Wednesday, April 25, 2018

பாடம் : 5 இறைவனின் கண்காணிப்பு

5- بَابُ المراقبة
பாடம் : 5 இறைவனின் கண்காணிப்பு

قَالَ الله تَعَالَى: {الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ} [الشعراء: 218، 219] وَقالَ تَعَالَى: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ} [الحديد: 4] وَقالَ تَعَالَى: {إِنَّ اللَّهَ لا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ} [آل عمران: 5] وَقالَ تَعَالَى: {إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ} [الفجر: 14] وَقالَ تَعَالَى: {يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ} [غافر: 19] وَالآيات في البابِ كثيرة معلومة.
அல்லாஹ் கூறுகிறான் :
நீர் நிற்கும் நேரத்திலும் ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான் ( 26:218-219 )
….நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான் ( 57:4)
வானத்திலும் பூமிலும் எதுவுமே அல்லாஹ்வுக்கு மறைந்த தாக இல்லை( 3:5)
கண்களின் ( சாடைகள் மூலம் செய்யப்படும் ) தூரோகத்தையும் உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான் ( 40 :19)
60-وأَمَّا الأحاديثُ، فالأَوَّلُ: عَنْ عُمرَ بنِ الخطابِ، رضيَ اللَّهُ عنه، قَالَ: “بَيْنما نَحْنُ جُلُوسٌ عِنْد رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، ذَات يَوْمٍ إِذْ طَلع عَلَيْنَا رجُلٌ شَديدُ بياضِ الثِّيابِ، شديدُ سوادِ الشَّعْر، لا يُرَى عليْهِ أَثَر السَّفَرِ، وَلا يَعْرِفُهُ منَّا أَحدٌ، حتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فَأَسْنَدَ رَكْبَتَيْهِ إِلَى رُكبَتيْهِ، وَوَضع كفَّيْه عَلَى فخِذيهِ وَقالَ: يَا محمَّدُ أَخبِرْنِي عَنِ الإسلامِ فقالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: الإِسلامُ أَنْ تَشْهَدَ أَنْ لا إِلَهَ      إِلاَّ اللَّهُ، وأَنَّ مُحَمَّداً رسولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤتِيَ الزَّكاةَ، وتصُومَ رَمضَانَ، وتحُجَّ الْبيْتَ إِنِ استَطَعتَ إِلَيْهِ سَبيلاً. قَالَ: صدَقتَ. فَعجِبْنا لَهُ يسْأَلُهُ ويصدِّقُهُ، قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الإِيمانِ. قَالَ: أَنْ تُؤْمِن بِاللَّهِ وملائِكَتِهِ، وكُتُبِهِ ورُسُلِهِ، والْيومِ الآخِرِ، وتُؤمِنَ بالْقَدَرِ خَيْرِهِ وشَرِّهِ. قَالَ: صدقْتَ قَالَ: فأَخْبِرْنِي عَنِ الإِحْسانِ. قَالَ: أَنْ تَعْبُدَ اللَّه كَأَنَّكَ تَراهُ. فإِنْ لَمْ تَكُنْ تَراهُ فإِنَّهُ يَراكَ قَالَ: فَأَخْبِرْنِي عَنِ السَّاعةِ. قَالَ: مَا المسْؤُولُ عَنْهَا بأَعْلَمَ مِن السَّائِلِ. قَالَ: فَأَخْبرْنِي عَنْ أَمَاراتِهَا. قَالَ أَنْ تلدَ الأَمَةُ ربَّتَها، وَأَنْ تَرى الحُفَاةَ الْعُراةَ الْعالَةَ رِعاءَ الشَّاءِ يتَطاولُون في الْبُنيانِ ثُمَّ انْطلَقَ، فلبثْتُ ملِيًّا، ثُمَّ قَالَ: يَا عُمرُ، أَتَدرِي منِ السَّائِلُ قلتُ: اللَّهُ ورسُولُهُ أَعْلمُ قَالَ: فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعلِّمُكم دِينِكُمْ “رواه مسلمٌ.
ومعْنَى:”تلِدُ الأَمةُ ربَّتَهَا”أَيْ: سيِّدتَهَا، ومعناهُ أَنْ تكْثُرَ السَّرارِي حتَّى تَلد الأمةُ السرِّيةُ بِنتاً لِسيدهَا، وبْنتُ السَّيِّدِ في معنَى السَّيِّدِ، وقِيل غيرُ ذَلِكَ وَ”الْعالَةُ”: الْفُقراءُ. وقولُهُ”مَلِيًّا”أَيْ زَمَناً طَويلاً، وكانَ ذلِكَ ثَلاثاً.
60 உமர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
ஒரு நாள் நபி ஸல் அவர்களிடம் நாங்கள் அமர்ந்து இருந்தோம் எங்களிடம் நல்ல வெண்மை ஆடை அணிந்த நல்ல கருப்பு நிற முடி நிறைந்த ஒருவர் வந்தார் . பயணத்தின் சுவடு கூட அவர் மீது காணப்படவில்லை எங்களில் எவரும் ( இதற்கு முன்பு ) அவரைக் கண்டதில்லை வந்தவர் நபி ஸல் அவர்களின் அருகில் அமர்ந்தார். தன் இரு முட்டுக்கால்களையும் அவர்களின் இரு முட்டுக்கால்களையும் இணைத்தார் தன் இரு உள்ளங்கைகளைத் தன் இரு தொடைகள் மீதும் வைத்தார்.
நபி ஸல் அவர்களிடம் “ முஹம்மதே! இஸ்லாம் பற்றி எனக்குக் கூறுங்கள் “ என்றார் .” இஸ்லாம் என்பது அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவர் என நீ சாட்சி கூறுவதும் , தொழுகையை நீ பேணுவதும், ஜகாத் கொடுப்பதும் , ரமளானில் நீ நோன்பு வைப்பதும் , பயணம் செல்ல நீ சக்தி பெற்றால் ஹஜ் செய்வதும் ஆகும் “ என்று நபி ஸல் கூறினார்கள். “ நீர் உண்மை கூறினீர் “ என்று வந்தவர் கூறினார் கேள்வி கேட்டவரே. அதை உண்மைப்படுத்தியது கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.
“ ஈமான் பற்றி எனக்குக் கூறுங்கள் “ என வந்தவர் கேட்டர். “ அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் மற்றும் மறுமை நாளையும் நீ நம்ப வேண்டும் . நன்மை தீமை ( இறைவனிடமிருந்தே ஏற்படுகிறது ) என விதியை நம்ப வேண்டும் “ என்று நபி ஸல் கூறினார்கள். “ நீர் உண்மை கூறினீர் “ என்று வந்தவர் கூறினார்.
“ இஹ்ஸான் – பற்றி எனக்குக் கூறுங்கள் “ என்று வந்தவர் கேட்டார்.” அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் ( வணங்க வேண்டும் ) நீ பார்க்கவில்லையென்றால் உன்னை அவன் பார்க்கிறான் என்பது போல் நீ அவனை வணங்க வேண்டும்” என்று நபி ஸல் கூறினார்கள்.
“மறுமை நாள் பற்றி எனக்குக் கூறுங்கள்” என வந்தவர் கேட்டார் .” இது பற்றிக் கேட்கப்பட்டவர் கேட்பவரை விட மிக அறிந்தவரல்ல “ என்று நபி ஸல் கூறினார்கள் “ அதன் அடையாளங்கள் பற்றி எனக்குக் கூறுங்கள் “ என வந்தவர் கேட்டார் “ அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள், காலில் செருப்பு அணியாதவன், அரைகுறை ஆடை அணிந்தவன் , ஏழை , ஆடு மேய்ப்பவன் என இவர்கள் ( பெரிய ) கட்டிடம் கட்டுவதில் உயர்வார்கள் “ என்று நபி ஸல் கூறினார்கள். வந்தவர் பின்பு சென்று விட்டார் சிறிது நேரம் அங்கேயே இருந்தேன் பின்பு ,” உமரே ! இப்போது வந்து கேள்வி கேட்டவரை நீர் அறிவீரா ?” என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்,” அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் “ என்று நான் கூறினேன் “ இவர் தான் ஜிப்ரீல் ( அலை ) உங்கள் மார்க்கச் செயல்களை உங்களுக்குக் கற்றுத் தர உங்களிடம் வந்தார் என்று நபி ஸல் கூறினார்கள் ( நூல் : முஸ்லிம் 8 )

61-الثَّاني: عن أبي ذَرٍّ جُنْدُبِ بْنِ جُنَادةَ، وأبي عبْدِ الرَّحْمنِ مُعاذِ بْنِ جبلٍ رضيَ اللَّه عنهما، عنْ رسولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، قَالَ: “اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وأَتْبِعِ السَّيِّئَةَ الْحسنةَ تَمْحُهَا، وخَالقِ النَّاسَ بخُلُقٍ حَسَنٍ “رواهُ التِّرْمذيُّ وقال: حديثٌ حسنٌ.
61.அபூதர் ( ரலி ) மற்றும் முஆத் இப்னு ஜபல் ( ரலி ) இருவரும் அறிவிக்கின்றார்கள் :
“ நீர் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுவீராக ! தீமையை(ச் செய்தால் ) தொடர்ந்து நன்மையைச் செய்வாயாக ! அது தீமையை அழித்துவிடும் அழகிய குணத்துடன் மக்களுடன் பழகுவாயாக !” என்று நபி ஸல் கூறினார்கள்.( நூல் : திர்மிதீ 1987 தரம் : ஹஸன் )
62-الثَّالثُ: عن ابنِ عبَّاسٍ، رضيَ اللَّه عنهمَا، قَالَ: “كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يوْماً فَقال: “يَا غُلامُ إِنِّي أُعلِّمكَ كَلِمَاتٍ:”احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَل اللَّه، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، واعلَمْ: أَنَّ الأُمَّةَ لَو اجتَمعتْ عَلَى أَنْ ينْفعُوكَ بِشيْءٍ، لَمْ  يَنْفعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَد كَتَبَهُ اللَّهُ لَكَ، وإِنِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوك بِشَيْءٍ، لَمْ يَضُرُّوكَ إِلاَّ بَشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّه عليْكَ، رُفِعَتِ الأقْلامُ، وجَفَّتِ الصُّحُفُ”.
رواهُ التِّرمذيُّ وقَالَ: حديثٌ حسنٌ صَحيحٌ.
وفي رواية غيرِ التِّرْمِذيِّ: “احفظَ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ، تَعَرَّفْ إِلَى اللَّهِ في الرَّخَاءِ يعرِفْكَ في الشِّدةِ، واعْلَمْ أَنّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصيبَك، وَمَا أَصَابَكَ لمْ يَكُن لِيُخْطِئَكَ واعْلَمْ أنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ، وأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْب، وأَنَّ مَعَ الْعُسرِ يُسْراً”.
62.அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
நான் நபி ஸல் அவர்களின் பின்னே ( குதிரையில் ) அமர்ந்திருந்தேன் அப்போது அவர்கள் “ சிறுவரே ! நிச்சயமாக நான் உனக்கு சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை நீர் பேணுவீராக ! உம்மை அவன் பாதுகாப்பான். அல்லாஹ்வை நீர் நினைவு கூர்ந்து வருவீராக ! உமக்கு முன்னே அவனை நீர் அறிவீர் . நீர் கேட்டால் அல்லாஹ்விடம் கேட்பீராக ! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவிதேடுவீராக ! இந்த சமுதாயம் ஏதேனும் உமக்கு நன்மை செய்ய ஒன்று சேர்ந்தாலும் உமக்கு அல்லாஹ் எழுதி வைத்ததைத் தவிர எதையும் அவர்களால் கொடுக்க முடியாது மேலும் ஏதேனும் உமக்கு தீமை செய்ய அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் எழுதி வைத்திருந்தாலே தவிர அவர்களால் உமக்கு தீங்கிழைக்க முடியாது எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்ட்து பதிவு ஏடுகள் சுருட்டப்பட்டு விட்டது என்பதை நீர் அறிந்து கொள்வீராக !” என நபி ஸல் கூறினார்கள். ( நூல் : திர்மிதீ தரம் : ஹஸன் ஸஹீஹ் )
திர்மிதீ அல்லாத மற்ற அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது.
“ அல்லாஹ்வின் கட்டளைகளை நீ பேணு ! உஅனக்கு முன்னே அவனைக் காண்பாய் . செழிப்பான காலத்தில் அல்லாஹ்வை நீ நினைவு கொள் கஷ்டமான காலத்தில் உம்மை அவன் அறிவான் உமக்கு எது தவறிவிடுகிறதோ இது உண்ணைச் சேர்ந்தது அல்ல! உனக்கு எது கிடைத்ததோ அது உன்னை விட்டும் தவறிவிடக் கூடியதுமல்ல . நிச்சயமாக உதவி தேடுவது பொறுமையுடன் உள்ளது . நிச்சயமாக சந்தோசம், கஷ்டத்துடன் உள்ளது நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது என்பதை நீர் அறிவீராக !
63-الرَّابعُ: عنْ أَنَس رضي اللَّهُ عنه قالَ: “إِنَّكُمْ لَتَعْملُونَ أَعْمَالاً هِيَ أَدقُّ في أَعْيُنِكُمْ مِنَ الشَّعَرِ، كُنَّا نَعْدُّهَا عَلَى عَهْدِ رسولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم مِنَ الْمُوِبقاتِ”رواه البخاري. وَقالَ:”الْمُوبِقَاتُ”الْمُهْلِكَاتُ.
63.அனஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ நீங்கள் சில செயல்களைச் செய்கிறீர்கள் . உங்களின் கண்களிலே அது முடியை விட சாதாரணமானதாக உள்ளது ( ஆனால் ) இவை ( மனிதர்களை ) அழித்துவிடக் கூடியது “ என நபி ஸல் அவர்கள் காலத்தில் நாங்கள் கருதக்கூடியவர்களாக இருந்தோம்.( நூல் : புஹாரி 6492 )
64-الْخَامِس: عَنْ أبي هريْرَةَ، رضي اللَّه عنه، عن النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ: “إِنَّ اللَّهَ تَعَالَى يَغَارُ، وَغَيْرَةُ اللَّهِ تَعَالَى، أنْ يَأْتِيَ الْمَرْءُ مَا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ” متفقٌ عَلَيهِ.
و”الْغَيْرةُ”بفتحِ الغين: وَأَصلهَا الأَنَفَةُ.
64.அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் அல்லாஹ் தடுத்துள்ளவற்றை மனிதன் செய்யும் போதுதான். அல்லாஹ்வுக்கு ரோஷம் ஏற்படுகிறது “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( புஹாரி 5223 முஸ்லிம் 2761 )
65-السادس ‏:‏ عن أبي هريرة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول‏:‏ ‏ “‏ إن ثلاثة من بنى إسرائيل ‏:‏ أبرص ، وأقرع، وأعمى، أراد الله أن يبتليهم فبعث إليهم ملكاً، فأتى الأبرص فقال‏:‏ أي شيء أحب إليك‏؟‏ قال ‏:‏ لون حسن، وجلد حسن ، ويذهب عني الذى قد قذرني الناس؛ فمسحه فذهب عنه قذره وأعطي لونا حسناً‏.‏ قال‏:‏ فأي المال أحب إليك‏؟‏ قال‏:‏ الإبل-أو قال البقر-شك الرواي- فأعطي ناقة عشراء، فقال‏:‏ بارك الله لك فيها‏.‏
فأتى الأقرع فقال‏:‏ أي شيء أحب إليك‏؟‏ قال‏:‏ شعر حسن، ويذهب عني هذا الذى قذرني الناس ، فمسحه فذهب عنه وأعطي شعراً حسناً‏.‏ قال‏:‏ فأي المال أحب إليك‏؟‏ قال‏:‏ البقر، فأعطي بقرة حاملاً،وقال بارك الله لك فيها‏.‏
فأتي الأعمى فقال‏:‏ أي شيء أحب إليك‏؟‏ قال‏:‏ أن يرد الله إلي بصري فأبصر الناس، فمسحه فرد الله إليه بصره‏.‏ قال‏:‏ فأي المال أحب إليك‏؟‏ قال‏:‏ الغنم، فأعطي شاة والداً‏.‏ فأنتج هذان وولد هذا، فكان لهذا واد من الإبل، ولهذا واد من البقر، ولهذا واد من الغنم‏.‏
ثم إنه أتى الأبرص في صورته وهيئته، فقال له‏:‏ رجل مسكين وابن سبيل قد انقطعت بي الحبال في سفري، فلا بلاغ لي اليوم إلا بالله ثم بك، أسألك بالذي أعطاك اللون الحسن، والجلد الحسن، والمال، بعيراً أتبلغ به في سفري، فقال‏:‏ الحقوق كثيرة‏.‏ فقال ‏:‏ كأني أعرفك، ألم تكن أبرص يقذرك الناس فقيراً، فأعطاك الله ‏؟‏‏!‏ فقال ‏:‏ إنما ورثت هذا المال كابراً عن كابر، فقال‏:‏ إن كنت كاذباً فصيرك الله إلى ما كنت‏.‏
وأتى الأقرع، فقال له مثل ما قال لهذا، ورد عليه مثل ما ردّ هذا، فقال إن كنت كاذبا فصيرك الله إلى ما كنت ‏.‏
وأتى الأعمى في صورته وهيئته، فقال‏:‏ رجل مسكين وابن سبيل انقطعت بي الحبال في سفري، فلا بلاغ لي اليوم إلا بالله ثم بك، أسألك بالذي رد عليك بصرك شاة أتبلغ بها في سفري‏؟‏ فقال‏:‏ قد كنت أعمى فرد الله بصري، فخذ ما شئت ودع ما شئت، فوالله ما أجهدك اليوم بشيء أخذته لله عز وجل فقال‏:‏ أمسك عليك مالك فإنما ابتليتم، فقد رضي الله عنك، وسخط على صاحبيك‏”‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏
65.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)’ என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்’ என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்’ என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்’ என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்’ என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)’ என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்’ என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(  நூல் : புஹாரி 3464 முஸ்லிம் 2964 )
66-السابع‏:‏ عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ “‏ الكيس من دان نفسه، وعمل لما بعد الموت ، والعاجز من أتبع نفسه هواها، وتمنى على الله الأماني‏”‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال حديث حسن‏)‏‏)‏‏.‏
66.ஷத்தாத் இப்னு அவ்ஸ்( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
“ அறிவாளி என்பவன் தன்னைப் பரிசோதனை செய்து மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வுக்காக செயல்படுபவனேயாவான். இயலாதவன் என்பவன் தன் மனோஇச்சைகளைத் தானே பின்பற்றி அல்லாஹ்விடம் ( உதவிக்கு ) ஆதரவு வைத்தவன் ஆவான் “ என்று நபி (ஸல்) கூறினார்கள்.( திர்மிதீ 2459 தரம் : ளயீப் )
67-الثامن‏:‏ عن أبي هريرة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏ من حسن إسلام المرء تركه ما لا يعنيه‏”‏ ‏(‏‏(‏حديث حسن رواه الترمذي وغيره‏)‏‏)‏
  1. அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
“ ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில் அவன் தனக்கு அவசியம் இல்லாத்தை விட்டு விடுவது ஒன்றாகும் “ என்று நபி ஸல் கூறினார்கள் ( திர்மிதீ 2317 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி )
68-
التاسع‏:‏ عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ “‏لا يسأل الرجل فيم ضرب امرأته‏”‏ ‏(‏‏(‏رواه أبو دواد وغيره‏)‏‏)‏ ‏.‏
68.உமர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :
ஒருவர் தன் மனைவியை அடித்தது  குறித்து ஆர் கேள்வி கேட்கப்படமாட்டார் என்று நபி ஸல் கூறினார்கள் ( அபூதாவூத் 2147 தரம் : ஸஹீஹ் )

No comments:

Post a Comment