Wednesday, February 21, 2018

பொறுமை மற்றும் மன்னிப்பு மூலம் கிடைக்கும் நன்மை



         பொறுமை மற்றும் மன்னிப்பு மூலம் கிடைக்கும் நன்மை





ஒர் முஸ்லிம் உடைய மானம் , மரியாதை புனிதமானது

எந்த ஒர் விசயத்திலும் இஸ்லாம் முதலில் வரம்பு மீற சொல்லவில்லை

அதே நேரத்தில் அளவு கடந்து வரம்பு மீறப்படும் போது அதே அளவு எதிர் தரப்பும் வரம்பு மீற இஸ்லாம் ஒர் வழியையும் சொல்லி தருகிறது

அதிலும் இவற்றிக்கு மேலாக பொறுமை / மன்னிப்பை கொண்டு உயர்ந்து நிற்க்க சொல்லுகிறது

அப்படி பொறுமை / மன்னிப்பு மூலம் நாம் கடைபிடித்தால்

இறைவனிடத்தில் அளவு இல்லாத தர்ஜாக்கள் கிடைக்கிறது

قَالَ الله تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا} [آل عمران: 200]

நம்பிக்கை கொண்டோரே ! சகித்துக் கொள்ளுங்கள் ! சகிப்புத் தன்மையில் ( மற்றவர்களை ) மிகைத்து விடுங்கள்.( 3 : 200 )

وَقالَ تَعَالَى: {وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ} [الشورى: 43]

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும் ( 42:43)

وَقالَ تَعَالَى: {إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ} [الزمر: 10]

பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்..( 39:10)

وقال تعالى:
{وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ} [البقرة: 155]

ஒரளவு அச்சத்தாலும் , பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம் . பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக ( 2 : 155 )

وَالصَّبْرُ ضِيَاءٌ...

பொறுமை ஒளியாகும் ( முஸ்லிம் 223)

....وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ. وَمَا أُعْطِىَ أَحَدٌ عَطَاءً خَيْراً وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ

யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை' என்றார்கள்.( நூல் : புஹாரி 1469 , முஸ்லிம் 1053 )

سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 2078 )





No comments:

Post a Comment