Sunday, April 29, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 11 [ 51 முதல் 55 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 11 [ 51 முதல் 55 ஹதீஸ் வரை ]


51-حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أخبرني يَعْلَى بْنُ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ [ص: 221] : قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، وَإِذَا أَخَذْتُ مَضْجَعِي. قَالَ: " قُلْ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَاواتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَوْ قَالَ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ "،

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمِ بْنِ عَبْدِ اللَّهِ فَذَكَرَ مَعْنَاهُ 52-

حكم الحديث : 
إسناده صحيح

51,52. அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( நபி ஸல் அவர்களிடம் ) அல்லாஹ்வின் தூதரே ! நான் காலையிலும் மாலையிலும் இரவில் எனது படுக்கையில் ஓதுவதற்கேற்ற ( பிரார்த்தனை ) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள்,அல்லாஹும்ம ஃபாத்திரஸ் ஸமாவாத்தி , வல் அர்ளி , ஆலிமல் ஃகைபி, வஷ்ஷஹாதத்தி” (அல்லது) “ அல்லாஹும்ம ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி ஃபாத்திர்ஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வரப்ப குல்லி ஷைஇன் வமலீ(க்)கஹு – அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த்த அஊது பிக்க மின் ஷர்ரி நஃப்சீ வஷ்ர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி என்று கூறுங்கள்!” என்றார்கள்.

இதே கருத்தில் அமர் பின் ஆஸிம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 63,7961) அபூதாவூத் ( 5067 ) திர்மிதீ ( 3392 ) தாரமீ ( 2731 )

53-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّهُ خَطَبَ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ، وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَا وَضَعَهَا اللَّهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ بَيْنَهُمْ، فَلَمْ يُنْكِرُوهُ، يُوشِكُ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابِِ»

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

53. கைஸ் பின் அபீ ஹாஸிம் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( மக்களிடையே நின்று ) உரையாற்றினார்கள்.அப்போது அவர்கள்,” மக்களே! ‘ இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்களை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்திடாது ‘ எனும் இந்த ( 5;105 ஆவது ) இறைவசனத்தை நீங்கள் ஓதுகின்றீர்கள் அதற்கு அல்லாஹ் ( கூறி ) வைத்துள்ள பொருள் அல்லாத வேறொரு பொருளைக் கொடுக்கிறீர்கள் ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,” மக்கள் தம்மிடையே தீமை நடைபெறுவதைக் கண்டு ( வலிமையிருந்தும் ) அதை அவர்கள் தடுக்காமலிருந்தால் அல்லாஹ்பொதுவாக எல்லாரையும் சேர்த்துத் தண்டித்துவிடலாம் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் “ என்றார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 1,16,29,30 ) அபூதாவூத் ( 4338) திர்மிதீ ( 2168,3057) இப்னுமாஜா ( 4005)

54-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا سَوَّارٍ الْقَاضِيَ، يَقُولُ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، قَالَ: أَغْلَظَ رَجُلٌ لِأَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ: فَقَالَ أَبُو بَرْزَةَ: أَلا أَضْرِبُ عُنُقَهُ؟ قَالَ: فَانْتَهَرَهُ وَقَالَ: «مَا هِيَ لِأَحَدٍ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

حكم الحديث : إسناده صحيع رجله ثقات

54. அபூபர்ஸா அல் அஸ்லமீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

( முஸ்லிம்களுள் ) ஒருவர் ( கலீஃபா ) அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்களைக் கடுமையாக ஏசினார்.அப்போது நான்,” அவருடைய கழுத்தை வெட்டிவிடட்டுமா ?” என்று கேட்டேன்.அதற்காக அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னைக் கடிந்துகொண்டு,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்குப் பின் ,வேறெவருக்கும் அந்த உரிமை இல்லை “ என்றார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (61) அபூதாவூத் ( 4363) நஸயீ ( 4071,4072,4073,4074,4075,4076,4077 )

55-حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا لَيْثٌ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ بِالْمَدِينَةِ وَفَدَكَ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ» ، وَإِنِّي وَاللَّهِ لَا أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَالِهَا الَّتِي كَانَتْ عَلَيْهَا [ص: 223] فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَبَى أَبُو بَكْرٍ أَنْ يَدْفَعَ إِلَى فَاطِمَةَ مِنْهَا شَيْئًا، فَوَجَدَتْ فَاطِمَةُ عَلَى أَبِي بَكْرٍ فِي ذَلِكَ، وقَالَ أَبُو بَكْرٍ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي، وَأَمَّا الَّذِي شَجَرَ بَيْنِي وَبَيْنَكُمْ مِنْ هَذِهِ الْأَمْوَالِ فَإِنِّي لَمْ آلُ فِيهَا عَنِ الْحَقِّ، وَلَمْ أَتْرُكْ أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهَا إِلَّا صَنَعْتُهُ

حكم الحديث : 
إسناده صحيح على شرط الشيخين

55. நபி ஸல் அவர்களின் துணைவி ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் புதல்வி ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் ( அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்த பிறகு கலீஃபா ) அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்களிடம் ஆளனுப்பி அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா( விலிருந்த பனூ நளீர் யூதர்களிடமிருந்து கிடைத்த ) சொத்து, ஃபதக் ( ஃபய் உச் ) சொத்து , கைபர் சொத்தில் எஞ்சிய ஜந்தில் ஒரு பாகம் ( குமுஸ் ) ஆகிய வற்றில் தமக்கு சேர வேண்டிய வாரிசுரிமையைக் கோரினார்கள்.

அதற்கு ( கலீஃபா ) அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் அவர்கள் ( இறைத் தூதர்களான ) எங்களுக்கு யாரும் ( சொத்தில் ) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தாரும் உண்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.( எனவே ) அல்லாஹ்வின் மீதாணையாக ! அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற இந்தச் சொத்தில் நான் சிறிதும் மாற்றம் செய்யமாட்டேன் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களது காலத்தில் எந் நிலையில் இந்தச் சொத்துகள் இருந்துவந்தனவோ அதே நிலையில் அவை நீடிக்கும். இதில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன் “ என்று கூறி ஃபாத்திமா ( ரலி ) அவர்களிடம் ( அவற்றில் ) எதையும் ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.

இதனால் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் மீது ஃபாத்திமா ( ரலி ) அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” என் உயிர் எவன் கையிலுள்ளதோ அந்த இறைவன் மீதாணையாக ! என்னுடைய உறவினர்களின் உறவைப் பேணுவதை விட அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்.இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்கிமிடையே ஏற்பட்ட ( கருத்து வேறுபாட்டின் )  விவகாரத்தில்  நான்  நியாயமாக  நடந்துகொள்வதில் சிறிதும் குறைவைக்கவில்லை.இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் செய்யக் கண்ட எதையும் செய்யாமல்  நான் விட்டுவிடவுமில்லை என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 9,25,58,60,78,79,425,1781,1782) புஹாரி ( 3092,3094,3711,4033,4035,4240,5358,6725,6728,7305 ) முஸ்லிம் ( 1757,1759) அபூதாவூத் ( 2963,2968) நஸயீ ( 4141) திர்மிதீ ( 1608,1609,1610)

No comments:

Post a Comment