كتاب الجمعة
அத்தியாயம் : 11
ஜுமுஆத் தொழுகை
(1)باب فَرْضِ
الْجُمُعَةِ
பாடம் : 1
ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِذَا نُودِيَ لِلصَّلاَةِ
مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ
ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ}.
ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:
ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க
(பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள் நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு
மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)
٨٧٦حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ
هُرْمُزَ الأَعْرَجَ، مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ حَدَّثَهُ أَنَّهُ،
سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم يَقُولُ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ
الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمَّ هَذَا
يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ،
فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ
".
876 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்)
முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள்.
மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக் கொள்வ)தில் கருத்து வேறுபாடு
கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களே
ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை)
யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்).
(2)باب فَضْلِ الْغُسْلِ
يَوْمَ الْجُمُعَةِ، وَهَلْ عَلَى الصَّبِيِّ شُهُودُ يَوْمِ الْجُمُعَةِ أَوْ
عَلَى النِّسَاءِ
பாடம் : 2
ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது
அவர்கள் மீது கடமையா என்பதும்.
٨٧٧حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله
عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا جَاءَ
أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ".
877 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்கு வரும் போது அவர் குளித்துக் கொள்ளட்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٧٨حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ
أَسْمَاءَ، قَالَ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله
عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَمَا هُوَ قَائِمٌ فِي الْخُطْبَةِ
يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ مِنْ
أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ
هَذِهِ قَالَ إِنِّي شُغِلْتُ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ
التَّأْذِينَ، فَلَمْ أَزِدْ أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ وَالْوُضُوءُ أَيْضًا
وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ
بِالْغُسْلِ.
878 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு
மேடை மிம்பர் மீது) நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது (இஸ்லாத்தில்) முன்னவவர்களான
முஹாஜிர்களில் ஒருவரும், நபித்தோழருமான ஒருவர் உள்ளே வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள்
அழைத்து, இது எந்த நேரம் (தெரியுமா? ஏன் இவ்வளவு தாமதம்)? என்று கேட்டார்கள். அதற்கு
அவர், நான் அலுவலில் மூழ்கிவிட்டேன்.
பாங்கு சப்தத்தைக் கேட்ட பிறகுதான் நான் என் வீட்டிற்கே திரும்பினேன். ஆகவே, உளூ (அங்கசுத்தி) மட்டும்
செய்து விட்டு நான் (விரைந்து)வருகிறேன் என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,(இதில்) வேறு உளூ மட்டும்
செய்து விட்டு வருகிறீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ வுக்காக) குளிக்குமாறு
கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே (அவ்வாறிருந்துமா குளிக்காமல் வந்தீர்கள்?) என்று கேட்டார்கள்.
٨٧٩حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ،
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم قَالَ " غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ
مُحْتَلِمٍ ".
879 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(3)باب الطِّيبِ
لِلْجُمُعَةِ
பாடம் : 3
ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது.
٨٨٠حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ
عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ،
قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ الأَنْصَارِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى
أَبِي سَعِيدٍ قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ
يَسْتَنَّ وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ ". قَالَ عَمْرٌو أَمَّا
الْغُسْلُ فَأَشْهَدُ أَنَّهُ وَاجِبٌ، وَأَمَّا الاِسْتِنَانُ وَالطِّيبُ
فَاللَّهُ أَعْلَمُ أَوَاجِبٌ هُوَ أَمْ لاَ، وَلَكِنْ هَكَذَا فِي الْحَدِيثِ.
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هُوَ أَخُو مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَلَمْ
يُسَمَّ أَبُو بَكْرٍ هَذَا. رَوَاهُ عَنْهُ بُكَيْرُ بْنُ الأَشَجِّ وَسَعِيدُ
بْنُ أَبِي هِلاَلٍ وَعِدَّةٌ. وَكَانَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ يُكْنَى
بِأَبِي بَكْرٍ وَأَبِي عَبْدِ اللَّهِ.
880 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜுமுஆ நாளில் குளிப்பது
பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; மேலும் பல்துலக்குவதும், கிடைக்குமானால் நறுமணம்
பூசுவதும் கடமையாகும் என்று கூறினார்கள்.
இதை அறிவிப்பவரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச்
சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஆனால், பல் துலக்குவதோ நறுமணம்
பூசுவதோ கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். அனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள)
அபூபக்ர் பின் முன்கதிர் அவர்கள் முஹம்மத் பின் முன் கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர்
ஆவார். அபூபக்ர் பின் முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால்
உள்ளிட்ட இன்னும் பலர் (இந்த ஹதீஸை) அறிவித்துள்ளனர். முஹம்மத் பின் முன்கதிர் அவர்களும்
அபூபக்ர், அபூஅப்தில்லாஹ் எனும்
குறிப்புப் பெயர்களில் அறியப்படுகிறார்.
(4)باب فَضْلِ
الْجُمُعَةِ
பாடம் : 4
ஜுமுஆவின் சிறப்பு.
٨٨١حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ
عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اغْتَسَلَ يَوْمَ
الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً،
وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ
رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ
رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ
فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ
الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ ".
881 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்து
விட்டுப் பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர்
ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம்
நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்)
வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(5)باب
பாடம் : 5
٨٨٢حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ،
عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ ـ رضى
الله عنه ـ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ
فَقَالَ عُمَرُ لِمَ تَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ
إِلاَّ سَمِعْتُ النِّدَاءَ تَوَضَّأْتُ. فَقَالَ أَلَمْ تَسْمَعُوا النَّبِيَّ
صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ
فَلْيَغْتَسِلْ ".
882 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருந்த போது
ஒரு மனிதர் உள்ளே வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ஏன் தொழுகைக்கு தாமதமாக
வருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், அதற்குக் காரணம், பாங்கைக் கேட்ட பிறகுதான்
உளூவே செய்தேன் என்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உங்களில்
ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும் போது அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று கூறியதை நீங்கள்
செவியேற்கவில்லையா? என்று கேட்டார்கள்.
இதே ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
(6)باب الدُّهْنِ
لِلْجُمُعَةِ
பாடம் : 6
ஜுமுஆவுக்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது.
٨٨٣حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ وَدِيعَةَ،
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ
مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ
يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ،
ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ
وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ".
883 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள
நறுமணத்தைத் தடவிக் கொள் கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை
பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார்.
பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு
அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே
தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
٨٨٤حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ طَاوُسٌ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ذَكَرُوا
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " اغْتَسِلُوا يَوْمَ
الْجُمُعَةِ وَاغْسِلُوا رُءُوسَكُمْ وَإِنْ لَمْ تَكُونُوا جُنُبًا، وَأَصِيبُوا
مِنَ الطِّيبِ ". قَالَ ابْنُ عَبَّاسٍ أَمَّا الْغُسْلُ فَنَعَمْ،
وَأَمَّا الطِّيبُ فَلاَ أَدْرِي.
884 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள், ஜுமுஆ நாளில் நீங்கள்
குளித்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். சிறிது நறுமணம் பயன்
படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டிராவிட்டாலும் சரியே எனக்
கூறியதாக சிலர் கூறுகிறார்களே? என்று வினவினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், குளியலைப் பொறுத்த வரை
(நபியவர்கள் கூறினார்கள் என நீங்கள் குறிப்பிட்டது) சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத்
தெரியாது என்று பதிலளித்தார்கள்.
٨٨٥حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا
هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ
مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ ذَكَرَ
قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقُلْتُ
لاِبْنِ عَبَّاسٍ أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ
لاَ أَعْلَمُهُ.
885 தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாள் குளியல் பற்றிய நபிமொழியை
அறிவித்த போது அவர்களிடம் நான், ஒருவர் (தம்மிடம் இல்லாவிட்டால்) தம் வீட்டாரிடம் இருக்கும்
எண்ணெயையோ நறுமணத்தையோ பூசிக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் இது பற்றி எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார்கள்.
(7)باب يَلْبَسُ
أَحْسَنَ مَا يَجِدُ
பாடம் : 7
தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து
கொள்ளவேண்டும்.
٨٨٦حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ
عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَأَى حُلَّةَ سِيَرَاءَ عِنْدَ باب الْمَسْجِدِ فَقَالَ
يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ
وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم " إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ
". ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ،
فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مِنْهَا حُلَّةً فَقَالَ
عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ
مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لَمْ
أَكْسُكَهَا لِتَلْبَسَهَا ". فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى
الله عنه ـ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا.
886 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி)
அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக்
கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும்
தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார்
என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து
கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட
பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை!
(அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று
கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான
தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள்.
(8)باب السِّوَاكِ
يَوْمَ الْجُمُعَةِ
பாடம் : 8
ஜுமுஆ நாளில் (ஜுமுஆத் தொழுகைக்காக) பல் துலக்குவது.
وَقَالَ أَبُو سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ.
(ஜுமுஆத் தொழுகைக்காக) பல்துலக்க வேண்டுமென
நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
٨٨٧حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ـ أَوْ عَلَى النَّاسِ ـ
لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ ".
887 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்திற்கு அல்லது மக்களுக்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ
என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு
கட்டளை பிறப்பித்திருப்பேன்.
இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
٨٨٨حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ
الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، حَدَّثَنَا أَنَسٌ،
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكْثَرْتُ عَلَيْكُمْ
فِي السِّوَاكِ ".
888 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல
முறை வலியுறுத்தியுள்ளேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٨٩حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا
سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ،
قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ
فَاهُ.
889 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும் போது பல்துலக்கு(ம்
குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள்.
(9)باب مَنْ تَسَوَّكَ
بِسِوَاكِ غَيْرِهِ
பாடம் : 9
பிறரது பல்துலக்கும் குச்சியால் ஒருவர் பல் துலக்குவது.
٨٩٠حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ
بْنُ بِلاَلٍ، قَالَ قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي، عَنْ
عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي
بَكْرٍ، وَمَعَهُ سِوَاكٌ يَسْتَنُّ بِهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم فَقُلْتُ لَهُ أَعْطِنِي هَذَا السِّوَاكَ يَا عَبْدَ
الرَّحْمَنِ. فَأَعْطَانِيهِ فَقَصَمْتُهُ ثُمَّ مَضَغْتُهُ، فَأَعْطَيْتُهُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَنَّ بِهِ وَهْوَ مُسْتَسْنِدٌ إِلَى
صَدْرِي.
890 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ஸல்அவர்கள் இறக்கும் தறுவாயில்
என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்த போது என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர்
(ரலி) அவர்கள் தம்மிடமிருந்த பல் துலக்கும் குச்சியால் பல்துலக்கியபடி வந்தார். அவரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும்
குச்சியைக் கொடுங்கள், அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார்.
நான் கடித்து(த் அதன் முனையைத் துப்பி)விட்டு அதை நன்றாக மென்று (மென்மைப்படுத்தி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடியே
அதனால் பல் துலக்கிக் கொண்டார்கள்.
(10)باب مَا يُقْرَأُ
فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ
பாடம் : 10
ஜுமுஆ நாள் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை.
٨٩١حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ،
عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ هُرْمُزَ ـ
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه
وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ}
السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
891 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம்
மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும்
76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
No comments:
Post a Comment