Saturday, January 27, 2018

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல் ஹதீஸ் 205 முதல் 229 வரை




كتاب الطهارة

அத்தியாயம்: 1 சுத்தம் செய்தல்


(81) باب مَنْ يُحْدِثُ فِي الصَّلاَةِ
பாடம்: 81 தொழும் போது உலூ நீங்கி விடுதல்

205-حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلَّامٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ، فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلَاةَ»
[حكم الألباني] : ضعيف
205.'உங்களில் ஒருவருக்கு தொழுகையில் காற்று விட்டால் அவர் (தொழுகையை விட்டு விட்டு) உலூச் செய்து திரும்பத் தொழுவாராக!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அலி ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

தரம் : ளயீப்

(82) باب فِي الْمَذْىِ
பாடம்: 82 மதீ (இச்சை நீர்) வெளிப்படுதல்

206-حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ الْحَذَّاءُ، عَنِ الرَّكِينِ بْنِ الرَّبِيعِ، عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ ذُكِرَ لَهُ - فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ»
[حكم الألباني] : صحيح

206.எனக்கு (மதீ) இச்சை நீர் அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் முதுகு ஒடிகின்ற (குளிர் வேதனையினால்) அளவிற்கு அடிக்கடி குளித்துக் கொண்டிருந்தேன். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'நீ அவ்வாறு வெளிப்படுவதை கண்டால் உனது ஆண்குறியை கழுவிக் கொள். பிறகு தொழுகைக்கு நீ உலூச் செய்வது போல் உலூச் செய்து கொள்க! உனக்கு இந்திரியம் வெளிப்பட்டால் குளித்துக் கொள்க!' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

207-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ [ص: 54] ، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، مَاذَا عَلَيْهِ؟ فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ»،

[حكم الألباني] : صحيح

207.ஒருவர் தன்னுடைய மனைவியை நெருங்கும் போது அதனால் அவருக்கு மதீ வெளிப்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் எனக்கு மனைவி என்பதால் அவர்களிடம் இதை நான் கேட்க வெட்கமடைகிறேன்' எனக் கூறி அலீ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி சொன்னார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அவர்கள் 'உங்களில் ஒருவர் இதைக் கண்டால் தனது மர்ம உறுப்பில் நீர் தெளித்து, தொழுகைக்கு உலூச் செய்வது போன்று அவர் உலூச் செய்வாராக!' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

208-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ لِلْمِقْدَادِ وَذَكَرَ نَحْوَ هَذَا قَالَ فَسَأَلَهُ الْمِقْدَادُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِيَغْسِلْ ذَكَرَهُ وَأُنْثَيَيْهِ»، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ الثَّوْرِيُّ وَجَمَاعَةٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمِقْدَادِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

[حكم الألباني] : صحيح

208.அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டதாக இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸைப் போன்று அறிவிக்கின்றார். அதை மிக்தாத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது 'அவர் தனது ஆண்குறியையும் விரையையும் கழுவிக் கொள்ளட்டும்' என்று பதிலளித்ததாகவும் அதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள்:
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ, மிக்தாத் ஆகியோர் வாயிலாக தன் தந்தை மூலம் ஹிஷாம் அவர்கள் அறிவிக்கின்றார். ஹிஷாம் அவர்களிடமிருந்து சவ்ரீ அவர்களும் ஒரு பெருங்குழுவினரும் அறிவிக்கின்றனர்.

தரம் : ஸஹீஹ்

209-حَدَّثَنَا. عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حَدِيثٍ حَدَّثَهُ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قُلْتُ لِلْمِقْدَادِ، فَذَكَرَ مَعْنَاهُ. قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ وَجَمَاعَةٌ، وَالثَّوْرِيُّ، وَابْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ. وَرَوَاهُ ابْنُ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمِقْدَادِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَذْكُرْ أُنْثَيَيْهِ

[حكم الألباني] : صحيح

209.அதே ஹதீஸ் இங்கும் இடம் பெறுகின்றது.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக அறிவிக்கின்ற ஹிஷாம் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை முபல்லல் பின் புலாலா, ஒரு பெருங்குழுவினர், சவ்ரி, இப்னு உஐன் ஆகியோர் அறிவிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களிடமிருந்து விரைகளை என்று குறிப்பிடாமல் மிக்தாத் அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.

தரம் : ஸஹீஹ்


210-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: كُنْتُ أَلْقَى مِنَ المَذْيِ شِدَّةً، وَكُنْتُ أُكْثِرُ مِنَ الِاغْتِسَالِ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ؟ قَالَ: «يَكْفِيكَ بِأَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ، فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ، حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَهُ»

[حكم الألباني] : حسن

210.நான் அதிகமாக மதி வெளிப்படுவதால் சிரமத்தை அடைந்தேன். அதிகமாக குளித்தேன். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது 'இதற்காக நீ உலூச் செய்வதே போதுமானதாகும்' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆடையில் மதீ பட்டுவிட்ட பகுதியை என்ன செய்வது? என்று நான் கேட்ட போது 'ஒரு கையளவு நிரள்ளி அது உன் ஆடையில் கலந்து விட்டது என்று நீ காணுமளவுக்கு தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும்' என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸுஹைல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள்.

தரம் : ஹஸன்

211-حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا يُوجِبُ الْغُسْلَ [ص: 55] ، وَعَنِ المَاءِ يَكُونَ بَعْدَ الْمَاءِ، فَقَالَ: «ذَاكَ الْمَذْيُ، وَكُلُّ فَحْلٍ يَمْذِي، فَتَغْسِلُ مِنْ ذَلِك فَرْجَكَ وَأُنْثَيَيْكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ»

[حكم الألباني] : صحيح

211.தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப் பற்றியும் குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது மதி (இச்சை நீராகும்) ஆண் உயிரினங்கள் அனைத்தும் இச்சை நீரை வெளிப்படுத்தக் கூடியவைதான். அது வெளிப்பட்டு விட்டால் உனது உறுப்பையும், விதைகளையும் கழுவிக் கொள். மேலும் தொழுகைக்கு நீ உலூச் செய்வது போன்று நீ உலூச் செய்து கொள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

212-حَدَّثَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَحِلُّ لِي مِنَ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ قَالَ: «لَكَ مَا فَوْقَ الْإِزَارِ»، وَذَكَرَ مُؤَاكَلَةَ الْحَائِضِ أَيْضًا، وَسَاقَ الْحَدِيثَ

[حكم الألباني] : صحيح

212.எனது மனைவி மாதவிடாய் ஆனவளாக இருக்கும் போது எனக்கு அவளிடத்தில் அனுமதியானது என்ன? என்று ஹிசாம்பின் ஹகீம் அவர்களின் சிறிய தந்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் வினவிய போது, 'இடுப்புக்கு மேற்பகுதி உனக்கு அனுமதியாகும்' என்று பதிலளித்தார்கள், என்று அறிவித்து இதன் அறிவிப்பாளர் மாதவிடாய் பெண்ணுடன் கலந்துண்ணுவதை கூறி இந்த ஹதீஸை தொடர்கிறார்.

அறிவிப்பவர்: தனது சிறிய தந்தை வாயிலாக ஹிசாம் பின் ஹகீம் அவர்கள்.

தரம் : ஸஹீஹ்


213-حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْيَزَنِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ سَعْدٍ الْأَغْطَشِ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِذٍ الْأَزْدِيِّ، قَالَ: هِشَامٌ وَهُوَ ابْنُ قُرْطٍ - أَمِيرُ حِمْصَ - عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَمَّا يَحِلُّ لِلرَّجُلِ مِنَ امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ؟ قَالَ: فَقَالَ: «مَا فَوْقَ الْإِزَارِ وَالتَّعَفُّفُ عَنْ ذَلِكَ أَفْضَلُ»، قَالَ أَبُو دَاوُدَ: وَلَيْسَ هُوَ، يَعْنِي: الْحَدِيثَ بِالْقَوِيِّ

[حكم الألباني] : ضعيف

213.தனது மனைவி மாதவிலக்கானவளாக இருக்கும் போது ஒருவருக்கு அவளிடம் அனுமதிக்கப்பட்டது என்ன? என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது இடுப்புக்கு மேற்பகுதி ஆகும். ஆனால் இதை விட்டு தவிர்ந்திருப்பது சிறந்ததாகும். என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: இந்த ஹதீஸ் வலுவானது அல்ல.

தரம் : ளயீப்

(83) باب فِي الإِكْسَالِ
பாடம்: 83 விந்து வெளிப்படாது உடலுறவு கொள்ளல்

214-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو يَعْنِي ابْنَ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي بَعْضُ، مَنْ أَرْضَي، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ، أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ ذَلِكَ رُخْصَةً لِلنَّاسِ فِي أَوَّلِ الْإِسْلَامِ لِقِلَّةِ الثِّيَابِ، ثُمَّ أَمَرَ بِالْغُسْلِ، وَنَهَى عَنْ ذَلِكَ»، قَالَ أَبُو دَاوُدَ: يَعْنِي الْمَاءَ مِنَ المَاءِ

[حكم الألباني] : صحيح

214.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதை) உடலுறவு கொண்டு விந்து வெளிப்பட வில்லையானால் குளிக்க வேண்டியதில்லை என்பதை இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மக்களுக்கு அனுமதி வழங்கிய காரணம் ஆடைகள் போதாமையினால் தான். பிறகு குளிக்க வேண்டுமென்று கட்டளை விதித்து, அதற்கு தடை விதித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: உபையி பின் கஃப் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
(இதை என்பதன் விளக்கமாக விந்து வெளிப்பட்டாலே குளிக்க வேண்டும் என்பதாகும்)
நீருக்கு நீர் பரிகாரம் என்றால் உடலுறவின் போது இந்திரியம் வெளிப்பட்டால் மட்டும் குளிப்பது கடமையாகும் என்பதைக் குறிக்கும் இது ஆரம்ப காலத்தில் உள்ள சலுகை என்று இந்த ஹதீஸில் அறிகின்றோம்.

தரம் : ஸஹீஹ்

215-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْبَزَّازُ الرَّازِيُّ، حَدَّثَنَا مُبَشِّرٌ الْحَلَبِيُّ، عَنْ مُحَمَّدٍ أَبِي غَسَّانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ، «أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يَفْتُونَ، أَنَّ الْمَاءَ مِنَ المَاءِ، كَانَتْ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ فِي بَدْءِ الْإِسْلَامِ، ثُمَّ أَمَرَ بِالِاغْتِسَالِ بَعْدُ»

[حكم الألباني] : صحيح

215.விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும் என்று அவர்கள் அளித்த தீர்ப்புகள் யாவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய துவக்க காலத்தில் வழங்கிய அனுமதியே பின்னர் அவர்கள் குளிக்கும்படிக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: உபையி பின் கஃப் (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

216-حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ الْفَرَاهِيدِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، وَأَلْزَقَ الْخِتَانَ بِالْخِتَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»

[حكم الألباني] : صحيح

216.ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமர்ந்து ஆண்குறியை பெண்குறியோடு இணைத்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமையாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

தரம் : ஸஹீஹ்

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمَاءُ مِنَ المَاءِ»، وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ

[حكم الألباني] : صحيح

217.விந்து வெளிப்பட்டாலே குளிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அபூஸலமா அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.

தரம் : ஸஹீஹ்

(84) باب فِي الْجُنُبِ يَعُودُ
பாடம்: 84 குளிக்காமல் மறுமுறை உடலுறவு கொள்ளல்

218-حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ»، قَالَ أَبُو دَاوُدَ: وَهَكَذَا رَوَاهُ هِشَامُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسٍ، وَمَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، وَصَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، كُلُّهُمْ عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

[حكم الألباني] : صحيح

218.ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு கடைசியில் ஒரு தடவையே குளித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்.

இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் பின் ஜைத் அவர்களும் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கதாதா அவர்கள் வாயிலாக மஃமர் அவர்களும், ஜுஹ்ரி வாயிலாக சாலிஹ் பின் அபுல் அகலர் ஆகிய அனைவருமே நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றனர்.

தரம் : ஸஹீஹ்

(85) باب الْوُضُوءِ لِمَنْ أَرَادَ أَنْ يَعُودَ

பாடம்: 85 திரும்ப உடலுறவு கொள்ளும் முன் உலூச் செய்தல்

219-حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَمَّتِهِ سَلْمَى، عَنْ أَبِي رَافِعٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ، يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ»، قَالَ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا تَجْعَلُهُ غُسْلًا وَاحِدًا، قَالَ: «هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ»، قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ أَنَسٍ أَصَحُّ مِنْ هَذَا

[حكم الألباني] : حسن

219.ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு ஒவ்வொரு தடவையும் குளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இதை நீங்கள் மொத்தமாக ஒரு தடவை குளித்திருக்கக் கூடாதா? என்று நான் வினவிய போது இதுவே உள்ளும் புறமும் சுத்தமானதாக ஆகும் என்று பதில் அளித்தனர்.

அறிவிப்பவர்: அபூராபிஃ அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
அனஸ் (ரலி) அவர்களது ஹதீஸ் இதைவிட மிகச் சரியானதாகும்.

தரம் : ஹஸன்

220-حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ بَدَا لَهُ أَنْ يُعَاوِدَ، فَلْيَتَوَضَّأْ بَيْنَهُمَا وُضُوءًا»

[حكم الألباني] : صحيح

220.உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

(86) باب فِي الْجُنُبِ يَنَامُ

பாடம்: 86 குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உறங்குதல்

221-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ»

[حكم الألباني] : صحيح

221.உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழுவி உலூச் செய்து பிறகு உறங்குக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

)87) باب الْجُنُبِ يَأْكُلُ

பாடம்: 87 குளிப்புக் கடமையானவர் குளிக்காமலேயே உண்ணுதல்

222-حَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»،

[حكم الألباني] : صحيح

222.குளிப்புக் கடமையான நிலையில் நபி (ஸல்) அவர்கள் உறங்க எண்ணும் போது தொழுகைக்காக செய்வது போல் உலூச் செய்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.

தரம் : ஸஹீஹ்

223-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ، زَادَ: «وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ غَسَلَ يَدَيْهِ»، قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، فَجَعَلَ قِصَّةَ الْأَكْلِ قَوْلَ عَائِشَةَ مَقْصُورًا، وَرَوَاهُ صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، كَمَا قَالَ ابْنُ الْمُبَارَكِ، إِلَّا أَنَّهُ قَالَ: عَنْ عُرْوَةَ، أَوْ أَبِي سَلَمَةَ، وَرَوَاهُ الْأَوْزَاعِيُّ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا، قَالَ ابْنُ الْمُبَارَكِ

[حكم الألباني] : صحيح

223.இந்த ஹதீஸ் சுஹ்ரீ வழியாக வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது. இதில், 'குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பினால் கைகள் இரண்டையும் கழுவிக் கொள்ள வேண்டும்' என்பது கூடுதலாக உள்ளது.

இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:

1. இந்த ஹதீஸ் யூனுஸ் வழியாக இபுனு வஹ்ப் அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் குளிப்புக் கடமையானவர் உண்ணலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இதே ஹதீஸ் வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு இப்னு முபாரக் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. இதை உர்வா அல்லது அபூஸலமாவிடமிருந்து அவர் அறிவிக்கிறார்.

3. அல் அவ்ஸிஈ அவர்களும் இப்னு முபாரக் அறிவிப்பது போலவே அறிவிக்கிறார். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து யூனுஸ், அவர்களிடமிருந்து அல்அவ்ஸிஈ அவர்கள் அறிவிக்கிறார்.

தரம் : ஸஹீஹ்

(88) باب مَنْ قَالَ يَتَوَضَّأُ الْجُنُبُ

பாடம்: 88 குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உலூச் செய்து கொள்வது.

224-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ، تَوَضَّأَ» تَعْنِي وَهُوَ جُنُبٌ

[حكم الألباني] : صحيح

224.ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

225-حَدَّثَنَا مُوسَى يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، أَخْبَرَنَا عَطَاءٌ الْخُرَاسَانِيُّ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، «أَنَّ النَّبِيَّ صلّى الله [ص: 58] عليه وسلم رَخَّصَ لِلْجُنُبِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ أَوْ نَامَ، أَنْ يَتَوَضَّأَ»، قَالَ أَبُو دَاوُدَ: «بَيْنَ يَحْيَى بْنِ يَعْمَرَ، وَعَمَّارِ بْنِ يَاسِرٍ فِي هَذَا الْحَدِيثِ رَجُلٌ» وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، وَابْنُ عُمَرَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو «الْجُنُبُ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ تَوَضَّأَ»

[حكم الألباني] : ضعيف

225.குளிப்புக் கடமையான ஒருவருக்கு உலூச் செய்த பின் உண்ணவும் உறங்கவும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:

1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எஹ்யா பின் எஃமுர், அம்மார் பின் யாசிர் இருவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டு இருக்கிறார்.

2. அலி இப்னு அபூதாலிப், இப்னு உமர், அப்துல்லா பின் அம்ர் கூறுகிறார்கள்: குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பும் போது உலூச் செய்ய வேண்டும்.

தரம் : ளயீப்
(89) باب فِي الْجُنُبِ يُؤَخِّرُ الْغُسْلَ

பாடம்: 89 குளிப்புக் கடமையானவர் குளிப்பதை தாமதிக்க அனுமதி.

226-حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا بُرْدُ بْنُ سِنَانٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فِي أَوَّلِ اللَّيْلِ أَوْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا اغْتَسَلَ فِي أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا اغْتَسَلَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ أَوَّلَ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا أَوْتَرَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً. قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْهَرُ بِالْقُرْآنِ أَمْ يَخْفُتُ بِهِ؟ قَالَتْ: «رُبَّمَا جَهَرَ بِهِ وَرُبَّمَا خَفَتَ»، قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً

[حكم الألباني] : صحيح

226.குதைப் பின் அல்ஹரித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். (குளிப்புக் கடமையான) நபி (ஸல்) அவர்கள் குளிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போது குளிப்பார்கள்? இரவின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் குளிப்பார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்;பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பத்தில் தொழுதார்களா? அல்லது இறுதியில் தொழுதார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அதற்கு நான் அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்களா? அல்லது சப்தமின்றி ஓதுவார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள். சிலவேளை அவர்கள் சப்தத்துடனும் சிலவேளை சப்தமின்றியும் ஓதுவார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன்.

தரம் : ஸஹீஹ்

227-حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ»

[حكم الألباني] : ضعيف

227.உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலி (ரலி) அவர்கள்.

தரம் : ளயீப்

228-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ أَنْ يَمَسَّ مَاءً»، قَالَ أَبُو دَاوُدَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْوَاسِطِيُّ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، يَقُولُ: «هَذَا الْحَدِيثُ وَهْمٌ» يَعْنِي حَدِيثَ أَبِي إِسْحَاقَ

[حكم الألباني] : صحيح

228.குளிப்புக் கடமையான நிலையில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீரைத் தொடாமலேயே தூங்கி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது சொல்கிறார்கள்:
யஸீது பின் ஹாரூன் சொல்லக் கேட்டதாக ஹஸன் பின் அலி அல்வஸீத்தி கூறுகிறார்கள்: இந்த ஹதீஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, ஏனெனில் இந்த ஹதீஸ் அபூஇஸ்ஹாக் என்பவரால் அறிவிக்கப்படுகிறது.

தரம் : ஸஹீஹ்

(90) باب فِي الْجُنُبِ يَقْرَأُ الْقُرْآنَ
பாடம்: 90 குளிப்புக் கடமையானவர் குர்ஆனை ஓதுதல்

229-حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَا وَرَجُلَانِ، رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ، فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا، وَقَالَ: إِنَّكُمَا عِلْجَانِ، فَعَالِجَا عَنْ دِينِكُمَا، ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ، فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا، ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ، فَأَنْكَرُوا ذَلِكَ، فَقَالَ: " إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْرُجُ مِنَ الخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ، وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ - أَوْ قَالَ: يَحْجِزُهُ - عَنِ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ "

[حكم الألباني] : ضعيف

229.அப்துல்லாஹ் பின் ஸலமா சொன்னார்கள்:

இரண்டு பேரில் ஒருவர் எங்களைச் சேர்ந்தவர் மற்றவர் பனூ அஸத் கூட்டத்தாரைச் சேர்ந்தவர் இவர்களோடு நானும் அலி (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில் சென்றிருந்தோம். அவ்விருவரையும் ஒரு கூட்டத்தாரிடம் 'நீங்கள் வலிமை மிக்கவர்களாக இருக்கிறீர்கள். உங்களின் வலிமையை மார்க்கத்தில் காட்டுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள். பிறகு எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் வெளியே வந்து தண்ணீர் கேட்டு வாங்கி ஒரு கையளவு தண்ணீரைக் கொண்டு (கைகள்) மீது தடவினார்கள். பிறகு குர்ஆன் ஓதினார்கள். அவர்கள் இந்த செயலினால் ஆச்சர்யமடைந்தனர். அப்போது அவர்கள் சொன்னார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த பிறகு எங்களுக்குக் குர்ஆன் கற்றுக் கொடுத்தார்கள், எங்களோடு இறைச்சியை உண்டார்கள். எதுவும் அவர்களை தடுக்க வில்லை. அறிவிப்பாளர் சொன்னார்: குர்ஆனை ஓதுவதிலிருந்து எதுவும் தடுக்க வில்லை, குளிப்புக் கடமையைத் தவிர.

 தரம் : ளயீப்




No comments:

Post a Comment