Thursday, February 22, 2018

ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 07



ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - தொடர் 07






41 - (صحيح)
وعن عابس بن ربيعة قال
رأيت عمر بن الخطاب رضي الله عنهـ يقبل الحجر يعني الأسود ويقول إني لأعلم أنك حجر لا تنفع ولا تضر ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك

رواه البخاري ومسلم وأبو داود والترمذي والنسائي

41. உமர் ( ரலி ) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும்போது நிச்சயமாக நீ தீங்கோ , நன்மையோ செய்ய இயலாத ஒர் கல் என்பதை அறிவேன் உன்னை நபி ஸல் அவர்கள் முத்தமிடுவதை நான் பார்க்கவில்லையானால் நானும் உன்னை முத்தமிட்டு இருக்க மாட்டேன் என்று கூறுவதை நான் பார்த்தேன்

அறிவிப்பவர் : ஆபிஸ் இப்னு ரபீ ஆ நூல் : புஹாரி ( 1597 ) முஸ்லிம் ,அபூதாவூத், திர்மிதீ மற்றும் நஸயீ

42 - (صحيح)
وعن عروة بن عبد الله بن قشير قال حدثني معاوية بن قرة عن أبيه قال أتيت رسول الله صلى الله عليه وسلم في رهط من مزينة فبايعناه وإنه لمطلق الأزرار فأدخلت يدي في جنب قميصه فمسست الخاتم
قال عروة فما رأيت معاوية ولا ابنه قط في شتاء ولا صيف إلا مطلقي الأزرار
رواه ابن ماجه وابن حبان في صحيحه واللفظ له وقال ابن ماجه
إلا مطلقة أزرارهما

42. முஸைனா என்ற இடத்திலிருந்து வந்த கூட்டத்தில் ஒருவனாக நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன். அவர்கள் சட்டையைத் திறந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம். நான் என் கையை அவர்களின் சட்டையில் உள்பகுதியில் நுழைத்து ( நுபுவ்வத் ) முத்திரையைத் தொட்டேன்.

அறிவிப்பவர் : குர்ரா( ரலி ) நூல் : இப்னுமாஜா , இப்னுஹிப்பான்(5452)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா கூறுகிறார் : மு ஆவியா அவர்களையோ அவர்களின் மகனையோ நான் கோடை மற்றும் குளிர் காலத்தில் சட்டையைத் திறந்தவர்களாகவே பார்த்திருக்கிறேன் .


43 - (صحيح)
وعن مجاهد قال
كنا مع ابن عمر رحمه الله في سفر فمر بمكان فحاد عنه فسئل لم فعلت ذلك قال رأيت رسول الله صلى الله عليه وسلم فعل هذا ففعلت
رواه أحمد والبزار بإسناد جيد

43. இப்னு உமர் ( ரலி ) அவர்கள் தம் சட்டையைத் திறந்த நிலையில் தொழுததை நான் பார்த்தேன் இதுபற்றி அவர்களிடம் கேட்டதற்கு இதுபோல் நபி ஸல் அவர்கள் செய்யக் கண்டுள்ளேன் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸைது இப்னு அஸ்லம் நூல் : அஹ்மத் ( 4855 ) இப்னு குஸைமா  பைஹகீ


44 - (صحيح)
وعن مجاهد قال
كنا مع ابن عمر رحمه الله في سفر فمر بمكان فحاد عنه فسئل لم فعلت ذلك قال رأيت رسول الله صلى الله عليه وسلم فعل هذا ففعلت
رواه أحمد والبزار بإسناد جيد

44. இப்னு உமர் ( ரலி ) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்தோம் அவர்கள் ஒரு இடத்தை விரைந்து கடந்தார்கள் இவ்வாறு ஏன் செய்தீர்கள் ? என்று கேட்கப்பட்டது நபி ஸல் அவர்கள் இவ்வாறு செய்ததைக் கண்டேன் நானும் செய்தேன் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஜாஹித் நூல் : அஹ்மத் ( 4730 ) பஸ்ஸார்

45 - (حسن)
وعن ابن عمر رضي الله عنهما أنه كان يأتي شجرة بين مكة والمدينة فيقيل تحتها ويخبر أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك
رواه البزار بإسناد لا بأس به

45.இப்னு உமர் ( ரலி ) அவர்கள் மக்கா , மதீனாவிற்கு இடையே உள்ள ஒரு மரத்தை அடைந்தால் அதன் கீழ் இளைப்பாறுவார்கள் இவ்வாறு நபி ஸல் அவர்கள் செய்வார்கள் எனவும் கூறுவார்கள்

நூல் : முஸ்னத் ஹுமைதீ ( 680 ) பஸ்ஸார்

No comments:

Post a Comment