Sunday, November 13, 2016

மிஃராஜ்



மிஃராஜ்

                நபி(ஸல்) அவர்கள் மக்காவில் வசித்து வந்தபோது ஹிஜ்ரத் செய்வதற்கு ஓராண்டுக்கு முன் (கி.பி 621) இஸ்ராஃ மற்றும் மிஃராஜ் என்ற நிகழ்வுகள் நடந்தது. இஸ்ராஃ என்பதற்கு  இரவில் பயணித்தல் என்று பொருள். 

புனித கஅபாவிற்கு அருகிலுள்ள அல் மஸ்ஜிதுல் ஹராம் என்ற பள்ளியிலிருந்து ஜெருஸலத்திலுள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸô  என்ற  பள்ளிக்கு நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட இரவுப்பயணத்திற்கே இஸ்ராஃ என்று சொல்லப்படுகிறது. 

வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள்   புராக்   என்னும்   மின்னல்  வேக   வாகனத்தைக்  கொண்டு  வந்து மக்காவிலிருந்து ஜெருஸலத்திற்கு நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள்  இது  தொடர்பாக  அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ...

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன் 

(அல்குர்ஆன் 17:1)

பின்னர் அங்கிருந்து விண்ணுலகிற்குப் பயணமானார்கள். இந்த விண்ணுலகப்பயனத்திற்கே  மிஃராஜ் என்று பெயர். நபி(ஸல்) அவர்கள்  விண்ணுலகத்தில் ஆதம்(அலை), யஹ்யா(அலை), ஈஸா(அலை), யூசுப்(அலை), இத்ரீஸ்(அலை), ஹாரூன்(அலை), மூஸா(அலை)  ஆக மொத்தம்  ஏழு நபிமார்களையும் ஏழு வானத்திலும் நுழையும்போது கண்டார்கள்.  அதுமட்டுமின்றி நபி(ஸல்) அவர்களுக்கு விண்ணிலே சொர்க்கமும்  நரகமும் எடுத்துக்காட்டப்பட்டது. மேலும் ஐவேளைத் தொழுகை அங்குதான் கடமையாக்கப்பட்டது.
மேற்கண்ட சம்பவத்தை விரிவாக அறிய  பார்க்க   (ஆதாரம் புகாரி ஹதீஸ் எண் 3886, 3887)

இத்தனை விஷயங்களும் ஒரே இரவில் நடந்து முடிந்ததுதான் இறைவனின் மாபெரும் ஆற்றலுக்கு சான்றாகும்.

No comments:

Post a Comment