Wednesday, April 25, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 09 [ 41 முதல் 45 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 09 [ 41 முதல் 45 ஹதீஸ் வரை ]

41-حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِي بَكْرٍ، قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، فَجَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ فَاعْتَرَفَ عِنْدَهُ مَرَّةً فَرَدَّهُ، ثُمَّ جَاءَهُ فَاعْتَرَفَ عِنْدَهُ الثَّانِيَةَ فَرَدَّهُ، ثُمَّ جَاءَهُ فَاعْتَرَفَ الثَّالِثَةَ فَرَدَّهُ، فَقُلْتُ لَهُ: إِنَّكَ إِنِ اعْتَرَفْتَ الرَّابِعَةَ رَجَمَكَ، قَالَ: فَاعْتَرَفَ الرَّابِعَةَ، فَحَبَسَهُ، ثُمَّ سَأَلَ عَنْهُ، فَقَالُوا: مَا نَعْلَمُ إِلَّا خَيْرًا، قَالَ: «فَأَمَرَ بِرَجْمِهِ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف

41. அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

( ஒரு நாள் ) நான் நபி ஸல் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன் அப்போது மாஇஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் வந்து ( தாம் விபசாரக் குற்றம் புரிந்துவிட்டதாகக் கூறி ) நபி ஸல் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அவரை நபி ஸல் அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். அவர் இரண்டாவது முறை( யாக மீண்டும் வந்து முன் போன்றே ) ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார் அப்போதும் அவரை நபி ஸல் அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள் அவர் மூன்றாவது முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோதும் அவரை நபி ஸல் அவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.அப்போது அவரிடம் நான், “ நீங்கள் நான்காவது முறை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தால் உங்களுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றிவிடுவார்கள்” என்று சொன்னேன் ஆனால் அவர் நான்காவது முறையும் வந்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார் அப்போது அவரை நபி ஸல் அவர்கள் ( அங்கேயே ) நிறுத்தி வைத்துக்கொண்டு அவரைப் பற்றி ( மக்களிடம் ) விசாரித்தார்கள் மக்கள் “ அவரைப் பற்றி நாங்கள் நல்லவிதமாகவே அறிகிறோம் ( அவர் தெளிந்த அறிவோடுதான் உள்ளார் )” என்று கூறினர் பிறகு அவரைக் கல்லால் எறிந்து கொல்லும்படி நபி ஸல் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி ஆனால் இந்த இஸ்னத் ளயீப் ஆகும் இதில் வரும் ஜாபிர் பின் யஸீத் அல் ஜு அஃபீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 5270,6814 ) முஸ்லிம் ( 3494,3500 ) திர்மிதீ (1349 ) நஸாயீ  (1930) அபூதாவூத் ( 3844 ) தாரமீ ( 2212 )

42-حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ وَأَخْبَرَنِي يَزِيدُ بْنُ سَعِيدِ بْنِ ذِي عَصْوَانَ الْعَنْسِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ اللَّخْمِيِّ، عَنْ رَافِعٍ الطَّائِيِّ، رَفِيقِ أَبِي بَكْرٍ فِي غَزْوَةِ السُّلاسِلِ، قَالَ: وَسَأَلْتُهُ عَمَّا قِيلَ مِنْ بَيْعَتِهِمْ، فَقَالَ وَهُوَ يُحَدِّثُهُ عَمَّا تَكَلَّمَتْ بِهِ الْأَنْصَارُ وَمَا كَلَّمَهُمْ بِهِ، وَمَا كَلَّمَ بِهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ الْأَنْصَارَ، وَمَا ذَكَّرَهُمْ بِهِ مِنْ إِمَامَتِي إِيَّاهُمْ بِأَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ «فَبَايَعُونِي لِذَلِكَ، وَقَبِلْتُهَا مِنْهُمْ، وَتَخَوَّفْتُ أَنْ تَكُونَ فِتْنَةٌ تَكُونُ بَعْدَهَا رِدَّةٌ»

حكم الحديث : 
إسناد ضعيف

42. ஸலாஸில் எனும் போரில் அபூபக்ர் ( ரலி ) அவர்களுடன் இருந்த ராஃபிஉ அத்தாயீ ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

நான் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ,”( உங்களை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கும்போது ) மக்கள் உறுதிமொழி அளித்த போது என்ன பேசப்பட்டது ?” என்று வினவினேன் அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அன்சாரிகள் ( மதீனாவாசிகள் ) தம்மிடம் பேசியதைப் பற்றியும் அதற்குத் தாம் அளித்த பதிலைப் பற்றியும் உமர் பின் அல்கத்தாப் ( ரலி ) அவர்கள் மதீனாவாசிகளிடம் பேசியதைப் பற்றியும் நபி ஸல் அவர்கள் நோய் வாய்ப்படிருந்தபோது  மக்களுக்குத் தம்மைத் தலைமை தாங்கித் தொழுவிக்குமாறு தமக்குக் கட்டளையிட்டதைக் குறித்து உமர் ( ரலி ) அவர்கள் மக்களிடம் நினைவூட்டிப் பேசியதைப் பற்றியும் விளக்கினார்கள். பிறகு “ இந்த அடிப்படையில் தான் மக்கள் ( என்னை ஆட்சியாளராக ஏற்பதாக ) என்னிடம் உறுதிமொழி அளித்தனர். அதை மக்களிடமிருந்து நானும் ஏற்றுக்கொண்டேன் ( ஆயினும் ) அது ஒரு ஒழுப்பமாக உருவெடுத்து அதன் பின்னர் மக்கள் மதம் மாறிவிடுவார்களோ என நான் அஞ்சினேன் “ என்று அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்.

தரம் : ளயீப்

இந்த ஹதீஸ் அஹ்மதியில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

43-حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبِ بْنِ وَحْشِيِّ بْنِ حَرْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ وَحْشِيِّ بْنِ حَرْبٍ، أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَقَدَ لِخَالِدِ بْنِ الْوَلِيدِ عَلَى قِتَالِ أَهْلِ الرِّدَّةِ وَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَ عَبْدُ اللَّهِ وَأَخُو الْعَشِيرَةِ خَالِدُ بْنُ الْوَلِيدِ، وَسَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ سَلَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى الْكُفَّارِ وَالْمُنَافِقِينَ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف

43. வஹ்ஷீ பின் ஹர்ப் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

( கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் மார்க்கத்தைவிட்டு வெளியேறியவர்களுக் கெதிராக போர் தொடுக்கும் பொறுப்பை ( ஹுருபுரித்தா ) காலிது பின் அல்வலீத் ( ரலி ) அவர்களிடம் ஒப்ப்டைத்தார்கள் மேலும் ,” காலிது பின் அல்வலீத் , அல்லாஹ்வின் அடியார்களிலும் இன்ன குலத்து மக்களிலும் நல்லவர் ஆவார் அவர் அல்லாஹிவின் வாட்களுள் ஒரு வாள் ஆவார் அவரை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இறைமறுப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் எதிராக உருவி( ப் பயன் படுத்தி)னான் என்று நபி ஸல் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று அபூபக்ர் ( ரலி ) கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ் லி ஹைரிஹி ஆனால் இந்த இஸ்னத் ளயீப் ஆகும்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி (4262 ) யில் பதிவாகி உள்ளது.

44-حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ الْكَلاعِيِّ، عَنْ أَوْسَطَ بْنِ عَمْرٍو، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَنَةٍ، فَأَلْفَيْتُ أَبَا بَكْرٍ يَخْطُبُ النَّاسَ فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ فَخَنَقَتْهُ الْعَبْرَةُ ثَلاثَ مِرَارٍ، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُؤْتَ أَحَدٌ مِثْلَ يَقِينٍ بَعْدَ مُعَافَاةٍ، وَلا أَشَدَّ مِنْ رِيبَةٍ بَعْدَ كُفْرٍ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّهُ يَهْدِي إِلَى الْبِرِّ، وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّهُ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَهُمَا فِي النَّارِ»

حكم الحديث : إسناده حسن

44. அவசத் பின் அம்ர் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்தபின் ஒர் ஆண்டு கழித்து நான் மதீனாவுக்கு வந்தேன்.அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் எங்களிடையே நின்றார்கள் “ என்று கூறிவிட்டு , தேம்பித் தேம்பி மூன்றுமுறை அழுதார்கள் ! பிறகு, “ மக்களே ! அல்லாஹ் விடம் உடல் நலத்தைக் கேளுங்கள் உடல் நலத்திற்குப் பின் உறுதி(ஆன நம்பிக்கை) போன்ற ஓண்ரூ ஓருபோதும் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை, இறை மறுப்புக்குப்பின் ( உண்மை பற்றி ) ஜயப்படுவதைவிடக் கொடியது எதுவும் இல்லை. உண்மை பேசுவதைக் கடைப்பிடியுங்கள், ஏனெனில் அது நன்மைக்கு வழி வகுக்கும் ( உண்மை , நன்மை ஆகிய ) அவ்விரண்டும் சொர்க்கத்தில் சேர்க்கும் பொய் பேச வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன் அது தீமைகளுக்கே வழிவகுக்கும் ( பொய் , தீமை ஆகிய ) அவ்விரண்டும் ) அவற்றைக் கடைப்பிடிப்போரை ) நரகத்தில் தான் சேர்க்கும்.

தரம் : ஹஸன்

இதே கருத்து அடைங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,38,46,49,66 ) திர்மிதீ ( 3558 )



45-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُيَسَّرٍ أَبُو سَعْدٍ الصَّاغَانِيُّ الْمَكْفُوفُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ أَبَا بَكْرٍ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ، قَالَ: أَيُّ يَوْمٍ هَذَا؟ قَالُوا: يَوْمُ الِاثْنَيْنِ. قَالَ: «فَإِنْ مِتُّ مِنْ لَيْلَتِي، فَلا تَنْتَظِرُوا بِي الْغَدَ، فَإِنَّ أَحَبَّ الْأَيَّامِ وَاللَّيَالِي إِلَيَّ أَقْرَبُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

حكم الحديث : 
إسناد ضعيف

45. ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

( என் தந்தை ) அபூபக்ர் ( ரலி ) அவர்களுக்கு இறப்பு நெருக்கியபோது ,’ இன்று என்ன கிழமை ?” என்று கேட்டார்கள், மக்கள், “ திங்கட்கிழமை “ என்று கூறினர் ‘ இன்றிரவு நான் இறந்துவிட்டால்,( இன்றே என்னை அடக்கம் செய்துவிடுங்கள் ) நாளையாகட்டும் என்று எதிர் பார்க்காதீர்கள் ஏனெனில் பகல் – இரவுகளுள் எனக்கு மிகவும் விருப்பமானது அவற்றுள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தது தான் ( திங்கட்கிழமை நபிகளாரும் நெருக்கமான தினமாகும் ) என்று அவர்கள் கூறினார்கள்.

தரம் : ளயீப்

இந்த செய்தி முஸ்னத் அஹ்மத்யில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.



No comments:

Post a Comment