அதே நேரத்தில், இதற்கு மாற்றமான நிலையில் உள்ள சாமானிய மக்கள் அதிக எண்ணிக்கையில் நபிமொழிகளைத்
தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகும். அவர்களால் குறைந்த
அளவை அறிவதே இயலாத காரியமல்லவா?
இனி -அல்லாஹ் நாடினால்- நீங்கள் கேட்டுக்கொண்டபடி நபிமொழிகளைப் பதிவு செய்து தொகுத்து
வழங்கப் போகிறோம். ஆனால்,
ஒரு நிபந்தனை. அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள
செய்திகளை மூன்று வகைகளாகவும், அவற்றின் அறிவிப்பாளர்களை மூன்று தரத்தினராகவும் பிரித்திருக்கிறோம்.2 அவசியம்
ஏற்பட்டால் தவிர திரும்பக் கூறலைத் தவிர்த்துள்ளோம். எந்த இடத்தில் ஒரு ஹதீஸைத் திரும்பக்
கூறுவதால் மட்டுமே கூடுதல் பொருள் கிடைக்குமோ, அல்லது
ஓர் அறிவிப்பாளர் தொடரை ஒட்டி மற்றோர் அறிவிப்பாளர் தொடரையும் சேர்த்துக் கூறுவதால்
கூடுதல் பலம் கிட்டுமோ அந்த இடத்தில் மட்டும் திரும்பக் கூறியுள்ளோம்.
ஏனெனில், ஒரு ஹதீஸில் கிடைக்கின்ற
அவசியமான கூடுதல் பொருள்,
ஒரு தனியான ஹதீஸின் அந்தஸ்தைப் பெறும். ஆகவே, அந்தக் கூடுதல் அம்சத்திற்காக அந்த ஹதீஸையே திரும்பக் கூறவேண்டிய கட்டாயம் நேருகிறது.
அல்லது சாத்தியப்படுமானால்,
முழு ஹதீஸிலிருந்து தேவையான பகுதியை மட்டும் பிரித்துச் சுருக்கி வழங்கியுள்ளோம்.
இருப்பினும், அவ்வாறு பிரிப்பது சில
இடங்களில் கடினம். அப்போது முழு ஹதீஸை அப்படியே திருப்பிக் கூறுவதுதான் பொருத்தமாயிருக்கும்.
ஆக, அவசியமில்லாமல் திரும்பக்
கூறுகின்ற வேலையை நாம் செய்ய மாட்டோம், இன்ஷா அல்லாஹ்.
முதல் வகை: (அறிவிப்பாளர் தொடரில்) குறைபாடுகள் ஏதுமில்லாத, சந்தேகத்திற்கப்பாற்பட்ட
ஹதீஸ்களுக்கு முதலிடம் அளிக்க முனைந்துள்ளோம். அதன் அறிவிப்பாளர்கள் ஹதீஸ் துறையில்
புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களாவர். பெரும்பாலான நபிமொழி இயலாரின் அறிவிப்புகளில்
வெளிப்படையாகக் காணப்படுவதைப் போன்று, இவர்களின் அறிவிப்புகளில் பலத்த வேறுபாடோ, மோசமான கலப்போ இராது.
(இரண்டாம் வகை:) இந்த முதல்
வகை ஹதீஸ்களை முழுமையாக நாம் இடம்பெறச் செய்த பின் (இரண்டாம் வகையைச் சேர்ந்த) சில
ஹதீஸ்களை அடுத்து இடம்பெறச் செய்வோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்களில் சிலர்
இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் முதல் வகை அறிவிப்பாளர்களைப் போன்று நினைவாற்றலும்
பாண்டித்தியமும் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். தரத்தில் அவர்களைவிட இவர்கள் குறைந்தவர்களாக
இருப்பினும், நாணயத்திற்கெதிரான எந்தக்
குறையும் இவர்களிடம் வெளிப்படையாகக் காணப்படவில்லை. மேலும் உண்மை, கல்வியாற்றல் ஆகிய தகுதிகள்
இவர்களிடமும் உண்டு.
அதாஉ பின் அஸ்ஸாயிப் (ரஹ்),3 யஸீத் பின் அபீஸியாத் (ரஹ்),4 லைஸ் பின் அபீசுலைம் (ரஹ்)5 போன்ற அறிவிப்பாளர்களை இரண்டாம் வகையினருக்கு எடுத்துக்காட்டுகளாகக்
கூறலாம். இவர்கள் கல்வி,
குறையின்மை ஆகிய தகுதிகளில் அறிஞர்களிடையே அறியப்பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது
உண்மையே. ஆனாலும், சம காலத்தவர்களில் நினைவாற்றலிலும்
புலமையிலும் இவர்களைவிட முதல் வகையினரே தரத்தில் உயர்ந்தவர்களாக விளங்கினர். ஏனெனில், நினைவாற்றலும் புலமையும்தான்
கல்வியாளர்களிடம் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. (இதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமுண்டு.)
மேலே குறிப்பிட்ட மூவரோடு மற்ற மூவரை ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்; உண்மை புரியும். அதாஉ, யஸீத், லைஸ் (ரஹ்) ஆகிய அந்த மூவரையும்
மன்ஸூர் பின் அல்முஃதமிர் (ரஹ்),6 சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்),7 இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்)8 ஆகியோருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஹதீஸை உறுதியுடன் மனனமிட்டு
அறிவிப்பதில் இரு குழுவினரிடையே வேறுபாடு இருப்பதைக் காணலாம். இந்த விஷயத்தில் இவர்களை
அவர்கள் நெருங்கவே முடியாது.
இதில் நபிமொழி இயல் மேதைகளிடையே எந்த ஐயமும் கிடையாது. ஏனெனில், மன்ஸூர் (ரஹ்), அஃமஷ் (ரஹ்), இஸ்மாயீல் பின் அபீ காலித்
(ரஹ்) ஆகியோரின் சீரான நினைவாற்றலும் அவர்களுடைய அறிவிப்புகளில் அவர்களுக்கிருந்த உறுதிப்பாடும்
நபிமொழி இயல் அறிஞர்களிடையே பிரசித்தி பெற்றவையாகும். ஆனால், இதைப் போன்ற நிலையை அதாஉ
(ரஹ்), யஸீத் (ரஹ்), லைஸ் (ரஹ்) ஆகியோரிடம்
அவர்கள் காணவில்லை.
இதே நிலைதான் இப்னு அவ்ன் (ரஹ்),9 அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்)10 ஆகியோரை, அவர்களுடைய சம காலத்தவர்களான அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்),11 அஷ்அஸ் அல்ஹும்ரானீ
(ரஹ்)12 ஆகியோருடன் ஒப்பிடும்போதும் காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஹசன் அல்பசரி
(ரஹ்),13 இப்னு சீரீன் (ரஹ்)14
ஆகியோருடைய மாணவர்கள் தாம். இருப்பினும், சிறப்பிலும் சீரான அறிவிப்பிலும் அவர்களிடையே இடைவெளி உண்டு. இத்தனைக்கும் அவ்ஃப்
பின் அபீஜமீலா (ரஹ்) அவர்களும் அஷ்அஸ் (ரஹ்) அவர்களும் கல்வியாளர் மத்தியில் உண்மை
மற்றும் நம்பகத் தன்மை ஆகியவற்றில் தட்டிக் கழிக்கப்பட்டவர்கள் அல்லர். ஆயினும், ஏற்கெனவே நாம் குறிப்பிட்டதைப்
போன்று நினைவாற்றல் தான் கல்வியாளர்களிடம் சிறப்புக்கு அளவு கோலாகும்.
எடுத்துக்காட்டாக இவர்களுடைய பெயர்களை நாம் குறிப்பிட்டதற்குக் காரணம், நபிமொழி அறிவிப்பாளர்களை
வரிசைப் படுத்தும்போது கல்வியாளர்கள் எந்த வழியைக் கையாள்கிறார்கள் என்று அறியாத சிலருக்கு
இது ஓர் அடையாளமாக இருக்கட்டும் என்பதேயாகும். ஆக, இந்தத் துறையில் உயர் இடத்தை வகிக்கும் ஒருவர் அவரது தகுதியிலிருந்து இறக்கப்பட்டு
விடவும் கூடாது; கீழ்நிலையிலுள்ள ஒருவர்
அவரது தகுதிக்கு மேலே உயர்த்தப் பட்டுவிடவும் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரது தகுதியும்
மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். (இதுதான் நமது நோக்கமாகும்.)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: நாங்கள் மக்களுக்கு அவரவரது
அந்தஸ்தை அளித்திட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
குர்ஆனும் இதையே கூறுகிறது: கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே (அவர்களைவிட) அறிந்தவன்
ஒருவன் இருக்கின்றான் (12:76).
ஆக, மேலே நாம் குறிப்பிட்ட
முறைப்படி நீங்கள் கேட்டுக்கொண்ட ஹதீஸ்களை (இந்நூலில்) தொகுத்து வழங்க உள்ளோம்.
(மூன்றாம் வகை:) நபிமொழி
இயலார் அனைவரால், அல்லது அநேகரால் சந்தேகத்திற்குரியவர்களாகக்
கருதப்படுவோர் அறிவித்துள்ள ஹதீஸ்கள் மூன்றாம் வகையாகும். இத்தகையோரின் ஹதீஸ்களை இங்கு
நாம் பதிவு செய்யப்போவதில்லை. இந்த வகையினருக்கு
அப்துல்லாஹ் பின் மிஸ்வர் அபீஜஅஃபர் அல்மதாயினீ,
அம்ர் பின் காலித்,
அப்துல் குத்தூஸ் அஷ்ஷாமீ,
முஹம்மத் பின் சயீத் அல்மஸ்லூப்,
ஃகியாஸ் பின் இப்ராஹீம்,
சுலைமான் பின் அம்ர் அபீதாவூத் அந்நகஈ
போன்றோரை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.
இவர்கள் அனைவரும் ஹதீஸ்களைப் புனைந்து இட்டுக்கட்டிக் கூறுபவர்களாய் இருந்தனர்.
(எனவே, இத்தகையோர் வழியாக அறிவிக்கப்பெற்ற
ஹதீஸ்களை நாம் இந்நூலில் இடம்பெறச் செய்ய மாட்டோம்.) அவ்வாறே, யார் அறிவிக்கும் ஹதீஸில்
பெரும்பாலும் தவறோ மறுப்போ இருக்குமோ அவர்களின் ஹதீஸ்களையும் நாம் தொடமாட்டோம்.
ஒருவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், அவரது அறிவிப்பை நல்ல நினைவாற்றலும்
நற் பெயருமுடைய மற்றவர்களின் அறிவிப்போடு ஒத்துப்பார்த்தால், அவர்களது அறிவிப்புக்கு
இவருடைய அறிவிப்பு முரண்படும்; அல்லது அதனுடன் இது அநேகமாக ஒத்துப்போகாது. (சிறிதளவே ஒத்திருக்கும்.) ஒருவர் அறிவிக்கும்
ஹதீஸில் பெரும்பாலானது இந்நிலையில் இருந்தால், அவரது ஹதீஸ் ஏற்கப்படாது; எடுத்தாளப்படாது; மாறாக, அது கைவிடப்படும்.
அப்துல்லாஹ் பின் முஹர்ரர்,
யஹ்யா பின் அபீஉனைசா,
ஜர்ராஹ் பின் அல்மின்ஹால் அபுல் அத்தூஃப்,
அப்பாத் பின் கஸீர்,
ஹுசைன் பின் அப்தில்லாஹ் பின் ளுமைரா,
உமர் பின் சுஹ்பான்
போன்றோர் மறுக்கப்பட்ட இவ்வகை அறிவிப்பாளர்களில் அடங்குவர். எனவே, இத்தகையோரின் அறிவிப்புகளையும்
இவர்களைப் போன்ற மறுக்கப்பட்ட (முன்கர்) ஹதீஸ்களை அறிவிப்பவர்களின் ஹதீஸ்களையும் நாம்
பொருட்படுத்த மாட்டோம்; அவற்றில் கவனம் செலுத்த
மாட்டோம்.
ஏனெனில், தனிநபர் ஒருவர் அறிவிக்கும்
ஹதீஸ் ஏற்கப்பட வேண்டுமாயின் கல்வியறிவும் நினைவாற்றலும் மிக்க நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களின்
அறிவிப்புக்கு அவருடைய அறிவிப்பு ஒரு சில விஷயங்களிலோ அல்லது முழுவதுமாகவோ ஒத்துப்போக
வேண்டும். இவ்வாறு அவரது அறிவிப்பு முரண்படாத பட்சத்தில் அவர் தம் சக அறிவிப்பாளர்களை
விட அதிகப்படியாக ஏதேனும் அறிவித்தால் அதுவும் ஏற்கப்படும்.
இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்),15 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்)16 போன்றோர் (இத்துறையில்) மதிப்புக்குரியவர்கள் ஆவர்.
அதிக எண்ணிக்கையிலான அவர்களுடைய மாணவர்கள் நல்ல நினைவாற்றல் மிக்கவர்களாகவும், அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களையும்
மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களையும் உறுதிப்பட அறிவிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய
ஹதீஸ்கள் கல்வியாளரிடையே பரவலாகவும் விரிவாகவும் பேசப்படுகின்றன. அவர்களிடமிருந்து
அவர்களுடைய மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன; முரண்படுவதில்லை. இந்நிலையில், அவ்விருவரிடமிருந்தோ, அல்லது ஒருவரிடமிருந்தோ
சில ஹதீஸ்களை ஒருவர் அறிவிக்கிறார். அவை அவர்களுடைய மாணவர்களில் எவருக்கும் தெரியவுமில்லை; அவர்களிடமுள்ள சரியான ஹதீஸ்களுக்கு
உடன்படவுமில்லை என்றால்,
இந்த வகை ஹதீஸ்களை ஏற்கக் கூடாது.
இதுவரை நாம் நபிமொழி இயல் கொள்கைகள் சிலவற்றை விவரித்தோம். இத்துறை அறிஞர்கள் வழியில்
நடக்க விரும்புவோருக்கு இந்த விளக்கம் போதும். இனி அல்லாஹ் நாடினால், சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள்
இடம்பெறும் இடங்களில் தேவையான விளக்கங்களை ஆங்காங்கே அளிப்போம்.
அடுத்து -அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!-
தம்மை ஹதீஸ் அறிவிப்பாளர் என்று காட்டிக் கொள்வோரில் பலர் ஒரு விஷயத்தை நன்கறிந்து
வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதாவது அவர்கள் அப்பாவி மக்களுக்கு அறிவிக்கும் ஹதீஸ்களில் பெரும்பாலானவை நிராகரிப்பட்டவையும்
திருப்தியற்றோரிடமிருந்து அறிவிக்கப்படுபவையும் ஆகும். மாலிக் பின் அனஸ் (ரஹ்),17 ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்
(ரஹ்),18 சுஃப்யான் பின் உயைனா
(ரஹ்),19 யஹ்யா பின் சயீத் அல்கத்தான்
(ரஹ்),20 அப்துர் ரஹ்மான் பின்
மஹ்தீ (ரஹ்)21 போன்ற நபிமொழி வல்லுநர்கள் யாரிடமிருந்து அறிவிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார்களோ
அவர்களிடமிருந்தே தாங்கள் ஹதீஸ்களை அறிவிப்பதாக இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பலவீனமான
ஹதீஸ்களையும் மறுக்கப்பட்ட அறிவிப்புகளையும் கைவிட்டு, உண்மை, நாணயம் ஆகியவற்றில் பெயர்
பெற்ற நம்பத் தகுந்தோர் அறிவித்துள்ள பிரபலமான சரியான தகவல்களை மட்டுமே அறிவிப்பது
இவர்களின் கடமையாயிருக்க,
அதில் முறை தவறி நடந்து கொள்கிறார்கள்.
இந்நிலையை நாம் கண்டதால்தான் நீங்கள் கோரியபடி ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் காட்டிச்
சரியானவற்றைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று. பலவீனமானதும் அறியப்படாததுமான
அறிவிப்பாளர் தொடர்களில் வரும் மறுக்கப்பட்ட செய்திகளை, அவற்றின் குறைகளைக் கண்டறிய முடியா மக்களிடம் அவர்கள் பரப்பி வருவதால்தான் உங்கள்
கோரிக்கையை ஏற்பது நமக்கு எளிதாயிற்று.
1-بَابُ وُجُوبِ الرِّوَايَةِ
عَنِ الثِّقَاتِ، وَتَرْكِ الْكَذَّابِينَ وَالتًحْديِرِ مِن الْكَدِبِ عَلي
رَسُولِ اللَه
பாடம் : 1
நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவிப்பதும் பொய்யர்களின் அறிவிப்புகளைக்
கைவிடுவதும் கட்டாயமாகும் என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் மீது (அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப்) பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள
எச்சரிக்கையும்.
وَاعْلَمْ وَفَّقَكَ اللهُ تَعَالَى أَنَّ الْوَاجِبَ
عَلَى كُلِّ أَحَدٍ عَرَفَ التَّمْيِيزِ بَيْنَ صَحِيحِ الرِّوَايَاتِ وَسَقِيمِهَا،
وَثِقَاتِ النَّاقِلِينَ لَهَا مِنَ الْمُتَّهَمِينَ، أَنْ لَا يَرْوِيَ مِنْهَا إِلَّا
مَا عَرَفَ صِحَّةَ مَخَارِجِهِ، وَالسِّتَارَةَ فِي نَاقِلِيهِ، وَأَنْ يَتَّقِيَ
مِنْهَا مَا كَانَ مِنْهَا عَنْ أَهْلِ التُّهَمِ وَالْمُعَانِدِينَ مِنْ أَهْلِ الْبِدَعِ
، وَالدَّلِيلُ عَلَى أَنَّ الَّذِي قُلْنَا مِنْ
هَذَا هُوَ اللَّازِمُ دُونَ مَا خَالَفَهُ، قَوْلُ اللهُ جَلَّ ذِكْرُهُ: {يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا
بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ} [الحجرات: 6] ، وَقَالَ
جَلَّ ثَنَاؤُهُ: {مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ} [البقرة: 282] ، وَقَالَ
عَزَّ وَجَلَّ: {وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ} [الطلاق: 2] ، فَدَلَّ بِمَا
ذَكَرْنَا مِنْ هَذِهِ الْآيِ أَنَّ خَبَرَ الْفَاسِقِ سَاقِطٌ غَيْرُ مَقْبُولٍ، وَأَنَّ
شَهَادَةَ غَيْرِ الْعَدْلِ مَرْدُودَةٌ، وَالْخَبَرُ وَإِنْ فَارَقَ مَعْنَاهُ مَعْنَى
الشَّهَادَةِ فِي بَعْضِ الْوُجُوهِ، فَقَدْ يَجْتَمِعَانِ فِي أَعْظَمِ مَعَانِيهِمَا،
إِذْ كَانَ خَبَرُ الْفَاسِقِ غَيْرَ مَقْبُولٍ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَمَا أَنَّ
شَهَادَتَهُ مَرْدُودَةٌ عِنْدَ جَمِيعِهِمْ، وَدَلَّتِ السُّنَّةُ عَلَى نَفْيِ رِوَايَةِ
الْمُنْكَرِ مِنَ الْأَخْبَارِ كَنَحْوِ دَلَالَةِ الْقُرْآنِ عَلَى نَفْيِ خَبَرِ
الْفَاسِقِ
وَهُوَ الْأَثَرُ الْمَشْهُورُ عَنْ رَسُولِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يُرَى أَنَّهُ
كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ» .
حَدَّثَنَا أَبُو بَكْرِ
بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، ح وَحَدَّثَنَا أَبُو
بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ أَيْضًا، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، وَسُفْيَانَ،
عَنْ حَبِيبٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ،
قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக!
ஆதாரபூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத் தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ
அவர், தாம் அறிந்த தரமான மற்றும்
நேர்மையான அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்
திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக
இருப்பவர்கள் ஆகியோரால் அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
நாம் கூறிய இக்கருத்தே சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்:
அல்லாஹ் கூறுகின்றான்:
நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்
கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால்
(குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை
பற்றி நீங்களே கவலைப்படுபவர்களாக ஆவீர்கள் (49:6).
அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் விரும்புகின்ற சாட்சிகளில் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சியம் அளிக்க வேண்டும்
(2:282).
உங்களில் இரு நேர்மையாளர்களைச் சாட்சிகளாக வைத்துக் கொள்ளுங்கள் (65:2).
இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும் நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத்தக்கவை
அல்ல என்று தெரிகிறது.
தகவல் அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய
இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில்
அவ்விரண்டும் ஒன்றுபட்டே இருக்கின்றன.
கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின் தகவலும் அவர்கள்
அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக்
காட்டியிருப்பதைப் போன்றே,
மறுக்கப்பட்ட அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.
இது குறித்து பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில்
ஒருவராவார்.
இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி)
அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.
2-بَابُ فِي التَّحْذِيرِ
مِنَ الْكَذِبِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ
பாடம் : 2
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள கண்டனம்.
1-(1)
وَحَدَّثَنَا أَبُو
بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ،
حَدَّثَنَا شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، أَنَّهُ سَمِعَ
عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ يَخْطُبُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «لَا تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ يَكْذِبْ عَلَيَّ يَلِجِ النَّارَ»
1-(1) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார்
பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.
இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
2 - (2) وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ
يَعْنِي ابْنَ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ، أَنَّهُ قَالَ: إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا
كَثِيرًا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ
النَّارِ»
(2)-2.அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ
அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்களை அறிவிக்கவிடாமல்
தடுக்கிறது.
3 - (3) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا
أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ
النَّارِ»
(3)-3.அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ
அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
4 - (4) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنُ نُمَيْرٍ،
حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ
رَبِيعَةَ، قَالَ: أَتَيْتُ الْمَسْجِدَ وَالْمُغِيرَةُ أَمِيرُ الْكُوفَةِ،
قَالَ: فَقَالَ الْمُغِيرَةُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ
مِنَ النَّارِ» وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ
بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ الْأَسَدِيُّ،
عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَلَمْ يَذْكُرْ: «إِنَّ
كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ»
(4)-4.அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது
கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர் மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று.
யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்
கொள்ளட்டும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா
பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (நீங்கள்) என் மீது கூறும்
பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று எனும் குறிப்பு இடம்பெறவில்லை
3 - بَابُ النَّهْيِ
عَنِ الْحَدِيثِ بِكُلِّ مَا سَمِعَ
பாடம் : 3
கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பது கூடாது
وَحَدَّثَنَا
عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، ح وَحَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ
قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ
بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ
يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»
وَحَدَّثَنَا أَبُو
بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ
حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது
5 - (5) وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ
سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: قَالَ
عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ: «بِحَسْبِ الْمَرْءِ مِنَ الْكَذِبِ أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا
سَمِعَ»
(5)-5.உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي أَبُو
الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ،
قَالَ: قَالَ لِي مَالِكٌ: «اعْلَمْ أَنَّهُ
لَيْسَ يَسْلَمُ رَجُلٌ حَدَّثَ بِكُلِّ مَا سَمِعَ، وَلَا يَكُونُ إِمَامًا
أَبَدًا وَهُوَ يُحَدِّثُ بِكُلِّ مَا سَمِعَ»
அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தெரிந்து கொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து)
தப்ப மாட்டார்; கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும்
ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்க மாட்டார் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ:
حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ
اللهِ، قَالَ: «بِحَسْبِ الْمَرْءِ مِنَ
الْكَذِبِ أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பதே அவர் பொய்யர்
என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபுல்அஹ்வஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وَحَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ،
يَقُولُ: «لَا يَكُونُ الرَّجُلُ إِمَامًا
يُقْتَدَى بِهِ حَتَّى يُمْسِكَ عَنْ بَعْضِ مَا سَمِعَ»
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டவற்றில் (சந்தேகத்திற்குரிய)
சிலவற்றையாவது (பிறருக்குத்) தெரிவிப்பதிலிருந்து வாய்மூடாதவரை அவர் பின்பற்றப்படும்
தலைவராக ஆக முடியாது.
இதை முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وَحَدَّثَنَا
يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عُمَرُ بْنُ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ، عَنْ
سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، قَالَ: سَأَلَنِي إِيَاسُ بْنُ مُعَاوِيَةَ، فَقَالَ:
إِنِّي أَرَاكَ قَدْ كَلِفْتَ بِعِلْمِ الْقُرْآنِ، فَاقْرَأْ عَلَيَّ سُورَةً،
وَفَسِّرْ حَتَّى أَنْظُرَ فِيمَا عَلِمْتَ، قَالَ: فَفَعَلْتُ، فَقَالَ لِيَ:
احْفَظْ عَلَيَّ مَا أَقُولُ لَكَ: «إِيَّاكَ
وَالشَّنَاعَةَ فِي الْحَدِيثِ، فَإِنَّهُ قَلَّمَا حَمَلَهَا أَحَدٌ إِلَّا ذَلَّ
فِي نَفْسِهِ، وَكُذِّبَ فِي حَدِيثِهِ»
சுஃப்யான் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள், குர்ஆனைக் கற்பதில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டை நான் அறிவேன். எனவே, குர்ஆனிலுள்ள ஓர் அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி விளக்கமளிப்பீராக! நீங்கள் கற்றதை
நான் (சரி) பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்.
அப்போது அவர்கள் என்னிடம் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: நிராகரிக்கப்பட்ட செய்திகளைக் கூற வேண்டாமென
உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அச்செய்திகளைக் கூறித் திரிகின்றவர்
இழிவடையாமலும் பொய்யர் என இனங்காணப்படாமலும் இருத்தல் அரிது என்றார்கள்.
وحَدَّثَنِي أَبُو
الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ:
أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ
بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، قَالَ: «مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لَا تَبْلُغُهُ عُقُولُهُمْ،
إِلَّا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةً»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத
ஒரு விஷயத்தை அறிவிப்பதானது, அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.
இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்..
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
4 - بَابٌ فِي
الضُّعَفَاءِ وَالْكَذَّابِينَ وَمَنْ يُرْغَبُ عَنْ حَدِيثِهِمْ
பாடம் : 4
பலவீனமான அறிவிப்பாளர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிப்பதற்கு
வந்துள்ள தடையும், அவற்றை அறிவிப்பதிலிருந்து விலகிக்
கொள்வதும்
6 - (6) وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ،
وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ:
حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ، عَنْ أَبِي
عُثْمَانَ مُسْلِمِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي أُنَاسٌ يُحَدِّثُونَكُمْ مَا لَمْ
تَسْمَعُوا أَنْتُمْ، وَلَا آبَاؤُكُمْ، فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ»
(6)-6.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள்.
நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம்
அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
7 - (7) وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ
حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ التُّجِيبِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ:
حَدَّثَنِي أَبُو شُرَيْحٍ أَنَّهُ سَمِعَ شَرَاحِيلَ بْنَ يَزِيدَ، يَقُولُ:
أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ، يَأْتُونَكُمْ
مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ، وَلَا آبَاؤُكُمْ،
فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ، لَا يُضِلُّونَكُمْ،
وَلَا يَفْتِنُونَكُمْ»
(7)-7.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம்
அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள்
உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي أَبُو
سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنِ
الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدَةَ، قَالَ: قَالَ عَبْدُ
اللهِ: " إِنَّ الشَّيْطَانَ
لِيَتَمَثَّلُ فِي صُورَةِ الرَّجُلِ، فَيَأْتِي الْقَوْمَ، فَيُحَدِّثُهُمْ
بِالْحَدِيثِ مِنَ الْكَذِبِ، فَيَتَفَرَّقُونَ، فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ: سَمِعْتُ رَجُلًا أَعْرِفُ وَجْهَهُ، وَلَا
أَدْرِي مَا اسْمُهُ يُحَدِّثُ "
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக ஷைத்தான் மனித உருவில் மக்களிடையே வந்து பொய்யான
ஹதீஸ்களை எடுத்துரைப்பான். அதன் பிறகு மக்கள் கலைந்து செல்வார்கள். அப்போது அவர்களில்
ஒருவர், யாரோ ஒரு மனிதர் (வந்து) ஒரு ஹதீஸ் சொல்வதை நான் கேட்டேன். அவரது முகம் எனக்குத்
தெரியும்; ஆனால், அவருடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியாதுஎன்று கூறுவார்.
இதை ஆமிர் பின் அபதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ،
عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ،
قَالَ: «إِنَّ فِي الْبَحْرِ شَيَاطِينَ مَسْجُونَةً،
أَوْثَقَهَا سُلَيْمَانُ، يُوشِكُ أَنْ تَخْرُجَ، فَتَقْرَأَ عَلَى النَّاسِ
قُرْآنًا»
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடலுக்குள் சில ஷைத்தான்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் கட்டிவைத்தார்கள். அந்த ஷைத்தான்கள் வெகுவிரைவில்
வெளியேறி வந்து மக்களுக்கு முன் குர்ஆனை(ப் போன்ற ஒன்றை) ஓதிக் காட்டுவார்கள்.
இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَسَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ جَمِيعًا عَنِ
ابْنِ عُيَيْنَةَ، قَالَ سَعِيدٌ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ
حُجَيْرٍ، عَنْ طَاوُسٍ، قَالَ: جَاءَ هَذَا إِلَى ابْنِ عَبَّاسٍ - يَعْنِي
بُشَيْرَ بْنَ كَعْبٍ - فَجَعَلَ يُحَدِّثُهُ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: عُدْ
لِحَدِيثِ كَذَا وَكَذَا [ص:13]، فَعَادَ لَهُ، ثُمَّ حَدَّثَهُ، فَقَالَ لَهُ: عُدْ لِحَدِيثِ
كَذَا وَكَذَا، فَعَادَ لَهُ، فَقَالَ لَهُ: مَا أَدْرِي أَعَرَفْتَ حَدِيثِي
كُلَّهُ، وَأَنْكَرْتَ هَذَا؟ أَمْ أَنْكَرْتَ حَدِيثِي كُلَّهُ، وَعَرَفْتَ
هَذَا؟ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: «إِنَّا كُنَّا نُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ
لَمْ يَكُنْ يُكْذَبُ عَلَيْهِ، فَلَمَّا رَكِبَ النَّاسُ الصَّعْبَ وَالذَّلُولَ،
تَرَكْنَا الْحَدِيثَ عَنْهُ»
தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இதோ இவர் -புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள்- இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்களிடம் வந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இன்ன இன்ன நபிமொழிகளை மீண்டும் அறிவியுங்கள் என்றார்கள். அவ்வாறே புஷைர் அவர்களும்
மீண்டும் அறிவித்துவிட்டுத் தொடர்ந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் இன்ன இன்ன ஹதீஸ்களை மீண்டும் அறிவியுங்கள் என்றார்கள். அவ்வாறே புஷைர் அவர்கள்
மீண்டும் அறிவித்துவிட்டு, (நான் தெரியாமல் தான் கேட்கிறேன்:) நான் அறிவித்த எல்லா
நபிமொழிகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டு, (குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் மறுக்கிறீர்களா? அல்லது நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் மறுத்துவிட்டு, (குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் ஏற்கிறீர்களா? என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டுதானிருந்தோம்.
அப்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கப்பட்டதில்லை. பின்னர்
மக்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து
(வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்லத் தொடங்கியபோது நபிமொழிகளை அறிவிப்பதையே
நாங்கள் நிறுத்திவிட்டோம் என்று கூறினார்கள்.
இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது
وحَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ،
عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «إِنَّمَا كُنَّا نَحْفَظُ الْحَدِيثَ، وَالْحَدِيثُ يُحْفَظُ عَنْ رَسُولِ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا إِذْ رَكِبْتُمْ كُلَّ صَعْبٍ
وَذَلُولٍ، فَهَيْهَاتَ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்)
ஹதீஸ்களை மனனமிட்டு வந்தோம். ஹதீஸ்கள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து
கேட்டே மனனமிடப்பட்டுவந்தன. (ஆனால், இன்று) நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும்
பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்லத் தொடங்கியவுடன் எல்லாம்
பாரதூரமான விஷயமாகிவிட்டது.
இதை அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي أَبُو
أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ الْغَيْلَانِيُّ، حَدَّثَنَا أَبُو
عَامِرٍ يَعْنِي الْعَقَدِيَّ، حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ
مُجَاهِدٍ، قَالَ: جَاءَ بُشَيْرٌ الْعَدَوِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَجَعَلَ
يُحَدِّثُ، وَيَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ ابْنُ عَبَّاسٍ
لَا يَأْذَنُ لِحَدِيثِهِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ،
مَالِي لَا أَرَاكَ تَسْمَعُ لِحَدِيثِي، أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا تَسْمَعُ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: " إِنَّا
كُنَّا مَرَّةً إِذَا سَمِعْنَا رَجُلًا
يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ابْتَدَرَتْهُ
أَبْصَارُنَا، وَأَصْغَيْنَا إِلَيْهِ بِآذَانِنَا، فَلَمَّا رَكِبَ النَّاسُ الصَّعْبَ، وَالذَّلُولَ، لَمْ نَأْخُذْ
مِنَ النَّاسِ إِلَّا مَا نَعْرِفُ "
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
புஷைர் பின் கஅப் அல்அதவீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறியவாறு நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அவரது
அறிவிப்பைச் செவிகொடுத்துக் கேட்கவோ அவரை ஏறெடுத்துப் பார்க்கவோ தலைப்படவில்லை. உடனே
புஷைர் அல் அதவீ, இப்னு அப்பாஸ் அவர்களே!
நீங்கள் எனது ஹதீஸைச் செவிகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லையே! நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடம் அறிவித்துக் கொண்டிருக்க, நீங்களோ காது கொடுக்காமல் இருக்கின்றீர்களே என்று கேட்டார். அதற்கு
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலுரைத்தார்கள்:
ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் யாரேனும்
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்வதை நாங்கள் கேட்டுவிட்டால் உடனே அவரை நோக்கி எங்கள் பார்வை செல்லும்; அவர் கூறுவதைக் கேட்க எங்கள் காதுகளைத் தாழ்த்துவோம். பிறகு மக்கள் பிடிவாதம் பிடிக்கும்
ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா
வழிகளிலும்) செல்ல ஆரம்பித்தவுடன் நாங்கள் (நபியவர்களிடமிருந்து) அறிந்துள்ள (சரியான)வற்றை
மட்டுமே மக்களிடமிருந்து ஏற்றுக் கொண்டோம்.
இதைக் கைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا دَاوُدُ
بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي
مُلَيْكَةَ، قَالَ: كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ أَنْ يَكْتُبَ لِي
كِتَابًا، وَيُخْفِي عَنِّي، فَقَالَ: «وَلَدٌ نَاصِحٌ أَنَا أَخْتَارُ لَهُ
الْأُمُورَ اخْتِيَارًا، وَأُخْفِي عَنْهُ» ، قَالَ: فَدَعَا بِقَضَاءِ عَلِيٍّ، فَجَعَلَ يَكْتُبُ مِنْهُ أَشْيَاءَ،
وَيَمُرُّ بِهِ الشَّيْءُ، فَيَقُولُ: «وَاللهِ مَا قَضَى بِهَذَا عَلِيٌّ إِلَّا أَنْ يَكُونَ ضَلَّ»
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின்
அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், எனக்கு ஒரு மடல் வரையுமாறும், (அதில் குழப்பவாதிகளான ஷியாக்களின் கருத்துகள்) எதுவும் இடம்பெறாமல் பார்த்துக்
கொள்ளுமாறும் வேண்டிக் கடிதம் எழுதினேன். (கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
அவர் நல்ல பிள்ளை; அவருக்காக நான் சில விஷயங்களை
நன்கு தேர்ந்தெடுத்து, சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்து
விடப் போகிறேன் என்று கூறிவிட்டு, அலீ (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகளைக் கொண்டுவரும்படி கூறினார்கள். அவற்றில்
சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு (குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது இப்படியெல்லாம்
அலீ (ரலி) அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது; வழிதவறியவன்தான் இப்படித் தீர்ப்பளிப்பான் என்று கூறினார்கள்.
இதை நாஃபிஉ பின் உமர் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا عَمْرٌو
النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ حُجَيْرٍ،
عَنْ طَاوُسٍ، قَالَ: «أُتِيَ ابْنُ عَبَّاسٍ
بِكِتَابٍ فِيهِ قَضَاءُ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، فَمَحَاهُ إِلَّا قَدْرَ» ،
وَأَشَارَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ بِذِرَاعِهِ
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகள்
அடங்கிய (நீண்ட சுருள்) ஏடு ஒன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது.
அதில் ஒரு (முழம்) அளவிற்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை அழித்து விட்டார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது முழங்கையால்
இந்த அளவு என்று) சைகை செய்தார்கள்.
இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا حَسَنُ
بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ
إِدْرِيسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: " لَمَّا أَحْدَثُوا تِلْكَ الْأَشْيَاءَ بَعْدَ عَلِيٍّ رَضِيَ
اللهُ عَنْهُ، قَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِ عَلِيٍّ: قَاتَلَهُمُ اللهُ، أَيَّ
عِلْمٍ أَفْسَدُوا "
حَدَّثَنَا عَلِيُّ
بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ يَعْنِي ابْنَ عَيَّاشٍ، قَالَ: سَمِعْتُ
الْمُغِيرَةَ، يَقُولُ: «لَمْ يَكُنْ يَصْدُقُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ
فِي الْحَدِيثِ عَنْهُ إِلَّا مِنْ أَصْحَابِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ»
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களுக்குப் பின் (அன்னாரின்
தீவிர ஆதரவாளர்களான ஷியா பிரிவு) மக்கள் பல்வேறு புதிய கோட்பாடுகளை உருவாக்கியபோது, அலீ (ரலி) அவர்களின் நண்பர்களில் ஒருவர் அல்லாஹ் இம்மக்களை (தனது அருளிலிருந்து)
அப்புறப்படுத்துவானாக! எத்தகைய ஞானத்தை அவர்கள் சீரழித்துவிட்டார்கள் (தெரியுமா என்று (கடிந்து) கூறினார்.
இதை சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ்
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5-بَابُ في أَنَّ
الْإِسْنَادَ مِنَ الدِّينِ وأن الرواية لا تكون إلا عن الثقات وأن جرح الرواة بما
هو فيهم جائز بل واجب وأنه ليس من الغيبة المحرمة بل من الذب عن الشريعة المكرمة
பாடம் : 5
அறிவிப்பாளர் தொடர்களை எடுத்துரைப்பது
மார்க்கத்தின் ஓர் அம்சமாகும்; நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகள் மட்டுமே ஏற்கப்படும்; அறிவிப்பாளர்களிடம் காணப்படும் குறைகளை எடுத்துரைப்பது அனுமதிக்கப்பட்டது என்பது
மட்டுமன்றி, அது ஒரு கடமையும்கூட. அது
தடை செய்யப்பட்டுள்ள புறங்கூறல் ஆகாது; மாறாக, புனித மார்க்கத்தைக் காக்கும்
(அறப்) பணியாகும்.
حَدَّثَنَا حَسَنُ
بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، وَهِشَامٍ،
عَنْ مُحَمَّدٍ، وَحَدَّثَنَا فُضَيْلٌ، عَنْ هِشَامٍ قَالَ: وَحَدَّثَنَا
مَخْلَدُ بْنُ حُسَيْنٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ:
«إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ، فَانْظُرُوا عَمَّنْ
تَأْخُذُونَ دِينَكُمْ»
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
நிச்சயமாக இந்த (நபிமொழி)க் கல்வியும்
மார்க்கம்தான். எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை
எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள்.
இதை ஹிஷாம் பின் ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்கள்
வழியாக வந்துள்ளது.
حَدَّثَنَا أَبُو
جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ،
عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: " لَمْ يَكُونُوا
يَسْأَلُونَ عَنِ الْإِسْنَادِ، فَلَمَّا وَقَعَتِ الْفِتْنَةُ، قَالُوا: سَمُّوا لَنَا رِجَالَكُمْ، فَيُنْظَرُ إِلَى أَهْلِ السُّنَّةِ
فَيُؤْخَذُ حَدِيثُهُمْ، وَيُنْظَرُ إِلَى أَهْلِ الْبِدَعِ فَلَا يُؤْخَذُ
حَدِيثُهُمْ " حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ
إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ،
حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَ: لَقِيتُ
طَاوُسًا فَقُلْتُ: حَدَّثَنِي فُلَانٌ كَيْتَ وَكَيْتَ، قَالَ: «إِنْ كَانَ
صَاحِبُكَ مَلِيًّا، فَخُذْ عَنْهُ»
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள்
அறிவிக்கப்படும்போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின்
பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறலாயினர். ஆகவே, அந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில்
இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படா.
இதை ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களைச்
சந்தித்து, இன்னார் எனக்கு இன்னின்னவாறு
அறிவித்தார் என்று கூறினேன். அதற்கு
தாவூஸ் (ரஹ்) அவர்கள், இதை உமக்கு அறிவித்தவர்
நம்பத் தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக் கொள்க என்று கூறினார்கள்.
இதை அபூஅம்ர் அப்துர் ரஹ்மான் பின்
அம்ர் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وَحَدَّثَنَا
عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ
يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ
الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى قَالَ: قُلْتُ لِطَاوُسٍ: إِنَّ
فُلَانًا حَدَّثَنِي بِكَذَا وَكَذَا، قَالَ: «إِنْ كَانَ صَاحِبُكَ مَلِيًّا،
فَخُذْ عَنْهُ»
சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், இன்னார் எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார் என்று கூறினேன். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள், உமக்கு இதை அறிவித்தவர் நம்பத் தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக் கொள்க என்று கூறினார்கள்.
இதை சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا نَصْرُ
بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْأَصْمَعِيُّ، عَنِ ابْنِ أَبِي
الزِّنَادِ، عَنْ أَبِيهِ قَالَ: " أَدْرَكْتُ بِالْمَدِينَةِ مِائَةً،
كُلُّهُمْ مَأْمُونٌ، مَا يُؤْخَذُ عَنْهُمُ الْحَدِيثُ، يُقَالُ: لَيْسَ مِنْ
أَهْلِهِ " حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا
سُفْيَانُ، وحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ - وَاللَّفْظُ
لَهُ - قَالَ: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ قَالَ: سَمِعْتُ
سَعْدَ بْنَ إِبْرَاهِيمَ يَقُولُ: «لَا يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الثِّقَاتُ»
அபுஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் நம்பிக்கைக்குரிய நூறு
பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இவர்கள்
அதற்குத் தகுதியானவர்கள் அல்லர் என்று சொல்லப்பட்டது.
இதை அப்துர் ரஹ்மான் பின் அபிஸ் ஸினாத்
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து
நம்பத் தகுந்தவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவிக்க வேண்டும்.
இதை மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்களில்
வந்துள்ளது.
وَحَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ قُهْزَاذَ مِنْ أَهْلِ مَرْوَ، قَالَ: سَمِعْتُ
عَبْدَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الْمُبَارَكِ،
يَقُولُ: «الْإِسْنَادُ مِنَ الدِّينِ، وَلَوْلَا
الْإِسْنَادُ لَقَالَ مَنْ شَاءَ مَا شَاءَ»
وقَالَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ: حَدَّثَنِي الْعَبَّاسُ بْنُ
أَبِي رِزْمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ، يَقُولُ: «بَيْنَنَا وَبَيْنَ [ص:16]
الْقَوْمِ الْقَوَائِمُ» يَعْنِي الْإِسْنَادَ
وقَالَ مُحَمَّدٌ:
سَمِعْتُ أَبَا إِسْحَاقَ إِبْرَاهِيمَ بْنَ عِيسَى الطَّالْقَانِيَّ قَالَ:
قُلْتُ لِعَبْدِ اللهِ بْنِ الْمُبَارَكِ، يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ:
الْحَدِيثُ الَّذِي جَاءَ «إِنَّ مِنَ الْبِرِّ
بَعْدَ الْبِرِّ أَنْ تُصَلِّيَ لِأَبَوَيْكَ مَعَ صَلَاتِكَ، وَتَصُومَ لَهُمَا
مَعَ صَوْمِكَ» . قَالَ: فَقَالَ عَبْدُ اللهِ: يَا أَبَا إِسْحَاقَ، عَمَّنْ هَذَا؟ قَالَ: قُلْتُ لَهُ: هَذَا مِنْ حَدِيثِ
شِهَابِ بْنِ خِرَاشٍ فَقَالَ: ثِقَةٌ، عَمَّنْ قَالَ؟ قُلْتُ: عَنِ الْحَجَّاجِ
بْنِ دِينَارٍ، قَالَ: ثِقَةٌ، عَمَّنْ قَالَ؟ " قُلْتُ: قَالَ رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: يَا أَبَا إِسْحَاقَ، إِنَّ بَيْنَ
الْحَجَّاجِ بْنِ دِينَارٍ وَبَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَفَاوِزَ تَنْقَطِعُ فِيهَا أَعْنَاقُ الْمَطِيِّ، وَلَكِنْ لَيْسَ فِي
الصَّدَقَةِ اخْتِلَافٌ
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின்
ஓர் அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்) மட்டும் இருந்திருக்கா விட்டால் (மார்க்கத்தில்)
நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
அப்பாஸ் பின் அபீரிஸ்மா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள், நமக்கும் மக்களுக்குமிடையே
அறிவிப்பாளர் தொடர் என்ற கால்கள் உள்ளன (அவற்றைக் கொண்டே ஹதீஸ்கள் நிற்கும்என்று கூறுவதை
நான் கேட்டுள்ளேன்.
அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் ஈசா அத்தாலகானீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக்
(ரஹ்) அவர்களிடம், நீ உனக்காக தொழுவதுடன்
உன் பெற்றோருக்காகத் தொழுவதும், உனக்காக நோன்பு நோற்பதுடன் உன் பெற்றோருக்காக நோன்பு நோற்பதும் நன்மைக்கு மேல்
நன்மை தரும் செயலாகும் என்று ஒரு நபிமொழி வந்துள்ளது
என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், அபூஇஸ்ஹாக்! இதை உங்களுக்கு அறிவித்தவர் யார் ?என்று கேட்டார்கள். நான், இது, ஷிஹாப் பின் கிராஷ் (ரஹ்)
அவர்கள் அறிவித்த ஹதீஸ் என்றேன். அதற்கு அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் அன்னார் நம்பத் தகுந்த அறிவிப்பாளர்தாம் என்று கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர்
யார்? என்று கேட்டார்கள். நான் ஹஜ்ஜாஜ் பின் தீனார் என்றேன். அன்னாரும் நம்பத்
தகுந்த அறிவிப்பாளர்தாம் என்று கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார் என்று அப்துல்லாஹ் கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றேன். அப்துல்லாஹ் பின்
அல்முபாரக் (ரஹ்), அபூஇஸ்ஹாக்! ஹஜ்ஜாஜ் பின்
தீனார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே பயண ஒட்டகங்களின் கழுத்துகள் முறிந்துவிடும்
அளவுக்கு நீண்ட (கால) இடைவெளி உள்ளது. (இதை எப்படி அவர் நபியவர்களிடம் கேட்டிருக்க
முடியும்?.) எனினும் (ஒருவர் தம் பெற்றோருக்காக) தான தர்மம் செய்வது (நன்மையே என்பது) தொடர்பாக
எந்தக் கருத்து வேறுபாடுமில்லைஎன்று சொன்னார்கள்.
அலீ பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் மக்கள் மத்தியில் அம்ர் பின் ஸாபித்திடமிருந்து அறிவிப்பதை விட்டுவிடுங்கள்.
ஏனெனில், அவர் முன்னோரைப் பழிப்பவராய்
இருந்தார் என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
وَقَالَ مُحَمَّدٌ: سَمِعْتُ عَلِيَّ بْنَ شَقِيقٍ، يَقُولُ:
سَمِعْتُ عَبْدَ اللهُ بْنَ الْمُبَارَكِ، يَقُولُ عَلَى رُءُوسِ النَّاسِ:
«دَعُوا حَدِيثَ عَمْرِو بْنِ ثَابِتٍ فَإِنَّهُ كَانَ يَسُبَّ السَّلَفَ»
وحَدَّثَنِي أَبُو
بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، قَالَ: حَدَّثَنِي أَبُو النَّضْرِ
هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، صَاحِبُ بُهَيَّةَ، قَالَ:
كُنْتُ جَالِسًا عِنْدَ الْقَاسِمِ بْنِ عُبَيْدِ اللهِ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ،
فَقَالَ يَحْيَى لِلْقَاسِمِ: يَا أَبَا مُحَمَّدٍ إِنَّهُ قَبِيحٌ عَلَى
مِثْلِكَ، عَظِيمٌ أَنْ تُسْأَلَ عَنْ شَيْءٍ مِنْ أَمْرِ هَذَا الدِّينِ، فَلَا
يُوجَدَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ، وَلَا فَرَجٌ - أَوْ عِلْمٌ، وَلَا مَخْرَجٌ -
فَقَالَ لَهُ الْقَاسِمُ: وَعَمَّ ذَاكَ؟، قَالَ: لِأَنَّكَ ابْنُ إِمَامَيْ
هُدًى. ابْنُ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، قَالَ: يَقُولُ لَهُ الْقَاسِمُ: أَقْبَحُ
مِنْ ذَاكَ عِنْدَ مَنْ عَقَلَ عَنِ اللهِ أَنْ أَقُولَ بِغَيْرِ عِلْمٍ، أَوْ
آخُذَ عَنْ غَيْرُ ثِقَةٍ، قَالَ: فَسَكَتَ فَمَا أَجَابَهُ
அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்தவக்கில்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுஹம்மத் காசிம் பின் உபைதில்லாஹ்
(ரஹ்) மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது யஹ்யா
(ரஹ்) அவர்கள் காசிம் (ரஹ்) அவர்களிடம், அபூமுஹம்மதே! மார்க்க விவகாரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களிடம் வினவப்பட்டு, அதற்குரிய விடையோ தீர்வோ உங்களிடம் இல்லாதிருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப்
பெருங் குறையாயிற்றே என்று கூறினார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?; என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள் நீங்கள் நேர்வழித் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் வழித்தோன்றலாயிற்றே! என்று சொன்னார்கள். அதற்குக்
காசிம் (ரஹ்) அவர்கள், நான் (தக்க) அறிவின்றிப்
பேசுவதோ, நம்பத் தகாதவர்களிடமிருந்து
ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களிடம் இதைவிட மோசமானதாகும் ; என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) யஹ்யா (ரஹ்) அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகி
விட்டார்கள்.
இதை அபுந்நள்ர் ஹாஷிம் பின் அல்காசிம்
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي بِشْرُ
بْنُ الْحَكَمِ الْعَبْدِيُّ، قَالَ: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ،
يَقُولُ: أَخْبَرُونِي عَنْ أَبِي عَقِيلٍ صَاحِبِ بُهَيَّةَ، أَنَّ أَبْنَاءً
لِعَبْدِ اللهِ بْنِ عُمَرَ، سَأَلُوهُ عَنْ شَيْءٍ لَمْ يَكُنْ عِنْدَهُ فِيهِ
عِلْمٌ، فَقَالَ لَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ: وَاللهِ إِنِّي لَأُعْظِمُ أَنْ يَكُونَ
مِثْلُكَ، وَأَنْتَ ابْنُ إِمَامَيِ الْهُدَى - يَعْنِي عُمَرَ، وَابْنَ عُمَرَ -
تُسْأَلُ عَنْ أَمْرٍ لَيْسَ عِنْدَكَ فِيهِ عِلْمٌ، فَقَالَ: «أَعْظَمُ مِنْ
ذَلِكَ وَاللهِ عِنْدَ اللهِ، وَعِنْدَ مَنْ عَقَلَ عَنِ اللهِ، أَنْ أَقُولَ
بِغَيْرِ عِلْمٍ، أَوْ أُخْبِرَ عَنْ غَيْرِ ثِقَةٍ» قَالَ: وَشَهِدَهُمَا أَبُو
عَقِيلٍ يَحْيَى بْنُ الْمُتَوَكِّلِ حِينَ قَالَا ذَلِكَ.
அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்த வக்கில்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய
(புதல்வரின்) புதல்வரிடத்தில் (காசிம் பின் உபைதில்லாஹ் அவர்களிடம்) மக்கள் ஒரு விஷயம்
குறித்து வினவினர். ஆனால், அன்னாருக்கு அதற்கான விடை தெரிந்திருக்கவில்லை. அப்போது காசிம் (ரஹ்) அவர்களிடம்
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் நீங்கள் நேர்வழித் தலைவர்களின் -அதாவது உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோரின்- வழித்தோன்றல் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைப்
போன்றவர்களிடம் ஒரு விஷயம் குறித்து வினவப்பட்டு, அதற்கான விளக்கம் உங்களிடம் இல்லாமலிருப்பதைப் பெருங்குறையாகவே நான் கருதுகிறேன் என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள்,அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தக்க) அறிவின்றிப் பேசுவதோ, நம்பத் தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோதான் அல்லாஹ்விடமும், அவனைப் பற்றி அறிந்தவர்களிடமும் அதைவிடப் பெருங்குறையாகும் என பதிலளித்தார்கள். அவ்விருவரும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நானும்
இருந்தேன்.
இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
وَحَدَّثَنَا
عَمْرُو بْنُ عَلِيٍّ أَبُو حَفْصٍ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ:
سَأَلْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ، وَشُعْبَةَ، وَمَالِكًا، وَابْنَ عُيَيْنَةَ،
عَنِ الرَّجُلِ لَا يَكُونُ ثَبْتًا فِي الْحَدِيثِ، فَيَأْتِينِي الرَّجُلُ،
فَيَسْأَلُنِي عَنْهُ، قَالُوا: «أَخْبِرْ عَنْهُ أَنَّهُ لَيْسَ بِثَبْتٍ»
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுஃப்யான் பின் சயீத் அஸ்ஸவ்ரீ
(ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்
(ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரிடம், என்னிடம் ஒருவர் வந்து நபிமொழித் துறையில் நம்பத் தகாத ஒருவரைப் பற்றி வினவினால்
(நான் அவரது குறையை எடுத்துரைக்கலாமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், & அவர் நம்பத் தகுந்தவர் அல்லர் என்று (மறைக்காமல்) எடுத்துரைத்து விடுங்கள். (அது
புறம் பேசல் ஆகாது) என்று பதிலளித்தனர்.
இதை அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وَحَدَّثَنَا
عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ النَّضْرَ، يَقُولُ: سُئِلَ ابْنُ
عَوْنٍ، عَنْ حَدِيثٍ لِشَهْرٍ وَهُوَ قَائِمٌ عَلَى أُسْكُفَّةِ الْبَابِ،
فَقَالَ: «إِنَّ شَهْرًا نَزَكُوهُ، إِنَّ شَهْرًا نَزَكُوهُ» . قَالَ مُسْلِمٌ
رَحِمَهُ اللهُ: " يَقُولُ: أَخَذَتْهُ أَلْسِنَةُ النَّاسِ تَكَلَّمُوا
فِيهِ "
நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அவ்ன் பின் அர்திபான்
அல்பசரி (ரஹ்) அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரின் அறிவிப்புக் குறித்து வினவப்பட்டது.
அப்போது வீட்டின் நிலைப்படி மேல் நின்றுகொண்டிருந்த இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் ஷஹ்ர் மீது மக்கள் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளனர்; ஷஹ்ர் மீது மக்கள் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளனர் என்று (இரு முறை) கூறினார்கள். அதாவது அவரது அறிவிப்புக் குறித்து மக்கள் குறை
கூறியுள்ளனர்.
இதை உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
وحَدَّثَنِي
حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: قَالَ شُعْبَةُ: «وَقَدْ
لَقِيتُ شَهْرًا فَلَمْ أَعْتَدَّ بِهِ» وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ
بْنِ قُهْزَاذَ، مِنْ أَهْلِ مَرْوَ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنِ
بْنِ وَاقِدٍ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ: قُلْتُ لِسُفْيَانَ
الثَّوْرِيِّ: " إِنَّ عَبَّادَ بْنَ كَثِيرٍ مَنْ تَعْرِفُ حَالَهُ، وَإِذَا
حَدَّثَ جَاءَ بِأَمْرٍ عَظِيمٍ، فَتَرَى أَنْ أَقُولَ لِلنَّاسِ: لَا تَأْخُذُوا
عَنْهُ؟ " قَالَ سُفْيَانُ: «بَلَى» ، قَالَ عَبْدُ اللهِ: فَكُنْتُ إِذَا
كُنْتُ فِي مَجْلِسٍ ذُكِرَ فِيهِ عَبَّادٌ، أَثْنَيْتُ عَلَيْهِ فِي دِينِهِ،
وَأَقُولُ: «لَا تَأْخُذُوا عَنْهُ» وَقَالَ مُحَمَّدٌ: حَدَّثَنَا عَبْدُ اللهِ
بْنُ عُثْمَانَ، قَالَ: قَالَ أَبِي، قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ:
انْتَهَيْتُ إِلَى شُعْبَةَ، فَقَالَ: هَذَا عَبَّادُ بْنُ كَثِيرٍ، فَاحْذَرُوهُ
وحَدَّثَنِي الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ: سَأَلْتُ مُعَلًّى الرَّازِيَّ، عَنْ
مُحَمَّدِ بْنِ سَعِيدٍ، الَّذِي رَوَى عَنْهُ عَبَّادٌ، فَأَخْبَرَنِي عَنْ
عِيسَى بْنِ يُونُسَ، قَالَ: «كُنْتُ عَلَى بَابِهِ، وَسُفْيَانُ عِنْدَهُ،
فَلَمَّا خَرَجَ سَأَلْتُهُ عَنْهُ، فَأَخْبَرَنِي أَنَّهُ كَذَّابٌ»
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
நான் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரைச் சந்தித்திருக்கிறேன்; ஆனால், அவரை நான் பொருட்படுத்தியதில்லை.
இதை ஷபாபா பின் சவார் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
நான் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடம், அப்பாத் பின் கஸீர் என்பாரின் நிலை உங்களுக்குத் தெரிந்ததே. அவர் ஹதீஸை அறிவித்தால்
விபரீதமான விஷயங்களை (நிராகரிக்கப்பட்ட ஹதீஸ்களை)யே கூறுகிறார். ஆகவே, அவரிடமிருந்து ஹதீஸ்களை ஏற்க வேண்டாமென மக்களிடம் நான் கூறி விடுவதைப் பற்றி நீங்கள்
என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ஆம் (அவ்வாறே கூறிவிடுங்கள்) என்றார்கள்.
அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அவையில்
நானிருக்கும்போது அப்பாத் பின் கஸீரைப் பற்றிப் பேச்சு வந்தால், அவரது மார்க்க ஈடுபாடு குறித்து நான் மெச்சிப் பேசுவேன். ஆனால், அவர் அறிவிக்கும் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று (மக்களிடம்) கூறிவிடுவேன்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடம் சென்றிருந்தேன்.
அப்போது அவர்கள் "இதோ இந்த அப்பாத் பின் கஸீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் (அவருடைய
அறிவிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்.
ஃபள்ல் பின் சஹ்ல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் முஅல்லா பின் மன்ஸூர் அர்ராஸீ
(ரஹ்) அவர்களிடம், அப்பாத் பின் கஸீருக்கு
ஹதீஸ்களை அறிவிப்பவரான முஹம்மத் பின் சயீத் என்பாரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு முஅல்லா
அர்ராஸீ (ரஹ்) அவர்கள் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் தம்மிடம் (பின்வருமாறு) கூறியதாகத்
தெரிவித்தார்கள்:
நான் முஹம்மத் பின் சயீதின் வீட்டுவாசலில்
நின்று கொண்டிருந்தேன். அவர் அருகில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள்.
சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது அன்னாரிடம் நான் முஹம்மத்
பின் சயீத் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அவர் ஒரு பொய்யர் என்று கூறினார்கள்.
وحَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ أَبِي عَتَّابٍ، قَالَ: حَدَّثَنِي عَفَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ
يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، عَنْ أَبِيهِ، قَالَ: «لَمْ نَرَ الصَّالِحِينَ
فِي شَيْءٍ أَكْذَبَ مِنْهُمْ فِي الْحَدِيثِ» [ص:18] قَالَ ابْنُ أَبِي عَتَّابٍ: فَلَقِيتُ أَنَا مُحَمَّدَ بْنَ يَحْيَى
بْنِ سَعِيدٍ الْقَطَّانَ، فَسَأَلْتُهُ عَنْهُ، فَقَالَ: عَنْ أَبِيهِ، «لَمْ
تَرَ أَهْلَ الْخَيْرِ فِي شَيْءٍ أَكْذَبَ مِنْهُمْ فِي الْحَدِيثِ» . قَالَ
مُسْلِمٌ: " يَقُولُ: يَجْرِي الْكَذِبُ عَلَى لِسَانِهِمْ، وَلَا
يَتَعَمَّدُونَ الْكَذِبَ "
முஹம்மத் பின் யஹ்யா பின் சயீத் அல்கத்தான்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஹ்யா பின்
சயீத் (ரஹ்) அவர்கள், ஹதீஸ் அறிவிப்புகளில் பொய்யுரைப்பதை
விட அதிகமாக வேறெதிலும் பொய்யுரைக்கும் நல்லவர்களை நாம் கண்டதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத்
பின் அபீஅத்தாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஹம்மத் பின் யஹ்யா (ரஹ்) அவர்களைச்
சந்தித்தபோது இது பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ஹதீஸ் அறிவிப்புகளில் பொய்யுரைப்பதைவிட அதிகமாக வேறெதிலும் நல்லவர்கள் பொய்யுரைப்பதை
நீ காண மாட்டாய் என்று தம் தந்தை கூறியதாகச்
சொன்னார்கள்.
அபுல்ஹுசைன் முஸ்லிம் (பின் அல் ஹஜ்ஜாஜ்
ஆகிய நான்) கூறுகிறேன்:
நல்லவர்கள் நாவில் (தம்மை அறியாமலேயே)
பொய் வந்துவிடுகிறது; அவர்கள் வேண்டுமென்றே பொய்யுரைப்பதில்லை.
حَدَّثَنِي
الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ:
أَخْبَرَنِي خَلِيفَةُ بْنُ مُوسَى، قَالَ: «دَخَلْتُ عَلَى غَالِبِ بْنِ عُبَيْدِ
اللهِ فَجَعَلَ يُمْلِي عَلَيَّ، حَدَّثَنِي مَكْحُولٌ، حَدَّثَنِي مَكْحُولٌ،
فَأَخَذَهُ الْبَوْلُ، فَقَامَ فَنَظَرْتُ فِي الْكُرَّاسَةِ، فَإِذَا فِيهَا
حَدَّثَنِي أَبَانُ، عَنْ أَنَسٍ، وَأَبَانُ عَنْ فُلَانٍ، فَتَرَكْتُهُ،
وَقُمْتُ»
قَالَ: وَسَمِعْتُ
الْحَسَنَ بْنَ عَلِيٍّ الْحُلْوَانِيَّ، يَقُولُ: رَأَيْتُ فِي كِتَابِ عَفَّانَ،
حَدِيثَ هِشَامٍ أَبِي الْمِقْدَامِ، حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ،
قَالَ هِشَامٌ: حَدَّثَنِي رَجُلٌ يُقَالُ لَهُ يَحْيَى بْنُ فُلَانٍ، عَنْ
مُحَمَّدِ بْنِ كَعْبٍ، قَالَ: قُلْتُ لِعَفَّانَ: إِنَّهُمْ يَقُولُونَ هِشَامٌ،
سَمِعَهُ مِنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، فَقَالَ: " إِنَّمَا ابْتُلِيَ مِنْ
قِبَلِ هَذَا الْحَدِيثِ، كَانَ يَقُولُ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ مُحَمَّدٍ،
ثُمَّ ادَّعَى بَعْدُ أَنَّهُ سَمِعَهُ مِنْ مُحَمَّدٍ "
கலீஃபா பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃகாலிப் பின் உபைதில்லாஹ் அவர்களிடம்
சென்றபோது அவர் என்னிடம் மக்ஹூல் எனக்கு அறிவித்தார்; மக்ஹூல் எனக்கு அறிவித்தார் என்று கூறி, (சில ஹதீஸ்களை) எழுதிக்
கொள்ளுமாறு கூறலானார். அப்போது அவருக்குச் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுவிடவே
உடனே அவர் எழுந்து சென்றுவிட்டார். அப்போது நான் (அவரது) பதிவேட்டைப் பார்த்தேன். அதில்
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அபான் அறிவித்தார்கள். அபான் இன்னாரிடமிருந்து
அறிவித்தார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
(அவர் என்னிடம் சொன்னதற்கும் குறிப்பேட்டில் உள்ளதற்கும் வேறுபாடு இருந்ததால்) உடனே
நான் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன்.
ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள், நான் அஃப்பான் என்பாரின் (ஹதீஸ்) பதிவேட்டில், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொடர்பான செய்தி ஒன்றை, ஹிஷாம் அபில்மிக்தாம் அவர்கள் அறிவித்திருந்ததைக் கண்டேன். அதில் ஹிஷாம் அவர்கள்
முஹம்மத் பின் கஅப் என்பாரிடமிருந்து இன்னாரின் புதல்வரான யஹ்யா எனும் ஒருவர் எனக்கு
அறிவித்தார் என்று எழுதப்பட்டிருந்தது.
உடனே நான் அஃப்பான் அவர்களிடம்,;நபிமொழி இயல் அறிஞர்கள், முஹம்மத் பின் கஅப் என்பாரிடமிருந்தே ஹிஷாம் அறிவித்ததாகக் கூறுகின்றனரே? என்று கேட்டேன். அதற்கு அஃப்பான் அவர்கள், இந்த ஹதீஸ் விஷயத்தில்தான் ஹிஷாம் அகப்பட்டுக் கொண்டார். அவர் முஹம்மத் பின் கஅப்
அவர்களிடமிருந்து எனக்கு யஹ்யா அறிவித்தார் என்று முன்பு கூறிவந்தார். பின்னர் தாமே முஹம்மத் பின் கஅப் அவர்களிடமிருந்து
(நேரடியாக இந்த ஹதீஸைச்) செவியேற்றதாக அவர் (மாற்றிக்) கூறலானார் என்று சொன்னார்கள்..
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ قُهْزَاذَ، قَالَ:
سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، يَقُولُ: قُلْتُ لِعَبْدِ
اللهِ بْنِ الْمُبَارَكِ: مَنْ هَذَا الرَّجُلُ الَّذِي رَوَيْتَ عَنْهُ حَدِيثَ
عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو يَوْمُ الْفِطْرِ يَوْمُ الْجَوَائِزِ؟ قَالَ:
«سُلَيْمَانُ بْنُ الْحَجَّاجِ انْظُرْ مَا وَضَعْتَ فِي يَدِكَ مِنْهُ»
قَالَ ابْنُ قُهْزَاذَ: وَسَمِعْتُ وَهْبَ بْنَ زَمْعَةَ، يَذْكُرُ
عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ يَعْنِي ابْنَ
الْمُبَارَكِ: «رَأَيْتُ رَوْحَ بْنَ غُطَيْفٍ صَاحِبَ الدَّمِ قَدْرِ
الدِّرْهَمِ، وَجَلَسْتُ إِلَيْهِ مَجْلِسًا، فَجَعَلْتُ أَسْتَحْيِي مِنْ
أَصْحَابِي أَنْ يَرَوْنِي جَالِسًا مَعَهُ كُرْهَ حَدِيثِهِ»
அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின் ஜபலா
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக்
(ரஹ்) அவர்களிடம் நோன்புப் பெருநாள், வெகுமதிகளின் நாளாகும் என்பது பற்றிய அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் ஹதீஸைத் தங்களுக்கு அறிவித்தவர்
யார்? என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,;சுலைமான் பின் அல்ஹஜ்ஜாஜ் அவர்கள்தாம். உங்கள் கரத்தில் நீங்கள் வைத்துள்ள அன்னாரிடமிருந்து
கிடைத்த (மகத்தான) செய்திகளைப் பாருங்கள் என்று (புகழ்ந்து) கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்:
நான்;ஒரு வெள்ளி நாணயம் அளவு இரத்தம் (பட்ட நிலையில் தொழுதவரின் தொழுகை நிறைவேறாது; அதைத் திரும்பத் தொழ வேண்டும்) என்ற ஹதீஸின் அறிவிப்பாளரான ரவ்ஹ் பின் ஃகுதைஃப்
என்பாரைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரம் அமர்ந்தேன். ஆயினும், அவருடன் நான் அமர்ந்திருப்பதை என் தோழர்கள் பார்த்துவிடுவார்களோ எனக் கூச்சப்படலானேன்.
அவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
حَدَّثَنِي ابْنُ قُهْزَاذَ، قَالَ: سَمِعْتُ وَهْبًا، يَقُولُ: عَنْ
سُفْيَانَ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، قَالَ: بَقِيَّةُ صَدُوقُ اللِّسَانِ،
وَلَكِنَّهُ يَأْخُذُ عَمَّنْ أَقْبَلَ وَأَدْبَرَ "
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
(அறிவிப்பாளர்) பகிய்யா
பின் அல்வலீத் உண்மையாளர்தாம். ஆயினும், அவர் வருவோர் போவோரிடமிருந்தெல்லாம் (வித்தியாசமின்றி) ஹதீஸ்களை அறிவிப்பார்.
இதை சுஃப்யான் பின் அப்தில் மலிக்
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment