முதல் பகைவனை அறிந்து வைத்து உள்ளோமா ?
முதன் முதலில் மனிதனை கேவலபடுத்தினது ஷைத்தான் தான்
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا
لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது
இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
அவன் நமக்கு பகிரங்க எதிரி:
وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ
إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன் 2:168
வெட்க கேடானதை செய்ய வைப்பான் :
وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ
வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான்..
திருக்குர்ஆன் 2:268
குழப்பத்தில் நம்மை ஆளாக்குவான் :
كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي
الْأَرْضِ حَيْرَانَ لَه
பூமியில் ஷைத்தான்கள் யாரை வழிகெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டார்களோ அவனைப்
போல் ஆகி விடுவோம்'' எனக் கூறுவீராக!
"
திருக்குர்ஆன் 6:71
சகோதர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவான் :
وَجَاءَ بِكُم مِّنَ الْبَدْوِ مِن بَعْدِ
أَن نَّزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي
எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே
ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து
விட்டான்.
திருக்குர்ஆன் 12:100
وَقُل لِّعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ
أَحْسَنُ ۚ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ الشَّيْطَانَ كَانَ
لِلْإِنسَانِ عَدُوًّا مُّبِينًا
அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே
பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன் 17:53
தர்க்கம் செய்ய தூண்டுவான் :
وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ
أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ
உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர்.
وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ
لَمُشْرِكُونَ
நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
திருக்குர்ஆன் 6:121
இறைவனிடம் பாதுகாவல் தேடவேண்டும்:
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ
نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன்
செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 7:200
இறைவனுக்கு அஞ்சுபவர்களே அவனிடம் இருந்து தப்பிக்க இயலும் :
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ
طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ
(இறைவனை) அஞ்சுவோருக்கு
ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக்
கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 7:201
No comments:
Post a Comment