கேள்வி : 04
கேள்வி: الشهادة" கலிமாவானது தவ்ஹீதின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கியுள்ளதா?
பதில்: الشهادة" கலிமாவானது தவ்ஹீதின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.
அவை பின் வரும் இரு நிலைகளில் இருக்க முடியும்
ஒன்றில் கருத்து ரிதியிலானதாக, அல்லது உள்ளடக்கத்தி லானதாக இருக்க முடியும். அதாவது
இதனை உதாரணம் மூலம் குறிப்பிடுவதாயின் ஒருவர்; “நான் அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் எவரும் கிடையாது” என
சான்று பகர்கிறேன் எனக் குறிப்பிடின் இதன்
கருத்து அவன் உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான்
என்பதே எமது புரிதலுக்கு உட்படுகின்ற ஒரு விடயமாகும்.
அதாவது توحيد العبادة” தவ்ஹீதுல் இபாதா என்பது தவ்ஹீதுல் உலூஹிய்யாவான கொள்கை
ரீதியாக அல்லாஹ்வை ஒருவன் என ஏற்று வணங்குதல் என்ற விடயங்களை வலியுறுத்தும். அதே வேலை
توحيد الربوبية தவ்ஹீதுல் ருபூபிய்யாவையும் கருத்து ரீதியாக அல்லாஹ்வை
ஒருவன் என ஏற்றுக் கொள்ளுதல் என்ற கருத்தும் அதில் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில் அல்லாஹ்
வை மாத்திரம் வணங்குபவர்;கள் توحيد
தவ்ஹீதுல் ருபூபிய்யாவை ஏற்காது அவனை வணங்குவது சாத்தியமில்லை.
அது நிகழமுடியாத விடயமுமாகும். அது மட்டுமல்லாமல் توحيد العبادة தவ்ஹீதுல் இபாதாவானது அல்லாஹ்வை அவனது பெயர்கள்
பண்புகளில் தனித்துவமானவன் என ஏற்றுக்கொள்ளும் توحيد الأسماء والصفات என்ற வகையும் உள்ளடக்கியுள்ளது என்பதும் முக்கிய அம்சமாகும்.
ஆகவே ஒரு மனிதனைப் பொருத்தமட்டில் எதை வணங்குவதாயினும் அது வணக்கத்திற்கு
தகுதி யானது என ஏற்று அதன் பெயர்களையும், பண்புகளையும் அறிந்துதான் வணங்க தலைப் படுகிறான். இதனால் தான்
இப்ராஹீம் அலை அவர்கள் தனது தந்தையை நோக்கி
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا
يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــًٔـا
"என் தந்தையே! செவியுறாததையும், பார்க்காததையும், உமக்கு எந்தப் பயனும்
அளிக்காததையும் ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை
நினைவூட்டுவீராக!( 19:42)
எனவே (توحيد العبادة)
தவ்ஹீதுல் இபாதா என்பது தவ்ஹீதுல் உலூஹிய்யாவைக் குறிக்கிறது. தவ்ஹீதுல் உலூஹிய்யாவானது
الربوبية) توحيد)
தவ்ஹீதுல் ருபூபிய்யாவையும் (توحيد الأسماء والصفات) தவ்ஹீதுல் அஸ்மாஇ
வஸ்ஸிபாத் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
No comments:
Post a Comment