Saturday, June 9, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 13 [ 61 முதல் 65 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 13 [ 61 முதல் 65 ஹதீஸ் வரை ]




61-حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ، أَنَّهُ حَدَّثَهُمْ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، أَنَّهُ قَالَ: كُنَّا عِنْدَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فِي عَمَلِهِ، فَغَضِبَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَاشْتَدَّ غَضَبُهُ عَلَيْهِ جِدًّا، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ قُلْتُ: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ أَضْرِبُ عُنُقَهُ، فَلَمَّا ذَكَرْتُ الْقَتْلَ صَرَفَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ أَجْمَعَ إِلَى غَيْرِ ذَلِكَ مِنَ النَّحْوِ، فَلَمَّا تَفَرَّقْنَا أَرْسَلَ إِلَيَّ بَعْدَ ذَلِكَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، فَقَالَ: يَا أَبَا بَرْزَةَ مَا قُلْتَ؟ قَالَ: وَنَسِيتُ الَّذِي قُلْتُ، قُلْتُ: ذَكِّرْنِيهِ، قَالَ: أَمَا تَذْكُرُ مَا قُلْتَ؟ قَالَ: قُلْتُ: لَا وَاللَّهِ. قَالَ: أَرَأَيْتَ حِينَ رَأَيْتَنِي غَضِبْتُ عَلَى الرَّجُلِ فَقُلْتَ: أَضْرِبُ عُنُقَهُ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ؟ أَمَا تَذْكُرُ ذَاكَ؟ أَوَ كُنْتَ فَاعِلًا ذَاكَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ وَاللَّهِ، وَالْآنَ إِنْ أَمَرْتَنِي فَعَلْتُ. قَالَ: «وَيْحَكَ أَوْ وَيْلَكَ إِنَّ تِلْكَ [ص: 227] وَاللَّهِ مَا هِيَ لِأَحَدٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

حكم الحديث :  إسنادة قوي

61. அபூபர்ஸா அல் அஸ்லமீ ( ரலி ) கூறியதாவது :

 நாங்கள் ( கலீஃபா ) அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அருகில் அவர்களின் பணி ஒன்றின் நிமித்தம் இருந்தோம். அப்போது அவர்கள் முஸ்லிம்களுன் ஒருவர்மீது சினமுற்றார்கள். அவர்களின் சினம் கடுமையானபோது நான்,” அல்லாஹ்வுடைய தூதூரின் பிரதி நிதியே ! என்று கேட்டேன் , அவரைக் கொன்று விடட்டுமா?” என்று கேட்டேன் அவரைக் கொன்று விடட்டுமா என்று நான் கேட்டதும் , அது குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, வேறு பக்கம் கவனத்தைத் திருப்பினார்கள்.

நாங்கள் ( பணி முடிந்து ) கலைந்து சென்றதும் , என்னிடம் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ஆளனுப்பி ( என்னை வரவழைத்து ) , “ அபூ பர்ஸாவே , என்ன கூறினீர் ?” என்று கேட்டார்கள். “ நான் கூறியதை மறந்துவிட்டேன் அதை நீங்களே நினைவூட்டுங்களேன் “ என்று கூறினேன். “ நீர் என்ன கூறினீர் என்று நினைவில்லையா ?” என்றார்கள்.” அல்லாஹ்வின் மீதாணையாக ! இல்லை “ என்றேன்,” நான் ஒருவர் மீது கோபப்பட்டதை நீர் கண்டபோது “ அல்லாஹ்வுடயை தூதரின் பிரதி நிதியே ! அவருடைய கழுத்தை வெட்டிவிடட்டுமா ?” என்று நீர் கூறீரே, நினைவிருக்கிறதா ? அவ்வாறு நீர் ( கொலை ) செய்வீரா ?” என்று கேட்டார்கள். நான்,” அல்லாஹ்வின் மீதாணையாக ! ஆம் . இப்போது கூட நீங்கள் எனக்கு உத்தரவிட்டால் நான் செய்வேன் என்றேன் “ உமக்குக் கேடுதான் ! அல்லாஹ்வின் மீதாணையாக ! அ(ந்த உரிமையான)து முஹம்மது ( ஸல் ) அவர்களுக்குப் பின் வேறெவருக்கும் இல்லை “ என்று கூறினார்கள்.

தரம் : பலமான அறிவிப்பாளர் தொடரை கொண்ட செய்தி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (54) அபூதாவூத் ( 4363) நஸயீ (4071,4072,4073,4074,4075,4076,4077)

62-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَتِيقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

حكم الحديث : صحيع لغيره

62.அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : பல் துலக்குவது,வாயைத் தூய்மைப்படுத்தும் இறைவனை திருப்திப்படுத்தும்.
இதை அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 7 ) யில் பதிவாகி உள்ளது

63-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ لِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاواتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ» وَأَمَرَهُ أَنْ يَقُولَهُ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، 
وَإِذَا أَخَذَ مَضْجَعَهُ

حكم الحديث : صحيع

63. அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) ,” அல்லாஹ்வின் தூதரே ! நான் காலையிலும் மாலையிலும் ஓதிக்கொள்வதற்கேற்ற ( பிரார்த்தனை ) ஒன்றை எனக்குக் கூறுங்கள் “ என்று கேட்டார்கள் . அதற்கு நபி ஸல் அவர்கள் ,அல்லாஹும்ம ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வரப்பி குல்லி ஷைஇன் வமலீ(க்)கஹு அஷ்ஹது அன்லா இலாஹ இல்லா அன்த்த அஊது  பின்ன மின் ஷர்ரி நஃப்சீ வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி ” என்று கூறுங்கள் என்றார்கள்.

[ பொருள் : இறைவா ! மறைவானற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே ! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனே ! அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனே !அனைத்துக்கும் அரசனே ! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை எனச் சாட்சியம் கூறுகின்றேன். என்னுடைய மனத்தின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் இறைவனுக்கு இணை வைக்கும் அவனது குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன் )
அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைக் காலையிலும் மாலையிலும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் ஓதிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கட்ட்ளையிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 51,7961) அபூதாவூத் ( 5067) திர்மிதீ (3392) தாரமீ (2731)

64-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ الْجُمَحِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قِيلَ لِأَبِي بَكْرٍ يَا خَلِيفَةَ اللَّهِ. قال: فَقَالَ: «بَلْ خَلِيفَةُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَرْضَى بِهِ»

حكم الحديث :  إسناده ضعيف لانقطاعه

64.இப்னு அபீமுலைக்கா ( ரஹ்) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர்( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் பிரதி நிதியே !” என்று அழைக்கப்பட்டார்கள் . உடனே அவர்கள்,” இல்லை  நான் முஹம்மது ஸல் அவர்களுடைய ஆட்சிக்குத்தான் பிரதி நிதி ஆவேன் .இ(வ்வாறு கலீஃபத்து முஹம்மத் என என்னை அழைப்ப)தையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

தரம் : ளயீப் மேலும் இப்னு அபீமுலைக்கா ரஹ் அவர்கள் அபூபக்ர் ரலி அவர்களைச் சந்தித்தவர் அல்லர் எனவே இதுவும் இடைமுறிவுற்ற அறிவிப்பாளர் தொடரில் அமைந்த செய்தியாகும்

இதே கருத்து அங்கின ஹதீஸ் அஹ்மத் ( 59 ) யில் பதிவாகி உள்ளது.

65-حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: كَانَ رُبَّمَا سَقَطَ الْخِطَامُ مِنْ يَدِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: فَيَضْرِبُ بِذِرَاعِ نَاقَتِهِ فَيُنِيخُهَا، فَيَأْخُذُهُ قَالَ: فَقَالُوا لَهُ: أَفَلا أَمَرْتَنَا نُنَاوِلُكَهُ، فَقَالَ: إِنَّ حِبِّي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَنِي أَنْ لَا أَسْأَلَ النَّاسَ شَيْئًا»

حكم الحديث :  إسناده حسن لغره وهدا إسناد ضعيف

65.இப்னுஅபீமுலைக்கா( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

சில நேரங்களில் அபூபக்ர் ( ரலி ) ( ஒட்டகத்திலிருக்கும் போது ) அவர்களது கையிலிருக்கும் சாட்டை கீழே விழுந்துவிடும் உடனே அவர்கள் தமது ஒட்டகத்தின் முன்காலில் அடித்து ஒட்டகத்தை மண்டியிட்டுப் படுக்க வைத்துச் சாட்டையை எடுத்துகொள்வார்கள் அப்போது அவர்களிடம் “ அதை எடுத்து த் தரச் சொன்னால் , நாங்கள் எடுத்துத் தரமாட்டோமா ?” என்று மக்கள் கேட்பார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” என் நேசர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,” மக்களிடம் ( உதவி ) எதையும் கேட்க வேண்டாம் “ என எனக்கு உத்தவிட்டார்கள் என்று கூறுவார்கள்.

தரம் : ளயீப்

இந்த செய்தி அஹ்மதியில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.




No comments:

Post a Comment