Saturday, February 24, 2018

தாவா கலத்தில் விமர்சனங்கள் ஏன் ?



தாவா கலத்தில் விமர்சனங்கள் ஏன் ?

பொதுவாக நம்மீல் பலர் நினைப்பது உண்டு

அழைப்பு பணி செய்யும் போது நம்முடைய கருத்தை மட்டும் சொல்லி கொண்டு சென்று விட வேண்டும் எதற்க்கும் எவருக்கும் பதில் உரைக்க கூடாது என்று நினைப்போம்

ஆனால் சற்று சிந்தித்தால் தாவா கலத்தில் மூன்று விதமாக மக்களை பிரிக்கலாம்

=> எதை சொன்னாலும் அதற்க்கு எதிர் வினை சொற்களை பயன்படுத்துவதும் தேவை இல்லாத தர்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திகொள்ளுவதும் [ 1 ]

=> நிரந்தர நரகம் என்று பல சான்றுகளை ( குர் ஆன் & ஸுன்னாவில் ) இருந்து எடுத்துகாட்டியும் அதை செவிமடுக்காதவர்கள் [2]

=> ஒர் குறிப்பிட்ட குழுமம்/டிரஸ்ட்/இயக்கம்/ஜமா அத் இவைகளில் சொல்லபட்ட செய்திகளை மட்டுமே உள் வாங்கி கொண்டு அமல்கள் பக்கம் செல்ல கூடியவர்கள்


திருமறையில் ஒர் இடத்தில் அல்லாஹ் சொல்லி காட்டுகிறான் தாவா பணிகள் செய்யும் போது அதன் அசல் ( மூலம் ) எதனை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் இறைகட்டளையை அமையமாக கொண்டு தான் இருக்க வேண்டும்

فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(2:38)

அல்லாஹ் உடைய வழி [ هُدَاىَ ] என்பது எப்படி பட்டது என்பதை பின்வரும் வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ

இந்த குர் ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது ( இது ) மனிதர்களுக்கு நேர்வழிகாட்டவும் நேர்வழியை தெளிவாகக் கூறும் ( பொய்யை விட்டு உண்மையை பிரித்துகாட்டும்...(2:185)

அதாவது நேர்வழி எது என்று சொல்லும் போது பொய் /அசத்தியம் எது என்பதை அல்லாஹ் அருளிய வேதத்தை வைத்தும் நபி ஸல் அவர்களுடைய பொன்மொழிகளை வைத்தும் எடுத்துகாட்டிட முடியும்.

(உ+த ) ஒருவர் தர்ஹாவிற்க்கு சென்று அங்கு இருக்கும் அவ்வலியாக்களிடம் எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால்

இதற்க்கு குர் ஆன் & ஸுன்னாவில் இருந்து பதில் கொடுக்கலாம்

هُوَ الْحَىُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏ 

அவனே ( என்றும் ) உயிருடன் இருப்பவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை எனவே வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள் ! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்னைத்தும் ( 40 :65 )

இங்கு கவணிக்க வேண்டியவை :

1. அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிருடன் இருப்பவன் ஆனால் எவரிடத்தில் நீங்கள் சென்று பரிந்துரை செய்ய சொல்லுகிறீர்களோ அவர்கள் பலவீனமானவர்கள் குறிப்பாக சொன்னால் அவர்கள் இறந்த ஒர் மனிதர்

2.அவனை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை [ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ]
[3] இரு கை ஏந்தி பிரார்த்திக்கும் து ஆ என்பது ஒர் வணக்கம் ஆகும்
அந்த வணக்கத்தை அல்லாஹ்வை தவிர யாரிடமும் கேட்க கூடாது

3.பெரியார்களை உள்ளத்தூய்மையுடன் 1000 தடவை அழைத்தால் அவர்கள் எமக்கு பதில் கொடுப்பார்கள் ஆனால் அல்லாஹ் 40 :65 வசனத்தில் [ هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَؕ ] எனவே வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள் அதற்க்கு பதில் கொடுக்கிறேன் என்று இறைவன் சொல்லுகிறான்

இப்படி வஹியை வைத்தே வாதங்களை வைக்கும் போது இது விமர்சனங்களில் வந்து அடங்கும்

ஆனால் இந்த விமர்சனங்களுக்கு நன்மையும் உண்டு ஏனெனில் அல்லாஹ் இந்த குர் ஆனை கொண்டே எச்சரிக்கை/வாதங்கள்/கண்டனங்களை வைக்க சொல்லுகிறான்


وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ

யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும் ,வீணாகவும் ஆக்கி இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக ! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் ( குர் ஆன் ) அறிவுரை கூறுவீராக...(6:70 )

ஆகவே தாவா கலத்தில் சத்தியம் என்று தெரிந்தால் வஹியை வைத்தும் அதனை தூண்டும் விதமாக அழகிய வாதங்களை மட்டுமே வைத்து செய்ய வேண்டும் என்பது தெளிவு [ இப்ராஹீம் அலை அவர்களுடைய வாழ்க்கை குறிப்பை பார்வை இடவும் ]

கேலி / கிண்டல்/ குத்திகாட்டுவது/தரைகுறைவான பேச்சி இவைகள் ஒருகாலமும் தாவா உடைய விமர்சனங்களில் அடங்காது அப்படி செய்பவர்கள் இன்னும் தாவா உடைய ஒழுங்களை அறிந்துகொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும்


-------
1. அல் குர் ஆன் ( 6:70 )
2. அல் குர் ஆன் ( 3:20 )
3.அபூதாவூத் ( 1479 தரம் : ஸஹீஹ் )

---------------



* இறைவன் நாடினால் இதில் இன்னும் நிறையாக விஷயங்களை எடுத்து உரைப்போம்

No comments:

Post a Comment