Wednesday, February 21, 2018

பேச்சின் ஒழுங்குகள்




பேச்சின் ஒழுங்குகள்





வார்த்தை ஒழுக்கங்கள் மார்க்க ரீதியாக பார்க்க கூடிய நேரங்களில் இஸ்லாம் தடுக்க கூடிய வார்த்தை களும் இதில் அடங்கும் அதில் நேரடியாக தடுக்கபட்டதற்கான காரணங்களும் விளக்கப்பட்டு இருக்கும்

இது அல்லாது ஒர் சில வார்த்தைகளை பார்த்தீர்கள் என்றால் மேல் ஓட்டமாக பார்த்தால் அந்த வார்த்தையில் எந்த ஒர் தவறையும் காண இயலாது

அப்படி பட்ட வார்த்தைகளை மார்க்கம் தடை செய்து இருக்கும்

இதனால் தான் புஹாரி , முஸ்லிம் போன்ற நூல்களில் كتاب الألفاظ من الأدب وغيرها” வார்த்தைகளில் ஒழுங்குகள் “ என்ற பாடங்களை கூட பிரித்து இருப்பார்கள்

அகீதாவில் செய்யப்படும் பிழை :

மோசமான முறையில் பேசுவது , பிறை திட்டுவது, சபிப்பது , ஒருவரை பற்றி புறம் பேசுவது , குறை சொல்லுவது இவைகள் எல்லாம் நேரடியாகவே இஸ்லாம் தடுத்த விஷயங்கள் என்று நாம் அறிந்து வைத்து உள்ளோம்

அதைபோல் சில வார்த்தைகள் உள்ளது அதை பயன்படுத்தும் போது உள்ளம் ரீதியாக அதை தவறு என்று நினைக்க மாட்டோம் ஆனால் இஸ்லாம் அதை தடை செய்து இருக்கும்

أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( முஸ்லிம் 4519 )

عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்;காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( முஸ்லிம் 4520 )

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ ‏"‏ ‏.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 4523 )

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَسُبُّ أَحَدُكُمُ الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ ‏.‏ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை ("கண்ணியம்" எனும் பொருள் கொண்ட) "அல்கர்ம்" என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 4524 )

ஆனால் பெரும்பாலான மக்கள் காலத்தை ஏசும் போது எவரும் இறைவனை தான் நாம் எசுகிறோம் என்று நினைப்பது இல்லை.

வார்த்தைகளில் கவனம் எடுத்த நபி ஸல் :

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ رَجُلاً، خَطَبَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بِئْسَ الْخَطِيبُ أَنْتَ ‏.‏ قُلْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ نُمَيْرٍ فَقَدْ غَوِيَ ‏.‏

அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறிவிட்டார்" என்று குறிப்பிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ" என்று (பிரித்துக்) கூறுவீராக!" என்றார்கள்.( முஸ்லிம் 1578 )

இதில் மேல் ஓட்டமாக பார்க்கும் போது எந்த பிழையும் இல்லை நபி ஸல் அவர்கள் நுனுக்கமாக வார்த்தையை பார்த்து இதை நிராகறிக்கிறார்கள் .

மார்க்க விஷயத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் போது அழைப்பாளர்கள் மிகவும் கவணமாக சொற்களை எடுத்து சொல்ல வேண்டும் என்பது மேல் உள்ள செய்தியின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்

مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ

அல்லாஹ்வும் நாடி நீங்களும் நாடினால்

என்ற சொல்லை ஒருவர் நபி ஸல் அவர்களிடம் சொன்ன நேரத்தில் நபி ஸல் திரும்பி கேட்ட கேள்வி

قَالَ‏:‏ جَعَلْتَ لِلَّهِ نِدًّا، مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ‏.‏

அல்லாஹ்விற்க்கு இணையாக என்னை ஆக்குகிறீர்களா ? அல்லாஹ் மட்டும் நாடினால்

இந்த செய்தி அல்-அதபுல் முஃப்ரத் யில் 783 யில் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது

இதை சொன்னவரும் அல்லாஹ்விற்க்கு இணைவைப்பவர் அல்ல ஆனால் நம்மை அறியாமலே இந்த சொற்களை பயன்படுத்தி விடுகிறோம் என்பதை அல்லாஹ் நபி ஸல் மூலம் தெளிவு படுத்துகிறான்

ஆகவே வார்த்தைகளில் எப்போதும் நிதானத்தையும் அதன் விளைவையும் அறிந்து பயன்படுத்த வேண்டும்

(حسن لغيره)
عن أبي علي رجل من بني كاهل قال:
خطبنا أبو موسى الأشعري فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل فقام إليه عبد الله بن حزن وقيس بن المضارب فقال: والله لتخرجن مما قلت أو لنأتين عمر مأذونا لنا أو غير مأذون فقال: بل أخرج مما قلت خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل
فقال له من شاء الله أن يقول وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه
رواه أحمد والطبراني ورواته إلى أبي علي محتج بهم في الصحيح
وأبو علي وثقه ابن حبان ولم أر أحدا جرحه

மனிதர்களே எறும்பு ஊர்வதைவிடவும் இரகசியமான இணைவைத்தலை பயந்து கொள்ளுங்கள் என்று அபூ மூஸா அல் அஷ் அரீ ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்.அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு ஹஸ்ன் ,கைஸ் இப்னுல் முழாரிப் ஆகியோர் எழுந்து “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும் அல்லது உமர் ( ரலி ) யிடம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் வந்தாக வேண்டும் என்றனர்.அதற்கவர் நான் கூறியதை நிரூபிக்கிறேன் எனக்கூறிவிட்டு ; எங்களிடம் ஒரு நாள் உரையாற்றும்போது நபி ஸல் அவர்கள் “ மனிதர்களே ! எறும்பு ஊர்வதை விட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே ! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி அஞ்சமுடியும் ? என்று ஒருவர் கேட்டார்.” இறைவா ! எதையும் நாங்கள் அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் “ நாங்கள் அறியாது உள்ளதை செய்வது பற்றி உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அலி , நூல்கள் : அஹ்மத் (19108) தப்ரானீ
عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِقِ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புஹாரி 6477 )

إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً، يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ

ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான்.

وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ ‏

ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். ( புஹாரி 6478 )

No comments:

Post a Comment