அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் சில...
1.நான் யார் ? எதற்க்கு பூமியில் பிறந்தேன் ?
2.நான் என்ன செய்ய வேண்டும் ?
3.எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
4.என்னிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ன ?
5. சக மனிதர்களிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
6. அறிவினர்கள் தர்க்கம் செய்தால் என்ன செய்ய வேண்டும் ?
7.சத்தியம் என்ற விளங்கின பிறகு எதை செய்ய கூடாது ?
-----------------------------------
1.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.( 51:56)
2.
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا ....
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள்.(25:63)
3.
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19)
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).( 31:17-19)
4.
يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.(31:17)
5.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!(31:18)
6.
وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
....தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி விடுவார்கள்.(25:63)
7.
صحيح الترغيب والترهيب (1 / 33):
وعن أبي أمامة رضي الله عنهـ قال قال رسول الله صلى الله عليه وسلم:
ما ضل قوم بعد هدى كانوا عليه إلا أوتوا الجدل
ثم قرأ ما ضربوه لك إلا جدلا (الزخرف 85)
رواه الترمذي وابن ماجه وابن أبي الدنيا في كتاب الصمت وغيره وقال الترمذي حديث حسن صحيح
நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை என்று நபி ஸல் கூறிவிட்டு
{مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ }
[ விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே! ]
வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.என அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ ( 3253 ) தரம் : ஹஸன் ஸஹீஹ்
No comments:
Post a Comment