بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
முன்னுரை :
இறைவன் நேரடியாகப்
பேசுவதன் மூலமோ, வானவர்கள்
மூலமோ, உள்ளத்தில்
உதிக்கச் செய்வதன் மூலமோ இறைவன் தனது செய்திகளை இறைத்தூதர்களுக்குத் தெரிவிப்பான்.
அவை ஹதீஸ்கள் எனப்படும்.
ஹதீஸ்கள் அனைத்தும்
இறைச் செய்திகள் தான். ஆனால் இந்த இறைச் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
சொல்லும் போது பயன்படுத்தும் சொல்லமைப்பைப் பொறுத்து ஹதீஸ் குத்ஸி என்ற ஒரு வகை
பிற்காலத்தில் பிரிக்கப்பட்டது.
குத்ஸீ என்றால்
பரிசுத்தமானது; தூய்மையானது
என்று பொருள். ஹதீஸ் குத்ஸீ தூய்மையான ஹதீஸ் என்று பொருள்படும்.
நோன்பாளிக்கு
அல்லாஹ் கூலி கொடுப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னால் அது சாதாரண
ஹதீஸ் என்றும்
நான் கூலி
கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னால்
அது ஹதீஸ் குத்ஸீ என்றும் குறிப்பிடுகின்றனர்.அவற்றில் ஆதாரபூர்வமான செய்திகளை
மட்டும் இங்கு பார்ப்போம்
عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 1-
" لَمَّا
قَضَى اللَّهُ الْخَلْقَ، كَتَبَ فِي كِتَابِهِ عَلَى نَفْسِهِ، فَهُوَ مَوْضُوعٌ
عِنْدَهُ: إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي"
رواه مسلم (وكذلك
البخاري والنسائي وابن ماجه)
ஹதீஸ் எண் : 01
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹுத்தஆலா
படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன்
வசமுள்ள ஏட்டில், ‘என்னுடைய கருணை
என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம்
வைத்துக்கொண்டான்’.
நூல்:புகாரி(7453),முஸ்லிம்(2751), இப்னுமாஜா(4295).
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: 2-
" قَالَ
اللَّهُ تَعَالَى: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي
وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ
يُعِيدَنِي كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الْخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ
إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا،
وَأَنَا الْأَحَدُ الصَّمَدُ، لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي
كُفُوًا أَحَدٌ"
رواه البخاري (وكذلك
النسائي)
ஹதீஸ் எண் : 02
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.:
அல்லாஹ் கூறுகிறான்:
‘ஆதமுடைய மகன் என்னைப் பொய்ப்பிக்கின்றான். ஆனால் என்னை பொய்ப்பிப்பதற்கு அவனுக்கு
அதிகாரமில்லை. அவன் என்னை(தீய சொற்கள் கொண்டு) ஏசுகிறான். ஆனால் என்னை அவ்வாறு
ஏசுவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. முதலில் உருவாக்கியது போல் மீண்டும் அல்லாஹ்வால்
என்னை கன்டிப்பாக உருவாக்க முடியாது. (அதாவது நான் இறந்தப் பிறகு அல்லாஹ்வால்
என்னை உயிர்ப்பிக்க முடியாது.) என்று சொல்லி என்னை பொய்ப்பிக்கின்றான். (ஆனால்
அல்லாஹ்வாகிய) எனக்கு அவனை மீண்டும் உருவாக்குவது முதலில் அவனை உருவாக்கியதை விட
எளிதானதே. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை வைத்துள்ளான், என்று
சொல்லி என்னை அவன் நிந்திக்கிறான். ஆனால் (அல்லாஹ்வாகிய) நான் தனித்தவன். யாருடைய
தேவையுமற்றவன். நான்(யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப் படவுமில்லை.
மேலும் என்னுடன் (இனையாக) ஒப்பிடப்படக்கூடியவர் யாருமில்லை.’
நூல்: புகாரி(499 ), நஸயீ(2078
)
عَنْ زَيْدِ بْنِ
خَالِدٍ الْجُهَنِيِّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: 3-
"صَلَّى
لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ
بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ (1) كَانَتْ مِنْ اللَّيْلَةِ، فَلَمَّا
انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ عَلَى النَّاسِ،
فَقَالَ لَهُمْ: "هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا: اللَّهُ
وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ،
فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ
بِي، كَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ(1) كَذَا
وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ"
رواه البخاري (وكذلك
مالك والنسائي)
ஹதீஸ் எண் : 03
ஸைத் இப்னு காலித்
அல்ஜுஹனி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், ஹுதைபிய்யாவில்
மழை பெய்திருந்த ஒரு இரவைத் தொடர்ந்து காலை சுபுஹு தொழுகையைத் தலைமையேற்று
நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன்
மக்களை நோக்கி உங்களுடைய ரப்பு என்ன கூறியுள்ளான் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று
வினவினார்கள். அதற்கு மக்கள்,அல்லாஹ்வும், அவனுடைய
தூதரும் மட்டுமே அதனை நன்கு அறிவார்கள் என்று பதிலுரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள், அல்லாஹ்
கூறியதாக சொன்னார்கள். ‘இன்று காலை என்னுடைய அடியார்களில் ஒருவர் என் மீது
நம்பிக்கை கொண்ட முஃமினாகவும், மற்றொருவர்
என் மீPது
நம்பிக்கை கொள்ளாத காஃபிராகவும் மாறியுள்ளார்கள். எவர், அல்லாஹ்வின்
பொருட்டாலும் அவனது கருணையாலும் தமக்கு மழை இறக்கப்பட்டது என்று கூறினாரோ, அவர்
(என் மீது நம்பிக்கையுள்ள)முஃமினாகவும், (குறிப்பிட்ட)
நட்சத்திரத்தால் மழை பெய்தது என்பதை நிராகரித்தவராகவும் விளங்குகிறார். எவர் மழை
பொழிவதற்கு இன்னின்ன நட்சத்திரங்களே காரணம் என்று கூறுகிறாரோ (அவர் என் மீது
நம்பிக்கையற்ற) காஃபிராகவும்,நட்சத்திரங்கள் மீது
நம்பிக்கையுள்ளவராகவும் விளங்குகிறார்.
நூல் : புஹாரி (
1038 ) மாலிக் ( 455 )
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: 4-
" قَالَ
اللَّهُ: يَسُبُّ بَنُو آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ
وَالنَّهَارُ"
رواه البخاري (وكذلك
مسلم)
ஹதீஸ் எண் : 04
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சொன்னான்:
ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை
நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும்
உள்ளன.
நூல் :புகாரி(6181), முஸ்லிம்(2246),
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ:5-
" قَالَ
اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ؛ مَنْ
عَمِلَ عَمَلًا أَشْرَكَ مَعِي غَيْرِي(1)، تَرَكْتُهُ وَشِرْكَهُ".
رواه مسلم (وكذلك ابن
ماجه)
ஹதீஸ் எண் : 05
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்:
நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போது,எனக்குத்
துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு
செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி)
அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன்.
நூல்: முஸ்லிம்(2985)
இப்னுமாஜா ( 4202)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: 6-
" إِنَّ
أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ،
فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟
قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ
قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ
عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ. وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ
وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ
فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ
وَعَلَّمْتُهُ، وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ
تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ
قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ، فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى
أُلْقِيَ فِي النَّارِ. وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ
أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا،
قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ
يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ
فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ
عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ".
رواه مسلم (وكذلك
الترمذي والنسائي)
ஹதீஸ் எண் : 06
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு
நாளில், மக்களில்
முதன் முதலில் இறைவழியில் உயிர் துறந்த ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும்.
அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த
அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக
ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக
என்ன செய்தாய்?’ என்று
கேட்பான். அதற்கு அந்த மனிதர், ‘நான் உனக்காக (வீர)
மரணம் அடையும் வரையில் போராடினேன்.’ என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய்
சொல்கிறாய், வீரன்
என்று கூறப்படுவதற்குகாகவே போரிட்டாய். அவ்வாறே மக்களாலும் பேசப்பட்டு விட்டது.’
என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ
இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
பின்னர் (இஸ்லாமிய)
அறிவைக் கற்று, அதனைப்
பிறருக்கும் கற்றுக்கொடுத்து, குர்ஆனை ஓதும்
வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ்
அவருக்கு தான் அளித்த அருட்கொடைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும்
அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், ‘நான்
வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?’ என்று
கேட்பான். அதற்கு அந்த மனிதர், ‘நான்
உனக்காக(இஸ்லாமிய) அறிவைக் கற்று,அதனை(மற்றவர்களுக்கும்)கற்றுக்கொடுத்து, குர்ஆனையும்
உனக்காக ஓதிவந்தேன்.’ என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய்சொல்கிறாய்.
அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய அறிவை
கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும்
என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களர்லம்) பேசப்பட்டு விட்டது.’ என்று
கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச்
செல்லும்படி கட்டளையிடப்படும்.
அதன் பின்னர்
செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத்
தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவரிடம் அல்லாஹ்
தான் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு
கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் வழங்கிய
அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?’. என்று கேட்பான்.
அதற்கு அந்த மனிதர் ‘நீ எந்த வழிகளில் எல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று
விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் உனக்காக செலவு செய்யாமல் நான் விட்டதில்லை.’
என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய் சொல்கிறாய். (வள்ளல் தனத்துடன்)
வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும். என்பதற்குhகவே
நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது.’ எனக் கூறுவான்.
பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச்
செல்லுங்கள் என்று கட்டளையிடப்படும்.
நூல்: முஸ்லிம்(1905)
நஸயீ ( 3137)
عَنْ عُقْبَةَ بْنِ
عَامِرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: 7-
" يَعْجَبُ
رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ، فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ(1)، يُؤَذِّنُ
بِالصَّلَاةِ وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ، عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى
عَبْدِي هَذَا، يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ، يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ
لِعَبْدِي، وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ".
رواه النسائي بسند صحيح
ஹதீஸ் எண் : 07
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
‘மலை உச்சியில்
நின்று, தொழுகைக்கு
அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ்
மகிழ்ச்சி அடைகிறான்.’ அப்போது அல்லாஹ் கூறுகிறான்: ‘என்னுடைய இந்த அடியானை
பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான்.
அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த)
அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை
சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.’
நூல்: நஸயீ (
667 ) தரம் : ஸஹீஹ்
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: 8-
" مَنْ
صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ، فَهِيَ خِدَاجٌ(1)
ثَلَاثًا، غَيْرَ تَمَامٍ، فَقِيلَ لِأَبِي هُرَيْرَةَ: إِنَّا نَكُونُ وَرَاءَ
الْإِمَامِ، فَقَالَ: اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ، فَإِنِّي سَمِعْتُ النبي صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: قَسَمْتُ
الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا
قَالَ الْعَبْدُ:{ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ } قَالَ اللَّهُ عَزَّ
وَجَلَّ: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ:{ الرَّحْمَنِ الرَّحِيمِ } قَالَ
اللَّهُ عَزَّ وَجَلَّ: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ:{ مَالِكِ يَوْمِ
الدِّينِ } قَالَ اللَّهُ: مَجَّدَنِي عَبْدِي - وَقَالَ مَرَّةً: فَوَّضَ إِلَيَّ
عَبْدِي، فَإِذَا قَالَ:{ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ } قَالَ:
هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ:{ اهْدِنَا
الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ
الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ } قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي
مَا سَأَلَ".
رواه مسلم (وكذلك مالك
والترمذي وأبو داود والنسائي وابن ماجه)
ஹதீஸ் எண் : 08
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
திருக்குர்ஆனின்
தாய் சூரா பாத்திஹாவை ஓதாமல் ஒருவன் நிறைவேற்றும் தொழுகையானது குறையுள்ளதாகும்.
(அத்தொழுகை) முழுமை பெறாது. இவ்வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)
அவர்கள் மூன்று முறை திரும்பத்திரும்ப சொன்னார்கள். ஒருவர் அபுஹுரைரா(ரழி)
அவர்களிடம்,
‘நாங்கள் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதால் கூடவா?.’என்று
வினவினார். அதற்கு அபுஹுரைரா(ரழி) அவர்கள், பின்வருமாறு
பதிலளித்தார்கள்: ‘நீங்கள் உங்கள் மனதிற்குள் அதை ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில்
அல்லாஹ் சொல்லியதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன்.
‘நான் எனக்கும் என்னுடைய அடியானுக்கும் மத்தியில் தொழுகையை இரண்டு பாகங்களாக
பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு.
அடியான், அல்ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன். என்று ஓதியவுடன், அல்லாஹ், ‘என்
அடியான் என்னைப் புகழ்ந்துள்ளான்.’ என்று சொல்கிறான்.
அடியான், அர்ரஹ்மானிர்ரஹீம்; என்று
ஓதியதும், அல்லாஹ், ‘என்
அடியான் கண்ணியத்தை எடுத்துரைத்துள்ளான்.’ என்று கூறுவான்.
அடியான், மாலிகி
யவிமித்தீன் என்று ஓதியதும், அல்லாஹ், என்
அடியான் என் மேன்மையை எடுத்துரைத்துள்ளான்.’ என்று கூறுவான்.
அடியான், இய்யாக்க
நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன். என்று ஓதியதும், அல்லாஹ், ‘இது
எனக்கும்,எனது
அடியானுக்கும் இடையேயுள்ளதாகும். எனது அடியான் கேட்பதை நான் அவனுக்கு கொடுப்பேன்.’
என்று கூறுவான்.
அடியான், இஹ்தி
நஸ்ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம். கைரில் மக்ழூபி அலைஹிம்
வலழ்ழால்லீன். என்று ஓதியதும், அல்லாஹ், ‘இது
என்னுடைய அடியானுக்கே (உரித்தானது) என்னுடைய அடியான் எதனைக் கேட்கிறானோ, அதனை
அவன் பெறுவான்.’ என்று பதிலுரைத்து முடிக்கிறான்.
நூல்: முஸ்லிம்(395) திர்மிதீ
( 3210 ) இப்னுமாஜா ( 838 )
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: 9-
"إِنَّ
أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ
صَلَاتُهُ. فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ
خَابَ وَخَسِرَ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ، قَالَ الرَّبُّ عَزَّ
وَجَلَّ: انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا
انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ".
رواه الترمذي(1) وكذلك
أبو داود والنسائي وابن ماجه وأحمد
ஹதீஸ் எண் : 09
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு
நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின்
கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை
சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான்
வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக)
அவைகளில் குறை காணப்பட்டால், அடியான்
தோல்வியும், நஷ்டமும்
அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய
தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை
முழுமைபடுத்த, அடியான்
உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான்.
பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற)
அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும்.
நூல்: திர்மிதி(413
) தரம் : ஸஹீஹ்
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:10
" يَقُولُ
اللَّهُ عَزَّ وَجَلَّ: الصَّوْمُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ
وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي، وَالصَّوْمُ جُنَّةٌ(1)، وَلِلصَّائِمِ
فَرْحَتَانِ: فَرْحَةٌ حِينَ يُفْطِرُ، وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ،
وَلَخُلُوفُ(2) فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ".
رواه البخاري (وكذلك
مسلم ومالك والترمذي النسائي وابن ماجه)
ஹதீஸ் எண் : 10
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
'நோன்பு எனக்குரியது.
நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும்
பானத்தையும் எனக்காகவேவிட்டுவிடுகிறார்' என்று
அல்லாஹ் கூறினான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
உள்ளன. நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில்
தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை.
நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம்
மணமிக்கதாகும்.
என அபூ ஹுரைரரா(ரலி)
அறிவித்தார்
நூல் : புஹாரி (
7492)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:11
" قَالَ
اللَّهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ، أُنْفِقْ عَلَيْكَ ".
رواه البخاري
ஹதீஸ் எண் : 11
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன்.
நூல்: புகாரீ(5352), முஸ்லிம்(993)
عَنْ أَبِي مَسْعُودٍ
الْأَنْصَارِيِّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 12
" حُوسِبَ
رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَلَمْ يُوجَدْ لَهُ مِنْ الْخَيْرِ شَيْءٌ،
إِلَّا أَنَّهُ كَانَ يُخَالِطُ(1) النَّاسَ، وَكَانَ مُوسِرًا، فَكَانَ يَأْمُرُ
غِلْمَانَهُ أَنْ يَتَجَاوَزُوا عَنْ الْمُعْسِرِ، قَالَ (2) قَالَ اللَّهُ :
نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْكَ، تَجَاوَزُوا عَنْهُ"
رواه مسلم (وكذلك
البخاري والنسائي)
ஹதீஸ் எண் : 12
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் அல் அன்ஸாரி(ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன்
சென்றவர்களில் ஒரு மனிதர் விசாரிக்கப்பட்டார். அவர் மக்களுடன் (வணிகத்தில்) கலந்து
பழகி வந்தார். அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்ததால்;,வறுமை
நிலையில் உள்ளவர்களிடமிருந்து (வர வேண்டிய கடன் தொகையை) விட்டு விடுமாறு தனது
பணியாளர்களுக்கு உத்தரவிடுவதை தவிர அவரிடம் நன்மை ஏதும் காணப்படவில்லை. (தாராளமாக
நடந்துக் கொள்ளும்) அந்த விஷயத்தில்; உன்னை
விட நான் அதிகத் தகுதியுடையவன். இவருடைய தவருகளை தள்ளுபடி செய்யுங்கள். என்று
அல்லாஹ் கூறினான். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்(1561) புஹாரி மற்றும் நஸயீ இதே கருத்தை கொண்ட ஹதீஸ் இடம்பெற்றுள்ளது
عَنْ عَدِيَّ بْنَ
حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ:13
"كُنْتُ
عِنْدَ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلَانِ:
أَحَدُهُمَا يَشْكُو الْعَيْلَةَ(1)، وَالْآخَرُ يَشْكُو قَطْعَ السَّبِيلِ(2)،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا قَطْعُ
السَّبِيلِ فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكَ إِلَّا قَلِيلٌ، حَتَّى تَخْرُجَ
الْعِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ. وَأَمَّا الْعَيْلَةُ، فَإِنَّ
السَّاعَةَ لَا تَقُومُ حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ، لَا يَجِدُ مَنْ
يَقْبَلُهَا مِنْهُ، ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْ اللَّهِ، لَيْسَ
بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلَا تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ
لَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أُوتِكَ مَالًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى، ثُمَّ
لَيَقُولَنَّ: أَلَمْ أُرْسِلْ إِلَيْكَ رَسُولًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى،
فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ، فَلَا يَرَى إِلَّا النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ
شِمَالِهِ، فَلَا يَرَى إِلَّا النَّارَ، فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمْ النَّارَ
وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ".
رواه البخاري
ஹதீஸ் எண் : 13
அதீ பின்
ஹாத்திம்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, அவர்களிடம்
இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் வறுமையைப் பற்றியும், மற்றொருவர்
(வழிப்பறி) கொள்ளைகள் பற்றியும் புகார் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(பின்வருமாறு) சொன்னார்கள்: ‘வழிப்பறிக் கொள்ளைகளைப் பொருத்தமட்டில் அது சில
நாட்கள் வரைதான் நீடிக்கும். மிக விரைவில் காவலாளியின்றி மக்காவை நோக்கி
ஒட்டகக்கூட்டங்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். வறுமையை பொருத்த மட்டில்
உங்களில் ஒருவர், தருடத்தை
எடுத்துக்கொண்டு (ஊரெல்லாம்) சுற்றியும், அதனை
பெற்றுக்கொள்வதற்கு ஒருவரும் கிடைக்காத காலத்திற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு நாள்
வராது.’ பின்னர். ‘உங்களில் ஒரு மனிதர் கண்டிப்பாக அல்லாஹ்வின் முன் நிற்பார். அம்மனிதருக்கும்
அல்லாஹ்விற்கும் இடையே எவ்வித திரையும் இருக்காது. மொழி பெயர்க்கும் உதவியாளரும்
இருக்க மாட்டார். பின்பு அல்லாஹ், அம்மனிதரை
பார்த்து நான் உனக்கு செல்வத்தை கொடுக்க வில்லையா? என்று
கேட்பான். அதற்கு அம்மனிதர் ஆம் கொடுத்தாய் என்பார். பிறகு அல்லாஹ், நான்
உன்னிடம் என்னுடைய தூதரை அனுப்பவில்லையா? என்று
கேட்பான். அம்மனிதர்; ஆம் அனுப்பினாய்
என்று பதிலலிப்பார். அம்மனிதர் தமது வலப்புரம் பார்ப்பார். அங்கு நரக நெருப்பை
தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். பின்பு இடப்புறம் திரும்பி பார்;ப்பார்.
அங்கும் நரக நெருப்பைத் தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். எனவே, பேரிச்ச
பழத்தின் ஒரு பாதியை (தருமம்) செய்தாவது, அதுவும்
இல்லையெனில், ஒரு
கனிவான சொல்லைப் பயன்படுத்தியாவது உங்களில் ஒவ்வொருவரும் நரகத்தின்
நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
நூல்:புகாரி(1413)
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:14
" إِنَّ
لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مَلَائِكَةً سَيَّارَةً فُضُلًا(1)، يَتَتَبَّعُونَ
مَجَالِسَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا مَجْلِسًا فِيهِ ذِكْرٌ، قَعَدُوا
مَعَهُمْ، وَحَفَّ بَعْضُهُمْ بَعْضًا بِأَجْنِحَتِهِمْ، حَتَّى يَمْلَأُوا مَا
بَيْنَهُمْ وَبَيْنَ السَّمَاءِ الدُّنْيَا، فَإِذَااْنْصَرَفُوا عَرَجُوا
وَصَعِدُوا إِلَى السَّمَاءِ، قَالَ (2) : فَيَسْأَلُهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ
وَهُوَ أَعْلَمُ بِهِمْ: مِنْ أَيْنَ جِئْتُمْ؟ فَيَقُولُونَ: جِئْنَا مِنْ عِنْدِ
عِبَادٍ لَكَ فِي الْأَرْضِ، يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيُهَلِّلُونَكَ
وَيَحْمَدُونَكَ وَيَسْأَلُونَكَ، قَالَ: وَمَا يَسْأَلُونِي؟ قَالُوا
يَسْأَلُونَكَ جَنَّتَكَ، قَالَ: وَهَلْ رَأَوْا جَنَّتِي؟ قَالُوا: لَا أَيْ
رَبِّ، قَالَ: فَكَيْفَ لَوْ رَأَوْا جَنَّتِي! قَالُوا: وَيَسْتَجِيرُونَكَ،
قَالَ: وَمِمَّ يَسْتَجِيرُونَي؟ قَالُوا: مِنْ نَارِكَ يَا رَبِّ، قَالَ: وَهَلْ
رَأَوْا نَارِي؟ قَالُوا: لَا، قَالَ: فَكَيْفَ لَوْ رَأَوْا نَارِي! قَالُوا:
وَيَسْتَغْفِرُونَكَ، قَالَ (1) فَيَقُولُ: قَدْ غَفَرْتُ لَهُمْ، وأَعْطَيْتُهُمْ
مَا سَأَلُوا، وَأَجَرْتُهُمْ مِمَّا اسْتَجَارُوا، قَالَ(1) يَقُولُونَ: رَبِّ
فِيهِمْ فُلَانٌ، عَبْدٌ خَطَّاءٌ إِنَّمَا مَرَّ فَجَلَسَ مَعَهُمْ، قَالَ(1):
فَيَقُولُ: وَلَهُ غَفَرْتُ؛ هُمْ الْقَوْمُ، لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ"
رواه مسلم وكذلك
البخاري والترمذي والنسائي
ஹதீஸ் எண் : 14
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
வளமும் உயர்வும்
மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில்
சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர்.
அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன்
அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம்
இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல்
வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்)
அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும்
மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம்
-அவர்களை நன்கறிந்திருந்தும்- "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று
கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள
உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன்
என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப்
பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை
ஏகன் என்று கூறிக்கொண்டும், உன்னைப்
புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில்
வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன்,
"என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?" என்று
(தனக்குத் தெரியாதது போலக்)கேட்கிறான். வானவர்கள், "அவர்கள்
உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்"
என்பார்கள். அதற்கு
இறைவன்,
"அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?" என்று
கேட்பான்.
அதற்கு வானவர்கள்,
"இல்லை, இறைவா!"
என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என்
சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?"என்று
கூறுவான்.
மேலும்,
"உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்" என்றும்
வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம்
அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?"என்று
கேட்பான். அதற்கு வானவர்கள், "உன்
நரகத்திலிருந்து, இறைவா!" என்று
பதிலளிப்பார்கள்.
இறைவன்,
"அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?" என்று
கேட்பான். வானவர்கள், "இல்லை" என்பார்கள்.
அதற்கு இறைவன்,
"அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள்
நிலை எப்படியிருக்கும்?" என்று
கூறுவான்.
மேலும்,
"அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்"
என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய
பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான்
வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து
அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்" என்று கூறுவான்.
அப்போது வானவர்கள்,
"இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன
மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன்
அமர்ந்துகொண்டான்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன்,
"அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார்
ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர)
பாக்கியமற்றவராக ஆகமாட்டார்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (
2689 )
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : 15
"يَقُولُ
اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا
ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ، ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ
ذَكَرَنِي فِي مَلَإٍ، ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ
إِلَيَّ بِشِبْرٍ، تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا،
تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا(1) وَإِنْ أَتَانِي يَمْشِي، أَتَيْتُهُ هَرْوَلَةً"
رواه البخاري (وكذلك
مسلم والترمذي وابن ماجه)
ஹதீஸ் எண் : 15
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப்
பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும்
அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு
கூர்ந்தால்,நானும்
அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன்
என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான்
அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு
நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி
ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால்,அவனை
நோக்கி நான் ஓடிச் செல்வேன்.
நூல்:புகாரி(7405)
முஸ்லிம் ( 2675)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: 16
"إِنَّ
اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ: فَمَنْ هَمَّ
بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً
كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا، كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ
عَشْرَ حَسَنَاتٍ، إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ
هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً
كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا، كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً
وَاحِدَةً".
رواه البخاري ومسلم
ஹதீஸ் எண் : 16
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் (மனிதன்
புரியும்) நற்செயல்களையும், தீய
செயல்களையும் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இதனை
விளக்கும் முகமாக (பின்வருமாறு) சொன்னார்கள். ‘எவர் நற்செயல் ஒன்று செய்ய
வேண்டுமென்று நாடி அதனைச் செய்யவில்லையோ (நற்செயல் புரியவேண்டுமென்ற அம்மனிதரின்
எண்ணத்தின் காரணமாக) அதை அல்லாஹ் முழு நற்செயலாக பதிவு செய்து கொள்கிறான். ஆனால்
அவர் நற்செயலைச் செய்ய நாடி அதனைச் செய்தும் விட்டால், அல்லாஹ்
அதனைப் பத்து நற்செயல்களிலிருந்து எழு நூறு நற்செயல்கள் வரையிலோ அல்லது அதனைவிடப்
பன்மடங்கு அதிகமாகவோ பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீய செயலை செய்ய
நாடி, அதனைச்
செய்யாவிட்டால்,அல்லாஹ்
அதனை ஒரு நற்செயலாகவே பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு தீய செயலை செய்ய நாடி
அதனை செய்தூம் விட்டால், அல்லாஹ்
அதனை ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறான்.
நூல்: புகாரி(6491),முஸ்லிம்(131)
عَنْ أَبِي ذَرٍّ
الْغِفَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ:17
" يَا
عِبَادِي: إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ
مُحَرَّمًا فَلَا تَظَالَمُوا.
يَا عِبَادِي:
كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا
عِبَادِي: كُلُّكُمْ جَائِعٌ إِلَّا مَنْ أَطْعَمْتُهُ فَاسْتَطْعِمُونِي
أُطْعِمْكُمْ، يَا عِبَادِي: كُلُّكُمْ عَارٍ إِلَّا مَنْ كَسَوْتُهُ
فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي: إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ
وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ
لَكُمْ.
يَا عِبَادِي:
إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي
فَتَنْفَعُونِي، يَا عِبَادِي: لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ
وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ
ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي: لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ
وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ
مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي: لَوْ أَنَّ أَوَّلَكُمْ
وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي،
فَأَعْطَيْتُ كُلَّ وَاحِدٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي
إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ.
يَا عِبَادِي: إِنَّمَا
هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ
وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ، وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا
يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ".
رواه مسلم (وكذلك
الترمذي وابن ماجه)
ஹதீஸ் எண் : 17
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்:
‘அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே
ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர்
மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்;;;; தவிர
மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள்.
நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.
என் அடியார்களே!
உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன்
இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.
என் அடியார்களே!
உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள்.
எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.
என் அடியார்களே!
நீங்கள் இரவும், பகலும்
பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம்
பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.
என் அடியார்களே!
எனக்கு நன்மையோ, தீமையோ
செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ
செய்வீர்கள்.
என் அடியார்களே!
முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும்,உங்களிலே
மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது
சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.
என் அடியார்களே!
முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும்,உங்களிலே
மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது
சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.
என் அடியார்களே!
முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர்
இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான்
அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு
ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.
என் அடியார்களே!
நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு
கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய
என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன்,தன்னைத் தானே
பழித்துக் கொள்ளட்டும்.
நூல்:முஸ்லிம்(2577).
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: 18
" إِنَّ
اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ
فَلَمْ تَعُدْنِي(1) قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ
الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ
تَعُدْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ. يَا
ابْنَ آدَمَ: اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ
أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ
اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ
أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي. يَا ابْنَ آدَمَ: اسْتَسْقَيْتُكَ فَلَمْ
تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟
قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ
سَقَيْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي"
رواه مسلم
ஹதீஸ் எண் : 18
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும்
மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின்
மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே
(ஏன்)?"என்று
கேட்பான். அதற்கு மனிதன்,
"என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உன்னை
நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ்,
"உனக்குத் தெரியுமா? என்
அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம்
விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால்
அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின்
மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ
எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என்
இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு
நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ்,
"உனக்குத் தெரியுமா? உன்னிடம்
என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு
நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை
என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின்
மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால்,எனக்கு
நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என்
இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு
தண்ணீர் தர இயலும்?" என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ்,
"என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர்
கேட்டான். ஆனால், அவனுக்கு
நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர்
கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:
முஸ்லிம்(2569)
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: 19
" قَالَ
اللَّهُ عَزَّ وَجَلَّ: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعَظَمَةُ إِزَارِي، فَمَنْ
نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، قَذَفْتُهُ فِي النَّارِ".
رواه أبو داود(وكذلك
ابن ماجه وأحمد) بأسانيد صحيحة.(1)
ஹதீஸ் எண் : 19
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும்
வல்லமை எனது அங்கியாகவும் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன்
போட்டியிடுவானோ,அவனை
நான் நரக நெருப்பில் வீசுவேன்.
நூல்: அபூதாவூத் (
4090) தரம் : ஸஹீஹ்
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ ،أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: 20
" تُفْتَحُ
أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ
لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ
وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: (1) أَنْظِرُوا (2) هَذَيْنِ حَتَّى
يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى
يَصْطَلِحَا"
رواه مسلم (وكذلك مالك
وأبو داود)
ஹதீஸ் எண் : 20
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின்
கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும்
திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு
இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப்
பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு
வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு
வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை
(மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள்.
நூல்: முஸ்லிம்(2565)
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
" قَالَ
اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ
أَعْطَى بِي ثُمَّ غَدَرَ (1)، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ
اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ"
رواه البخاري (وكذلك
ابن ماجه وأحمد)
ஹதீஸ் எண் :
21
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான் :
இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன்.
ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று, அத்தொகையை
விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம்
முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய
கூலியைக் கொடுக்காதவன்.
நூல்: புகாரி( 2270
)
عَنْ أَبِي سَعِيدٍ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ:
" لَا
يَحْقِرْ أَحَدُكُمْ نَفْسَهُ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَحْقِرُ
أَحَدُنَا نَفْسَهُ؟ قَالَ: يَرَى أَمْرَ الِلَّهِ عَلَيْهِ فِيهِ مَقَالٌ، ثُمَّ
لَا يَقُولُ فِيهِ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ يَوْمَ الْقِيَامَةِ:
مَا مَنَعَكَ أَنْ تَقُولَ فِي كَذَا وَكَذَا؟ فَيَقُولُ: خَشْيَةُ النَّاسِ،
فَيَقُولُ: فَإِيَّايَ كُنْتَ أَحَقَّ أَنْ تَخْشَى"
رواه ابن ماجه بسند
صحيح
ஹதீஸ் எண் : 22
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவன்
தன்னை இழிவாகக் கருதவேண்டாம். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே!
எங்களில் ஒருவர் தன்னை எவ்வாறு இழிவாகக் கருத முடியும்?. அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். ‘அல்லாஹ் எது
குறித்து விசாரிப்பானோ அத்தகைய காரியத்தை காண்கிறான். ஆனால் அதுபற்றி ஒன்றும்
கூறாமல் இருக்கின்றான். எனவே அல்லாஹ், இருதித்
தீர்ப்பு நாளில் அந்த மனிதரிடம் இன்ன இன்ன விஷயத்தைக் குறித்து நீ (உன் கருத்தை)
சொல்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? (என
கேட்பான்) மக்கள் மீதிருந்த பயம்தான் என்று மனிதன் விடையளிப்பான். பின்னர் அல்லாஹ், நீ
பயப்பட மிகவும் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே என்பான்.
நூல் : இப்னுமாஜா (
4008)
தரம் : ளயீப்
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ :
"إِنَّ
اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: أَيْنَ
الْمُتَحَابُّونَ بجَلَالِي؟ الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ
إِلَّا ظِلِّي"
رواه البخاري (وكذلك
مالك)
ஹதீஸ் எண் : 23
அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் இறுதித்
தீர்ப்பு நாளில் கூறுவான்: என்னுடைய மேன்மையினால் (மனிதர்களில்) ஒருவருக்கொருவர்
நேசம் வைத்து இருப்பவர்கள் எங்கே? என்னுடைய
நிழலைத்தவிர வேறு நிழலில்லாத இந்நாளில், என்னுடைய
நிழலில் அவர்களுக்கு நான் நிழல் அளிப்பேன்.
நூல் : முஸ்லிம்(
2566)
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ:
" إِنَّ
اللَّهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جِبْرِيلَ، فَقَالَ: إِنِّي أُحِبُّ فُلَانًا
فَأَحِبَّهُ، قَالَ: فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ
فَيَقُولُ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ
السَّمَاءِ، قَالَ: ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ. وَإِذَا اللَّهُ
أَبْغَضَ عَبْدًا، دَعَا جِبْرِيلَ فَيَقُولُ: إِنِّي أُبْغِضُ فُلَانًا
فَأَبْغِضْهُ، فَيُبْغِضُهُ جِبْرِيلُ ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ:
إِنَّ اللَّهَ يُبْغِضُ فُلَانًا فَأَبْغِضُوهُ، قَالَ: فَيُبْغِضُونَهُ، ثُمَّ
تُوضَعُ لَهُ الْبَغْضَاءُ فِي الْأَرْضِ".
رواه مسلم (وكذلك
البخاري ومالك والترمذي)
ஹதீஸ் எண் : 24
அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு
அடியானை நேசித்தால், அவன்
ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும்
அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் (அலை) அவ்வாறே நேசிப்பார். பின்பு
ஜிப்ரயீல் (அலை) அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை
நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை
நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ்
(தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல்
(அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும்
அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் (அலை) அவர் மீது கோபம்
கொள்வார். பின் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர்
மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள்.
என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும்
அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (
2637)
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ:
" إِنَّ
اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا، فَقَدْ آذَنْتُهُ
بِالْحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا
افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ
حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ، كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ،
وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ
الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنْ اسْتَعَاذَنِي
لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ
نَفْسِ عَبْدِي الْمُؤْمِنِ، يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ"
رواه البخاري
ஹதீஸ் எண் : 25
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரை
பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான
செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன்
நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான)
வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை
நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன்
பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன்
நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.
என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு
அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம்
காட்டுவதைப் போன்று, நான் செய்யும்
எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும்
(மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
நூல் : புகாரி (
6502)
عَنْ أَبي أُمامةَ رَضِيَ اللهُ عَنْهُ عَن النَّبِيّ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ
قَالَ اللهُ عَزَّ
وَجَلَّ : إِنَّ أَغْبَطَ أَوْلِيَائي عِنْدِي لَمُوْمِنُ خَفِيفُ الخَاذِ ذُو
حَظِّ مِنَ الصَّلاةِ أَحْسَنَ عِبَادَتَ رَبِّهِ وَ أَطَاعَهُ فِي السَّرِّ وَ
كَانَ غَامِضًا فِي النَّاسِ لا يُشارُ إِلَيْهِ بِالأَصابِعِ وَ كَانَ رِزْقُهُ
كفافًا فَصَبَرَ عَلى ذَلِكَ ثُمَّ نَفَضَ بِيَدِهِ ثُمَّ قَالَ : عُجِّلَتْ
مَنِيَّتُهُ قَلَّتْ بَواكِيهِ قَلَّ تُرَاثُهُ
رواه الترمذي (وكذالك
أحمد و ابن ماجه) وإسنَاده حسن
ஹதீஸ் எண் :
26
அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்
: என் மீது நேசம் கொண்டுள்ள அடியார்களில் குறைந்த செல்வமுள்ள,நிறைந்த
தொழுகையுள்ள, அதிபதியான
என்னை வழிபடுபதில் மிகவும் கவணம் செலுத்திய,மறைமுகமாக
எனக்கு அடிபனிந்து, மக்கள் மத்தியில்
அறிமுகமில்லாத, விரலால்
சுட்டிக்காட்டி புகழ்ந்து பேசப்படாத, தமது
தேவைகளை நிறைவேற்ற (அளவுக்கு அதிகமில்லாமல்) போதுமான அளவு மட்டும் செல்வத்தை
பெற்றிருந்தும் அதனைப் பொருமையுடன் தாங்கிக் கொண்டிருந்தவரே என்னிடத்தில் மிகவும்
விரும்பத்தக்கவர். பிறகு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;. மரணம்
அவருக்கு விரைவில்; வந்திருக்கும்,அவருக்காக
துக்கப்படுவோர் குறைந்திருப்பார்கள். அவர் விட்டுச்சென்ற சொத்து சொற்பமாக
இருக்கும்.
நூல் : திர்மிதீ ( 2347
) தரம் : ளயீப்
عَنْ مَسْرُوقٍ . قَالَ :
سَأَلْنَا ـ أَوْ
سَأَلْتُ عَبْدَاللهِ (أَيْ ابْنَ مَسْعُودٍ ) عَنْ هَذِهِ الايةِ :
: ولَا
تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا في سَبِيلِ اللهِ أَمْواتاً بَلْ أَحْياءُ عِنْدَ
رَبِّهِمْ يُرْزَقُونَ )) ـ قَالَ : أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ ،
فَقَالَ))
أَرْواحُهُمْ في جَوْفِ
طَيْرٍ خُضْرٍ ، لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالعَرْشِ ، تَسْرَحُ مِنَ
الجَنَّةِ حَيْثُ شَاءَتْ ، ثُمَّ َ تَأْوِي إِلي تِلْكَ القَنَادِيلِ ،
فَأَطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمْ اطِّلَاعَةً فَقَالَ : هَلْ تَشْتَهُونَ شَيْئاً
؟ قَالُوا : أَيَّ شَيْءٍ نَشْتَهِي ، وَ نَحْنُ نَسْرَحُ مِنَ الجَنَّةِ حَيْثُ
شِئْنا ؟ فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلَاثََ مَرَّاتٍ ، فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ
لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا ، قَالُوا : يَا رَبِّ ، نُرِيْدُ أَنْ
تَرُدَّ أَرْوَاحَنَا في أَجْسَادِنَا ؛ حَتَّى نُقْتَلَ في سَبِيلِكَ مَرَّةً
أُخْرَي . فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا .
(رواهُ
مسلم (وكذلك الترمذي والنسائي وابن ماجه
ஹதீஸ் எண் : 27
மஸ்ரூக் பின்
அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "(நபியே!)
அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக,
(அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம்
இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்
பெறுகின்றனர்" (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு
அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள்
(நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில்
(செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ்
மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு
உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின்
இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள்
எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?" என்று
கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள்
ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம்
சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!" என்று
கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை
(கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம்
என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா!
எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது
பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்" என்று கூறுவர். அவர்களுக்கு
(இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள்
(அதே நிலையில்) விடப்படுவார்கள்.
நூல் : முஸ்லிம் ( 3834
)
عَنْ جُنْدُبٍ بِن
عَبْدِاللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ
سَلَّمَ
كَانَ فِيمَنْ كَانَ
قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ
فَمَا رقَأَ الدَّمُ حَتَّى ماتَ قَالَ اللهُ تَعَالَى : بَادَرَنِي عَبْدِي
بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ
رواه البخاري
ஹதீஸ் எண் : 28
அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜுந்துப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன்
சென்றவர்களில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு காயம் ஏற்பட்டது.
(காயத்தினால்) அவன் துயரமடைந்தான். வேதனையால் கத்தியைக் கொண்டு தன் கரத்தைத்
துண்டித்தான். இதனால் இரத்தம் இடைவிடாமல்; கொட்டியதால்
இறப்பெய்தினான். அல்லாஹ் கூறினான்: என் அடியான் (தனது செயலின் மூலம்) எனக்கு
முன்னதாகவே நடவடிக்கை எடுத்துக் கொண்டான். நான் அவனுக்கு சுவர்க்;கத்தை
ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன்.
நூல் : புஹாரி 3276
عَنْ أبي هرَيرَةَ
رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ
يَقُولُ اللهُ تَعَالَى
: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ، إِذا قَبَضْتُ صَفِيَّهُ، مِنْ أَهلِ
الدُّنْيَا، ثُمَّ احْتَسبَهُ، إِلَّا الجَنَّةَ
رواه البخاري
ஹதீஸ் எண் : 29
அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்
: உலகிலுள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்குப் பிரியமான நண்பன் ஒருவரின்
உயிரை நான் பறித்துக்கொள்ளும்; போது, அதனை
எனக்காக அவ்வடியான் பொருமையாக தாங்கிக் கொண்டிருந்தால் அத்தகைய விசுவாசமுடைய எனது
அடியானுக்கு சுவர்க்கத்தை தவிர என்னிடத்தில் வேறு சன்மானம் இல்லை.
நூல் : புஹாரி (
6060)
عَنْ أَبي هُرَيْرَةَ ،
رَضِيَ اللهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ ، صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ،
قَالَ
. قَالَ
اللهُ عَزَّ وَجَلَّ : إِذا أَحَبَّ عَبْدِي لِقَائي ، أَحْبَبْتُ لِقَاءَهُ ،
وإِذا كَرِهَ لِقَائي ، كَرِهْتُ لِقَاءَهُ
.رواه
البخاري و مالك
و في رواية مسلم ، توضح
معنى الحديث :
: عَنْ
عَائِشَةَ ، رَضِيَ اللهُ عَنْهَا ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ ، صَلَّى اللهُ
عَلَيْهِ وسَلَّمَ
مَنْ أَحَبَّ لِقَاءَ
اللهِ ، أَحَبَّ اللهُ لِقَاءَهُ ، وَ مَنْ كَرِهَ لِقَاءَ اللهِ ، كَرِهَ اللهُ
لِقَاءَهُ . فَقُلْتُ : يَا نَبِيَّ اللهِ ، أَكَراهِيةَ المَوْتِ ؟ فَكُلُّنَا
نَكْرَهُ المَوْتَ . قَالَ لَيْسَ كَذَلِكَ ، وَلَكِنَّ المُؤْمِنَ إذا بُشِّرَ بِرَحْمةِ
اللهِ وَ رِضْوَانِهِ وَجَنَّتِهِ ، أَحَبَّ لِقَاءَ اللهِ ، فَأَحَبَّ اللهُ
لِقَاءَهُ ، وَإِنَّ الكَافِرَ إِذا بُشِّرَ بِعَذَابِ اللهِ وَسَخَطِهِ ، كَرِهَ
لِقَاءَاللهِ ، وَكَرِهَ اللهُ لِقاءَهُ
ஹதீஸ் எண் : 30
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
"யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க
அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச்
சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான்,
"அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள்
சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின்,
(மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே
செய்வோம்?" என்று
கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வைச்
சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை
நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்)
இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி
அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி
கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும்
அவரைச் சந்திக்க விரும்புவான். இறைமறுப்பாளருக்கு, (மரணவேளை
நெருங்கும்போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம்
கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை
வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்)
சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் ( 2684
)
عَنْ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ حَدَّثَ
(أَنْ
رجُلاً قال : واللهِ لا يَغْفِرُ اللهُ لِفُلانٍ وإِنَّ اللهَ تَعَالَى قَالَ :
مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لا أَغْفِرَ لِفُلان،فَإِنِّي قَدْ
غَفَرْتُ لِفُلانٍ، وأَحْبَطْتُ عَمَلَكَ (أَوْ كَمَا قَال
رواه مسلم
ஹதீஸ் எண் : 31
ஜுன்துப்
( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ; ஒரு மனிதர் அல்லாஹ்வின் மீது ( ஆணையாக ) அல்லாஹ் இன்னாரை மன்னிக்கமாட்டான்
என்று சத்தியம் செய்தார்.அதற்கு அல்லாஹ் கூறினான், நான் இன்னாரை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு கூற இந்த மனிதன்
யார் ? நிச்சயமாக
நான் ( சாபமிடப்பட்ட ) அந்த மனிதனின் பாவங்களை மன்னித்து விட்டேன் ( சத்தியமிட்ட )
உன்னுடைய நற்செயல்களை அழித்துவிட்டேன்.( நூல் : முஸ்லிம் 2621 )
عَنْ أَبي هُرَيْرَةَ ،
رَضِيَ اللهُ عَنْهُ ، عَنِ النَّبَيِّ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ، قَالَ :
أَسْرَفَ رَجُلٌ عَلي
نَفْسِهِ ، فَلَمَّا حَضَرَهُ المَوْتُ أَوْصَى بَنِيه ، فَقَالَ : إِذَا أَنَا
مِتُّ فَأَحْرِقُوني ، ثُمَّ اسْحَقُوني ، ثُمَّ أَذْرُوني في البَحْرِ فَوَاللهِ
لَئِنْ قَدَرَ عَلَيَّ رَبِّي لَيُعَذَّبَنِّي عَذَاباً ، مَا عَذَّبَهُ أَحَداً ،
فَفَعَلُوا ذَلِكَ بِهِ . فَقَالَ لِلْأَرْضِ : أَدِّي مَا أَخَذْتِ ، فَإِذا هُوَ
قَائِمٌ ، فَقَالَ لَهُ : مَا حَمَلَكَ عَلَي مَا صَنَعْتَ ؟ قَالَ : خَشْيَتُكَ
يَا رَبِّ ، أَوْ مَخَافَتُكَ . فَغَفَرَ لَهُ بِذَلِكَ .
رواهُ مسلم (وكذلك
البخاري والنسائي وابن ماجه)
ஹதீஸ் எண் : 32
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்
(முன் காலத்தில்)
ஒருவர், வரம்பு
மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து,
'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப்
பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக!
(இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும்
வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்'என்று
கூறினார். அவர் இறந்துவிட்டபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை
நோக்கி,
'அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று
சேர்' என்று
கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு
உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ
இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?'என்று
கேட்டான். அவர்,
'என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத்
தூண்டியது' என்று
பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவருக்கு
மன்னிப்பளித்தான்.
என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.( நூல் ; புஹாரி 3481 )
عَنْ أَبي هُرَيْرَةَ ،
رَضِيَ اللهُ عَنْهُ ، عَنِ النَّبَيِّ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ، فِيما
يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ ، قَالَ :
أَذْنَبَ عَبْدٌ
ذَنْبًا ، فَقَالَ : اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبي . فَقَالَ تَبَارَكَ وَتَعَالى
: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا ، فَعَلِمَ أنَّ لَهُ رَبّاً ، يَغْفِرُ الذَّنْبَ ،
وَيَأْخُذُ بِهِ . ثُمَّ عَادَ فَأَذْنَبَ ، فَقَالَ : أَيّ رَبِّ ، اغْفِرْ لِي
ذَنْبِِي ، فَقَالَ تَبَارَكَ وتَعَالى : عَبْدِي أَذْنَبَ ذَنْباً . فَعَلِمَ
أَنَّ لَهُ رَبّاً يَغْفِرُ الذَّنْبَ ، ويَأْخُذُ بِهِ . ثُمَّ عَادَ فَأَذْنَبَ
، فَقَالَ : أَيّ رَبِّ ، اغْفِرْ لِي ذَنْبِي : فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى :
أَذْنَبَ عَبْدِي ذَنْباً ، فَعَلِمَ أَنَّ لَهُ رَبّاً ، يَغْفِرُ الذَّنْبَ ،
ويَأْخُذُ بالذَّنْبِ . اعْمَلْ مَا شِئْتَ ، فَقَدْ غَفَرْتُ لَكَ .
رواهُ مسلم (وكذلك
البخاري)
ஹதீஸ் எண் : 33
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முன் சமுதாயத்தில்)
ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான்.
மரணம் அவனை நெருங்கிய போது, தனது
மக்களை அழைத்து, நான்
மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கி, பின்பு
எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின்
மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத
அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே
செய்தனர்.
பின்பு அல்லாஹ்
பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன்
மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான், நீ
செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எது? அதற்கு
அம்மனிதன்; அதிபதியே!
உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான்.
இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான்.
நூல் : முஸ்லிம்(
2758 )
عَنْ أَنَسٍ رَضِيَ
اللهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ،
يَقُولُ :
قَالَ اللهُ تَعَالَى :
يَا ابْنَ ادَمَ ، إِنَّكَ مَا دَعَوْتََنِي وَرَجَوْتَنِي ، غَفَرْتُ لَكَ عَلَى
مَا كَانَ مِنْكَ وَلَا أُبالِي . يا ابْنَ ادَمَ :لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنانَ
السَّماءِ ثُم َّ اسْتَغْفَرْتَني ، غَفَرْتُ لَكَ . يَا ابْنَ ادَمَ : إِنَّكَ
لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايا ثُمَّ لَقِيتَني لَا تُشْرِكُ بِي
شَيْأً ، لَأَتيْتُكَ بِقُرَابِها مَغْفِرَةً
رواهُ الترمذي (وكذلك
أحمد) وسنده حسن
ஹதீஸ் எண் : 34
அல்லாஹ்வின் தூதர்
ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;
அல்லாஹ் கூறினான் :
ஆதமுடைய மகனே ! என்னை அழைத்து என்மீது ஆதரவு வைத்து ( பாவமன்னிப்பு )
கேட்கும்போதெல்லாம் நீ செய்தவற்றை நான் பொருட்படுத்தாமல் உன்னை மன்னிப்பேன்.
ஆதமுடைய மகனே 1 உன்னுடைய பாவங்கள் வானிலுள்ள மேகங்களை அடையும்;அளவுக்கு
அதிகமாக இருந்தாலும் என்னிடம் பாவமன்னிப்பை வேண்டினால் நான் உன்னை மன்னிப்பேன்.
ஆதமுடைய மகனே ! பூமியளவிற்கும் பெரும் பாவங்களைச் செய்து எனக்கு இணைவைக்காமல்
இருக்கும் நிலையில் என்னை நீ சந்தித்தால் அதே அளவுக்கு நிச்சயமாக நான் உன்னை
மன்னிப்பேன்.( நூல் : திர்மிதீ 3540 தரம் ; ஹஸன்
عَنْ أَبي هُرَيْرَةَ
رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ
يَتنزَّلُ رَبُّنَا ،
تَبَارَكَ وَتَعَالَى ، كُلَّ لَيْلَةٍ إلي سَمَاءِ الدُّنْيا ، حينَ يَبْقَى
ثُلُثُ اللَّيْلِ الاخِرُ ، فَيَقُولُ مَنْ يَدْعُوني فأَسْتَجِيبَ لَه ؟ مَنْ
يَسْأَلُني فَأُعْطِيَهُ ؟ مَنْ يَسْتَغْفِرُني فَأَغْفِرَلَهُ ؟
رواه البخاري (وكذلك
مسلم ومالك والترمذي و أبو داود)
وفي رواية لمسلم زيادة:
فَلا يَزالُ كذَلِك
حَتَى يُضِيءَ الفَجْرُ
ஹதீஸ் எண் : 35
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நமது அதிபதி அல்லாஹ்
ஒவ்வொரு (நாள்) இரவும், இரவில்
இறுதியான மூன்றாவது பகுதி எஞ்சியிருக்கும் போது உலகத்தின் வானத்திற்கு இறங்கி
சொல்கிறான்: என்னிடம் பிரார்த்தனை புரிபவர் யார்? நான்
அவர் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் கேட்பவர் யார்?நான்
அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் பிழைபொறுக்கத் தேடுபவர் யார்? நான்
அவரை மன்னிக்கின்றேன்.
நூல் : புகாரி(7494
), முஸ்லிம்(758)
عَنْ أَنَسٍ ، رَضِيَ اللهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ، قَالَ
يَجْتَمِعُ
المُؤْمِنُونَ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُونَ : لَوِ اسْتَشْفَعْنَا إلى
رَبِّنَا ، فَيَأْتُونَ ادَمَ ، فَيَقُولُونَ : أَنْتَ أَبو النَّاسِ ، خَلَقَكَ
اللهُ بِيَدِهِ ، وَأَسْجَدَ لَكَ مَلائِكَتَهُ ، وَعَلَّمَكَ أَسْماءَ كُلِّ
شَيْءٍ ، فاشْفَعْ لَنا عِنْدَ رَبِّكَ ، حَتَّى يُرِيحَنا مِنْ مَكَانِنا هَذا ،
فَيَقُولُ : لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ ذَنْبَهُ ، فَيَسْتَحْيي ـ ائْتُوا
نُوحاً ؛ فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللهُ إِلي أَهْلِ الأَرْض ،
فَيَأْتُونَهُ ، فَيَقُولُ : لَسْتُ هُنَاكُمْ ـ ويَذْكُرُ سُؤالَهُ رَبَّهُ مَا
لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ ، فَيَسْتَحْيي ـ فَيَقُولُ : اؤْتُوا خَلِيلَ الرَّحْمنِ
، فَيَأْتُونَهُ ، فَيَقُولُ : لَسْتُ هُنَاكُم ، اؤْتُوا موسى ، عَبْداً
كَلَّمَهُ اللهُ ، و أَعْطَاهُ التَّوْرَاةَ . فَيَأْتُونَهُ ، فَيَقُولُ : لَسْتُ
هُنَاكُمْ ـ وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ ، فَيَسْتَحْيي مِنْ
رَبِّهِ ـ فَيَقُولُ : اؤْتُوا عِيسَى ، عَبْدَ اللهِ وَرَسُولَهُ ، وَكَلِمَةَ
اللهِ وَرُوحَهُ . فَيَأْتُونَهُ ، فَيَقُولُ : لَسْتُ هُنَاكُمْ ، اؤْتُوا
مُحَمَّداً ، ـ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ـ عَبْداً غَفَرَ اللهُ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ ، فَيَأْتُونَنِي ، فَأَنْطَلِقُ حَتَّي
أَسْتَأْذِنَ عَلَي رَبِّي فَيُؤْذَنُ . فإذا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجداً ،
فَيَدَعُني مَا شَاءَ اللهُ ، ثُمَّ يُقَالُ : ارْفَعْ رَأْسَكَ ، وسَلْ تُعْطَهُ
، وَقُلْ يُسْمَعْ ، واشْفَعْ تُشَفَّعْ . فَأَرْفَعُ رَأْسي ، فَأَحْمَدُهُ
بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ، ثُمَّ أَشْفَعُ ، فَيحُدُّ لي حَدّاً ،
فَأُدْخِلُهُمْ الجَنَّةَ . ثُمَّ أَعُودُ إِلَيْهِ ، فإِذا رَأَيْتُ رَبِّي (
فَأَقَعُ ساجداً ) مِثْلَهُ ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدّاً ،
فَأُدْخِلُهُمُ الجَنَّةَ . ثُمَّ أَعُودُ الثالِثةَ ، ثُمَّ أَعُودُ الرَّابعة ،
فَأقُولُ : مَا بَقِي في النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْانُ ، ووَجَبَ
عَلَيْهِ الخُلُودُ
رواه البخاري ( وكذلك
مسلم والترمذي وابن ماجه ) و في رواية أخرى للبخاري زيادة هي
قَالَ النَّبِيُّ
صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ ، يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ : لَا إِلهَ
إِلَّا اللهُ ، وكَانَ فِي قَلْبِهِ مِنَ الخَيْرِ مَا يَزِنُ شَعِيرةً ، ثُمَّ
يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ : لَا إِلهَ إِلَّا اللهُ ، وكَانَ فِي
قَلْبِهِ مِنَ الخَيْرِ مَا يَزِنُ بُرَّةً ، ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ
قَالَ : لَا إِلهَ إِلَّا اللهُ ، وكَانَ فِي قَلْبِهِ مَا يَزِنُ مِنَ الخَيْرِ
ذَرَّةً
ஹதீஸ் எண் : 36
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில்
இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, '(நமக்கு
ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம்
நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று
(தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள்
ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள்
மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன்
கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச்
செய்தான். மேலும்,உங்களுக்கு எல்லாப்
பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச்
சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில்
எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று
சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள்
நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று
கூறிவிட்டு, தாம்
புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள்
(நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர்
(எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய)
தூதர்களில் முதலாமவராவார்' என்று
சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள்
நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள்
நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று
கூறிவிட்டு, தாம்
அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள்.
பிறகு, நீங்கள்
கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று
சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள்
(இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும்,
'(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ்
உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும்
அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று
சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை)
அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள்
நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று
கூறிவிட்டு,
(தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல்
ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன்
வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள்
அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய
தூதரும், அவனுடைய
வார்த்தையும், அவனுடைய
ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று
சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது
அவர்களும்,
'(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள்
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று
சொல்வார்கள்.
உடனே, அவர்கள்
என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய
இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி
வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான்
விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு,
(இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள்
தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும்.
பரிந்துரை செய்யுங்கள்; உங்கள்
பரிந்துரை ஏற்கப்படும்' என்று
சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி,இறைவன்
எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான்
பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான்
யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு
அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக்
காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும்
இறைவன்,
(நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை
வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான்
அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்)
நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான்,
'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர
நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத்
தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று
சொல்வேன்.
என அனஸ்(ரலி)
அறிவித்தார்.( புஹாரி 4476 )
عَنْ أَبي هُرَيْرَةَ
رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ
قَالَ اللهُ أَعْدَدْتُ
لِعِبَادي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَت وَ لَا أُذُنٌ سَمِعَتْ وَلَا
خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ فاقْرأُوا إنْ شِئْتُمْ : فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا
أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ
رواه البخاري و مسلم
والترمذي وابن ماجه
ஹதீஸ் எண் : 37
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும்
மிக்க அல்லாஹ்,
"என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக்
காதும் கேட்டிராத, எந்த மனிதரின்
உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி
வைத்துள்ளேன்" என்று கூறினான்.
இதன் அறிவிப்பாளரான
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் குர்ஆனிலுள்ள
"அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக
மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும்
வசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.( முஸ்லிம் 5437
)
عَنْ أَبي هُرَيْرَةَ
رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُول اللهِ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ
لَمَّا خَلَقَ اللهُ
الجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيْلَ إلى الجنَّةِ فَقَالَ انْظُرْ إِلَيْهَا
وَإلى مَا أَعْدَدْتُ لأهْلِهَا فِيْهَا . قَالَ: فَجَاءَهَا وَنَظَرَ إِلَيْهَا
وَ إِلى مَا أَعَدَّاللهُ لأهْلِهَا فِيْهَا. قَالَ: فَرَجَعَ إِلَيْهِ قَالَ: فَوَعِزَّتِكَ
لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا فَأَمَرَ بِهَا فَحُفَّتْ
بِالمَكَارِهِ فَقَالَ: ارْجِعْ إِلَيْهَا ، فَانْظُرْ إِلى مَا أَعْدَدْتُ
لأَهْلِهَا فِيْهَا ، قَالَ: فَرَجَعَ إِلَيْهَا ، فإِذا هِيَ قَدْ حُفَّتْ
بِالمَكَارِهِ ، فَرَجَعَ إِلَيْهِ ، فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خِفْتُ أَنْ لَا
يَدْخُلَهَا أَحَدٌ قَالَ: اذْهَبْ إِلى النَّارِ فَانْظُرْ إِليْها ، وإلى مَا
أَعْدَدْتُ لأَهْلِها فِيْهَا . فإذا هِي يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا ، فَرَجَعَ
إِلَيْهِ ، فَقَالَ: وَ عِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أحَدٌ فَيَدْخُلَهَا .
فَأَمَر بِها فَحُفَّتْ بِالشَّهَوَاتِ ، فَقَالَ: ارْجِعْ إِلَيْهَا ، فَرَجَعَ
إلَيْهَا ، فَقَالَ: وَ عِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ
إِلَّا دَخَلَهَا
رواه الترمذي و قال
حديث حسن صحيح و كذلك أبو داود والنسائي
ஹதீஸ் எண் :
38
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்
சுவர்க்கத்தையும், நரகத்தையும்
படைத்த போது, ஜிப்ரயீல்(அலை)
அவர்களை சுவர்கத்திற்கு அனுப்பி சுவர்க்கவாசிகளுக்காக நான் என்ன தயாரித்து வைத்துள்ளேன்
என்று பாரும் என்று கூறினான். எனவே ஜிப்ரயீல்(அலை) அவர்கள்; சுவர்க்கத்தையும், அதில்
வசிப்பவர்களுக்காக அல்லாஹ் தயாரித்துள்ளதையும் கண்டார்கள். சுவணத்தை கண்டபின்
அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று உனது மேன்மையின் மீது ஆணையாக! இதைப்பற்றிக்
கேள்விப்படும் யாரும் அதில் நுழையாமல் இருக்க மாட்டார்கள். என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்
சுவனத்தை சுற்றி முட்டுகட்டைகளைப் போட்டான். ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் மீண்டும்
திரும்பிச் சென்று சுவர்க்க வாசிகளுக்கு நான் சித்தப்படுத்தி இருப்பதை பார்ப்பீராக
என்றான். அவர் திரும்பிச் சென்றார். ஏராளமான முட்டுகட்டைகள் போடப்பட்டுள்ளதை கண்டு
அவர் திரும்பினார். பின்பு அல்லாஹ்விடம். உனது கண்ணியத்தின் மீது ஆணையாக இதில்
யாரும் நுழையமாட்டார்கள். என்று கூறினார். பின்பு அல்லாஹ் நரகத்தையும், அதில்
நரகவாசிகளுக்காக தான் தயாரித்து வைத்துள்ளதையும் கண்டுவருமாறு கூறினான்.
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் நரகம் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக
அமையப்பெற்றுள்ளதைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் திரும்பி வந்து, உனது
மேன்மையின் மீது ஆனையாக நரகைப் பற்றி கேள்விபடும் எவரும் அதில் நுழைய மாட்டார்கள்.
என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ் நரகை மன இ;ச்சைகளினால்
சூழப்படுமாறு உத்தரவிட்டான். பிறகு அவன் ஜிப்ரயீலே அங்கு மீண்டும் செல்வீராக என்று
சொன்னான். அவர் அங்கு திரும்பி சென்று வந்து, உனது
மேன்மையின் மீது ஆணையாக அதில் நுழைவதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று
அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி(
2560 ) தரம் : ஹஸன்
عَنْ أَبي سَعيدٍ
الْخُدْريّ رَضِيَ اللهُ عَنْهُ عَن النَّبِيّ صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّمَ
قَالَ : احْتَجَّتِ الجَنَّةُ والنَّارُ فَقَالتِ النَّارُ : فِيَّ الجَبَّارونَ
والمُتكَبَّرونَ وَقَالتِ الجَنَّةُ : فِيّ ضُعَفاءُ النَّاسِ ومساكينُهُمْ
فَقَضَى اللهُ بَيْنَهُما : إِنَّكِ الجَنَّةُ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ
أَشاءُ، وإنكِ النارُ عذابي ، أُعَذِبُ بِكِ من أشاءُ ، وَلِكلَيْكُما عَلَيَّ
مِلْؤُها
(رواه
مسلم (وكذلك البخاري والترمذي
ஹதீஸ் எண் : 39
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும்
வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும்
ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம்,
"பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று
சொன்னது.
அப்போது வல்லமையும்
மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ
எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்" என்றும், சொர்க்கத்திடம்,
"நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள்
புரிகிறேன்" என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி),
"உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே)
உள்ளனர்" என்று சொன்னான்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.( முஸ்லிம் 5469)
عَنْ أبي سَعِيدٍ
الخُدّريّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ
إنَّ اللهَ يَقُولُ
لأَهْلِ الجَنَّةِ : يَا أهْلَ الجَنَّةِ . فَيَقُولُون : لَبَّيْكَ رَبَّنا
وسَعْدَيْكَ ، والخَيْرُ في يَدَيْكَ. فَيَقُولُ : هَلْ رَضِيتُم ؟ فَيَقُولُونَ :
وَما لَنا لَا نَرْضَىى يَا رَبّ ، وَقَدْ أَعْطَيْتَنا مَا لمْ تُعْطِ أَحَداً
مِنْ خَلْقِكَ . فَيَقُولُ : أَلا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِك ؟ فَيَقُولُونَ
: يَا رَبّ وأيُّ شيءٍ أَفْضَلُ مِنْ ذَلِك ؟ فَيَقُولُ : أٌحِلُّ عَلَيْكُمْ
رِضْواني ، فَلا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبداً
رواه البخاري (وكذلك
مسلم والترمذي)
ஹதீஸ் எண் : 40
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (மறுமையில்)
சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று
அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே!
இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று
பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று
கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே!
நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ
உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று
பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும்
சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று
கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே!
இதைவிடச் சிறந்தது எது?' என்று
கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின்
மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான்
கோபப்படமாட்டேன்' என்று சொல்வான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.( புஹாரி 7518
)
No comments:
Post a Comment