Sunday, November 13, 2016

அகபா



அகபா

                 நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஓரிறைக் கொள்கையை போதித்த போது போதிய ஆதரவு கிடைக்காததால் ஹஜ்ஜுடைய காலங்களில் மக்காவிற்கு வரும் குழுக்களைச் சந்தித்து அவர்களிடம் ஓரிறைக் கொள்கையைக் கூறி ஆதரவு கேட்டார்கள்.  

இந்த அடிப்படையில் அவ்வருடம் வந்த  மதீனாவாசிகளான அவ்ஸ்ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சார்ந்தவர்களை அகபா என்ற இடத்தில் சந்தித்தார்கள். (அகபா என்பது மினாவிற்கு அருகில் இருக்கும் ஓர் இடத்திற்குப் பெயராகும்.) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்குமாறு வேண்டிக்கொண்டார்கள். 

அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அடுத்த வருடம் கி,பி 621 ல் நபி (ஸல்) அவர்களை அகபா என்ற இடத்தில் சந்தித்து நபி(ஸல்) அவர்களிடம்  நாங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கமாட்டோம். நாங்கள் திருடமாட்டோம். நாங்கள் விபச்சாரம் செய்யமாட்டோம். நாங்கள் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு  கூறமாட்டோம் என்று பைஅத்  (உறுதிமொழி) செய்தனர்.  

ஆகையால் இந்த உடன்படிக்கைக்கு   பைஅத்துல்  அகபா ( முதல் அல் அகபா  உடன்படிக்கை) என்று பெயர் வந்தது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு 70 பேர், அதே இடத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர். இதற்கு இரண்டாவது அகபா உடன்படிக்கை என்று பெயர். 

இந்த இரண்டு உடன்படிக்கைகளும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து இஸ்லாத்தை வளர்க்க பெரும் உதவியாக இருந்தது. (பத்ஹுல் பாரீ)
மேற்கண்ட நிகழ்ச்சியை விரிவாக அறிய  பார்க்க   (புகாரீ 3893)


இந்த உடன்படிக்கை நிகழ்ச்சி  கி. பி 621 ல்  நடைபெற்றது. (ஆதாரம் ஃபத்ஹுல்பாரி)

No comments:

Post a Comment