நரகில் சேர்க்கும் மூன்று விஷயங்கள்
நியாயத்திர்ப்பு நாளின் அதிபதியாகிய வல்ல நாயன் தன் திருமறையில் கூறுகிறான் :
وَلَا تُصَعِّرْ
خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّـهَ لَا
يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ﴿١٨﴾وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن
صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ ﴿١٩﴾
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே !பூமியில் கர்வமாக நடக்காதே
! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். நீ நடக்கும் போது
நடுத்தரத்தைக் கடைபிடி, உனது குரலைத் தாழ்த்திக்
கொள் ! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின்
குரலாகும்
அல் குர் ஆன் ( 31 : 18 , 19 )
மேலும் அல்லாஹுவின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
மூன்றைத் தவிர்த்த நிலையில் மரணம் வந்தால் சொர்க்கம்…
أَخْبَرَنَاهُ أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ
الْفَقِيهُبِبَغْدَادَ ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ،
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَعَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالا :
حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ،
عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، قَالَ : قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ
الْكِبْرُ وَالْغُلُولُ وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 2156
“பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில் எவர் மரணமடைவாரோ
அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்கள் : ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 2156 , ஜாமிஅத் திர்மிதீ 1497 , முஸ்னத் அஹ்மத் 21356
தரம் : ஸஹீஹ்
மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்களை
இருக்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது, அதிலும் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது போல் பெருமை , மோசடி , கடன் ஆகிய மூன்றும் ஒரு மனிதனிடம் துளியும் இருக்ககூடாது என்று கட்டளையிடுகிறது.
அப்படி இருந்தால் அதன் மூலம் அவர் செர்க்கம் புக முடியாது என்றும் கூறுகின்றது. இது
தொடர்பாக அல்லாஹ்வும் , அவனது தூதர் ஸல் அவர்களும்
எச்சரித்துள்ள பல சம்பவங்களை மேலும் பார்ப்போம்.
ஆணவம் ( தற்பெருமை )
எவனிடம் தற்பெருமை குடிகொண்டு விடுமோ அவன் அழிவின் விளிம்பிற்குப் போய் விட்டான்
என்று கூறலாம் . அவனிடம் நற்காரியங்கள் அனைத்தும் நீங்குவதற்கும் , நற்செயல்கள் வராமல் இருப்பதற்க்கும்
இந்தத் தற்பெருமை காரணமாக அமைந்து விடும்
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا
لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا ۚ
وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ ﴿٨٣﴾
பூமியில் ஆணவத்தையும் ,
குழப்பத்தையும் விருபாதவர் களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம் . நல்ல
முடிவு ( இறைவனை ) அஞ்சுவோர்க்கே !
அல் குர் ஆன் ( 28 : 83 )
பூமியில் நான் தான் பெரியவன் என்று எண்ணி நடப்பவனுக்கு மறுமையில் சொர்க்கம் என்ற
வீடு உறுதியாகக் கிடையாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான் . இந்த எண்ணம் எவரிடம் குடிகொண்டு
விடுமோ அதுவே சொர்க்கம் செல்வதற்கு மிகப் பெரிய தடைக் கல்லாக அமைந்து விடும்.
கடுகளவும் இருக்க கூடாது
:
حَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ
التَّمِيمِيُّ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ،
- قَالَ مِنْجَابٌ أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، - عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ،
عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم " لاَ يَدْخُلُ النَّارَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ
خَرْدَلٍ مِنْ إِيمَانٍ وَلاَ يَدْخُلُ الْجَنَّةَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ
حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرِيَاءَ " .
தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டர். தமது
உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி ( ஸல்
) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 148
பெருமை இறைவனுக்கு மட்டுமே
உரியது :
பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது அதற்குத் தகுதியுள்ளவன் அல்லாஹ் மட்டுமே
! அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்பை எவரும் செய்யத் துணிந்தால் அவர் அல்லாஹ்வால்
வேதனை செய்யப்படுவார்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ
الأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي،
حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي مُسْلِمٍ
الأَغَرِّ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي، هُرَيْرَةَ
قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعِزُّ إِزَارُهُ
وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ "
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
கண்ணியம் அ ( ந்த இறை ) வனுடைய கிழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும் . ஆகவே
( அவற்றில் ) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன் .
அறிவிப்பவர் : அபூ ஸயீத் ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5114
எனவே இறைவனுக்கு மட்டும் சொந்தமான இந்தப் பெருமையை விட்டுவிட்டு பணிவு என்ற நற்பண்பைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
மோசடி :
சொர்க்கம் தடை செய்யப்படுவதற்கு காரணமாகத் திகழும் இரண்டாவது காரணம் மோசடி !! இந்தத்
தன்மையிலிருந்து விடுபட்டவர் சொர்க்கம் செல்வார். இந்த மோசமான காரியத்தைச் செய்து வருபவர்
சொர்க்கம் புக முடியாது. இந்த மோசடித் தன்மை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறிகிறான்
:
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّـهَ وَالرَّسُولَ وَتَخُونُوا
أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿٢٧﴾
நபிக்கை கொண்டோரே ! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் , இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள் . உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும்
மோசடி செய்யாதீர்கள்.
அல் குர் ஆன் 8 : 27
நபி ( ஸல் ) அவர்கள் இந்த மோசடி பற்றி கூறும்போது இது இரட்டை வேடம் நயவஞ்டகனின்
தன்மை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ،
وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالاَ حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سُهَيْلٍ، نَافِعُ بْنُ
مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا
حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا ائْتُمِنَ خَانَ " .
பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் மாறு செய்வான் , நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்சகனின் அடையாளமாகும் என்று நபி (
ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல்கள் : ஸஹீஹுல் புகாரி 33 , ஸஹீஹ் முஸ்லிம் 107
மோசடி என்ற மோசமான காரியத்தைத் தொடர்ந்து செய்து வரும் ஒருவர் அவர் தொழுதாலும்
, நோன்பு நோற்றாலும் அவரிடம் நயவஞ்சகத் தன்ன்மையில் ஒன்று
இருந்து கொண்டே இருக்கும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மோசமான கூட்டம் மோசடி செய்யும்
:
حَدَّثَنَا
آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَمِعْتُ زَهْدَمَ
بْنَ مُضَرِّبٍ، قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ
الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ". قَالَ عِمْرَانُ
لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدُ قَرْنَيْنِ أَوْ
ثَلاَثَةً. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ بَعْدَكُمْ
قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ، وَلاَ يُسْتَشْهَدُونَ
وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ ".
..........உங்களுக்குப் பிறகு ஒரு
சமுதாயத்தார் வர இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம்
எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள்
. ஆனால் சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை
செய்வார்கள் ,ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள்.
அவர்களிடையே பருமனாயிருக்கும் ( தொந்திவிழும் ) நிலை தோன்றும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரி 2651
ஈமான் இருக்காது :
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ
عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ التُّجِيبِيُّ، أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ
أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ
عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولاَنِ قَالَ أَبُو هُرَيْرَةَ
إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَزْنِي الزَّانِي
حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ
مُؤْمِنٌ وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ "
. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ
عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُحَدِّثُهُمْ هَؤُلاَءِ عَنْ أَبِي
هُرَيْرَةَ ثُمَّ يَقُولُ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُلْحِقُ مَعَهُنَّ "
وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا
أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ " .
...........மோசடி செய்பவன் மோசடி செய்யும்
போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை . ( இதிலிருந்து விலகிக்
கொள்ளுமாறு ) உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 103
மோசடி செய்வபவர் , மோசடி செய்யும் போது ஈமான்
இல்லாமல் போய் விடும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது . சொர்க்கத்தைத்
தடை செய்யும் இந்த மோசமான காரியத்தை விட்டும் விலகி சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொள்ள
வேண்டும்.
கடன் :
கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்காமல் அல்லது அதைத் திருப்பிக் கொடுபதற்குரிய
செல்வத்தைச் சேர்க்காமல் இறந்து விடுவது சொர்க்கத்திற்குச் செல்ல முடியாமல் போவதற்குக்
காரணமாக அமைகின்றது . இந்தக் கடன் தொடர்பாக. நபி ( ஸல் ) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை
செய்துள்ளார்கள்.
மனித உரிமைகளை மீறும் விஷயத்தில் கடன் முக்கிய இடத்தை வகிக்கிறது. வசதியில்லாத
நிலையில் அல்லது முக்கியத் தேவைக்காக வாங்கும் கடன்களைப் பெரும்பாலும் குறித்த காலத்தில்
கொடுப்பதில்லை . மேலும் சிலர் கடனை வாங்கி விட்டுத் தலைமறைவாகி விடுகின்றனர்
இதனால் கடன் கொடுத்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்குச் சரியான தண்டனையாக
சொர்க்கம் தடை செய்யப்படுகிறது.
கடனாளிக்கு நபிகளார் தொழுவிக்கவில்லை :
நபி ( ஸல் ) அவர்கள் தம் வாழ் நாளில் கடன்பட்டவர் இறந்து போனால் அவருடைய கடனை நிறைவேற்றும்
அளவுக்குச் செல்வத்தை விட்டுச் சென்றால் மட்டுமே தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில்
அவர்கள் தொழுகை நடத்தாமல் நபித் தோழர்களை நடத்தச் செல்வார்கள்.
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ،
حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى
الله عنه ـ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ
أُتِيَ بِجَنَازَةٍ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. فَقَالَ " هَلْ عَلَيْهِ
دَيْنٌ ". قَالُوا لاَ. قَالَ " فَهَلْ تَرَكَ شَيْئًا
". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى،
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا. قَالَ " هَلْ عَلَيْهِ
دَيْنٌ ". قِيلَ نَعَمْ. قَالَ " فَهَلْ تَرَكَ شَيْئًا
". قَالُوا ثَلاَثَةَ دَنَانِيرَ. فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ
بِالثَّالِثَةِ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. قَالَ " هَلْ تَرَكَ شَيْئًا
". قَالُوا لاَ. قَالَ " فَهَلْ عَلَيْهِ دَيْنٌ ".
قَالُوا ثَلاَثَةُ دَنَانِيرَ. قَالَ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ
". قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَىَّ
دَيْنُهُ. فَصَلَّى عَلَيْهِ.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள்
'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்"
என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச்
சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) கேட்டபோது
'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு
வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத்
தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் எதையேனும்விட்டுச்
சென்றிருக்கிறாரோ? என்று நபி(ஸல்) அவர்கள்
கேட்டார்கள். 'இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள்
கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்'
என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா ( ரழி )
நூல் ; ஸஹீஹுல் புகாரி 2289
அனைவருக்கும் தொழுகை நடத்திய நபி ( ஸல் ) அவர்கள் கடனாளிக்கு மட்டும் தொழுவிக்க
மறுத்தது, கடனைத் திருப்பிச் செலுத்தாமல்
இறந்து விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்துவதற்குத்தான்.
மறுமையில் நன்மைகள் பிடுங்கப்படும்
:
கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விட்டால் கடன் கொடுத்தவர்
மறுமை நாளில் இறைவனிடம் முறையிடும் போது கடன் வாங்கியவரின் நன்மைகளை எடுத்துக் கடன்
கொடுத்தவருக்கு வழங்கப்படும்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ،
وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ
- عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَالَ " أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ " .
قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ . فَقَالَ
" إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ
وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ
هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ
وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا
عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ
" .
(ஒரு முறை) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ
இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார்.
ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார்.
ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக்
கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக்
கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து
சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு
அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5037
கடன் வாங்கியவர் அதை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற மனித உரிமையை
மீறினால் மறுமை நாளில் இவர் எவ்வளவு பெரிய நன்மைகளைச் செய்திருந்தாலும் அவருடைய நன்மைகள்
கடன் கொடுத்தவருக்கு வழங்கப்பட்டு இவருக்கு ஒன்றும் இல்லாத நிலை கூட ஏற்படலாம் . இதனால்
நரகத்திற்குச் செல்லும் நிலை கூட ஏற்படலாம் . எனவேதான் நபி ( ஸல் ) அவர்கள் ஒவ்வொரு
தொழுகையிலும் கடனை விட்டும் பாதுகாப்புத் தேடுவார்கள்.
நபி ( ஸல் ) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ
الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ،
وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி
வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம்
காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும்
பாதுகாப்பு தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அயிஷா ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரி 6369
எனவே நாமும் இதுபோன்று பிரார்த்தித்து கடன் சுமையிலிருந்து பாதுகாப்பு தேடிக்கொள்வோம்.
கடன் பொய் சொல்லத் தூண்டும்
:
கடன் வாங்குவதால் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் . இதனால் இன்னொரு பாவமும் சேர்ந்து
கொள்கிறது. எனவேதான் , நபி ( ஸல் ) அவர்கள் கடனை
விட்டும் அதிகமதிகம் இறைவனிடம் பாதிகாப்புத் தேடுவார்கள்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي
أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ،
عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ "
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ".
فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ
الْمَغْرَمِ قَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ
وَوَعَدَ فَأَخْلَفَ ".
நபி ( ஸல் ) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது இறைவா ! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன் என்று கூறுவார்கள் ( தைச் செவியுற்ற ) ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் அல்லாஹ்வின்
தூதரே ! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம்
என்ன ? என்று கேட்டார் . அதற்கு
நபி ( ஸல் ) அவர்கள், மனிதன் கடன்படும் போது
பொய் பேசுகிறான் வாக்குறுதி தந்து ( அதற்கு ) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரி 2397
தற்பெருமை , மோசடி , கடன் என்ற மூன்று காரியங்களிலிருந்து
ஒருவர் விலகி இருப்பதால் நற்செயல்கள் நம்மிடம் வந்து சேர்வதுடன் , சொர்க்கத்துக்கு உரியவகளாகவும் நாம்
ஆகலாம் எனவே நாம் செயல்பாடுகளில் இந்த மூன்று காரியங்களையும் முற்றிலுமாக விலக்கி வைப்போம்.அல்லாஹ்
நம் அனைவரும் அருள்புரிவானாக.
No comments:
Post a Comment