Monday, June 11, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 14 [ 66 முதல் 70 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 14 [ 66 முதல் 70 ஹதீஸ் வரை ]



66-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي بَكْرٍ قَالَ: قَامَ أَبُو بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أوَّلَ، فَقَالَ: «إِنَّ ابْنَ آدَمَ لَمْ يُعْطَ شَيْئًا أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ، 
فَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ وَالْبِرِّ فَإِنَّهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ وَالْفُجُورَ فَإِنَّهُمَا فِي النَّارِ»

حكم الحديث : صحيع لغيره

66.அபூஉபைதா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்து ஒரு வருடத்திற்குப் பின் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( எங்களிடையே ) எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள். அதில்,’ ஆதமின் மகனுக்கு உடல் நலத்தைவிட மிகச் சிறந்த ஒன்று வழங்கப்படவில்லை.எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் உடல் நலத்தைக் கேளுங்கள் உண்மை பேசுவதையும் நன்மை புரிவதையும் கடைப்பிடியுங்கள், அவ்விரண்டும் சொர்க்கத்தில் சேர்க்கும் பொய் பேச வேண்டாமென்றும் தீமைகள் புரியவேண்டாமென்றும் உங்களை நான் எச்சரிக்கிறேன் ( பொய் , தீமை ஆகிய ) அவ்விரண்டும் நரகத்தில் தான் சேர்க்கும் என்று கூறினார்கள் .

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,38,44,46,49 ) திர்மிதீ ( 3558)

67-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ [ص: 229] ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ قَالَ: فَلَمَّا كَانَتِ الرِّدَّةُ قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ تُقَاتِلُهُمْ، وَقَدْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَذَا وَكَذَا؟ قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ لَا أُفَرِّقُ بَيْنَ الصَّلاةِ وَالزَّكَاةِ، وَلَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَهُمَا. قَالَ: فَقَاتَلْنَا مَعَهُ، فَرَأَيْنَا ذَلِكَ رَشَدًا

حكم الحديث : صحيع

67.அபூஹுரைரா( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ( லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும் வரை, இந்த ( இறைவனை மறுக்கும் ) மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அவ்வாறு அவர்கள் கூறிவிட்டால் தகுந்த காரணம் இருந்தாலன்றி தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடமிருந்துகாத்துக்கொள்வார்.அவர்களது ( அந்தரங்கம் குறித்த ) விசாரணை உயர்ந்தோன் அல்லாஹ்வின் பொறுப்பாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 [ நபி ஸல் அவர்களின் இறப்புக்கு பின் ] மக்கள் ( ஸகாத் வழங்க மறுத்து ) இஸ்லாத்தை விட்டு வெளியேறியபோது,[ அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் ரலி அவர்கள் ஆயத்தமானார்கள் அப்போது] உமர் ( ரலி ) அவர்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இவ்வாறிவ்வாறு ( மேற்கண்டவாறு ) கூறியதை நீங்கள் செவியுற்றுள்ளீர்களே ?” என்றார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் மீதாணையாக ! நான் தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து வேறுபடுத்திப் பார்க்க மாட்டேன் அந்த இரண்டையும் வேறுப்படுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன் என்று கூறினார்கள் ஆகவே நாங்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களுடன் சேர்ந்து [ ஸகாத் வழங்க மறுத்தவர்களுடன் ] போரிட்டோம் அதையே நல்வழியாக நாங்கள் கண்டோம்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 117,239,335,8163,8544,8904,8990,9475,9661,10158,10254,10518,10822,10840) புஹாரி (1399,2946,6924,7284) முஸ்லிம் (20,21,2405)

68-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ [ص: 230] أُخْبِرْتُ أَنَّ أَبَا بَكْرٍ قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ: {لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] فَكُلَّ سُوءٍ عَمِلْنَا جُزِينَا بِهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَنْصَبُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟» قَالَ: بَلَى. قَالَ: «فَهُوَ مَا تُجْزَوْنَ بِهِ»

حكم الحديث : حديث صحيع بطرقه وشواهده وهدا إسناد ضعيف لا نقطاعه

68.அபூபக்ர் பின் அபீஸுஹைர் ( ரஹ் ) கூறியதாவது :

பின்வருமாறு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் பற்றி எனக்கு செய்தி அறிவிக்கப்பட்டது : அபூபக்ர் ( ரலி ) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ! “ உங்களின் விருப்பப்படியோ, வேதக்காரர்களின் விருப்பப்படியோ ( எதுவும் ) இல்லை தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார் “ எனும் இந்த ( 4:123 ஆவது ) இறைவசனம் அருளப்பெற்றதற்குப் பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ? நாங்கள் செய்த ஒவ்வொரு தவற்றுக்கும் தண்டனை வழங்கப்படுவிடுமே ?” என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள்,” அபூபக்ரே ! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக ! உங்களுக்கு நோய் வருவதில்லையா ? துன்பங்கள், துயரங்கள் ஏற்படுவதில்லையா ? வறுமை ஏற்படுவதில்லையா ?” என்று கேட்டார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” ஆம் என்றார்கள் அப்போது ,” இவையும் உங்கள் தவறுகளுக்கு அளிக்கப்படும் தண்டனை தான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 23,69,71) திர்மிதீ (3039) புஹாரி (5648) முஸ்லிம் ( 5024 )

69-حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ، أَظُنُّهُ، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ؟ قَالَ: «يَرْحَمُكَ اللَّهُ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟ أَلَسْتَ. . .» قَالَ: بَلَى. قَالَ: «فَإِنَّ ذَاكَ بِذَاكَ»

حكم الحديث : صحيع وإسناده ضعيف

69.அபூபக்ர் பின் அபீ ஸுஹைர் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதரே ! இந்த ( 4:123ஆவது ) இறைவசனம் அருளப்பெற்ற பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ?” என்று அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்,” அபூபக்ரே! உங்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் ! உங்களுக்கு நோய் வருவதில்லையா ? துயரங்கள் ஏற்படுவதில்லையா ? வறுமை ஏற்படுவதில்லையா ?” என்று கேட்டார்கள். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் “ ஆம் “ என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள், “ இவைதாம் அதற்கு பகரமாகும் என்று கூறினார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

70-حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ؟ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ، فَذَكَرَ الْحَدِيثَ

حكم الحديث : صحيع وإسناده ضعيف

70.யஅலா பின் உபைத் அத்தாஃபுசீ அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில்,” அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ! தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார் எனும் இந்த (4:123) இறைவசனம் அருளப்பெற்றதற்குப் பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ? என்று கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது மற்ற விவரங்கள் மேற்கண்டவாறே தொடர்கின்றன.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

No comments:

Post a Comment