Wednesday, April 25, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 10 [ 46 முதல் 50 ஹதீஸ் வரை ]

முஸ்னத் அஹ்மத் - தொடர் 10 [ 46 முதல் 50 ஹதீஸ் வரை ]



46-حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، قَالَ: قَامَ أَبُو بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَقَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامِي عَامَ الْأَوَّلِ، فَقَالَ: «سَلُوا اللَّهَ الْعَافِيَةَ، فَإِنَّهُ لَمْ يُعْطَ عَبْدٌ شَيْئًا أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ وَالْبِرِّ فَإِنَّهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ وَالْفُجُورَ فَإِنَّهُمَا فِي النَّارِ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف

46.அபூ உபைதா ( ஆமிர் பின் அப்துல்லாஹ் அல்ஹுதலீ ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ஈராண்ஊ ஓர் ஆண்டு கழிந்தபின் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் எழுந்து ( உரையாற்றினார்கள்.அப்போது ),” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் நான் நிற்கும் இதே இடத்தில் நின்றார்கள்” என்று கூறிவிட்டு ,”( மக்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் உடல் நலத்தைக் கேளுங்கள். ஏனெனில் அடியானுக்கு உடல் நலத்தைப் போன்று சிறந்த வேறெதுவும் வழங்கப்படுவதில்லை. உண்மை பேசுவதையும் நன்மை புரிவதையும் கடைப்ப்டியுங்கள் அவ்விரண்டும் சொர்க்கத்தில் சேர்க்கும் . பொய் கூற வேண்டாமென்றும் தீமைகள் புரிய வேண்டாமென்றும் உங்களை நான் எச்சரிக்கிறேன் ( பொய் தீமை ஆகிய ) அவ்விரண்டும் நரகத்தில் தான் சேர்க்கும் “ என்று கூறினார்கள்.

தரம் : இஸ்னத் ளயீப் ஆனால் வேறு பலமான அறிவிப்பில் இந்த செய்தி வந்தமையால் இது ஸஹீஹ் லி ஹைரிஹி தரத்தை அடைகிறது.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,38,44,49,66 ) திர்மிதீ (3558 )

47-حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ رَبِيعَةَ، مِنْ بَنِي أَسَدٍ يُحَدِّثُ، عَنْ أَسْمَاءَ، أَوِ ابْنِ أَسْمَاءَ مِنْ بَنِي فَزَارَةَ، قَالَ: قَالَ عَلِيٌّ: رَضِيَ اللَّهُ عَنْهُ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا نَفَعَنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي مِنْهُ، وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ وَصَدَقَ أَبُو بَكْرٍ [ص: 219] ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ لِذَلِكَ الذَّنْبِ، إِلَّا غَفَرَ لَهُ» وَقَرَأَ هَاتَيْنِ الْآيَتَيْنِ: {وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا} [النساء: 110] ، {وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ} [آل عمران: 135] ،

حكم الحديث : صحيع

47. அலீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து ( நேரடியாக ) எதையேனும் செவியுற்றால், அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடிய அளவுக்குப் பயனளிப்பான்.( அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடமிருந்து வேறு யாரேனும் எனக்கு அறிவித்தால் அவரை நான் சத்தியம் செய்யச் சொல்வேன் அவர் சத்தியம் செய்தால் அதை உண்மை என நான் ஏற்பேன் ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் பின்வருமாறு அறிவித்தார்கள் ; அபூபக்ர் ( ரலி ) அவர்கள் உண்மையே உரைத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :

முஸ்லிம் ஒருவர் ஒரு பாவத்தை செய்து விட்டு அங்கத் தூய்மை ( உளூ ) செய்து பிறகு இரண்டு ரக் அத்கள் தொழுது உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் அந்தப் பாவத்தை மன்னிக்குமாறு கோரினால் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வரும் இரு இறைவசங்களையும் ஓதி காட்டினார்கள்;

யாரேனும் தீமையை செய்து அல்லது தனக்குத் தானே அ நீதியிழைத்துப் பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர் காண்பார்” ( 4:110 )

“ அவர்கள் வெட்கக் கேடானதைச் செய்தாலோ தமக்கு தாமே அநீதியிழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்” ( 3:135 )

48-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ مِنْ آلِ أَبِي عُقَيْلٍ الثَّقَفِيِّ إِلَّا أَنَّهُ قَالَ: قَالَ شُعْبَةُ: وَقَرَأَ إِحْدَى هَاتَيْنِ الْآيَتَيْنِ {مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] ، {وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً} [آل عمران: 135]

حكم الحديث : صحيع

48.முஹம்மது பின் ஜ அஃபர் ( ரஹ் ) அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில் ,” மேற்கண்ட இரு வசனங்களுள் ஒன்றை ஓதினார்கள் “ என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுன் ஒருவரான ஷு அபா ( ரஹ் ) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 2,56 ) அபூதாவூத் (1521) திர்மிதீ ( 406,3006) இப்னுமாஜா ( 1395 )

49-حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُمَرَ، قَالَ إِنَّ أَبَا بَكْرٍ خَطَبَنَا، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا عَامَ أَوَّلَ، فَقَالَ [ص: 220] : «أَلا إِنَّهُ لَمْ يُقْسَمْ بَيْنَ النَّاسِ شَيْءٌ أَفْضَلُ مِنَ الْمُعَافَاةِ بَعْدَ الْيَقِينِ، أَلا إِنَّ الصِّدْقَ وَالْبِرَّ فِي الْجَنَّةِ، أَلا إِنَّ الْكَذِبَ وَالْفُجُورَ فِي النَّارِ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف

49. உமர் பின் அல்கத்தாப் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள் அப்போது ,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள் . அப்போது “ அறிந்துகொள்ளுங்கள் ! உறுதி(ஆன நம்பிக்கை)க்குப்பின், உடல் நலத்தைவிட மிகச் சிறந்த எதுவும் மக்களிடையே பங்கீடு செய்யப்படவில்லை. அறிந்துகொள்ளுங்கள் ! உண்மையுரைப்பதும் நன்மை புரிவதும் சொர்க்கத்தில் சேர்க்கும் . எச்சரிக்கை! பொய்யுரைப்பதும் , தீமைகள் புரிவதும் நரகத்தில் தான் சேர்க்கும் என்று கூறினார்கள் என்றார்கள்.

தரம் : இஸ்னத் ளயீப் இருப்பினும் இந்த செய்தி வேறு அறிவிப்புகளில் பலமான அறிவிப்பாளர் தொடரை கொண்டதால் இது ஸஹீஹ் லி கைரிஹி என்ற தரத்தில் வந்துவிடும்.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,38,44,46,66 ) திர்மிதீ (3558 )

50-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ: سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ: لَمَّا أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَطِشَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرُّوا بِرَاعِي غَنَمٍ، قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: «فَأَخَذْتُ قَدَحًا فَحَلَبْتُ فِيهِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُثْبَةً مِنْ لَبَنٍ فَأَتَيْتُهُ بِهِ فَشَرِبَ حَتَّى رَضِيتُ»

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخي

50.பராஉ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( அபூபக்ர் ரலி அவர்களுடன் ) மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி ( புலம்பெயர்ந்து ) சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது.அப்போது அவர்கள் ( இருவரும் ) ஆடு மேய்க்கும் இடையன் ஒருவனைக் கடந்து சென்றார்கள்.( இது குறித்து ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறுகையில் “ நான் கோப்பை ஒன்றை எடுத்து ,அதில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்காகச் சிறிது பால் கறந்து கொண்டு வந்தேன் அதை அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் நான் மன நிறைவடையுவரை பருகினார்கள்” என்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 3) புஹாரி ( 2439,6315,3652,3917,5607) முஸ்லிம் ( 2009)

No comments:

Post a Comment