Friday, January 12, 2018

அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு






بسم الله الرحمن الرحيم
حصن المسلم من أذكار الكتاب والسنة
ஹிஸ்னுல் முஸ்லிம்மின் அஸ்காரில் கிதாபி வஸ்ஸுன்னா
- ஆசிரியர் ஸயீத் பின் அலி பின் வஹஃப் அல் ஃகஹ்தானி

[فضل الذكر]
அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

قال الله تعالى: {فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ} [البقرة: 152] (1) {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا} [الأحزاب: 41] (2) {وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا} [الأحزاب: 35] (3) {وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ} [الأعراف: 205] (4)

அல்லாஹ் கூறுகிறான் :

எனவே என்னை நினையுங்கள் ! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள் ! எனக்கு நன்றி மறக்காதீர்கள் ( 2 : 152 )

நபிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!( 33:41)

அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்( 33:35)

உமது இறைவனைக் காலையிலும் , மாலையிலும் மனதிற்குள்பணிவாகவும் , அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக ! கவனமற்றவராக ஆகி விடாதீர் ( 7:205 )


وقال صلى الله عليه وسلم: «مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت»1-

البخاري مع الفتح 11 / 208

 1.நபி( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : தன் இறைவனை நினைவு கூறுகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவு கூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்

 ( நூல் : ஃபத்ஹுல் பாரி பக்கம் 11 , பக்கம் 208 )

2-وقال صلى الله عليه وسلم: «ألا أنبئكم بخير أعمالكم، وأزكاها عند مليككم، وأرفعها في درجاتكم، وخير لكم من إنفاق الذهب والورق، وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم؟ " قالوا بلى. قال: " ذكر الله تعالى»


الترمذي 5 / 459 وابن ماجه 2 / 1245 وانظر صحيح ابن ماجه 2 / 316 وصحيح الترمذي 3 / 139

2 நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களுக்கு உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துத் தரவா ? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது ; உங்கள் அரசன் ( இறைவன் ) இட்த்தில் மிகவும் தூய்மையானது ; உங்கள் அந்தஸ்துகளை மிகவும் அதிகப்படுத்தக் கூடியது; தங்கம், வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது; மட்டுமல்ல நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும் “ தோழர்கள் சொன்னார்கள் ;” அவசியம் காண்பித்துத் தாருங்கள் “ நபி ஸல் கூறினார்கள் : அது தான் அல்லாஹ்வை நினைவு கூறுவது [ திக்ர் செய்வது ] ஆகும்

நூல் : திர்மிதீ ( 3377 )  இப்னு மாஜா ( 3790 )
தரம் : ஸஹீஹ்

3-وقال صلى الله عليه وسلم: «يقول الله تعالى: أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني، فإن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم، وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا، وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا، وإن أتاني يمشي أتيته هرولة»

البخاري 8 / 171 ومسلم 4 / 2061

3 அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் : என் அடியான் என்னை குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன் அவன் என்னை நிவைவு கூறும் போது நான் அவனுடன் இருக்கிறேன் .அவன் என்னை மனத்தினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனத்தினுள் நினைவு கூறுகிறேன்.அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூருகிறேன்.அவன் என்னை நோக்கி ஒரு சான் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழும் நெருங்கிச் செல்கிறேன் ;அவன் என்னை நோக்கி ஒரு முழும் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன் அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன்’

நூல் : புஹாரி ( 7405 )  முஸ்லிம் ( 2677 ) 

தரம் : ஸஹீஹ்

وعن عبد الله بن بُسْر رضي الله عنه «أن رجلا قال: يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به.4-
قال: " لا يزال لسانك رطبا من ذكر الله» 

صحيح الترمذي 3 / 139 وصحيح ابن ماجه 2 / 317

4 அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் கேட்டார் ; அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாத்தின் கடமைகள் – நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன.எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்து தாருங்கள் ; நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன் , அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள் . உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டுப் பசுமையாக இருக்கட்டுமாக.

நூல் : திர்மிதீ ( 3375 ) இப்னு மாஜா ( 3793 )
தரம் : ஹஸன்
5-
وقال صلى الله عليه وسلم: «من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها، لا أقول: الم حرف؛ ولكن: ألف حرف، ولام حرف، وميم حرف»

صحيح الترمذي 3 / 9 وصحيح الجامع الصغير 5 / 340

5 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : எவர் அல்லாஹ்வின் வேதத்தில்  இருந்து ஒர் எழுத்தை ஒதுகிறாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை அதைபோன்ற பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது.அலிஃப் , லாம் , மீம் என்பது ஒர் எழுத்து என்று நான் கூறவில்லை , மாறாக அலிஃப் ஒர் எழுத்து லாம் ஒர் எழுத்து மீம் ஒர் எழுத்து.

நூல் : திர்மிதீ ( 2910  ) அல்ஜாமி உஸ் ஸகீர் ( பாகம் 5, பக்கம் 340 )
தரம் : ஹஸன் லி ஃகைரிஹி

6-وعن عقبة بن عامر رضي الله عنه قال: «خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال: " أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق فيأتي منه بناقتين كوماوين في غير إثم ولا قطيعة رحم؟ " فقلنا: يا رسول الله نحب ذلك. قال: " أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم، أو يقرأ آيتين من كتاب الله عز وجل خير له من ناقتين، وثلاث خير له من ثلاث، وأربع خير له من أربع، ومن أعدادهن من الإبل»

مسلم 1 / 553

6 உக்பா இனு ஆமிர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 

நாங்கள் ஸுஃப்பாவில் ( மஸ்ஜிதின் முன்வராத்தாவின் திண்ணையில் ) இருந்து கொண்டிருந்தபோது நபி ஸல் அவர்கள் ( வீட்டில் இருந்து ) வெளியே வந்தார்கள் அப்போது கூறினார்கள் : தினமும் பத்ஹாவுக்கு அல்லது அகீகிற்குச் சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு ஒட்டங்களை பாவமோ பந்தமுறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புவர் உங்களில் எவரும் உண்டா ? அதற்கு நாங்கள் கூறினோம் : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம், “ நபியவர்கள் சொன்னார்கள் ; உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்கு சென்று அல்லாஹ்வின் வேத த்திலிருந்து இரண்டு வசனங்களைக் கற்றுக் கொடுக்கவோ ஓதவோ செய்யலாமே ! இரண்டு வசனங்களை  ஒதுவது அவருக்கு இரண்டு ஒட்டங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும் இவ்வாறே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்.

நூல் : முஸ்லிம் ( 806 )
தரம் : ஸஹீஹ்

وقال صلى الله عليه وسلم: «من قعد مقعدا لم يذكر الله فيه كانت عليه من الله ترة، ومن اضطجع مضجعا لم يذكر الله فيه كانت عليه من الله ترة»7
-
أبو داود 4 / 264

7 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்துவிடும். ஒருவர் தான்படுதிருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்.

நூல் : அபூதாவூத் ( 4856 )
தரம் : ஹஸன்

وقال صلى الله عليه وسلم: «ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه، ولم يصلوا على نبيهم إلا كان عليهم ترة، فإن شاء عذبهم وإن شاء غفر لهم»8
-
صحيح الترمذي 3 / 140

8 எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்ட்த்திற்குரியதாகவே அமைந்துவிடும். பிறகு அவன் நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான் ;அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான் .

நூல் : திர்மிதீ ( 3380 )
தரம் : ஸஹீஹ் லி ஃகைரிஹி

وقال صلى الله عليه وسلم: «ما من قوم يقومون من مجلس لا يذكرون الله فيه إلا قاموا عن مثل جيفة حمار وكان لهم حسرة»9
-
أبو داود 4 / 264 وأحمد 2 / 398 وانظر صحيح الجامع 5 / 176

9 ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்ந்திடாமல் எழுந்தார்களேயானால்.அவர்கள் செத்த கழுதையை விட்டு விட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்குக் கைசேதமாகவே அமையும்.

நூல் : அபூதாவூத் ( 4855 ) அஹ்மத் ( 27489 )
தரம் : ஸஹீஹ் லி ஃகைரிஹி

No comments:

Post a Comment